அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, June 10, 2012

யார் காரணம்?


                                                                        
நமதூரில் 16.06.2012 அன்று ஊர் நிர்வாக தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய இருகின்றார்கள். இந்த ரகசிய வாக்கெடுப்பை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பொய்யான பல செய்திகளை ஜமாத்தார்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார்கள். ஆனால் அந்த முயற்சி பலன் தர போவதில்லை. நஜாத்து காரர்கள் நிர்வாகத்தை கைபற்ற முயற்சி செய்வதாக செய்தி பரப்புகின்றார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், இது ஊர் ஜமாத்து நிர்வாகிகளின் தேர்வு. இதில் தவ்ஹித் ஜமாஅத் என்றோ, .மு.மு. என்றோ அல்லது எந்த அரசியல் கட்சிக்கோ இந்த தேர்தலில் என்ன வேலை இருக்கிறது? தவ்ஹித் ஜமாத்தினர் யாரும் போட்டியிடவும் இல்லை, மாறாக .மு.மு.கவினர் சிலர் போட்டியிடுகின்றனர்

இந்த தேர்தலை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக யாரும் பார்க்க போவதில்லை. போட்டியிடும் வேட்பாளர் நல்லவரா?அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவரா? நல்ல நிர்வாகியாக இருப்பாரா?என்று மட்டும் தான் பார்பார்கள். இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு ஆரம்பம் தொட்டே எல்லோரும் கலந்தே தான் முயற்சி செய்தனர். முக்கியமாக .மு.மு.கவினர் தான் அதிகம் ஆலோசனைகள் தந்தனர். .மு.மு. தலைமையிலும் நல்ல ஆலோசனைகள் வழங்க பட்டன. .மு.மு. தலைமைக்கு அழைத்து சென்றது நமதூர் .மு.மு.கவினர் தானே!!. கிளை தலைவர் தானே!!. அப்போது ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்திவிட்டு இப்போது வேண்டாம் என்பதின் மர்மம் என்ன? ஜனநாயக முறையில் செயல் படும் எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ஒற்றுமையை தான் வலியுறுத்துகின்றன.  சமுதாயத்திற்காக பாடுபடும் எல்லா அமைப்பினரும் அநியாயத்திற்கு துணை நிற்க மாட்டார்கள். ரகசிய வாக்கெடுப்பு என்றால் எட்டிக்காயாக கசப்பதேன். எதோ அதிசயமாக நமதூரில் தான் நடக்க இருப்பது போல் பதருவதேன்? மூன்று வருடத்திற்கு முன்பாகவே கூத்தாநல்லூர்,பூதமங்களம்,அடியக்கமங்கலம்,போன்ற ஊர்களிலும் சமீபத்தில் மேலக்காவேரியிலும் இன்னும் பல ஊர்களிலும் நடந்துள்ளது

