நாம் இங்கே கூறப்போகும் சம்பவம் பலநாள் முன்பு நடந்தது ஆனால் வெளிநாட்டில் வாழும் பல சகோதரர்களுக்கு இந்த சம்பவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. இன்ஷா அல்லாஹ் நம்மூரில் நிர்வாகம் மாறும் தருவாயில் உள்ளதால் புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் செய்த தப்பை செய்யாமலிருக்க இச்சம்பவத்தை இங்கே வெளியிடுகிறோம்.
நம்ம ஊரை சேர்ந்த சகோதரர் ஒரு ஜும்மா தொழுகை முடிந்தபின் எழுந்து இந்த ஊரில் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா? எனக் கேட்டுள்ளார். நிர்வாகிகள் ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று வினவ அதற்கு அந்த சகோதரர் நம்ம ஊர் இறைச்சி கடையில் பெண் ஆடு அறுப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் அப்படியா அதை விசாரிப்போம் என கூறியுள்ளது. அடுத்த ஜும்மா வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால்
அடுத்த ஜும்மா முடிந்த பின் அதே சகோதரர் எழுந்து அதை பற்றி திரும்ப கேட்டுள்ளார்.அதற்கு அடுத்த ஜும்மாவில் இதை பற்றி விசாரிப்போம் என நிர்வாகம் கூறியுள்ளது. அடுத்த ஜும்மா முடிந்த பின் பஞ்சாயத்து கூடியது அதில் நம்மூரில் இறைச்சி கடை வைத்திருக்கும் அனைவரும் குழுவாக வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் மக்கள் இறைச்சி சரியான எடையில் தருவதில்லை, பெண் ஆடு அறுக்கின்றனர் என பல குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். அதற்கு மேலாக வெளியூரில் இருந்து வரும் இறைச்சி எடை சற்றும் குறையாமல் இருக்கின்றது அவர்கள் கொடுக்கும் போது இவர்கள் மட்டும் தறுவதில்லை என கேட்டுள்ளனர். அதற்கு நம்மூர் நிர்வாகி ஒருவர் எடை குறையாமல் வேண்டுமானால் ரூபாய் 250க்கு கூட இறைச்சி தர இயலாது என பொறுப்பானா பதிலை அங்கே பதிவு செய்துள்ளார். பணம் ஒரு பிரச்சனை இல்லை கொழுப்பு சேர்க்காமல் எடை குறையாமல் எலக்ட்ரானிக் திராசில் நிறுத்து தர வலியுறித்தியுள்ளனர். அதற்கு இறைச்சி கடை நடத்துபவர்கள் ஒப்புகொள்ளவில்லை, எலக்ட்ரானிக் திராசு எந்த ஊரிலும் உபோயோகம் செய்வதில்லை, எடை குறையாமல் தருகிறோம் ஆனால் விலையை கொஞ்சம் உயர்த்தி தர இறைச்சி கடை தரப்பு வலியிறுத்தியுள்ளது. வழக்கம் போல் எந்த தீர்வும் எட்டபடாமல் அந்த கூட்டம் இனிதே முடிவுற்றது.
இதை நாம் கூற காரணம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காமலிருக்க ஒரு நிர்வாகம் தேவையா? மக்கள் எல்லாரும் கோரிக்கை வைக்கும் போது அதை ஏற்று இறைச்சி கடைக்காரர்களை கண்டித்து இப்படித்தான் தர வேண்டும் இல்லையெனில் இங்கே கடை நடத்த அனுமதி கிடையாது என கூற மறுப்பதன் பின்னணி என்ன?. ஒரு இறைச்சி கடைகளை உங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை என்பதையே இதை காட்டுகிறது. இது போல் எத்தனை கடமையிலிருந்து விலகி இருக்கின்றீர்கள் என்று தெரிகிறதா உங்களுக்கு? இன்ஷா அல்லாஹ் வர போகும் புதிய நிர்வாகத்திற்கு இந்த பழைய நிர்வாகத்தலிருந்து பல படிப்பினைகள் உள்ளன. புதிய நிர்வாகம் ஊர் மக்களுக்கு முன்னுரிமை தந்து பழைய நிர்வாகம் செய்த தவறுகளை செய்யாமல் இருந்தாலே போதும் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு. இன்ஷா அல்லாஹ் மக்கள் விருப்பம் போல் நிர்வாகம் அமைய அல்லாஹ் விடம் பிராத்திப்போமாக.
பெண் ஆட்டிறைச்சி ஹராம் என்று யார் கூறியது? ஹலால்தான். ஆனால் குட்டிப் போட்ட ஆட்டிறைச்சி ருசிக்காது என்பதால்தான் நாமாக தடுத்திருக்கின்றோம்.
ReplyDeleteமன்னிக்கவும் தவறான் கருத்து வெளியிட்டதற்காக. ஹராம் என்ற சொல்லை நீக்கீவிட்டோம், சுட்டி காட்டியதற்கு நன்றி.
ReplyDeleteஇறச்சிகடை விபகாரத்தை பற்றி எழதிய செய்திகள் இன்னும் பலவற்றை எழதவில்லை அதில் குறிப்பாக இறச்சி கடைக்காரர்களை அழைத்து பேச ஊர்நிர்வாகஸ்த்தார்கள் என்னுகையில். ஜமாத்நிர்வாகிகளையும் ஜமாத்தார்களையும் ஒருமணிநேரம் காக்கவைத்த கொடூமை வேறு எந்த ஊரிலும் இதைபோன்று நடக்க ஜான்சே இல்லையென்றே கூறலாம் அந்த அளவிற்க்கு இறச்சிகடையாளர்கள் செய்தார்கள்.மேலும் இறச்சிகடைகாரர்கள். நமதூர் சிலர்க்கு ஜல்ரா அடிகிறார்கள் அது எப்படி வீட்டுக்கு ஒரு கிலோ அனுப்பிவிட சொன்னால் உடனே தொடபீஸ் கரைட்ட வீட்டுபோயிவிடுவதால். இறச்சிகடைகாரர்கள் எந்த தப்பு செய்தாலும் தப்பிவிடுவது தான் ஹைலைட்,
ReplyDeleteERACHI KADAI KARANAI PAGACHIKONDAL"ELLA PAKIYEIYUM KEPANLA",ATHARKU THAN MAVUNAM "SATHIKIRARKAL".SATHIKIRARKAL ENDRA VARTHAI NANGU PADITHAL UNGALUKU YARU EPPA NATAMMANU THERIYUM..VALAKAM POLA ERRAICHIKADA PANCHAYATHUM,PEACE MEETING GA POCHINU NANAKIRAPA KEVALAMA IRUKKU...YEN INTHA MANAMKETA NERUVAGAM,THEVA YA IVARGAL SATRU SINTHIGA VENDUM...SAKOTHARARGALEY
ReplyDelete