அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, November 30, 2011

சுன்னத்தான முஹர்ரம் நோன்பு



நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.
‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். – புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி)

நோன்பு நாட்கள்
இந்தியா -  DEC 5 & 6
UAE - DEC 4 & 5

Thursday, November 24, 2011

கட்டபஞ்சாயத்து


முன்பு நாம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் நம் நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்புக்கு முயற்சி செய்யும் ஒரு சகோதரரின் வீட்டிற்கு போய் மிரட்டியதாய் சுருங்க சொல்லியிருந்தோம் அதன் விபரத்தை இங்கே வெளியிடுகிறோம்.
நமதூரில் ரயிலடிதெருவை சார்ந்த M.A.P. தாஜுதீன் அவர்களை பெரியபள்ளி கட்டுமான பணி கணக்கு வழக்கு சம்பந்தமாக நிர்வாகத்தை விமர்சித்து வருவதாகவும் அது சம்பந்தமாக 13-11-2011 அன்று கூட்டம் உள்ளது, அதில் தாஜுதீன் அவர்கள் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளபட்டார். இதற்கு முன் நடந்த கூட்டத்திற்கெல்லாம் அழைக்காமால்

இறப்பு செய்திகள் 23/11/2011


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நீடுர் நெய்வாசல் ரைஸ்மில் தெரு நூருல்லாஹ் அவர்களின் தகப்பனார் அஜீஸ் அவர்கள் 23/11/2011 அன்று காலை காலமானார்கள். அவர்களின் நல்லடக்கம் அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்ற்து.

Wednesday, November 23, 2011

கடன் ஆரோக்கியத்தை முறிக்கும்


கடன் மட்டும் வாங்கவே வாங்காதீர்கள்
இக்கட்டுரையின் வார்த்தைகளை வாழ்நாள் முழுதுமே முறையாகப் பின்பற்றுவதால் ஒருவர் பெறக்கூடிய முழு பலன்... சொல்லிற்கடங்காது. 

அனுபவப்பூர்வமான இக்கட்டுரையில் விட்டுப்போயிருக்கும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். 

'
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' உண்மைதான்! இதை அடைவது எப்படி? 

மருத்துவ உதவி மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 21.11.2011 அன்று அலி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1300 வழங்கப்பட்டது.


மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் என்னும் உள்ளரங்கு நிகழ்ச்சி 20.11.2011 அன்று  நடைப் பெற்றது. இதில் சகோ அப்துல் கஃபூர் மிஸ்ஃபாஹி கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tuesday, November 22, 2011

விமர்சிப்பவர்களை விமர்சனம் செய்யாதீர்கள்

நிறைய வாசகர்களை கொண்ட KILIYANUR.NET இணையதளத்தில் இந்த செய்தியை பதிந்ததர்காக முதலில் எங்கள் வாழ்த்துக்கள்!. அவர்கள் வெளியிட்ட பதிவினை காண கீழே உள்ள இணையதள முகவரியை பார்க்கவும்.


http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=220:2011-11-20-11-42-43&catid=27:kiliyanur-news&Itemid=28

ஊரில் நடக்கும் விஷயங்களை வெளிநாட்டில் வாழும் நம் சகோதரரர்கள் அறிந்திட இணையதளம் பேருதவியாய் இருக்கின்றது. அப்படியிருக்கையில் உண்மையான சம்பவங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது அவர்களுக்கு இழைக்கும் துரோகம் போல. சிலரும் இணையதளம் நடத்துவதாய் கூறிக்கொண்டு நிர்வாகிகளுக்கு ஜால்ரா அடித்துகொண்டு மட்டும் இல்லாமல் இது போல் விமர்சனம் வெளியிட்டாலும் முதல் கண்டன குரல் இவர்களுயதாய் தான் இருக்கின்றது. எத்தனை காலம் இப்படியே இருக்க போகீறீர்கள்?. நீங்கள் விமர்சனம் செய்ய வேண்டாம், விமர்சிப்பவர்களை விமர்சனம் செய்யாமல் ஒதுங்கி கொள்ளுங்கள். வெளியிட்ட இந்த செய்தியில் ஏதேனும் தவறு இருக்கின்றதா? உண்மையான நிலை தெரியாமல் ஏதும் கூறாதீர்கள் என்று சொல்கிறீர்களே? எது உண்மையான நிலைமை, எல்லாருக்கும் தெரியும் நமதூர் நிர்வாகம் பற்றி, அதான் சமரச பேச்சு என அடிக்கடி நடக்கிறதே இது போதாதா நமதூர் செய்தி பற்றி ஊர் உலகம் அறிந்திட.எனவே மக்கள் விரும்பும் நிர்வாகம் அமையும் வரை இதுபோல் பல தரப்பிடம் இருந்தும் பல இடங்களிருந்தும் கண்டனம் வந்துகோண்டேருக்கும், இந்த முயற்சிக்கு அல்லாஹ் உதவி செய்வான். இந்த முயற்சியால் புதிய நிரவாகம் இன்ஷா அல்லாஹ் அமைந்தால் அதில் விமர்சித்தவர்களை விமர்சனம் செய்த நீங்களும் குளிர் காயலாம்.