இப்போது இப்படி பதருபவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு கையெழுத்து முறையில் வாக்கெடுப்பை நடத்தினார்களே!! அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே!!..அப்போது நடந்த தேர்தலில் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் ஏற்றுகொண்டிருப்பர்கள்….முடிவு தோல்வியாக இருந்த காரணத்தினால் அந்த முறையே வேண்டாம் என்கின்றனர். அப்போதே  வெற்றி பெற்ற அலி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால் இன்று இந்த அளவுக்கு பிரச்சனை பெரிதாக போயிருக்காது. அந்த வெற்றியை அங்கிகரிகாததிற்கு யார் காரணம்? வக்பு போர்டிலிருந்து இருவர் வந்து ஜமாத்தினர் 200 பேர்களுக்கு மேல் திரண்டு வாக்களித்து அலி அவர்களின் வெற்றியை அறிவித்த பிறகு ஏற்றுகொள்ள முடியாது என்று பிடிவாதம் பிடித்தது யார்?. திரண்டு வந்து ஒட்டு போட்ட ஜமாத்தினரை இழிவுப்படித்திய செயல் அல்லவா?அப்படி நடந்த தேர்தலையே ஏற்று கொள்ளாதவர்கள் கோரஸ் முறையில் மட்டும் சத்தத்தை வைத்து எப்படி வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வார்கள்? கோரஸ் முறை என்பது ஆதிக்க சக்திகள் முன்பே நிச்சயம் செய்தவர்களை முன்மொழிவார்கள். அதை ஆதரித்தால் வெற்றி அங்கிகரிக்கபடும், இல்லையேல் ஒத்திவைக்கப்படும். மீண்டும் சில வாரங்களில் கூடி சில மாற்றங்களோடு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டதாக அவர்களாகவே அறிவித்து விட்டு வீடு வீடாக சென்று நிர்வாகிகள் தேர்வாகி இருப்பதாக ஒப்புதல் கையெழுத்தை வாங்கி வக்பு போர்டிற்கு அனுப்பி விடுவார்கள். ஜமாத்தார்களே நாம் கேட்பது ஜமாத்து நிர்வாகிகள் தேர்வை நான்கு பேர் நிச்சயிக்ககூடாது!!. ஜமாத்தார்கள் தான் நிச்சயிக்கணும்!!.பகிரங்கமாக கருத்து தெரிவித்தால் மன கசப்பு வரும் என்பதால் தான் ரகசியமாக எந்த முறை வேண்டுமானாலும் பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றால்…… முடியாது என்கின்றனர் ஆதிக்க சக்திகள்ஆகையால் தான் இவர்களிடம் பேசி பலன் இல்லாததால் தான் உயர்நீதிமன்றம் மூலம் ரகசிய வாக்குபதிவிற்கு ஏற்பாட்டை செய்தனர் நமதூர் ஜமாத்தினர்.இந்த ஏற்பாட்டை நமது ஜமாத்தினர் தான் செய்தார்கள். அதற்கு ஒத்துழைப்பும் கொடுகிறார்கள்.

இப்போது எல்லா ஏற்பாடுகளும் முடிந்து தேர்தல்நாள் நெருங்கும் தருவாயில் இரண்டு தரப்பில் இருந்தும் கலந்து சுமூகமாக முடிக்கலாம் என்று சிலரால் யோசனை சொல்லப்படுகின்றது.இது காலம் கடந்த யோசனை! பதவி காலம் முடிந்து மூன்று ஆண்டுகளாக அத்துமீறி பதவியை கையில் வைத்திருந்தார்களே முன்னால் நிர்வாகிகள்,அப்போது ஏன் இதுபோல் ஒரு யோசனையை முன்வைக்கவில்லை.பதவிகாலம் முடிந்தும் எந்த அடிப்படையில் தொடர்ந்தார்கள். இவர்களின் பதவிகாலம் முடிந்த உடனேயே ஊர் பெரியவர்களை கூட்டி இடைக்கால நிர்வாகத்தை அமைத்திருக்க வேண்டியது தானே.இப்போதும் நீதி மன்றம் செல்லாதிருந்தால் பழைய நிர்வாகமே தொடர்ந்து இருந்திருக்கும்.மாற்றம் வேண்டும் என்று சொல்லி போட்டியிடும் வேட்பாளர்களையே மிரட்டுபவர்கள் கோரஸ் முறை வாக்கெடுப்பில் ஜமாத்தார்களின் தனிப்பட்ட கருத்திற்கு எப்படி மதிப்பளிப்பார்கள்?மாறாக தாக்குதலில் ஈடுபடுவார்கள்.அப்படி முன்பு தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது.ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கின்றீர்கள்?ரகசிய வாக்கெடுப்பு என்றால் ஜமாத்தினர் தமது விருப்பத்திற்கு சுதந்திரமாக நல்லவர்கள்  யாரையும் கொண்டுவரட்டுமே!இந்த தேர்தல் முறையை வேண்டாம் என்றால் தங்களின் நிலைபாட்டை ஜமாத்தினரிடையே பிரச்சாரம்  செய்யுங்கள்! தீர்ப்பை ஜமாத்தினர் தருவார்கள்.அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.எந்த ஊரிலும் இப்படி தேர்தல் இல்லை.நம்மூரில் வந்தால் சுத்து வட்டாரத்திலும் வந்துவிடும் என்கின்றனர்.எந்த ஊரில் ஊர் நிர்வாகிகளே ரௌடிகலாக கோதாவில் இறங்கி உள்ளனர்?எந்த ஊரில் பள்ளிவாசல் சொந்தமான கட்டிடங்களை ஆக்ரமிப்பு செய்துள்ளனர்?ஒருவர் அதில் அரசியல் கட்சி அலுவலகமும் அமைத்துள்ளார். ஊர் நிர்வாகம் என்ற பெயரில் அராஜகம் எந்த ஊரில் நடகின்றது?நியமனம் என்றால்,மார்க்க அறிவில்லாத பொது அறிவில்லாத ஆதிக்க சக்திகளுக்கு தலையாட்டி கொண்டிருப்பார்கள். இதை நமதூர் ஜமாத்தினர் நிறையவே அனுபவித்துவிட்டனர்.இனி முடிவு  ஜமாத்தினர் கையில்!!.

