அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, June 23, 2012

தேர்தலுக்கு பின் ஒற்றுமையை பறை சாற்றிய நீடூர் நெய்வாசல் புதிய நிர்வாகம்


நடக்குமா நடக்காதா என்று வாய் சவடால்களும் தொடர்ந்து கொண்டு இருக்க நலமாக முடிவடைந்து இப்படி சொல்வதை விட வெற்றிகரமாக இறைவனின் துணை கொண்டு நடந்து நிர்வாகமும் அமைக்கப்பட்டது புதிய நிர்வாகத்தை இணையதளம் வரவேற்கிறது கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெற்றிவாகை சூடியவர்கள் இனி எப்படி நடக்கபோகிறார்கள் இறை அச்சத்தோடா அல்லது பழையபடி தான்தோன்றித்தனமாக நடக்கபோகிறர்களா என்பதை மக்கள் ஆவலாக எதிர்நோக்கி உள்ளார்கள்.
முதலில் வெற்றிபெற்றவர்கள் யார் யாருக்கோ நன்றி சொல்லி உள்ளார்கள் குறிப்பாக அவர்கள் நன்றிதௌஹீத் ஜமாஅத்திர்க்குதான் தெரிவிக்கவேண்டும் காரணம் அவர்கள் பேரை பயன்படுத்தியதால் தான் வெற்றி கிட்டியது நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை இரண்டாவதாக வெற்றி பெற்றவர்கள் இறுமாப்பு கொள்ளாமல் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் இதை சொல்ல காரணம் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவர் அவர் தெருவில் உள்ளவரை மிரட்டியதாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டு அந்த தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகியை கண்டித்து அனுப்பியதாக செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் தயவு செய்து திருந்தி கொள்ள வேண்டும் காரணம் உங்களை நம்பி வாக்களித்தவர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்துதான் வாக்களித்து இருகிறார்கள்.
தேர்தல் என்று வந்து விட்டால் வெற்றி தோல்வி நிச்சயம் வெற்றியை மட்டும் நம்பி யாரும் நிற்பதில்லை தேர்தல் முடிந்தவுடன் ஊரின் ஒற்றுமையை நினைத்து சந்தோசம் அடைந்தோம் நாம் இணையதளத்தில் இது சம்பந்தமாக வெற்றி செய்தியை மட்டும் போட்டோம் மற்ற நிகழ்வுகளை கவனித்து கொண்டு இருந்தோம் தவறு என்று தெரிந்தால் கண்டிப்பாக அதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சொல்ல கடமை பட்டு உள்ளோம் நம்மை கேவலமாக விமர்சனம் செய்வதையும் நாம் அறியாமல் இல்லை இதனால் நாம் கோபப்பட போவதில்லை காரணம் ஏது ஒற்றுமையாக இருக்க தேவையோ அதை கண்டிப்பாக நாம் சொல்வோம் ஒரு விசயத்தில் நமக்கு புலப்படாத ஒன்று ஒரு இணையதளத்தில் எல்லா விசயங்களையும் ஆராய வேண்டி இருக்கும் அதற்க்கு ஒரு எல்லை இல்லை தேவை இல்லாமல் எங்கள் ஊரை பற்றி எழுத இவர்கள் யார் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது உங்கள் ஊரில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளையும் கண்டிப்பாக ஒளிபரப்பு செய்கிறோம் நீங்கள் அனுமதித்தால் உங்கள் ஊரில் இணையதளம் நடத்துபவர்கள் முன்னால் இருந்த நிர்வாகிகளுக்கு பயந்து கொண்டு தன் கருத்துகளை சொல்வதில்லை பயம் தான் காரணம் நாம் இந்த இணையதளத்தை நடத்த காரணமே நண்பர்கள்தான் இதற்க்காக யாரிடமும் எந்த பொருளுதவியும் பெற்று கொண்டு அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க மாட்டோம் சிலர் லட்ச கணக்கில் பணம் தருவது கூட தயாராக இருந்தார்கள் பேரம் பேசினார்கள் ஆனால் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக போட்ட கட்டுரையை எடுத்தது கிடையாது .
இப்போது கூட பச்சை துரோகம் : முட்டாள் தொண்டனும் அடி முட்டாள் தலைவனும்என்ற தலைப்பில் கட்டுரை வெளியீட்டு இருக்கிறோம் அதற்க்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்  நண்பர்களை பிரிய நேரிடும் என்பது தெரியும் ஆனால் உண்மையை சொல்லவேண்டும் என்ற நோக்கில் அதை எழுதி இருந்தோம் நாம் வெளி உலகுக்கு வர காரணமாக இருந்த என் சகோதரன் P.ஜெயினுலாப்தீன்  என்ற சகோதரன் தான் காரணம் அவர் தவறு செய்யும் போது தட்டி கேட்க வேண்டுமே என்ற நோக்கத்தில் தான் இந்த கட்டுரையை எழுதி இருந்தோம். நம்மை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்கவில்லை காரணம் இணையதளத்தில் எழுதி விடுவோம் என்ற பயம் காரணமாக இருக்கலாம் நாம் கேட்ட வகையில் சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டது மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சகோதரர் ஜெகபர் அலி பதவி ஏற்பு விழாவில் கூறிய கருத்துக்கள் முகம் சுளிக்கும் படியாக இருந்ததாகவும் அதை அங்குள்ள அனைவரும் கண்டித்ததாகவும் செய்தி அறிந்து சந்தோசம் அடைந்தோம் புதிய நிர்வாகிகளுக்கு நம் இணையதளத்தின் சார்பாக வைக்கப்படும் கேள்விகள் .
  1. பள்ளிவாசல் கட்டிட கணக்கு சம்பந்தமாக கிளியனுரில் தணிக்கை குழு என்ற ஒரு குழுவை ஏற்படுத்தி அணைத்து கணக்குகளையும் தணிக்கை செய்து சில தவறுகளை கண்டுபிடித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பித்து இருந்தார்கள் . அதேபோல் நேர்மையான முறையில் தணிக்கை குழு அமைத்து கணக்கை பார்க்க வேண்டும் தவறு இருப்பின் மன்னித்து விடலாம் ஆனால் மக்களுக்கு விளக்க படுத்த வேண்டும் 
  2. பள்ளிவாசல் கடைகள் இது வரை வாடகை உயர்த்தாமல் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் காரணம் வருடாவருடம் வாடகை உயர்த்தி கிளியனுரில் கடை வசூல் செய்து வருகிறார்கள் பாக்கி வைத்து இருப்பவர்களை பேனர் வைத்து விளம்பர படுத்துவார்கள் இதற்க்கு பயந்து கொண்டு வாடகை பாக்கியை உடனடியாக கட்டி விடுவார்கள் இந்த முறையை பின்பற்றலாம் 
