அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, January 29, 2012

புற்றுநோய்க்கு இலவச மருந்து

'இமிடினெஃப் மெர்கிலெட்' என்பது புற்றுநோயை குணமாக்கும் மருந்தாகும். இது 'அடையார் கென்சர் இன்ஸ்டிடுயுட் இன் சென்னை' எனும் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இலவசமாக கிடைக்கிறது.அந்த மையத்தின் முகவரியும், தொலைபேசி எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.நாம் பெற்ற இத்தகவலை பெருவாரியாக மற்றவர்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.இது கிடைக்கபெறும் யாரோ ஒருவருக்கு மிக உதவியாய் இருக்கலாம். அதன் மூலம் அல்லாஹ் நமக்கும் நன்மையை வாரி வழங்குவான்.

முகவரி: 
East Canal Bank Road , 
Gandhi Nagar 
Adyar
Chennai -600020 
Landmark: Near Michael School 
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241


Sunday, January 15, 2012

பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்



ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே! 

ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டேனிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார்.

'நான் டேனிலாவோடு சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன். எனவே தான் ஐந்து வேளை தொழுகைக்கு பள்ளிக்கு செல்லாமல் வெள்ளிக் கிழமை மட்டுமே தொழுகைக்கு சென்றேன். இருந்தும் என் மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. தொழுகை ஒரு மனிதனுக்கு அமைதியை கொடுக்கிறது. நேர்வழியை காட்டுகிறது. இது நாள்வரை அமைதியிழந்த எனக்கு தொழுகை மூலம் அமைதி கிட்டுகிறது. இதனை எனது மனைவிக்கு புரிய வைக்க முயற்ச்சிப்பேன்' என்கிறார் ஜாஃபர் கடாபி!

இவரது முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி பல இடங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவரோ எவரது பேச்சையும கேட்பதாக இல்லை. 

'என் குடும்பத்துக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளேன். எனது தொழில், எனது மனைவி, எனது பெற்றோர் அனைவரையும் நான் இன்றும் நேசிக்கிறேன். எவரையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆனால் எனது தந்தையோ ' ஜோஸப் மயாஞ்சோவாக வந்து என்னிடம் பேசு ஒரு முஸ்லிமாக ஜாஃபர் கடாபியாக என்னிடம் வராதே!' என்று கூறி விட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. எனது முடிவால் எவருக்கும் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்' என்கிறார் ஜாஃபர் கடாபி.

சுவனப்பிரியனான நானோ என்னைப் போன்ற பல தலைமுறைகளாக முஸ்லிம்களாக வாழ்ந்து வருபவர்களோ இது போன்ற பிரச்னைகளை சந்தித்ததில்லை. ஏனெனில் வழி வழியாக வெகு சுலபமாக எங்களுக்கு இந்த இஸ்லாம் கிடைத்து விட்டது. ஆனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் இவரைப் பொன்றவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. எனவேதான் எங்களைவிட ஜாஃபர் கடாபி போன்றவர்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். 

இசையால்தான் மனிதனின் மனதை ஒருமித்து அமைதியாக்க முடியும் என்பதனை இது போன்ற இசைக் கலைஞர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் பொய்ப்பிக்கப் படுகிறது. யூசுஃப் இஸ்லாம், ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்ஸன், ஜெராமைக் ஜாக்ஸன், ஜோஸப் மயாஞ்ஜோ என்று உலகில் இஸ்லாத்தினை ஏற்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புகழின் உச்சியில் இருக்கும் ஒருவன் தனது புகழுக்கு காரணமான இசையை வெறுத்து இஸ்லாத்தை ஏற்பது நமக்கு முரணாக தெரிகிறது அல்லவா!

Saturday, January 14, 2012

முஸ்லிம்களின் உரிமை போராட்டம்

இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 14-ல் மத்தியில் 10 சதவித இட ஒதிக்கீடும் மாநிலத்தில் 3.5 சதவித இட ஒதிக்கீட்டை அதிகரிக்க கோரியும் நடக்கவிருக்கும் உரிமை போராட்டம் குறித்து நீடூரில் எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரம் கீழே உங்கள் பார்வைக்காக....








Thursday, January 12, 2012

யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம்


‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3)
விளக்கம்:
இந்த வசனத்தின் சிறப்பையும் அது எப்போது இறக்கப்பட்டது என்பதையும் உமர் (ரலி) அவர்கள் கீழ்வருமாறு விளக்குகிறார்கள்
‘யூத இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம், ‘அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் மாத்திரம் யூத இனமாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்,
‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3)
என்ற வசனம் தான் அது என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ் வசனம் இறங்கியது)’ என பதில் கூறினார்கள்.
என உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல்: புகாரி 45)
நன்றி:islamiyadawa