ஆகவே ஜமாத்தார்களே!!நல்லவர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்யுங்கள்!!.தலையாட்டி பொம்மைகளை புறக்கணியுங்கள்!!ஊழல் பேர்வழிகளை புறக்கணியுங்கள்!!அரசியல் மற்றும் எந்த அமைப்பை சார்ந்தவரையும் நிர்வாகத்திற்கு வர அனுமதிக்காதீர்கள்!அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவர்களை உலக  நடப்பு தெரிந்தவர்களை,நல்ல ஒழுக்கம் உள்ளவர்களை,சுயமாக சிந்தித்து செயல்பட கூடியவர்களை தேர்வு செய்யுங்கள்!!வாக்களர் பட்டியலில் பலபெயர்கள் விடுபட்டுள்ளதாக அறிகின்றோம்.இதற்கு யார் காரணம்? வாக்களர் அடையாள அட்டை இருக்கும் நம் ஜமாத்தை சேர்ந்தவராகவும் இருப்பார்.ஆனால் வாக்காளர் லிஸ்டில் பெயர் விடுபட்டிருக்கும் ஆகையால் தான் ஒரு மாதத்திற்கு முன்பே வக்பு போர்டு அதிகாரிகள் வாக்காளர் வரைவு பட்டியலை ஊர் பள்ளி நோட்டிஸ் போர்டில்  வைத்து சென்றார்கள்.பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க விண்ணப்பபடிவமும் கொடுத்துசென்றனர்.ஆனால் தற்போதிய நிர்வாகிகள் அதை முறையாக ஜமாத்தினரிடம் கொண்டு செல்லவில்லை, மாறாக  இருட்டடிப்பே செய்தனர்.அதே சமயம் ரகசியவாக்கெடுப்பை வலியுருத்தியோர் ஊரில் மூன்று இடங்களில் மாதிரி வாக்காளர் பட்டியலை வைத்தனர்.விடுபட்டவர்களை சேர்த்தனர்.இந்த பட்டியலை கடையில் பார்வைக்கு  வைத்திருந்த O.H.R. அன்சாரி  என்பவரை இடைகால நிர்வாகிகள் மிரட்டினர்.இவர்களும் விடுபட்டவர்களை சேர்க்க முயலவில்லை.அதற்காக முயற்சி செய்தவர்களையும்  மிரட்டினார்கள்.ஆனால் தற்போது பட்டியலில் பல பெயர் விடுபட்டுள்ளது. அதனால் புதிதாக, விடுபட்டுள்ள பலரையும் சேர்த்து புதிய பட்டியல் தயாரித்து பிறகு தேர்தல் நடத்தலாம் என்று யோசனை முன்வைகபட்டுள்ளதாகவும் அதே போல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று யோசனை முன் வைக்க பட்டதாகவும்,அதற்கு வக்பு போர்டு அதிகாரிகள் வாக்களர் சேர்க்கைக்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும்,ஜமாத்  நிவாகிகள் தேர்தலில்  பெண்கள் வாக்களிப்பது  நடைமுறையில் இல்லை என்று வக்பு போர்டிலிருந்து பதில் தெரிவிக்கபட்டுள்ளதுஇதை ஒரு காரணமாக வைத்து தேர்தலை தடுக்க முயற்சிப்பதாகவும் அறிகிறோம்

