Showing posts with label NN Association. Show all posts
Showing posts with label NN Association. Show all posts
Friday, June 13, 2014
Saturday, June 7, 2014
பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவச்செல்வங்களுக்கு சிறப்புப்பரிசு!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நமதூரின் முன்னேற்றத்திற்காகவும், நமதூர்வாசிகளின் அவசர பொருளாதார தேவைகளை இயன்றவரை நிறைவேற்றவும், நமது இஸ்லாமிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் நமது துபாய் சங்கமானது பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளையும், சேவைகளையும் செய்துவருவதை அனைவரும் நன்கு அறிவோம். கல்வி தொடர்பாகவும் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் செய்துவருவதின் தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் நமதூரைச்சார்ந்த இஸ்லாமிய மாணவச்செல்வங்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக கடந்து முடிந்த கல்வி ஆண்டிலும் (2013 - 2014) இறுதித்தேர்வில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
முதல் பரிசு
|
ரூபாய் 2,500 / -
|
இரண்டாம் பரிசு
|
ரூபாய் 2,000 / -
|
மூன்றாம் பரிசு
|
ரூபாய் 1,500 / -
|
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜுன் 11 புதன்கிழமை நீடுர் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் பள்ளியில் மேற்கூறிய பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பரிசு வாங்கும் மாணவ மாணவியரின் விபரம் கீழே
10th
Std
1.Mohamed
Mubeen.N I Place 482/500 Govt Boys high School-Nidur
(S/O Tajideen)
2.Ramees
Fathima.K II Place 476/500 Raj Matriculation HSS-MYD
(D/o.Kanimathulla)
3.Paril
Nisha.B II Place 476/500 Govt
Girls HR.Sec.School-Nidur
4.Naseema Banu.N III Place 475/500 Nasrul Muslimeen MHSS- Nidur
(D/O.Najimudeen)
12th
Std
1.Mohammed Abuphahir.T I Place 1184/1200 Rotary Club
School
(S/o.A.Thamimul)
2.S.Kathija Fathima. II Place 1108/1200
Nasrul Muslimeen MHSS-Nidur
(D/O N.Sirajudeen)
3.M.Affisiya Banu III Place 1090/1200 Nasrul Muslimeen MHSS-Nidur
(D/O R.Mohamed Navas)
Thursday, October 18, 2012
துபை சங்கத்தினர் புறக்கணித்தார்களா?
நமதூரில் சமீபத்தில் நடந்த இரண்டு மூன்று
ஊர்கூட்டத்தில் நீடூர்-நெய்வாசல் துபாய் சங்கத்தைப் பற்றி தவறான தகவல்களை, குற்றச்சாட்டுக்களை
சொல்கின்றார்கள். என்னவென்றால் நமதூர் பெரிய பள்ளிவாசல் கட்டுமானப்பணி தொடர்பாக
ஊரிலிருந்து சகோதரர்கள் வசூலுக்கு வந்த போது சங்கத்தினர் ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என்கின்றனர். அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது? என்பதை
விளக்குகின்றோம்.
பொதுவாக ஊரிலிருந்து யாரும் நல்ல காரியத்திற்கு
வசூலுக்கு வரும் போது சங்கத்திற்கும் தெரிவிப்பார்கள், கடிதம்
எழுதுவார்கள். அப்படி அதிரைப்பள்ளி வசூலுக்கு மர்ஹூம் M.M.S. அபுல்ஹசன் அவர்களும், தேங்காய்
மண்டி முஸ்தபா அவர்களும் துபைக்கு வந்த போது சங்கத்தினர் சார்பில் ஹோட்டலில்
வரவேற்பு கூட்டம் நடத்தி ஜமாத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்தோம். சங்கத்தின்
சார்பாக நன்கொடை வழங்கினோம்.
அதன் பிறகு மயிலாடுதுறை ஆசாத் மெட்ரிக் ஸ்கூல் கட்டுமான
பணிக்கு ஊரிலிருந்து சகோதரர்கள் வந்த போதும் துபை அட்லாஸ் ஓட்டலில் கூட்டம் நடத்தி
நன்கொடை வழங்கப்பட்டது. அதே போல் நமதூர் மதரஸா பள்ளி வசூலுக்கு சகோதரர்கள் வந்த
போது மதரஸா நிர்வாகத்திலிருந்து முன்கூட்டியே மர்ஹூம் S.E.A. முஹம்மது
சையத் அவர்களும், H.T. அன்சாரி
அவர்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். இங்கு வசூலுக்கு வந்த சகோதரர்கள் சொல்லித்
தான் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அப்போதும் ஈமான் சங்கத்தில் நமதூர்
ஜமாத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்து, வசூல் செய்தும் கொடுத்தோம். ஜின்னா
தெரு பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு வசூலுக்கு யாரும் வரவில்லை. அப்போதைய
முத்தவல்லி மர்ஹூம் M.A.P. ரஹமத்துல்லாஹ்
அவர்கள் வசூல் செய்து அனுப்பும்படி கூறியிருந்தார்கள். அதற்கும் வசூல் செய்து
அனுப்பியிருந்தோம்.