  3. புதியதாக ஒரு நபரை நிர்வகதிர்க்குள் புகுத்தி இருகிறீர்கள் இதை தவறு என்று மக்கள் கூறுவதை நாம் கேட்டபின்தான் எழுத்துகிரேன் காரணம் தோல்வி அடைந்த ஒருவரை நியமிப்பது குரூப் பாலிடிக்ஸ் நீங்களும் கடைபிடிக்க தொடங்கி விட்டீர்களோ ? தோற்ற அனைவருக்கும் பதவி கொடுத்திருக்க வேண்டும். அதேபோல் உங்க அணியில் பாதிபேர் தோற்றுப்போயிருந்தால் அவர்களுக்கும் பதவியில் அமர்த்தி இருப்பிர்களா ?என்ற கவலை நமக்கு நியமித்து விட்டீர்கள்!! மக்கள் மனதில் எழுந்த சந்தேகத்தை எழுத வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன் .
  4. குறிப்பாக இளைஞர்கள் வெற்றி பெற்றதை நினைத்து சந்தோசம் அடைந்தேன் அவர்களை அலட்சியப்படுத்தாமல் எந்த ஒரு முடிவெடுத்தாலும் அனைவரின் கருத்துகளையும் பதிவு செய்து யார் எதிராக கருத்துகளை பதிவு செய்கிறாரோ அந்த கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் காரணம் இது இஸ்லாமிய வழிமுறை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாம் மக்களுடன் மக்களாக குறிப்பாக  நீடுர் இணையதளம் நடத்தி வரும் சகோதரர் உண்மை நிலையை யாருக்கும் பயப்படாமல் தன கருத்துகளை பதிவு செய்துள்ளார் அந்த கருத்துகள் நம்மை கவரந்ததால் அப்படியே  நம் இணைய நேயர்களுக்காக தந்துள்ளோம்
“ரெண்டு குழுவும் சேர்ந்துதான் புதிய நிர்வாகத்தை அமைப்பாங்க!” என்பதுதான் எல்லோரது டயலாக்-ஆகவும் விருப்பமாகவும் இருந்து வந்தது.தேர்தல் வேண்டாம் என்றுக் கூறி அதற்கான தடை உத்தரவை எந்த வடிவத்திலாவது வாங்கிவிட வேண்டும் என்று கடைசிவரை கடினமாக முயற்சித்த குழுவினர் எப்படி இப்படியொரு அமோக வெற்றியைப் பெற்றார்கள்? அப்படி என்ன அலை ஊரில் வீசியது? வெற்றியும் தோல்வியும் பொது வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயமே இல்லை. ரகசிய வாக்கெடுப்பு என்கிற நிலைபாடு முதலில் வென்றிருக்கிறது. ஆனால் இந்த நிலைபாட்டை முன்மொழிந்து முழு வேகத்தில் முயற்சித்தவர்கள் ஏன் படுதோல்வி அடைந்தார்கள்?
இது தொடர்பாக ஜமாஅத்தார்களின் எண்ண ஓட்டங்களை அறிய முற்பட்டபோது பல உண்மைகள் தெளிவாகி உள்ளன. எந்த 18 வயதினரின் ஓட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு குழுவினர் அஞ்சினார்களோ, அந்த இளைஞர்களின் வாக்குகளே அவர்களின் வெற்றிக்குக் காரணமாகியுள்ளது.
முதலில் இரண்டு குழுவினரின் அணுகுமுறையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்திருக்கிறது. தேர்தலுக்காக முயற்சித்த அணி ஜமாஅத்தார்களிடம் இரண்டர கலக்க முயலவில்லை. பல வேளைகளில் பலரிடமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது, வீடு தேடி சென்ற கண்ணியமிக்க குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களையும் வெளியேறும்படி மும்முறை Get Out சொன்னது ஆகியவையெல்லாம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம் ஜமாஅத்தார்களை வலிய அழைத்துப் பேசுகின்ற தேர்தல் வேண்டாம் எனும் அணியினரின் அணுகுமுறை வெகுவாக வேலை செய்திருக்கிறது என்பதை பலரது பதில்களின் மூலம் அறிய முடிகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியாக தேர்தல் வேண்டாம் எனும் அணியினர் எடுத்த ஆயுதம் மிகவும் Sensitive-ஆன ஒன்று.
“மாக்காண்டி வருகிறான். சாக்குப்பையில் அள்ளிக் கொண்டு போய்விடுவான்” என்று குழந்தைகளை பயம் காட்டுவதைப்போல் “நஜாத்” என்கிற ஆயுதத்தை எடுத்து தீவிரப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். தேர்தல் வேண்டும் எனும் அணியினருக்கு ஓட்டளித்தால் இனிவரும் காலங்களில் தராவீஹ் 8 ரக்க அத்கள்தான் என்கிற பிரச்சாரத்தையும் பலமாக செய்திருக்கிறார்கள். உண்மையில் ஊரில் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டப்படுவதை ஜமாஅத்தார்கள் ரசிக்கவில்லை. எனவே இந்த பிரச்சார யுக்தி ஒரு பெரிய அலையை உருவாக்கியுள்ளது.
இந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ள தேர்தல் வேண்டும் எனும் அணி முயற்சித்ததாகத் தெரியவில்லை. அல்லது அவர்களின் முயற்சி வெற்றிகரமாக அமையவில்லை.
விளைவு பலரும் சிறிய ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியது.
எது எப்படியானாலும் தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கின்ற நிர்வாகத்தினரும் நமது சகோதரர்களே. அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக்கூடியவர்களாக உள்ளார்கள். அவர்கள் ஊர் ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாக உறுதியேற்றிருப்பதாக அறிகிறோம். அண்ணன், தம்பிகளாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகிறார்கள். தேர்தல் வேண்டும் எனும் அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட M.A.முஹம்மது அலியும் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வுடன் பணியாற்ற இருப்பது நல்ல துவக்கம்.
தேர்தல் மாறுதல் தரும் என்பதற்காக இரு அணிகளாக போட்டியிட்டாலும் இனி நாம் அனைவரும் ஓரணியினரே என்கிற ஒற்றுமை எண்ணம் மலர வேண்டும்.
பொறுப்பில் இல்லாவிட்டாலும் ஊர் நிர்வாகத்துடன் சேர்ந்து தொண்டாற்றுவதன் மூலம் பொதுமக்களின் நன்மதிப்பையும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் பெறலாம். இறைவன் நாடினால் அடுத்த தேர்தலில் நிர்வாகத்திற்கும் வரலாம்.

courtesy to: www.kiliyanur.net

Monday, June 18, 2012

முத்தவல்லி, டிரஸ்டி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



நமதூர் ஜமாத்தார்கள் கூடி முத்தவல்லியாக K.R.மாலிக் அவர்களையும்
டிரஸ்டியாக H.T.அன்சாரி அவர்களையும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக!!!