நல்ல காரியத்தை யாராலும் தடுக்க முடியாது.அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தினர்களின் ஒத்துழைப்பால் உலகெங்கும் வசிக்கும் நமதூர் சகோதரர்களின் துவாவினாலும் ரகசிய வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெறும்!!.இந்த ரகசிய வாக்கெடுப்பினை ஜமாத்தினர் எதிர்கவில்லை.ஆதிக்க சக்திகள் எதிர்கின்றனர்!! கட்டபஞ்சாயத்து  செய்வோர் எதிர்கின்றனர்!!நிர்வாகத்தை கையில் வைத்துகொண்டு ஆதாயம் தேடியவர்கள் ,தேட நினைபவர்கள் எதிர்கின்றனர்!!பள்ளிவாசல் கடைகளை ஆக்கிரமித்து வைத்திருப்போர் எதிர்கின்றனர்!!ஜமாத்தினர் நல்ல நிர்வாகம் வரவேண்டும் என்று தான்  நினைகின்றனர்!!இவ்வளவு பிரச்சனைகளையும் ஆதிக்க சக்திகளால் முன்னிறுத்த பட்டுள்ள வேட்பாளர்களுக்கு தெரியாமல் இல்லை.....தெரியும்!!!!!இருந்தாலும்,"நமக்கேன் வம்பு"என்று இருக்கிறார்கள்."நம் சொத்தா?"அல்லது "நமக்கா பிரச்சனை?"என்று இருக்கின்றார்கள்...ஆம் உங்களுக்கு பிரச்சனை இல்லைதான்!!ஆனால் நீங்கள் பழைய கணக்கை கேட்டால்,நியாயத்தை பேசினால் பிரச்சனை உங்களுக்கும் வந்துவிடும்!!ஆதிக்க சக்திகளை மீறி உங்களால் செயல்பட முடியாது!!செயல் பட்டால்...உங்களுக்கும் பிரச்சனைகள் வரும்!! வெற்றி பெற்றால் அல்லாஹ்விற்கு பயந்து நியாமாக நடப்பேன் என்றால் ஜமாத்தார்கள் வெற்றிபெற செய்வார்கள்...தேர்தல் வரைதான் வேட்பாளர்...தேர்தல் முடிந்த பிறகு நிர்வாகிகள் இரண்டு  தரப்பிலும் கலந்து வரும் சூழ்நிலை இருக்கிறது...ஆகையால் பரஸ்பரம் தனிநபர் விமர்சனம் செய்யாமல்,வெற்றிபெற்றால் என்ன நல்ல காரியம் செய்ய முடியும் என்று கூறி ஆதரவை கேட்பது நல்லது!!இதை முதலிலேயே கலந்து போட்டு சுமூகமாக நடத்தி இருக்கலாமே என்றால்....கலந்து நியமனம் செய்வது யார்...அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுப்பது? ஆகையால் ஜமாத்தார்கள் கையில் தேர்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பது தான் ரகசிய வாக்கெடுப்பு முறை! பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டும்....மாற்றத்தை கொண்டு வரவேண்டும்...!!!ஆண்டவன் அருள்புரிவான்...!!!!ஆமீன்!!!

No comments:

Post a Comment