அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, December 29, 2011

ராஜினாமாவா? அப்படின்னா? - நிர்வாகிகள்


சின்னத்திரையை மிஞ்சிய அற்புதமான நாடகம்தமிழக தொலைக்காட்சி கூட இப்படி ஒரு நாடகத்தை பார்த்திருக்காதுஅதுதான் நமதூரில் அரங்கேரிய அற்புதமான ராஜினாமா என்ற நாடகம்ராஜினாமா செய்தவிவகாரம் வக்பு வாரிய அதிகார்களுக்கே தெரிவிக்காமல் ஏன் மூடி மறைத்தார்கள்வக்பு வாரிய அதிகார்களும் அப்படி ஒரு  கடிதம் தங்களுக்கு வரவில்லை என்கிறார்களேஅப்படியென்றால் அந்த ராஜினாமா கடிதம் யாரிடம் சமர்பிக்கப்பட்டதுராஜினாமா செய்ததாக (?) அறிவிக்கப்பட்ட முன்னால் (?) நிர்வாகிகளை தற்காலிகமாக நியமித்ததாக சொல்லப்பட்ட வக்பு வாரிய அதிகாரிகளுக்கே தெரியபடுத்தாமல் தற்காலிக நிர்வாகி என்று ஒருவரை நியமிக்க யார் அதிகாரம் கொடுத்ததுதங்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மூலம் ஊரின் அனுதாபம் தேடுவதற்காக தகவல் பலகையில் நோட்டீஸ் வைக்கும் போதுஅதிமுக்கியமான தகவலான ராஜினாமா கடிதத்தை மட்டும் ஏன் தகவல் பலகையில் வைக்கவில்லையாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? பள்ளிவாசல் கணக்குகள் ஜமாத்தார்களிடம் சமர்பிக்காதபோதே யாரும் கண்டுக்கொள்ளவில்லைராஜினாமாவையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற அலட்சியத்தில் நாடகம் ஆடுகிறார்களோராஜினாமா செய்தது உண்மையென்றால் உடனடியாக அதனை வக்பு வாரியத்திற்கு அனுப்புங்கள்பள்ளிவாசல் தகவல் பலகையிலும் அதன் நகலை ஜமாத்தார்களின் பார்வைக்கு வையுங்கள்ஏன் அப்படி செய்ய தயங்குகிறார்கள்ராஜினாமா கிடைத்தபிறகு வக்பு வாரியம் முடிவு செய்யட்டும், எப்படி தேர்தல் நடத்துவது என்றுநிர்வாகமே இல்லாத போது எப்படி தேர்வு முறையையும், தேர்தல் நாளையும் முடிவு செய்வது? அப்படியென்றால் அதிகாரம் யாரிடம்  இருக்கிறது?

Tuesday, December 27, 2011

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"
இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.

எனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி பிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர்.

Monday, December 26, 2011

பிற இணையதள கட்டுரை


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
முதலில் www.niduronline.com இணையதளத்தில் நீடூர் நிலைமையை முதன் முதலாக கடுமையாக சாடிய இணையதளத்தின் நிர்வாகி அஸ்ரப் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இந்த கட்டுரையை வெளியிட்டது மட்டுமில்லாது இதனால் பல இடத்திலிருந்து அழுத்தம் வருகின்றது ஆனால் அல்லாஹ்வை தவிர எவருக்கும் பயப்பட மாட்டேன் என கூறிய உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தை வழங்கிடுவானாக..அந்த இணையதளத்தில் வெளியான கட்டுரையை காண கீழே உள்ளே லிங்கை பார்க்கவும்.
http://niduronline.com/?p=7975

HAJ 2011








Saturday, December 24, 2011

புரிந்துணர்வு கூட்டம் தேவையா?