Saturday, June 16, 2012

வெற்றி பெற்றவர்களின் விபரம்

வெற்றி பெற்றவர்களுக்கு இணையதளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களின் விபரம் கீழே

1.ஹண்ணான் 254

2.அப்துல்ரவூப் 247

3.அப்துல் மாலிக் 235


4.ஜெஹபர்அலி 218


5.அப்துல்மஜிது 213


6.சதகத்துல்லாஹ் 207


7.தமிமுன்அன்சாரி 203


8.பஜிலூர் ரஹ்மான் 203


9.முஹம்மதுஷபீர் 200


10.முஹம்மதுமஜிது197


11.சபீர்அஹமது 196


12.முஹம்மதுஅலி 195



மற்றவர்களின் விபரம் கீழே


13.அப்துல் மஜிது -186

14.காதர்ஷரீப் -169


15.அப்துர்ரஹ்மான் -183

16.தாஜுதீன்/யூசப் -152

17.தாஜுதீன் M.A.P. -183

18.S.A.நசுருல்லாஹ் -169

19.நஜிமுதீன் -184

20.லியாகத்அலி -192

21.முஹம்மது அமீன் -143

22.S.Mஆரிபின் -156

23.Mஅலி -154

24.AKS.நஜிம் -125

வாக்குகள் மும்முரமாக எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணுமிடத்தில் இரு அணிகளின் சார்பாக தலா 3 நபர்களும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை வாக்கு எண்ணுமிடத்திற்கு உள்ளே போகவும், அங்கிருந்து வெளியே வரவும் யாருக்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளே உள்ள அனைவரின் மொபைல்களும் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கபெற்றே அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நமதூரின் புதிய நிர்வாக அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியாகும். ஒரே சீட்டில் 24 வேட்பாளர்களின் பெயரும், அதில் ஒவ்வொருவரும் பலவிதமாக 12 வேட்பாளர்களுக்கு ஒட்டளித்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை வெளியாக சிறிய நேரம் பிடிக்கலாம். 

நன்றி! நன்றி!! நன்றி!!!



அல்லாஹ்வின் உதவியால் நமதூரில் ரகசிய வாக்கெடுப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது!! இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு அயராது முயற்சி செய்த MAP.தாஜ் அவர்களுக்கும், முஹம்மத் அலி அவர்களுக்கும், அவர்களுக்கு பக்கபலமாக அரும்பாடு பட்ட நமதூர் இளைஞர்களுக்கும், ஒத்துழைப்பு தந்த ஜமாத்தார்களுக்கும், ஊர் பெரியவர்களுக்கும், சமாதானத்திற்கு முயற்சிசெய்த வட்டார ஜமாத்தினருக்கும், வட்டாசியருக்கும், சென்னை வக்பு போர்டிற்கும், சிறப்பான முறையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்தி தந்த வக்பு போர்டு ஆய்வாளர் முஹம்மத் அவர்களுக்கும், அலுவலர்களுக்கும், சிறப்பான முறையில் பாதுகாப்பை ஏற்படுத்தித்தந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அனைவருக்கும், ஆர்வமுடன் வாக்களித்த ஜமாத்தினருக்கும், ஒத்துழைப்பு தந்த ஊடகங்களான கிளியனூர் நெட், நீடூர் நெட் , நீடூர் நெய்வாசல் ப்ளாக் ஸ்பாட், நீடூர் ஆன்லைன், நீடூரி ப்ளாக் ஸ்பாட், நீடூர் இன்போ மற்றும் வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெற துவா செய்த உலகெங்கும் வாழும் நமது ஜமாத்தை சார்ந்த அனைவர்களுக்கும் மைநீடூர் இணையதளம் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லுதவி புரிவானாக! இன்ஷா அல்லாஹ் அமையவிருக்கும் புதிய நிர்வாகம் நம் நீடுரை மற்ற ஊர்களுக்கு முன்மாதிரி ஊராக மாற்றும் நிர்வாகமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக!!! 

404 வாக்குகள் பதிவாயின

இந்திய நேரப்படி மாலை நான்கு மணியுடன் வாக்கு பதிவு முடிவுற்றது. மொத்தம் 404 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பெட்டி சீல் செய்து வைக்கப்பட்டுள்ளன, இன்ஷா அல்லாஹ் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப் பெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.












photos from nidurnet.blogspot.com

தேர்தல் நிலவரம்

நீடுர் - நெயவாசல் தேர்தலில் மதியம் 1.30 ம்ணியளவில் 325 ஓட்டுக்கள் மேல் பதிவாகியுள்ளன, 500 ஓட்டுக்கள் வரை வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009 -ல் நடந்த தேர்தலில் கூட மொத்தம் 200 அல்லது அதுக்கும் அதிகமான ஓட்டுகளே பதிவாயின. மக்கள் அனைவரும் ஆர்வமாய் வாக்களித்து வருகின்றனர். ஊரில் 1000 க்கும் மேல் ஜமாத்தார் இருந்தாலும் பலரது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை மற்றும் பலர் வெளிநாட்டில் உள்ளனர். இன்ஷா அல்லாஹ் இன்று 4 மணிவரை ஓட்டு பதிவு நடைபெற்று முடிவுகள் இன்றே வெளியிடப்படும்.

பரபரப்பாய் போகும் நீடுர் - நெய்வாசல் ஜமாத் தேர்தல்

காலை 9 மணி முதல் சலவாத் பாவா நினைவு கூடத்தில் நம்மூர் மக்கள் ஆர்வமாய் நின்று ஓட்டளித்து வருகின்றனர். DSP தலைமையில் ஐப்பதுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்ஷா அல்லாஹ் ஊரின் பழைய பெருமையை மீட்டெடுப்போம்.