Monday, November 21, 2011

இரண்டாவது அமைதி பேச்சுவார்த்தையின் விபரம்

19-11-2011 அன்று மயிலாடுதுறை வட்டாச்சியர் முன்பு நடந்த இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கீழே உங்கள் பார்வைக்காக


ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு வட்டாச்சியரை நம்பிய நமதூர் நிர்வாகிகளுக்கு சரியான சாட்டையடி கொடுப்பது போல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைதானே நாங்களும் கூறினோம், ஜமாத்தாரை மதித்திருந்தால் இந்த அவமானங்கள் தேவையா? இனியும் நாங்கள் பதவியிலிருந்து இறங்க மாட்டோம், எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றமாட்டோம் என சுற்றி திரிந்தால் இப்போழுது பட்ட அவமானங்களை விட பெரும் அவமானங்கள் பெற்று பதவி இறங்க நேரிடும். தீர்மானத்தில் நிறைவேற்றியபடி ஜனநாயக முறையில் தேர்தல் நடந்திட அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.
நன்றி: NIDURNET

Sunday, November 20, 2011

ஏழை மாணவிக்கு பண உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 14.11.2011 அன்று கீர்த்திகா என்ற பிறமத சகோதரிக்கு, கல்வி கற்க பணம் இல்லாமல் சிரமப்பட்டவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ரூபாய் 2000  பண உதவி வழங்கினார்கள்.   

Saturday, November 19, 2011

மக்கள் அலோசனை கூட்டத்தை தடுக்க நினைக்கும் தரங்கெட்ட நிர்வாகத்தினர்

நமதூர் நலவிரும்பிகளால் மக்கள் அலோசனை கூட்டம் நமதூர் அல்ஹாஜி பள்ளியில் நாளை(20/092011) நடைபெறுவதாய் இருந்தது. ஆனால் நமதூர் நிர்வாகிகள் வழக்கு நிலுவையில் உள்ளபோது இதுபோல் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது என காவல்துறையிடம் ஒரு புகார் அளித்துள்ளனர். மேலும் வழக்கம் போல் வட்டாச்சியரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எவ்வளவு தரங்கெட்டு நடந்துள்ளனர் என்பது அனைவருக்கும் புலப்படும். நாளை கூடும் கூட்டமானது யாரையும் கண்டனம் செய்யும் கூட்டம் இல்லை, எந்த ரகசியக் கூட்டமும் இல்லை, சாதாரண மக்கள் அலோசனை கூட்டம். இக்கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஜமாத்தாரின் அலோசனைகளை பெறவும், அதை செயல்படுத்த ஒரு கமிட்டியும் அமைக்கவிருந்தனர். அப்படி கூடி முடிவெடுக்க ஜமாத்தாருக்கு உரிமையில்லையா?, இது ஜனநாயக நாடுதானே? முன்பு நாம் சொன்னதுபோல் சர்வதிகார முறையைதான் இந்த நிர்வாகத்தினர் கையாள்கின்றனர். மக்கள் கூடினால் இவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள்? அமைதி பேச்சுக்கு அழைத்துள்ளார்களே கடைசியாக நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சொன்ன தீர்மானங்களை இவர்கள் நிறைவேற்றினார்களா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? இப்படியே காலம் தள்ளி நீங்கள் செய்த தப்பிற்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? இன்ஷா அல்லாஹ் மக்கள் தெளிவாக உள்ளனர் உங்களை பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டுமென. 

புதிய நிர்வாகம் அமைய உங்கள் கருத்து மிக முக்கியம்


இன்ஷா அல்லாஹ் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலோசனை கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது மேலான அலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதவியில் ஒட்டிகொண்டு விலக மறுக்கும் நம்து நிர்வாகிகளை பதவியிலிருந்து விரட்ட உங்களது ஒத்துழைப்பும், அலோசனைகளும் மிக முக்கியம். அல்லாஹ் நமது முயற்சிக்கு வெற்றி தந்து, நாம் விரும்பும் நிர்வாகம் அமைய உதவுவானாக! ஆமீன்.

Thursday, November 17, 2011

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்!!!

