அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, March 26, 2012

பாரம்பரியமும், இடைக்கால நிர்வாகிகள் நியமனமும்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமதூரில் ஜமாத் நிர்வாக தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த இருப்பது யாவரும் அறிந்த்ததே. அதன் ஆரம்ப பணியாக முன்பு நமதூர் வாக்காளர் பட்டியலை வாங்கி சென்றதை நமது இணையதளத்தில் வெளியிட்டுருந்தோம். 
அதன் பிறகு 16.03.2012 வெள்ளிகிழமை அன்று நமதூர் ஜும்மா பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலை வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதில் ஜமாத்தார்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது பெயர் திருத்தம் இருந்தாலோ அதை சரி செய்ய பாரம் தந்து அதை பூர்த்தி செய்து கொடுக்க ஒரு மாத கால அவகாசம் தந்துள்ளனர்.அப்பாரம் நமதூர் பெரியமதகு மஜிது STD கடையில் கிடைக்கும். அதன்படி நீடூர் வாக்காளர்கள் அனைவரும் தம் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு, பெயர் விடுபட்டிருந்தால் பாரம் வாங்கி பூர்த்தி செய்து தம் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இதனிடையில் 16.03.2012 அன்று பெரிய பள்ளி அறிவிப்பு பலகையில் ஒரு நோட்டிஸ் ஒட்டப்பட்டது. அதில் 17.03.2012 அன்று ஊர் கூட்டம் உள்ளது அதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு 17ஆம் தேதி கூடிய கூட்டத்தில் தற்காலிக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கவே இக்கூட்டம் என கூறியுள்ளனர். இக்கூட்டத்தை கூட்டியவர்கள் அக்கூட்டத்தில் எழுந்த எதிர்பபையும் பொருப்படுத்தாது முன்பே அவர்கள் தீர்மானித்திருந்த நிர்வாகிகளை ஊர் பாரம்பரியம்(!) கெடாமல் தேர்வு செய்துள்ளனர். இன்னும் சொர்ப காலத்தில் நடக்கவிருக்கும் இத்தருணத்தில் தற்காலிக நிர்வாகிகள் தேர்வு செய்ய காரணம் என்ன? அதுவும் எதிர்ப்பை மீறி தேர்வு செய்ய அவசியமென்ன? உங்கள் பாரம்பரியம் என்பது இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறீர்களா? இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் ஜனநாயக தேர்தலும் நல்ல முறையில் நடக்க மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும், ஏனெனில் இப்பொழுதுள்ள நிர்வாகிகள் பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். எதற்காக இந்த அவசர தற்காலிக நிரவாகிகள் தேர்தல் என்பது அவர்களுக்கே வெளிச்சம், இருப்பினும் நமக்கு ஏதோ அவர்கள் ஏதேனும் திட்டத்துடன் தான் இதனை செய்திருப்பார்களோ என எண்ண தோன்றுகிறது. இருப்பினும் நம் மக்கள் நமதூர் நிர்வாகம் ஜனாநாயக முறையில் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர், அதை மீறி ஏதேனும் செய்ய முற்பட்டால் கொஞ்ச நெஞ்சம் இருக்கும் மரியாதையையும் இழந்து நிற்க வேண்டிய் நிலை வரலாம். அல்லாஹ்வே அனைவருக்கும் போதுமானவன்.

No comments:

Post a Comment