அல்லாஹ்வின் பேருதவியால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நாள் வரை எத்திவிட்டோம். இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நம் நிர்வாகத்தை முதன் முறையாக பயமின்றி தேர்ந்தேடுக்கப் போகும் நாள். இன்று அனைத்து ஜமாத்தினருக்கும் ஓர் வேண்டுகோள்!, வெளிநாட்டில் வாழும் சில சகோதரர்கள் இந்த ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஊர் வந்திருக்கிறார்கள். எனவே இந்த ரகசிய வாக்கெடுப்பில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள், யார் யாரெல்லாம் நல்லவர்கள் என்று. எனவே நம் ஊரின் மீது மட்டும் அக்கறை கொண்ட, அல்லாஹ்விற்கு பயந்து நடக்கும் அடியார்களை தேர்ந்தெடுத்து நம் ஊரின் மீது படிந்த கரையை துடைத்து ஊரின் பழைய பெருமையை மீட்டெடுக்க கேட்டுக் கொள்கிறோம்.  
 அது போக நேற்று ஜும்மாவில் வழக்கம் போல் இமாம் அவர்கள் ஊர் ஆதிக்கவாதிகள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதையே ஒப்பித்துள்ளார்கள். அதை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Thursday, June 14, 2012

ஜமாத்தார்களின் கவனத்திற்கு.....


பொய் புகார் அம்பலமானது



ரகசிய வாக்கெடுப்பிற்கு ஜமாத்தார்களின் ஆதரவோடு முயற்சிசெய்து கொண்டு இருக்கின்ற MAP.தாஜ் அவர்களின் மீது பொய்யான புகார் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக லெட்டர் பேடில் சிலரால் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொடுக்கபட்டது.புகார் என்னவென்றால் MAP.தாஜ் அவர்கள் அவதூறு பேசுவதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும், ரகசிய வாக்கெடுப்பை சீர்குலைக்க முயல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது! நமதூர் ஜமாத்தினருக்கு ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்துவது யார்? தேர்தலை கெடுக்க நினைப்பது யார்? என்பது நன்கு தெரியும்!! MAP.தாஜ் அவர்கள் காவல்நிலையம் சென்று தற்போதைய சூழ்நிலையை உரிய ஆவணங்களோடு விளக்கி உள்ளார். ரகசிய வாக்கெடுப்பை உயர்நீதிமன்றம் சென்று   உத்தரவை பெற்றதே தாங்கள் தான் என்றும், உண்மை அப்படி இருக்க நானே தேர்தலுக்கு இடையூறாக இருப்பேனா? என்று விளக்கம் அளித்துள்ளார்!! ஊரில் நடந்த பல சம்பவங்களை அவர் சொன்னபோது புகாராக வேண்டுமானால் கொடுங்கள் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.ஆனால் MAP.தாஜ் அவர்கள் " புகார் ஒன்றும் வேண்டாம்..அமைதியாக தேர்தலை நடத்த பாதுகாப்பு செய்து தாருங்கள்"என்று கூறியுள்ளார். அவருடன் ஜமாத்தை சேர்ந்த பலரும் காவல்நிலையம் சென்றுவந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் மீது புகார் கொடுத்தவர்களில் முதல் நபர் முன்பு MAP.தாஜ் அவர்களை ஊர் பஞ்சாயத்திற்கு தூக்கிச்செல்ல வந்த ஐவரில் ஒருவர்!! ஒருவர் தற்போது நாட்டாமை தேர்தலில் போட்டியும் இடுகிறார். (இது சம்பந்தமாக முன்பே எழுதி இருந்தோம்) அப்போதே MAP.தாஜ் அவர்கள் அந்த சம்பவத்திற்கு ஒரு புகார் கொடித்திருக்கலாம், ஆனால் பொறுமை காத்தார். தற்போதும் பொறுமையுடன் தான் செயல்படுகின்றார். அவர் நினைத்திருந்தால்,இடைக்காலத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் மூன்று நபர்களை மிரட்டியதற்குகூட புகார் அளித்திருக்கலாம்.ஆனால் அதை அவர் செய்யவில்லை.சுமூகமாக போகவே அவர் விரும்பினார். அவர் ரகசிய வாக்கெடுப்பிற்கு முயன்றார் என்பதனாலேயே அவருக்கு பலவிதமான நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். முன்பும் ஒருமுறை ஊர் நிர்வாகத் தேர்தலுக்காக ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ததிற்கு காவல் துறையில் அவர்மீது புகார் அளித்தனர் முன்னால் நிர்வாகிகள்! அவர் என்ன தவறு  செய்தார்? பெரும்பான்மையான ஜமாத்தார்களின் விருப்பத்திற்கேற்ப ஜமாத் நிர்வாகிகள்  தேர்தலை,ஜமாத்தார்கள் ரகசியமான முறையில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி பலனில்லாத போது,உயர் நீதி மன்றம் சென்று ரகசிய வாக்கெடுப்பிற்கு உத்தரவை பெற்றார். ஊரில் உள்ள ஜமாத்தார்களின் வேண்டுகோளுக்கு இங்க ஜமாத்தார்களின் ஆதரவோடு தான் ரகசிய வாக்கெடுப்பிற்கான முயற்சியை செய்து வருகின்றார். எப்படியோ  உண்மை நிலவரத்தை விளக்கியதன் மூலம் நீங்கள் பொய்யர்கள் என்று காவல்துறையினருக்கு நன்கு விளங்க நீங்கள் கொடுத்த புகாரே போதுமானதாக ஆனது.பொய்யான புகாரை கொடுத்து யாரையும் தண்டிக்க நினைக்காதிர்கள்!! அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருக்கின்றான்!! அவர்கள் ரகசியவாகெடுப்பிற்கு ஏற்பாடு செய்துகொண்டு இருந்தால்..அதை ஏன் உங்களுக்கு எதிரான செயலாக பார்க்கின்றீர்கள்?இதுபோல் பொய்யான புகாரை கொடுத்து ரகசிய வாக்கெடுப்பிற்கு முயல்பவர்களை நெருக்கடிக்கு ஆலாக்கினால்..யாரும் ரகசிய வாக்கெடுப்பை கோர மாட்டார்கள் என்று எண்ணாதீர்கள்! நமதூர் ஜமாத்தினர் நியாயத்தின் பக்கம் தான் இருப்பார்கள்!! இனிமேலும் பொய்யான அவதூறுகளை பரப்பாமலும் மிரட்டாமலும் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் !!அல்லாஹ் நல்லவர்களுக்கு வெற்றியை தருவானாக.!! ஆமீன்!!