நமதூரின் நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு எப்போதுமே அவர்களுக்கு ஒரு சட்டம், ஜமாத்தார்களுக்கு ஒரு சட்டம் தான். முன்பு இதே ஜமாத்தார்கள் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை தான் ஊரில் குழப்பம் விலைவிக்க பார்க்கிறார்கள், தேர்தலுக்கு முன் இது போல் கூட்டம் கூட்ட அனுமதிக்க கூடாது, கூட்டத்தை ரத்து செய்து அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வட்டாச்சியரிடம் போய் நின்ற அதே முன்னாள் நிர்வாகிகள் இப்பொழுது அவர்கள் கையில் நிர்வாகம் இல்லாத நிலையில் புரிந்துண்ர்வு கூட்டம்(!!!) என்ற பெயரில் இன்று 24/12/11 காலை 10 மணிக்கு ஜமாத்தார்களை அழைத்துள்ளார்களே இதை யாரிடம் நாம் போய் கூறுவது?. அது போகட்டும், ஊர் கூட்டம் கூட்ட நினைப்பவர்கள் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை கூட்ட வேண்டும், வணிகம் செய்யும் பெரும்பாலான் மக்கள் அன்று தான் கலந்து கோள்ள முடியும் இல்லையெனில் அவ்ர்களை சார்ந்த மக்களே இதில் கலந்து கொண்டு அவ்ர்கள் நினைப்பது போல் கூட்டத்தை வழி நடத்துவர். இத்ற்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. திரும்பவும் அவர்கள் குட்டையை குழப்ப பார்க்கின்றனர், விழிப்புடைய மக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தவறாமல் ரகசிய வாக்கெடுப்புக்கு வழியிறுத்த வேண்டும். கண்டிப்பாக ரகசிய வாக்கெடுப்புதான் வேண்டும் இல்லாவிடில், தேர்தல் எப்படி நடத்துவது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தல் அதில் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் ஜனநாயக முறைப்படித்தான் நடத்த வேண்டும் என தீர்ப்பு வரும். அதுபோக இவர்கள் வட்டாச்சியரிடம் எழுதி கையோப்பமிட்ட தீர்மானத்தில் இதுபோல் தேர்தல் முன் கூட்டம் கூட்டினால் கூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றுள்ளது, அதையும் இக்கூட்டத்தில் மக்கள் கேள்வியாக எழுப்ப வேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த நிர்வகத்தினர் பின்னும் எந்த சதிவலைக்கும் நாம் அனுமதிக்க கூடாது.

Thursday, December 22, 2011

தவ்ஹீதா அல்லது சந்தகடையா?

அல்லாஹ் ஆதாம் நபியை படைக்கும் போது மலக்குகள் ரத்தம் சிந்தும் கூட்டத்தினரையா படைக்க போகிறாய் எனக் கேட்டனர், விதியை படைத்த அல்லாஹ்விற்கு தெரியாதா இந்த மனித கூட்டம் பின்னாளில் அடித்து கொண்டிருக்குமென்று. அதுபோல் தான் இந்த உலகம் படைக்கப்பட்டது முதல் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு அடித்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி காட்டு மிராண்டிகளாய் சிறிய அற்ப விஷயத்துகெல்லாம் கொலை செய்து கொண்டிருந்த காட்டு அரபிகள் வாழ்ந்த காலகட்டத்தில் தான் நமது உயிரின் மேலான முஹம்மதை அல்லாஹ் தன் இறைத்தூதராக அனுப்பினான். நபி(ஸல்) அவர்கள் அயராது உழைத்து கர்வம்,அந்தஸ்தால் பிரிந்து கிடந்த முஸ்லிம்களையும், அம்முஸ்லிம்களுக்கு கடுமையான எதிரியாக இருந்தவர்களை அல்லாஹ்வின் நாட்டத்தினால் முஸ்லிம்களாக்கி நபி(ஸல்) அவர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்தது தான் சகோதரத்துவம். அதன் பிறகு தன் சகோதரனுக்காக எதையும் விட்டுகொடுக்கும் தன்மையும், அந்த சகோதரனுக்கு ஆபத்து என்றால் முன்னால் கேடயமாக நின்று அந்த ஆபத்தை தான் ஏற்றுகொள்வதுமென ஈமானை அதிக வலுவாக அவர்கள் இதயத்தில் நபி(ஸல்) அவரகள் ஏற்றினார்கள். கிட்டத்தட்ட காட்டுவாசிகள் போல் இருந்தவர்களை சிந்தித்து முடிவெடுக்கும் திறனையும் வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையின் சிகரமாய் இருந்த சமுதாயத்தின் நிலை தற்போழுது எப்படி இருக்கின்றது? நபி(ஸல்) நமக்கு தந்த பலமான ஆயுதமான சகோதரத்துவம் இருக்கின்றதா? என்பதை சுருங்க காண்போம்.

