அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, February 29, 2012

ஏகத்துவ பள்ளியின் ஆரம்பகட்ட பணிகள்








Monday, February 27, 2012

வாக்களர் பட்டியல் கேட்ட வக்பு வாரியம்

கடந்த வியாழன் அன்று வக்பு போர்டு அதிகாரி முஹம்மத் அவர்கள் நீடூருக்கு வருகை புரிந்து நம்மூர் தற்காலிக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பேசியுள்ளனர். அதன் முதற்கட்டமாக நம்மூர் வாக்காளர் பட்டியலை கேட்டு பெற்று சென்றுள்ளார். இதன் மூலம் ரகசிய வாக்கெடுப்பு கோரும் நம்மூர் மக்களுக்கு பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இது வெரும் கண்துடைப்பு காரியமாக இல்லாமல் ரகசிய வக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டால் நம்மூருக்கு நல்ல ஜமாத் கிடைப்பதோடு வக்பு வாரியத்தின் மீது மக்களுக்கு ஓரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தவும் செய்யும் இன்ஷா அல்லாஹ்.

பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம்


பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம் 

பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன.

1.
அவ்ரத்

பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

''
மேலும் (நபியே!) முஃமினான பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்;; தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.''(அல்குர்ஆன் 24:31)

மேலே குறிப்;பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியில் தெரிவன' என்பதன் விளக்கம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இது வெளியே தெரியும் ஆடைகள் முதலான தவிர்க்க முடியாமல் வெளியே தெரியக் கூடியவற்றைக் குறிக்கும் என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கருதுகின்றார்கள். இமாம்களான ஹஸன் அல்பஸரி, இப்னு ஸீரின், நஸாஈ போன்றோரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். இங்கு 'வெளியே தெரிவன' என்பது

Thursday, February 16, 2012

ஏகத்துவ பள்ளி கட்டுமான பணி தொடங்கியது

அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கியது. நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பித்துள்ளனர். ஊரில் பல பள்ளி இருக்கையில் இப்பள்ளி தேவைதானா என்று சிலர் கேட்ககூடும், மற்ற பள்ளிகளில் நபிவழி பேண உரிமை மறுக்கபடுகிறது,மீறினால் ஊர் நீக்கம் தான். சுயமரியாதை இஸ்லாத்தில் எவ்வளவு வழியுறுத்தப்பட்டிருக்கிறதோ அதை காப்பாற்றி கொள்ளவும் நபிவழியை அப்படியே பின்பற்றவும் நம்மூருக்கு அவசியம் ஒரு பள்ளி தேவை. பள்ளியை பற்றிய மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லின்கில் காணலாம்
http://mynidur.blogspot.com/2011/10/blog-post_10.html

இப்பள்ளி கட்டுமான பணிக்காக 31லட்சம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் ஒவ்வொரு கட்டத்திலும் வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இங்கு கட்டாய வசூல் கிடையாது, உங்களால் முடிந்த உதவிகளை இந்த பள்ளிக்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி செய்வதினால் யார் யாரெல்ல்லாம் இதனால் பயன் பெறுவாரோ அவர்களுடைய நன்மையும் கொடுத்தவருக்கு கிடைக்கும் என்பதினால் நிரந்தர தர்மம் த்ரும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு:

INDIA: 
அய்யுப்: 9488215235
ரியாஸ்: 9443984171


UAE: 
நிஜார்: 0554271785
சிராஜ்: 0504780925
மின்னஞ்சல்: nowshath1a@yahoo.com / nowshath1a@gmail.com


கட்டுமான பணியின் போது எடுத்த புகைப்படத்தையும், கணக்கிடப்பட்ட விபரங்களையும் உங்கள் பார்வைக்காக கீழே













Sunday, February 12, 2012

இறப்பு செய்திகள்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமதூர் ஜின்னா தெருவை சார்ந்த அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், சஹாபுத்தீன், சிராஜுத்தீன் அவர்களின் தாயாருமான ரஹ்மத்துனிசா அவர்கள் இன்று காலமானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்.

சிராஜுத்தீன் அவர்களின் கைபேசி எண்: 0097150 4780925