Monday, June 11, 2012

நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனின் அறிவிப்பு


ஊர் மக்களை ஏமாற்ற நினைக்கும் முன்னால் நிர்வாகிகள்!!


தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறிக்கொண்டிருக்கும் முன்னாள் நிர்வாகிகள்

நமது ஊர் நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்த வக்ஃப் வாரியம் முடிவுசெய்து சென்றவாரம் அதற்கான அறிவிப்புகளை செய்தார்கள் தேர்தலுக்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகிறது இது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் தேர்தல் அறிவித்த பிறகும் பள்ளிவாசலில் வைத்து தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துகிறார்கள்,(இது ஜமாத்தார்கள் கூட்டம் ஆகாது) பதவியில் இருப்பது போல் அறிக்கை விடுகிறார்கள், ஜாமிஆ மஸ்ஜித் என்று பள்ளிவாசல் பெயரைபோட்டு நோட்டீஸ் அடித்து இருக்கிறார்கள் தேர்தல் நேரத்தில் பள்ளிவாசலையோ, நிர்வாகத்தின் பெயரையோ இந்த முன்னால் நிர்வாகிகள் பயன்படுத்துவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.? எல்லாம் போக இப்போது தாங்கள் தேர்வு செய்து அறிவித்த வேட்பாளர்களை நமது ஜமாத்தார்கள் மூலம் தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் என்று எழுதியிருக்கிறார்கள் இது முற்றிலும் தவறான கருத்தாகும். அரசியலில் வித்தை கத்த இவர்களுக்கு ஏனோ இது தெரியவில்லை இதை அறியாமை என்பதா? ஆணவம் என்பதா?


அப்படியானால் அவர்களுக்கு போட்டியாக களத்தில் உள்ளவர்கள் ஏனாதிமங்களத்தில் உள்ளவர்கள் தேர்வு செய்தார்களா? அல்லது கடுவங்குடியில் உள்ளவர்கள் தேர்வு செய்து அறிவித்தார்களாஇதை அவர்கள் விளக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்புக்கும்தேர்தலுக்கும் பாடுபட்ட தாஜ், முஹம்மது அலி மற்றும் இவர்களை சார்ந்தவர்கள்தான் ஊர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்களே ஊர் மக்களின் ஆதரவைப்பெற்றவர்கள் 
இவர்கள் தான் முதலில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்,மேலும் தாங்கள் ஊர் பதவிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

ஊர் முன்னால் நிர்வாகிகளின் ஆதரவில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதையும் இதுவரை முன்வந்து செய்ய வில்லை இவர்களுக்கு ஓட்டு கேட்பதும் அறிக்கை விடுவதும் முன்னால் நிர்வாகிகள்தான் செய்கிறார்கள். இப்போதே இப்படி என்றால் இவர்கள் நிர்வாகத்திற்கு வந்தால் யார் நிர்வாகம் செய்வார்கள்? இதை மக்கள் புரிந்தால் சரி. மேலும் அதில் சிலர் இன்னும் 
தேர்தலை நிறுத்த என்ன செய்யலாம் என்பதில் மும்முரமாக இருப்பதால் அதற்கான நடவடிக்கையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தி வருகிறது. தேர்தலை சந்திக்க இவர்களுக்கு ஆற்றல் இல்லாததையே இது காட்டுகிறது.

உண்மையில் முன்னால் நிர்வாகிகளின் ஆதரவு வேட்பாளர்கள் தங்கள் சுயவிருப்பத்தில நின்றால் அவர்கள் களம் இறங்கி ஓட்டு கேட்கவேண்டும் தாங்கள் பதவிக்கு வந்தால் என்ன நன்மை செய்வோம், என்ன திட்டம் கொண்டுவருவோம் என்பதை வேட்பாளர்கள் தங்கள் சொந்த கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அது அங்கு நடக்கவேயில்லை என்பதை 
நமது வாசகர்களும் ஊர் ஜமாத்தார்ளும் புரிந்துக்கொள்ள வேண்டும். சுயமாக செயல்படாத இந்த வேட்பாளர்கள் நாளை பதவிக்கு வந்தால் எப்படி நிர்வாகம் செய்வார்கள், திட்டம் தீட்டுவார்கள், செயல்படுவார்கள். இவர்கள் எதையும் செய்ய நினைத்தால் அண்ணன்களை கேட்காமல் செய்ய முடியாது என்பதையே இது உணர்த்துகிறது. இதை நமது ஊர் மக்கள் புரிந்து யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் வருகிற ஊர் நிர்வாக தேர்தலில் ஊர் ஜமாத்தார்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்று போட்டியிடும் சகோ. எம்.ஏ.பி.தாஜ், சகோ.முஹம்மது அலி மற்றும் இவர்களை சார்ந்த சகோதரர்களுக்கு வாக்களிக்குமாறும் இவர்கள் மட்டுமே ஊரில் சிறந்;த மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை ஜமாத்தார்களுக்கு அன்புடன் நினைவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

நன்றி: www.niduri.blogspot.com

Sunday, June 10, 2012

பொய் புகார் - நீடூர் ஜமாத் நிர்வாகத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி!!