இன்று வரை யூதர்களும். கிறுஸ்துவர்களும் முஸ்லிம்களை கண்டு அஞ்சுவது நம்மிடையே இருக்கும் சகோதரத்துவம்,ஏனெனில் முஸ்லிம்கள் ஒற்றுமையாய் இருந்தால் அல்லாஹ் பல மலக்குகளை இறக்கி முஸ்லிம்களை வலுவாக்குவான் என்பதுதான் அவ்ர்கள் பயப்பட காரணம். அமெரிக்காவும் கூட முஸ்லிம்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்திவிட்டுதான் அந்த நாட்டை தாக்கும், இதற்கு ஈராக்,லிபியா போர் ஓர் உதாரணம். இப்படி பிழவு பட்டவர்களை அடிப்பது அல்லது அழிப்பது எதிரிகளுக்கு ரொம்ப சுலபம் ஏனெனில் அங்கே அல்லாஹ்வின் உதவியும் இருக்காது, நபி(ஸல்) அழாமாய் ஊன்றுவித்த ஈமானும் இருக்காது. அதுபோல் தான் இப்பொழுது தமிழகத்திலும் நிலை இருக்கின்றது. ஒரு ஜமாத்தாக வாழத வட இந்தியாவில் முஸ்லிம்களை தக்கினர் அது போல் தென்னிந்தியாவை யாரும் தாக்க முடியாத நிலை ஏனெனின் இங்கு முஸ்லிம்களுக்கு போராடுவதற்காக பல ஜமாத்கள் போராடி கொண்டிருக்கின்றன. ஒவ்வொறு காலகட்டத்திலும் தென்னிந்தியாவில் உள்ள ஜமாத்களில் பிரிவினை என்பது தொடர்கதையாகிவிட்டது. முதன்முதலில் சுன்னத்வல்ஜமாத் தலைமையின் கீழ் அனைவரும் இருந்தோம், மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவர்கள் மக்களை தர்கா, மவ்லுது என ஷிர்கின் பக்கம் மக்களை சாய்த்தனர். அதன் பின் அதிலிருந்து விவரறிந்தவர்கள் வெளியேரி பல ஜமாத்கள் உருவாக்கினாலும் நபி(ஸல்) காட்டிய மார்க்கபடி அமைய பெற்ற வலுவான இயக்கம் ஜாக். அதிலும் நிலைத்தார்களா என்றால் இல்லை என்பதுதான் கவலையளிக்கும் பதில். ஏதோ காரணம் கூறி தமுமுக உருவானது. பிரியும்போது இரு தரப்பினர் கூறும் காரணத்தையும் கேட்டால் உண்மை யார் பக்கம் என்பது கண்டுபிடிப்பது இயலாத காரியம். தவ்ஹீத்வாதிகள் இருப்பதால் யாரும் தமுமுக பக்கம் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் என கூறி தமுமுகவிலும் பிரிவினை வந்தது. அதுமுதல் தான் முஸ்லிம் சமுதாயம் சிரிப்பாய் சிரிக்க தொடங்கியது. இதற்கு முன் முஸ்லிம்களுகிடையே தான் தாங்கள் தூயவர்கள் என்று கூறி பக்கம் பக்கமாய் கட்டுரை அவரவர்கள் பத்திரிக்கையில் எழுதுவார்கள். ஆனால் தமுமுக பிரிவினையுற்ற பொழுது, உன் பித்ரா கணக்கு எங்கே? கணக்குகள் சரியா? என அவர் அவர்களை பார்த்து கேட்காமல் வெளியுலக்கத்தில் போஸ்டர் அடித்து எல்லாரும் கூடும் இடமாக பார்த்து ஒட்டி அவரவர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். இதனால் முஸ்லிம் சமூகமே வெட்கி தலை குனிய வேண்டியதாயிற்று. ராமகோபாலன் கூட " இவர்களை நாம் அடிக்க வேண்டாம் இவர்களை இவர்களே அடித்து கொண்டு சாவர்" என கிண்டலடிக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளபட்டனர்.