இப்படியிருக்கும் போது பெரிய பள்ளி வசூலுக்கு வரும்போது
சங்கத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக இங்கு ஊரிலிருந்து
வந்திருந்த சகோதரர்கள் சுன்னத்துல் ஜமாஅத் சங்கம் என்று பிரித்து வைத்தார்கள்.
இருந்தும் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரையும் நன்கொடை கொடுக்க வேண்டாம் என்றோ, அவர்களை
சந்திக்க வேண்டாம் என்றோ சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஆரம்பித்த
சங்கத்திற்கு நீடூர்-நெய்வாசல் அசோசியேசனில் பொறுப்பில் இருந்த சில சகோதரர்களை
அங்கும் பொறுப்பாளராக கட்டாயப்படுத்தி நியமித்தார்கள். அந்த ஒரு கூட்டத்தோடு அந்த
சங்கமும் செயல்படவில்லை.
இங்கு சங்கத்தினரை அணுகாமல் சங்கத்தினர் ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. பழையதையெல்லாம் மறந்து துபையிலும், ஊரிலும்
புதிய நிர்வாகிகள் வந்துள்ளார்கள். இதுவரை தவறான புரிதல்களால் ஒரு இடைவெளி
ஏற்பட்டுவிட்டது. இனியேனும் பரஸ்பரம் புரிதலோடு நல்ல காரியங்களை புதிய
நிர்வாகிகளோடு கலந்து செய்யலாம் என்று துபை சங்கத்தினர் ஊரில் நிர்வாகிகளை அணுகிய
போது பிறகு பார்க்கலாம் என்று தவிர்த்துவிட்டனர். அதன் பிறகு ஃபித்ரா எங்கு
வழங்குவது? என்று
இங்கு சங்கத்தில் விவாதித்த போது இரண்டு மூன்று இடங்கள் பரிசீலனை செய்து அதன்
பிறகு ஊர் செல்லும் H. முஹம்மது
அலியின் வசதிப்படி செய்ய சொல்லி சங்கத்தினர் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படி
அவரும் ஊர் நிர்வாகிகளை அணுகிய போது பார்க்கலாம் என்றவர்கள் பதில் சொல்லவில்லை.
அதன் பிறகு பொது இடத்தில் கொடுப்பது சிறந்தது என்று ஜின்னா தெரு பள்ளியில் கொடுக்க
ஏற்பாடு செய்திருந்தனர். இதை அறிந்த ஊர் நிர்வாகிகள் பள்ளியை பூட்டினார்கள். அதன்
பிறகு நசீர் அலியின் வீட்டில் வைத்து ஃபித்ரா விநியோகம் சங்கத்தினர் சார்பாக
செய்யப்பட்டது. இதற்கு முன்பும் ஜின்னா தெரு பள்ளியில் சங்கத்தினர் சார்பாக
ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
ஊர் கூட்டத்தில் சகோதரர் ஒருவர் "நாங்கள் வேண்டாம்
என்று சொல்லவில்லை. பேனர் வைக்கக் கூடாது, போட்டோ கூடாது என்று தான்
சொன்னோம்" என்று கூறியுள்ளார்.அப்படியெல்லாம் முன்கூட்டியே எதுவும்
சொல்லவில்லை.
இனிவரும் காலங்களிலாவது நிர்வாகிகளின் அணுகுமுறை மாற
வேண்டும். பரஸ்பரம் தவறான தகவல்கள் சொல்லபடுகின்றது. அதன் காரணமாக தவறான
புரிதல்கள் உள்ளது. எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து பேச
வேண்டும். ஏன் பேனர் வைக்கின்றார்கள் என்றால் பேனர் வைக்காமல் ஃபித்ரா வழங்குபவர்
தங்களது வீட்டில் வைத்து கொடுக்கும் போது அவர் சொந்த செலவில் கொடுப்பது போல ஒரு
தோற்றம் வருவதாக சங்க உறுப்பினர்கள் கருதுகிறார்கள். அதனால் தான் பொது இடத்தில்
வைத்துக் கொடுக்க ஆசைப்படுகிறார்கள்.