ஜமாத் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் MAP.தாஜ் அவர்களின் மேல் முன்னாள் நிர்வாகிகளால் பொய் புகார் கொடுக்க பட்டுள்ளது! ரகசிய வாக்கெடுப்பிற்கு பெரும் முயற்சி செய்து கொண்டு இருகின்ற  MAP.தாஜ்  அவர்களை பற்றி மிகவும் கீழ்த்தனமாக சென்ற வாரம் நீடூர் நெய்வாசல் பெரிய கடைதெருவில் விமர்சனம் செய்து நோட்டீஸ் ஒட்ட பட்டிருந்தது!இரண்டு தினங்களுக்கு முன்பு தாஜ் அவர்களின் தகப்பனார் முன்னாள் முத்தவல்லி,சிறிய தகப்பனார் அவர்களை பற்றியும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறு நோட்டிஸ் கடைதெருவில் ஒட்டி வைக்க பட்டிருந்தது. இதெல்லாம் தாஜ் அவர்களை அவமான படுத்துவதற்காகவும் அவரின் மன உறுதியை குலைப்பதற்காகவும் ஆத்திரமூட்டி பிரச்சனையை கிளப்ப, தேர்தலை சீர்குலைக்க ஆதிக்க சக்திகள் சதி செய்தனர், இருந்தும் தாஜ் அவர்களும் அவர் அணியினரும் மிகவும் அமைதிக்காத்தனர்.அப்படி இருந்தும் தாஜ் அவர்களின் மீது குழப்பம் விளைவிப்பதாகவும் அவதூறு பேசுவதாகவும் பொய்யான புகார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஆதிக்கசக்திகளால் கொடுக்க பட்டுள்ளது!!உண்மை நிலவரம் ஜமாத்தார்களுக்கு தெரியும். சட்டப்படி இந்த பொய் புகாரை எதிர் கொள்வார். அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்களின் ஆதரவைக்கொண்டு சட்டப்படி இந்த பிரச்னையை எதிர்கொள்வார்.தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி வெற்றிபெறாது!!அல்லாஹ் உண்மையானவர்களுக்கே வெற்றியை தருவான்!!ஆமீன்!!!(முன்பு இதுபோல் ஒரு  புகார் தாஜ் அவர்களின்மேல் கொடுத்து அமைதி பேச்சிவார்தைக்கு  அழைத்தார்கள்....அதுபோல் தற்போது அமைதி பேச்சிவார்த்தை என்ற பெயரில் தேர்தலை தடுக்க முயற்சியா? அல்லாஹ் அறிவான்!!! அமைதியான முறையில் தேர்தல் நடக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம்!! ஆமீன்.

ஊர் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள்

நீடுர் நெய்வாசல் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் கீழே, சின்னங்களுக்கு பதிலாக அவர்களுக்கு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதை ஜமாத்தார்கள் நினைவில் கொண்டு ஓட்டளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.


நீடுர் நெய்வாசல் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று சொல்ல காரணம் தற்போதைய நிர்வாகிகள் சுன்னத் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என ஒரு நோட்டீஸை வெளியிட்டு அதில் தனக்கு ஆதரவான வேட்பாளர்கள் பெயரை இடம்பெற செய்துள்ளனர். இதிலிருந்தே நிர்வாகிகளின் விஷமத்தனம் தெரியவரும், சுன்னத் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்று சொன்னால், நிர்வாகத்தில் மாற்றத்தை விரும்பும் அணியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களை ஏதோ தவ்ஹீத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது போல முத்திரை குத்த நினைக்கின்றனர். இந்த அணியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல!! நம் ஜமாத்தினரோடு பல காலாமாய் ஓட்டி வாழக் கூடிய் மக்கள் தான், ஜமாத்தினருக்கு தெரியாத இவர்கள் தவ்ஹீத் அமைப்பை சார்ந்தவர்களா? இல்லையா? என்று. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் இந்த அதி புத்திசாலி நிர்வாகிகளை போலத்தான் அவர்கள் அறிவித்த வேட்பாளர்களும். ஜமாத்தார்களே இந்த ரகசிய வாக்கெடுப்புக்கு பல காலமாய் பல நபர்கள் முயன்று இப்போழுது தான் அல்லாஹ்வின் உதவியால் ஒரு வழி கிடைக்கப்போகின்றது. இந்த பொன்னான் வாய்ப்பை நாம் தான் பயன்படுத்தி நல்ல நிரவாகிகளை கொண்டு வர வேண்டும். இதுவரை ஜமாத்தினரை மேலே உள்ள வேட்பாளர்கள் சந்தித்த வேளையில் அவர்களுக்கு ஜமாத்தினரின் ஏகோபித்த ஆதரவு உள்ளதுபோலத்தான் தோன்றுகிறது. என்வே தான் நாம் மேலே ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்று எழுதியிருக்கிறோம்.
 

யார் காரணம்?


                                                                        
நமதூரில் 16.06.2012 அன்று ஊர் நிர்வாக தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய இருகின்றார்கள். இந்த ரகசிய வாக்கெடுப்பை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பொய்யான பல செய்திகளை ஜமாத்தார்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார்கள். ஆனால் அந்த முயற்சி பலன் தர போவதில்லை. நஜாத்து காரர்கள் நிர்வாகத்தை கைபற்ற முயற்சி செய்வதாக செய்தி பரப்புகின்றார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், இது ஊர் ஜமாத்து நிர்வாகிகளின் தேர்வு. இதில் தவ்ஹித் ஜமாஅத் என்றோ, .மு.மு. என்றோ அல்லது எந்த அரசியல் கட்சிக்கோ இந்த தேர்தலில் என்ன வேலை இருக்கிறது? தவ்ஹித் ஜமாத்தினர் யாரும் போட்டியிடவும் இல்லை, மாறாக .மு.மு.கவினர் சிலர் போட்டியிடுகின்றனர்

இந்த தேர்தலை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக யாரும் பார்க்க போவதில்லை. போட்டியிடும் வேட்பாளர் நல்லவரா?அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவரா? நல்ல நிர்வாகியாக இருப்பாரா?என்று மட்டும் தான் பார்பார்கள். இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு ஆரம்பம் தொட்டே எல்லோரும் கலந்தே தான் முயற்சி செய்தனர். முக்கியமாக .மு.மு.கவினர் தான் அதிகம் ஆலோசனைகள் தந்தனர். .மு.மு. தலைமையிலும் நல்ல ஆலோசனைகள் வழங்க பட்டன. .மு.மு. தலைமைக்கு அழைத்து சென்றது நமதூர் .மு.மு.கவினர் தானே!!. கிளை தலைவர் தானே!!. அப்போது ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்திவிட்டு இப்போது வேண்டாம் என்பதின் மர்மம் என்ன? ஜனநாயக முறையில் செயல் படும் எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ஒற்றுமையை தான் வலியுறுத்துகின்றன.  சமுதாயத்திற்காக பாடுபடும் எல்லா அமைப்பினரும் அநியாயத்திற்கு துணை நிற்க மாட்டார்கள். ரகசிய வாக்கெடுப்பு என்றால் எட்டிக்காயாக கசப்பதேன். எதோ அதிசயமாக நமதூரில் தான் நடக்க இருப்பது போல் பதருவதேன்? மூன்று வருடத்திற்கு முன்பாகவே கூத்தாநல்லூர்,பூதமங்களம்,அடியக்கமங்கலம்,போன்ற ஊர்களிலும் சமீபத்தில் மேலக்காவேரியிலும் இன்னும் பல ஊர்களிலும் நடந்துள்ளது