நமது நீடுரில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தேர்தல் நடைபெறாதலால், மக்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் படி நிர்வாகிகளிடம் பல முறை கூறியும் ஏதாவது ஒரு நொண்டி சாக்கை கூறி தேர்தலை தள்ளிப்போட்டு வந்தனர், இதனால் மக்கள் நேரடியாக வக்பு போர்டிடமும் பல முறை மனு அளிக்கவே, வக்பு போர்டு ஆய்வாளர் தேர்தலை நடத்த தேதியை நிச்சயிக்கும்படி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் வேறு வழியின்றி 27-11-2011 அன்று நிர்வாக தேர்வு குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும் என தஞ்சை வக்பு போர்டு ஆய்வாளருக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் உலகெங்கும் வாழும் நமதூர் சகோதரர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் தேர்தலை நடத்தும் படி வக்பு போர்டிடம் கடிதமாகவும், SMS மூலமாகவும் மற்றும் பல இணையதளம் மூலமாகவும் தங்களது நியாயமான காரணக்காரியங்களோடு எதற்காக ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்பதை விளக்கியிருந்தனர். அதற்கு ஒருபடி மேல் போய் மனுவாக எழுதி நமது ஊர் ஜமாத்தாரிடம் கையெழுத்து வாங்கி அதன் மூலம் எத்தனை மக்கள் ரகசிய வாக்கெடுப்புக்கு அதாரவாக இருக்கின்றனர் என்பதை வக்பு போர்டிற்கு தெரியபடுத்தலாம் என நினைத்து மக்களிடம் கையெழுத்து வாங்கிய பொழுது எப்போழுதுமே மந்தமாக இருக்கும் நமது நிர்வாகத்தார் இதனின் விபரீத்தை உணர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர், அந்த அறிவிப்பானது யாரும் ரகசிய வாக்கெடுப்பு மனுவுக்கு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் எனவும், நமதூர் வழக்கப்படி கோரஸ் அல்லது குரல் வாக்கெடுப்புதான் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பள்ளி நோட்டிஸ் போர்டிலும் வைக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 15, 2011

இரத்த ஓட்டங்களை பற்றி இஸ்லாம்


இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். *

Monday, November 14, 2011

வெற்றிகரமான கணவர்







Saturday, November 12, 2011

நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் மாதாந்திர கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


கடந்த 11.11.2011 வெள்ளிகிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்பு துபாய் கோட்டை பள்ளிவாசலில் நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் உறுப்பினர்கள் மாதாந்திர அலோசனை கூட்டம் நடைபெற்றது.

நமதூரை சேர்ந்த சகோதரரின் மருத்துவ செலவுக்காக மாதம் 2000 விதம் 10 மாதத்திற்கு ரூபாய் 20,000 வழங்கப்பட்டது, இன்ஷா அல்லாஹ் அந்த சகோதரருக்கு மேலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சகோதரரின் மகளின் திருமண உதவி தொகையாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.

இவர்கள் வழங்கும் உதவி தொகையானது உறுப்பினர்களின் சந்தா ம்ற்றும் அவர்களால் முடிந்த உதிரி தொகையின் மூலமே வழங்கப்படுகிறது. இவர்கள் தரும் ஒவ்வொரு திரஹமுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரிய கூலி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் இவர்களின் சேவை மென்மேலும் பெருகிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக.











Friday, November 4, 2011

சுயமரியாதை கொண்ட நிர்வாகம் வேண்டும்!!!!

இன்று(04/11/2011) நடந்து முடிந்த ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் முத்தவல்லி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நீடூரில் கோரஸ் வாக்கெடுப்பு என்பது பாரம்பரியமிக்கது, அதை மாற்றி ரகசிய வாக்கெடுப்பெல்லாம் நடத்த முடியாது என்றுள்ளார். இது போல் இவரால் தன்னிச்சையாக முடிவெடுத்து சொல்ல அதிகாரம் தந்தது யார்? எதாவது பிரச்சனை என்றால் மக்களின் பெருபான்மையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும். மக்களுக்கு பணியாற்றவே இவர்களை நாம் ஒரு பிரதிநிதிகளாக தேர்தெடுத்துள்ளோமே தவிர இவர்கள் தான் நீடூரின் மொத்த உருவம் என அவர்களே நினைத்து கொள்ளக் கூடாது. நீடூர்-நெய்வாசல் நிர்வாகிகள் தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வலியுறுத்தி தஞ்சை வக்பு வாரிய தலைவருக்கு எத்தனை SMS-கள் மக்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்று இந்த நிர்வாகிகளுக்கு தெரியுமா?. மக்கள் இந்த நிர்வாகத்திடம் எதை சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் எதுவும் நடக்காது என தெரிந்தே தேர்தலை நடத்தும் வக்பு வாரியத்திடம் SMS மூலமாக தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு இந்த நிர்வாகத்திடம் உள்ள