அங்கு
(துபையில்) எல்லோரையும் ஒன்றிணையுங்கள் என்றும் பிறகு பார்க்கலாம் என்றும்
அறிவுறுத்தப்படுகின்றது. இங்கு பிளவு பட்டு இருந்தால் தானே ஒன்றிணைக்க முடியும்? இங்கு
அனைவும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம். ஊர் நிர்வாகிகள் நமதூருக்கு நல்ல
காரியங்களை செய்ய அறிவுறுத்தவும், ஆலோசனை செய்யவும் வேண்டும். மாறாக, அங்கு
தவ்ஹீத்வாதிகள் சங்கத்தில் இருந்தார்கள், அதனால் அது நஜாத் சங்கம் என்று
குற்றம் சுமத்த வேண்டாம். இங்கு சங்கத்தில் தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லீம்
லீக் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.சங்கம் என்று
வந்துவிட்டால் ஊரில் எங்களால் முடிந்த நல்ல காரியம் செய்யத் தான் கூடுகிறோம்.
கட்சிக்கோ, எந்த
அமைப்புகளுக்கோ நன்கொடை வழங்குவதில்லை.
ஆகையால் இனிமேலும் துபை சங்கத்தை தவறாக நினைக்க
வேண்டாம். இனிவரும் காலங்களில் இணைந்து ஊரின் நலனுக்கு பாடுபடுவோம். ஆமின்!
Friday, July 13, 2012
நீடூர் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
2011 - 2012 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான முறையில் வெற்றிப்பெற்ற நமதூரைச்சார்ந்த சகோதர / சகோதரிகளுக்கு நமது துபாய் சங்கத்தின் சார்பில் 11.07.2012 புதன்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஜின்னாத்தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் ஜமாத்தார்களின் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு.
பத்தாம் வகுப்பு:
முதல் பரிசு:
உம்மு உமாரா பேகம்
த/பெ. ஜபருல்லாஹ், அரபித்தெரு
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - ஆசாத் & 454
இரண்டாம் பரிசு:
ஹாஜிரா பர்வீன்
த/பெ. ஹஜ்ஜி முஹம்மது, மேலத்தெரு
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 450
மூன்றாம் பரிசு:
அஃப்ஷியா பானு
த/பெ. நவாஸ், JMH மெயின் ரோடு
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 444
பனிரெண்டாம் வகுப்பு:
முதல் பரிசு:
த/பெ. நவாஸ், JMH மெயின் ரோடு
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 444
பனிரெண்டாம் வகுப்பு:
முதல் பரிசு:
முர்ஷித் முனவர்
த/பெ.ஹஜ்ஜி முஹம்மது, ஹாஜித்தெரு
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 1067
இரண்டாம் பரிசு:
ஷபூஹா பர்வீன்
த/பெ. நஜிமுதீன், ஷேக் தாவூத் தெரு
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 1039
மூன்றாம் பரிசு:
ஹலிமத்து ஸகதியா
த/பெ. ஜெகபர் சாதிக், பள்ளிவாசல் தெரு
வெற்றிப்பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் எமது சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 1005
வெற்றிப்பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் எமது சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Monday, June 11, 2012
Sunday, May 13, 2012
நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிகிழமை (11-05-2012) அன்று நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் விபரம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்.
தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில
Monday, May 7, 2012
துபாய் நீடுர்-நெய்வாசல் அஸோஸியேஸன் புதிய நிர்வாகிகள் தேர்தல்
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிகிழமை(11-05-2012) மஃரிப் தொழுகைக்கு பின் துபாய் நீடுர்-நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நிஜார் அவர்களின் ரூமில் நடைபெறுகிறது. இன்ஷா அல்லாஹ் அமிரகத்தில் இருக்கும் நம்மூர் சகோதரர்கள் கீழ் காணும் பொறுப்புகளுக்கு தங்களுக்கு விருப்பமானவர்களை முன் மொழிந்து தேர்வு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். அதிக வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாய் அறிவிக்கபடுவர்.
தேர்ந்தடுக்க போகும் பதவிகள்: தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர் மற்றும் பொருளாளர்.