இப்போது இப்படி பதருபவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு கையெழுத்து முறையில் வாக்கெடுப்பை நடத்தினார்களே!! அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே!!..அப்போது நடந்த தேர்தலில் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் ஏற்றுகொண்டிருப்பர்கள்….முடிவு தோல்வியாக இருந்த காரணத்தினால் அந்த முறையே வேண்டாம் என்கின்றனர். அப்போதே  வெற்றி பெற்ற அலி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால் இன்று இந்த அளவுக்கு பிரச்சனை பெரிதாக போயிருக்காது. அந்த வெற்றியை அங்கிகரிகாததிற்கு யார் காரணம்? வக்பு போர்டிலிருந்து இருவர் வந்து ஜமாத்தினர் 200 பேர்களுக்கு மேல் திரண்டு வாக்களித்து அலி அவர்களின் வெற்றியை அறிவித்த பிறகு ஏற்றுகொள்ள முடியாது என்று பிடிவாதம் பிடித்தது யார்?. திரண்டு வந்து ஒட்டு போட்ட ஜமாத்தினரை இழிவுப்படித்திய செயல் அல்லவா?அப்படி நடந்த தேர்தலையே ஏற்று கொள்ளாதவர்கள் கோரஸ் முறையில் மட்டும் சத்தத்தை வைத்து எப்படி வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வார்கள்? கோரஸ் முறை என்பது ஆதிக்க சக்திகள் முன்பே நிச்சயம் செய்தவர்களை முன்மொழிவார்கள். அதை ஆதரித்தால் வெற்றி அங்கிகரிக்கபடும், இல்லையேல் ஒத்திவைக்கப்படும். மீண்டும் சில வாரங்களில் கூடி சில மாற்றங்களோடு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டதாக அவர்களாகவே அறிவித்து விட்டு வீடு வீடாக சென்று நிர்வாகிகள் தேர்வாகி இருப்பதாக ஒப்புதல் கையெழுத்தை வாங்கி வக்பு போர்டிற்கு அனுப்பி விடுவார்கள். ஜமாத்தார்களே நாம் கேட்பது ஜமாத்து நிர்வாகிகள் தேர்வை நான்கு பேர் நிச்சயிக்ககூடாது!!. ஜமாத்தார்கள் தான் நிச்சயிக்கணும்!!.பகிரங்கமாக கருத்து தெரிவித்தால் மன கசப்பு வரும் என்பதால் தான் ரகசியமாக எந்த முறை வேண்டுமானாலும் பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றால்…… முடியாது என்கின்றனர் ஆதிக்க சக்திகள்ஆகையால் தான் இவர்களிடம் பேசி பலன் இல்லாததால் தான் உயர்நீதிமன்றம் மூலம் ரகசிய வாக்குபதிவிற்கு ஏற்பாட்டை செய்தனர் நமதூர் ஜமாத்தினர்.இந்த ஏற்பாட்டை நமது ஜமாத்தினர் தான் செய்தார்கள். அதற்கு ஒத்துழைப்பும் கொடுகிறார்கள்.

இப்போது எல்லா ஏற்பாடுகளும் முடிந்து தேர்தல்நாள் நெருங்கும் தருவாயில் இரண்டு தரப்பில் இருந்தும் கலந்து சுமூகமாக முடிக்கலாம் என்று சிலரால் யோசனை சொல்லப்படுகின்றது.இது காலம் கடந்த யோசனை! பதவி காலம் முடிந்து மூன்று ஆண்டுகளாக அத்துமீறி பதவியை கையில் வைத்திருந்தார்களே முன்னால் நிர்வாகிகள்,அப்போது ஏன் இதுபோல் ஒரு யோசனையை முன்வைக்கவில்லை.பதவிகாலம் முடிந்தும் எந்த அடிப்படையில் தொடர்ந்தார்கள். இவர்களின் பதவிகாலம் முடிந்த உடனேயே ஊர் பெரியவர்களை கூட்டி இடைக்கால நிர்வாகத்தை அமைத்திருக்க வேண்டியது தானே.இப்போதும் நீதி மன்றம் செல்லாதிருந்தால் பழைய நிர்வாகமே தொடர்ந்து இருந்திருக்கும்.மாற்றம் வேண்டும் என்று சொல்லி போட்டியிடும் வேட்பாளர்களையே மிரட்டுபவர்கள் கோரஸ் முறை வாக்கெடுப்பில் ஜமாத்தார்களின் தனிப்பட்ட கருத்திற்கு எப்படி மதிப்பளிப்பார்கள்?மாறாக தாக்குதலில் ஈடுபடுவார்கள்.அப்படி முன்பு தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது.ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கின்றீர்கள்?ரகசிய வாக்கெடுப்பு என்றால் ஜமாத்தினர் தமது விருப்பத்திற்கு சுதந்திரமாக நல்லவர்கள்  யாரையும் கொண்டுவரட்டுமே!இந்த தேர்தல் முறையை வேண்டாம் என்றால் தங்களின் நிலைபாட்டை ஜமாத்தினரிடையே பிரச்சாரம்  செய்யுங்கள்! தீர்ப்பை ஜமாத்தினர் தருவார்கள்.அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.எந்த ஊரிலும் இப்படி தேர்தல் இல்லை.நம்மூரில் வந்தால் சுத்து வட்டாரத்திலும் வந்துவிடும் என்கின்றனர்.எந்த ஊரில் ஊர் நிர்வாகிகளே ரௌடிகலாக கோதாவில் இறங்கி உள்ளனர்?எந்த ஊரில் பள்ளிவாசல் சொந்தமான கட்டிடங்களை ஆக்ரமிப்பு செய்துள்ளனர்?ஒருவர் அதில் அரசியல் கட்சி அலுவலகமும் அமைத்துள்ளார். ஊர் நிர்வாகம் என்ற பெயரில் அராஜகம் எந்த ஊரில் நடகின்றது?நியமனம் என்றால்,மார்க்க அறிவில்லாத பொது அறிவில்லாத ஆதிக்க சக்திகளுக்கு தலையாட்டி கொண்டிருப்பார்கள். இதை நமதூர் ஜமாத்தினர் நிறையவே அனுபவித்துவிட்டனர்.இனி முடிவு  ஜமாத்தினர் கையில்!!.

