அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, October 30, 2011

கோரஸ் வேண்டாம்! வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு!!

நமதூரில் ஜமாத்து தலைவர் பதவி காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்குள் நாம் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும்  உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து விட்டோம். ஆனால் நமதூர் தான் புதிய தலைவரை காண ஆவலாய் பல ஆண்டுகள் காத்து கிடக்கின்றது. மூன்றாண்டுக்கு முன்பு தேர்தல் நடந்தபோது குரல் வாக்கெடுப்பு வேண்டாம் என்றும், கையொப்பம் இட்டு தேர்தலை நடத்தலாம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஜின்னா தெருவை சேர்ந்த அலி அவர்களும், ரயிலடித் தெருவை சேர்ந்த ஹாலித் அவர்களும் போட்டியிட்டது அனைவரும் அறிந்ததே. அதில் ஹாலித் அவர்கள் 108 ஓட்டுகளும், அலி அவர்கள் 109 ஓட்டுகளும் பெற்று அலி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிப்பும் செய்யப்பட்டது. இந்த வெற்றியை ஜீரணிக்க முடியாத நமது நிர்வாகத்தினரும், வேறு சில விஷமிகளும்
துணை முத்தவல்லியாக ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென பிரச்சனை செய்தனர். இதுவரை நமது ஜமாத்தில் அப்படி ஒரு பதவியில்லை என சிலர் முறையிட அங்கு கூச்சல், குழப்பமாகியது. அத்தேர்தலை நடத்த வந்திருந்த வக்பு போர்டு அதிகாரிகளும் சென்று விட்டனர். தற்பொதைய நிர்வாகிகளும் வெற்றி பெற்றவரிடம் பொறுப்பை வழங்கவில்லை. அதனால் வெற்றிப்பெற்ற தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கும் மூன்றாண்டாக நடந்து வந்து சமீபத்தில் தான் அலி வெற்றி பெற்றதற்கான போதிய ஆவணங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்தது.  இனியும் எந்த சாக்கு போக்கு சொல்லி தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்த நிர்வாகிகள் முன்வர வேண்டும். அதுவும் சுமூகமான முறையில் நடத்த ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தபட வேண்டும். ரகசிய வாக்கெடுப்பிற்கும் நமதூர் நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். ரகசிய வாக்கெடுப்பிற்கு இவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்?, கூச்சல், குழப்பத்தை தடுக்கவும்,மக்கள் சுதந்திரமான முறையில் வாக்கிட ரகசிய வாக்கெடுப்பு முக்கியம். தனது கட்டுபாட்டில் ஊரை வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் சில நபர்கள் தான் இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு எதிர்க்கின்றனர். அப்படி நடந்தால் எங்கே ஊர் மக்கள் தமக்கெதிராக வாக்களித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் தான் இவர்கள் இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்.
சென்ற ஜூன் மாதம் தேர்தலை  நடத்த வலியுறுத்தி ஜமாத் தலைவரை சிலர் அணுகினர்.அதற்கு அவரோ ஜல்சா முடியட்டும் என்றும்!,நோன்பு வருகின்றது புதிதாக வருபர்களுக்குநோன்பு கஞ்சி காச்சவும், ஹஜ்ரத்திற்கு பணம் வசூல் செய்யவும் அனுபவம் பத்தாது!!!! எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாது அவர் மேல் போடப்பட்ட இரு வழக்குகளையும்(ஒரு வழக்கு மூன்றாண்டு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற்வர்கள் தொடர்ந்தது, மற்றொன்று அஸ்ரப் அலியை தாக்கியது சம்பந்தமானது) வாபஸ் பெற வேண்டும் எனவும், ப்ள்ளிக்காக அவர் வாங்கிய 8 லட்சம் திருப்பி தர வேண்டும் என பல நிபந்தனைகளை விதித்துள்ளார். இதன் மூலம் இவர் பதவி விலக விரும்பவில்லை என தெரியவே,தேர்தலை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் தருவாயில் வட்டாச்சியர் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டனர். அதனை "காலாவதியான அமைதி பேக்சுவார்த்தை" எனும் தலைப்பில் முன்பே வெளியிட்டிருந்தோம். 
கடந்த 28/10/2011 ஜூம்மாவிற்கு பிறகு நடந்த ஜமாத்தார்கள் கூடிய கூட்டத்தில் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கும் என அறிவிப்பு செய்துள்ளதாக தெரிகின்றது, அதனை மனதார் வரவேற்கின்றோம். ஆனால் அந்த தேர்தல் எந்த முறையில் நடக்கும் என்பதை நிர்வாகத்தினர் இப்போழுதே தெரியப்படுத்த வேண்டும், கோரஸ் முறையால் கூச்சல் குழப்பம் விலையுமே தவிர முடிவு எட்டப்படாது, இதற்கு முன்பு நடந்த தேர்தல்களே சாட்சிகளாகும். கோரஸ் முறையில் நடந்தால் ஊரில் பெரியவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் நிறுத்தும் நபருக்கு எதிராக ஊர் மக்கள் பேசுவதற்கே அஞ்சுவார்கள், அதானே அவர்களுக்கும் வேண்டும். இதற்கெல்லாம் இத்தேர்தலில் அனுமதிக்கக்கூடாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே மக்கள் சுதந்திரமான முறையிலும், தமக்கு பிடித்தவர்களுக்கு வாக்கிட முடியும். ஜமாத்தார்களும் இதனை மனதில் வைத்து ரகசிய வாக்கெடுப்பிற்கு நிர்வாகிகளை வலியுறுத்த வேண்டும்.  இதன் மூலம் மட்டுமே யாருக்கும் மனஸ்தாபம் ஆகாமல் தவிர்க்கலாம்.

1 comment:

  1. Mohamed from BangkokOctober 31, 2011 at 9:38 AM

    ஊரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்களின் கணவு நீண்ட நாளைக்கு எடுபடாது. என்றோ ஒருநாள் கடாபியை விட கேவளமான ஒரு நிலையை அவர்கள் அடைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஈமானிற்கும் இஸ்லாத்திற்கு தொடர்பில்லாத இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தார்களின் தலைகணத்திற்கு ஊராட்சி மன்ற தேர்தல் ஒரு பாடம். ஒன்று மட்டும் நிச்சயம். இன்ஷா அல்லாஹ் மிரட்டல்வாதிகள் தோல்வியடைந்தால் ஊரில் ஒரு உயிரினம் கூட இவர்களை மன்னிக்காது

    ReplyDelete