சரி அதுபோதாது என இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலோ பிரிவினை. பிரிவினைக்கு காரணத்தை கேட்டால் காரி துப்பதான் தோன்றும். பாக்கர் மீது செக்ஸ் புகார் கூறி வெளியேற்றியது. எவரின் தவறையும் பகிரங்க படுத்த வேண்டாம் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. ஆனால் பல காரணங்களுக்காகத்தான் வெளியிட நேரிட்டது என ததஜா கூறியது. ஆனாம் இது முற்றிலும் போய் என பாக்கர் கூறி விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என ஆரம்பப் செய்து இப்பொழுது இரு அமைப்புக்கும் இடையே கடுமையான் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. பாக்கரின் செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என பேர்வழி www.poyyantj.blogspot.com என்ற இணையதளத்தை உருவாக்கி பாக்கரை கடுமையாக சாடி எழுதி வருகின்றனர். போட்டியாக பாக்கர் தரப்பு www.poyyanpj.blogspot.com என்ற இணையதளத்தை உருவாக்கி பீஜேயை கடுமையாக தாக்கி எழுதி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் மாற்று மதத்தினருக்கு என்ன தோன்றும்?, மார்க்கத்தை கரைத்து குடித்தவர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் சந்தகடை சண்டையை விட மோசமாக சண்டையிடுவது எதை காட்டுகிறது. நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் இவர்களை என்ன செய்வது? எப்படா முஸ்லிம்களை அழிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் பாஸிஸவாதிகளுக்கு இப்படி சண்டை போடுவது எவ்வளவு மகிழவை ஏற்படுத்தும்? அல்லாஹ் கண்டிப்பாக இதில் யார் கெட்டவர்கள் என்று மறுமையில் காண்பிப்பான் ஆனால் மக்கள் இவ்வுலகில் நல்லவர்கள் யார் என்றூ எப்படி கண்டுபிடிப்பது. இவர்களை பின்ப்ற்றினால் நேர்வழி பெறமுடியுமா? இப்படி பல எண்ணங்கள் தவ்ஹீதை பின்பற்றும் மக்களிடையே ஓடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் சண்டையெல்லாமே இந்த உலக பிரச்சனைக்குதான்,இதை எப்படி தீர்ப்பது? நமக்கு பட்ட ஒரே தீர்வு நமது சுய சிந்தனைதான். அல்லாஹ் நமக்கு சிந்திக்கும் திறனை தந்துள்ளான் அதற்கு மேலாக நமக்கு வழிகாட்ட தமிழாக்கம் செய்த குரானும், ஹதீஸ் நூல்களும் உள்ளன. அதை ஆராய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. மார்க்க அறிஞர்கள் மைக்கை பிடித்து கூறுவார்கள் அதை அப்படியே பின்பற்றலாம் என நினைத்து கொண்டிருக்கிறோம் அவர்கள் சொல்வதை எப்பொழுதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா? நம் செயலுக்கு நாம் தான் பொறுப்பு அதற்கு ஒருபோதும் மற்றவர்கள் பகரமாகமாட்டர்கள். எனவே இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலத்தில் இந்த ஜமாத்தில் மேலும் மேலும் பிரிவினைதான் வரும் ஆதலால் இவர்களை பின்பற்றுவதை நிறுத்திவிட்டு நம்மை நாமே சுய பரிசோதனை அடிக்கடி செய்து மார்க்கம் சொன்னபடி வாழ்கிறோமா என்பதை ஆராய்ந்து வாழ வேண்டும் அப்படி வாழ முற்பட்டால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவான். அப்படி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! ஆமீன்.

Friday, December 16, 2011

பழைய நிர்வாகத்தினர் ராஜினாமா செய்தனர்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்று 16/12/2011 ஜும்மா தொழுகைக்கு முன் ஊர் கணக்குபிள்ளை ஓரு அறிவிப்பு கடிதத்தை வாசித்தார், அதில் 15/12/2011 முதல் முத்தவல்லி, நாட்டண்மைகள் அனைவரும் பதவி விலகி கொள்வதாகவும் விரைவில் புதிய நிர்வாகத்தினரை தேர்வு செய்ய தேர்தல் நடக்கும் எனவும் அறிவித்தார். அதன் பின் ஊர் நிர்வாக டிரஸ்டி ஹமீத் அவர்கள் ஊர் நிர்வாக தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் முத்தவல்லி பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென்றும் இன்ஷா அல்லாஹ் நல்ல நிர்வாகம் அமைய அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் என்று கூறிவிட்டு விடைபெற்றார். அல்லாவுக்கே அனைத்து புகழும். இன்ஷா அல்லாஹ் இனி ஜனநாயக முறையில் தேர்தல் நடந்து நல்ல நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது ஜமாத்தார்கள் அனைவரின் கடமையாகும். அல்லாஹ் நம் முயற்சிக்கு கடைசி வரை துணை புரிந்து நிற்பானாக! ஆமீன்.