ஆகவே ஜமாத்தார்களே!!நல்லவர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்யுங்கள்!!.தலையாட்டி பொம்மைகளை புறக்கணியுங்கள்!!ஊழல் பேர்வழிகளை புறக்கணியுங்கள்!!அரசியல் மற்றும் எந்த அமைப்பை சார்ந்தவரையும் நிர்வாகத்திற்கு வர அனுமதிக்காதீர்கள்!அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவர்களை உலக  நடப்பு தெரிந்தவர்களை,நல்ல ஒழுக்கம் உள்ளவர்களை,சுயமாக சிந்தித்து செயல்பட கூடியவர்களை தேர்வு செய்யுங்கள்!!வாக்களர் பட்டியலில் பலபெயர்கள் விடுபட்டுள்ளதாக அறிகின்றோம்.இதற்கு யார் காரணம்? வாக்களர் அடையாள அட்டை இருக்கும் நம் ஜமாத்தை சேர்ந்தவராகவும் இருப்பார்.ஆனால் வாக்காளர் லிஸ்டில் பெயர் விடுபட்டிருக்கும் ஆகையால் தான் ஒரு மாதத்திற்கு முன்பே வக்பு போர்டு அதிகாரிகள் வாக்காளர் வரைவு பட்டியலை ஊர் பள்ளி நோட்டிஸ் போர்டில்  வைத்து சென்றார்கள்.பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க விண்ணப்பபடிவமும் கொடுத்துசென்றனர்.ஆனால் தற்போதிய நிர்வாகிகள் அதை முறையாக ஜமாத்தினரிடம் கொண்டு செல்லவில்லை, மாறாக  இருட்டடிப்பே செய்தனர்.அதே சமயம் ரகசியவாக்கெடுப்பை வலியுருத்தியோர் ஊரில் மூன்று இடங்களில் மாதிரி வாக்காளர் பட்டியலை வைத்தனர்.விடுபட்டவர்களை சேர்த்தனர்.இந்த பட்டியலை கடையில் பார்வைக்கு  வைத்திருந்த O.H.R. அன்சாரி  என்பவரை இடைகால நிர்வாகிகள் மிரட்டினர்.இவர்களும் விடுபட்டவர்களை சேர்க்க முயலவில்லை.அதற்காக முயற்சி செய்தவர்களையும்  மிரட்டினார்கள்.ஆனால் தற்போது பட்டியலில் பல பெயர் விடுபட்டுள்ளது. அதனால் புதிதாக, விடுபட்டுள்ள பலரையும் சேர்த்து புதிய பட்டியல் தயாரித்து பிறகு தேர்தல் நடத்தலாம் என்று யோசனை முன்வைகபட்டுள்ளதாகவும் அதே போல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று யோசனை முன் வைக்க பட்டதாகவும்,அதற்கு வக்பு போர்டு அதிகாரிகள் வாக்களர் சேர்க்கைக்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும்,ஜமாத்  நிவாகிகள் தேர்தலில்  பெண்கள் வாக்களிப்பது  நடைமுறையில் இல்லை என்று வக்பு போர்டிலிருந்து பதில் தெரிவிக்கபட்டுள்ளதுஇதை ஒரு காரணமாக வைத்து தேர்தலை தடுக்க முயற்சிப்பதாகவும் அறிகிறோம்

நல்ல காரியத்தை யாராலும் தடுக்க முடியாது.அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தினர்களின் ஒத்துழைப்பால் உலகெங்கும் வசிக்கும் நமதூர் சகோதரர்களின் துவாவினாலும் ரகசிய வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெறும்!!.இந்த ரகசிய வாக்கெடுப்பினை ஜமாத்தினர் எதிர்கவில்லை.ஆதிக்க சக்திகள் எதிர்கின்றனர்!! கட்டபஞ்சாயத்து  செய்வோர் எதிர்கின்றனர்!!நிர்வாகத்தை கையில் வைத்துகொண்டு ஆதாயம் தேடியவர்கள் ,தேட நினைபவர்கள் எதிர்கின்றனர்!!பள்ளிவாசல் கடைகளை ஆக்கிரமித்து வைத்திருப்போர் எதிர்கின்றனர்!!ஜமாத்தினர் நல்ல நிர்வாகம் வரவேண்டும் என்று தான்  நினைகின்றனர்!!இவ்வளவு பிரச்சனைகளையும் ஆதிக்க சக்திகளால் முன்னிறுத்த பட்டுள்ள வேட்பாளர்களுக்கு தெரியாமல் இல்லை.....தெரியும்!!!!!இருந்தாலும்,"நமக்கேன் வம்பு"என்று இருக்கிறார்கள்."நம் சொத்தா?"அல்லது "நமக்கா பிரச்சனை?"என்று இருக்கின்றார்கள்...ஆம் உங்களுக்கு பிரச்சனை இல்லைதான்!!ஆனால் நீங்கள் பழைய கணக்கை கேட்டால்,நியாயத்தை பேசினால் பிரச்சனை உங்களுக்கும் வந்துவிடும்!!ஆதிக்க சக்திகளை மீறி உங்களால் செயல்பட முடியாது!!செயல் பட்டால்...உங்களுக்கும் பிரச்சனைகள் வரும்!! வெற்றி பெற்றால் அல்லாஹ்விற்கு பயந்து நியாமாக நடப்பேன் என்றால் ஜமாத்தார்கள் வெற்றிபெற செய்வார்கள்...தேர்தல் வரைதான் வேட்பாளர்...தேர்தல் முடிந்த பிறகு நிர்வாகிகள் இரண்டு  தரப்பிலும் கலந்து வரும் சூழ்நிலை இருக்கிறது...ஆகையால் பரஸ்பரம் தனிநபர் விமர்சனம் செய்யாமல்,வெற்றிபெற்றால் என்ன நல்ல காரியம் செய்ய முடியும் என்று கூறி ஆதரவை கேட்பது நல்லது!!இதை முதலிலேயே கலந்து போட்டு சுமூகமாக நடத்தி இருக்கலாமே என்றால்....கலந்து நியமனம் செய்வது யார்...அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுப்பது? ஆகையால் ஜமாத்தார்கள் கையில் தேர்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பது தான் ரகசிய வாக்கெடுப்பு முறை! பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டும்....மாற்றத்தை கொண்டு வரவேண்டும்...!!!ஆண்டவன் அருள்புரிவான்...!!!!ஆமீன்!!!