Wednesday, December 14, 2011

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசைனின் மருத்துவ உதவி


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசன் சங்கம் - துபாய் பல வருடங்களாக பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்து வருகின்றது. அதில் முக்கியமானது மருத்துவ உதவி. நமது நீடூர் மேலத் தெரு சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் மகனார் கல்லூரியில் படித்து வருகிறார், அந்த பையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பையனை பற்றிய விபரம் முன்பே நமது இணையதளத்தில் வெளியிட்டுருந்தோம். அதை காண இங்கே கிளிக் செய்யவும். துபாய் சங்கம் சார்பாக அந்த பையனுக்கு மாதா மாதம் உதவி செய்யபட்டு வருகிறது. சென்ற வாரம் துபாய் சங்க தலைவர் சாதிக் முன்னிலையில் அந்த பையனுக்கு இரண்டாம் மாத உதவி வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அந்த பையன் உடல் நலம் குணம் அடைய துவா செய்யும்படி கேட்டு கொள்கிறோம். மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் பின்வரும் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

O.M.SADIQ (தலைவர்) = 0097150 5683579
A.NAYAS (செயலாளர்) = 0097150 6985035
M.NASEER ALI (பொருளாளர்) = 0097150 5144765
A.MUZIPURAHMAN (இணை செயலாளர்) = 0097150 6950409


Tuesday, December 13, 2011

மன்னராட்சி நடக்கும் நீடூர்

நமதூரில் சென்ற வாரம் 09/12/2011 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை முடிந்த பிறகு ஜின்னா தெருவை சேர்ந்த சகோதரரர் இஸ்மாயில் அவர்கள் எழுந்து ஜமாத்தார்களிடம் ஊர் நிர்வாக தேர்தல் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார், அவர் கேட்டது ஊர் நிர்வாகத்திடம், கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்காமல் வழக்கம் போல் எந்த பொறுப்பிலும் இல்லாத அவர்களின் கைத்தடிதான் காச்சோ முச்சோ என்று கத்தியுள்ளார். நிர்வாகிகளுக்கு பேச தெரியாதா? என்ன இந்த கைத்தடி அவர்களின் ஸ்பீக்கரா? ஒரு கேள்விக்கும் மக்கள் மத்தியில் பதில் சொல்லாமல் வழக்கம் போல் இஸ்மாயில் சகோதரருக்கும் கட்ட பஞ்சாயத்து செய்ய ஊர் நிர்வாகம் 11/12/2011 அன்று அழைத்துள்ளது. அதற்கு சகோதரர் அவர்கள் நேராக முத்தவல்லி வீட்டிற்கு சென்று எனக்கு இன்று வேலை உள்ளது, எதற்காக என்னை தனியாக பஞ்சாயத்துக்கு அழைக்கிறீர்கள், மக்கள் மத்தியில் கேட்டதற்கு மக்கள் மத்தியிலேயே பதில் கூறுங்கள் என சொல்லியுள்ளார்.

Monday, December 5, 2011

இறைச்சி கடை பஞ்சாயத்து


நாம் இங்கே கூறப்போகும் சம்பவம் பலநாள் முன்பு நடந்தது ஆனால் வெளிநாட்டில் வாழும் பல சகோதரர்களுக்கு இந்த சம்பவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. இன்ஷா அல்லாஹ் நம்மூரில் நிர்வாகம் மாறும் தருவாயில் உள்ளதால் புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் செய்த தப்பை செய்யாமலிருக்க இச்சம்பவத்தை இங்கே வெளியிடுகிறோம்.
நம்ம ஊரை சேர்ந்த சகோதரர் ஒரு ஜும்மா தொழுகை முடிந்தபின் எழுந்து இந்த ஊரில் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா? எனக் கேட்டுள்ளார். நிர்வாகிகள் ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று வினவ அதற்கு அந்த சகோதரர் நம்ம ஊர் இறைச்சி கடையில் பெண் ஆடு அறுப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் அப்படியா அதை விசாரிப்போம் என கூறியுள்ளது. அடுத்த ஜும்மா வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால்

Sunday, December 4, 2011

புதுப் பொழிவுடன் நீடுர் ஏகத்துவ பள்ளி

பழைய தோற்றம்


விளம்பரங்கள் அகற்றப்பட்டு பெயிண்ட் அடித்த பின்பு உள்ள தோற்றம்



நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 02.12.2011 அன்று தொழுகையின் அவசியம் பற்றிய நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.  

"கட்டுரையை படிக்க சிரமமிருந்தால் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உள்நோக்கி காணலாம்."

தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 29.11.2011 அன்று சேகர் என்ற சகோதரருக்கு தமிழ் மொழி பெயர்த்த குர்ஆன் வழங்கி, இஸ்லாம் குறித்த அவரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

பர்தா பெண்ணுக்கு பெருமை

பின்வரும் கட்டுரையை படிக்க சிரமமிருந்தால் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உள்நோக்கி காணலாம்.