மேலும் தொடர்புக்கு: சாதிக் - 0505683579
Thursday, April 12, 2012
நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் மாதந்திர கூட்டம்(13-04-2012)
நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் மாதந்திர கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை(13-04-2012) நிஜார் அவர்களின் ரூமில் மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெறும். அக்கூட்டத்தில் நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனைகள் உறுப்பினர்கள் அனைவரிடமிருந்து பெறப்படுகிறது. எனவே உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு உங்கள் மேலான அலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Wednesday, December 14, 2011
நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசைனின் மருத்துவ உதவி
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசன் சங்கம் - துபாய் பல வருடங்களாக பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்து வருகின்றது. அதில் முக்கியமானது மருத்துவ உதவி. நமது நீடூர் மேலத் தெரு சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் மகனார் கல்லூரியில் படித்து வருகிறார், அந்த பையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பையனை பற்றிய விபரம் முன்பே நமது இணையதளத்தில் வெளியிட்டுருந்தோம். அதை காண இங்கே கிளிக் செய்யவும். துபாய் சங்கம் சார்பாக அந்த பையனுக்கு மாதா மாதம் உதவி செய்யபட்டு வருகிறது. சென்ற வாரம் துபாய் சங்க தலைவர் சாதிக் முன்னிலையில் அந்த பையனுக்கு இரண்டாம் மாத உதவி வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அந்த பையன் உடல் நலம் குணம் அடைய துவா செய்யும்படி கேட்டு கொள்கிறோம். மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் பின்வரும் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
O.M.SADIQ (தலைவர்) = 0097150 5683579
A.NAYAS (செயலாளர்) = 0097150 6985035
M.NASEER ALI (பொருளாளர்) = 0097150 5144765
A.MUZIPURAHMAN (இணை செயலாளர்) = 0097150 6950409
Saturday, November 12, 2011
நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் மாதாந்திர கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கடந்த 11.11.2011
வெள்ளிகிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்பு துபாய் கோட்டை
பள்ளிவாசலில் நீடூர்
நெய்வாசல் அஸோஸியேசன் உறுப்பினர்கள் மாதாந்திர அலோசனை கூட்டம் நடைபெற்றது.
நமதூரை சேர்ந்த சகோதரரின் மருத்துவ
செலவுக்காக மாதம் 2000 விதம் 10 மாதத்திற்கு ரூபாய் 20,000 வழங்கப்பட்டது, இன்ஷா அல்லாஹ் அந்த சகோதரருக்கு மேலும் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சகோதரரின் மகளின் திருமண உதவி தொகையாக ரூபாய் 3000
வழங்கப்பட்டது.
இவர்கள் வழங்கும் உதவி தொகையானது
உறுப்பினர்களின் சந்தா ம்ற்றும் அவர்களால் முடிந்த உதிரி தொகையின் மூலமே
வழங்கப்படுகிறது. இவர்கள் தரும் ஒவ்வொரு திரஹமுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரிய
கூலி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் இவர்களின் சேவை மென்மேலும்
பெருகிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக.
Thursday, September 15, 2011
இரண்டாம் ஆண்டு அறிவு போட்டி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த 09/09/2011 வெள்ளிகிழமை அன்று அஸர் தொழுகைக்கு பின் மதரசா பள்ளிவாசலில் நீடுர்-நெய்வாசல் அசோசியேசன் சார்பாக நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.
இரண்டாம் ஆண்டு அறிவுப்போட்டியின் வெற்றியாளர்கள் விவரம்
Tuesday, September 13, 2011
பித்ரா வினியோகம்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
புனித மிக்க ரமலானில் நீடுர்௦- நெய்வாசல் அசோசியேசன் - துபாய் சங்கம் சார்பாக கடந்த பல வருடங்களாக பித்ரா வழங்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் இந்த வருடமும் துபாய் சங்கம் சார்பாக நோன்பு 29 நமது ஊரில் கீழத் தெருவில் சங்க நிர்வாகிகள் சார்பில் ரூபாய் நாற்பதாயிரத்திற்கு அரிசி வாங்கி நல்ல முறையில் வழங்கப்பட்டன. விடுமுறையில் ஊருக்கு போன நமது சங்க உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது.
சேவைகள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்அருளால் நமது நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஷன்ஸ் சார்பாக கடந்த ஒன்பது வருடங்களாக ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அதுபோல, இவ்வாண்டும் மாணவச் செல்வங்களுக்கு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்அருளால் நமது நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஷன்ஸ் சார்பாக கடந்த ஒன்பது வருடங்களாக ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அதுபோல, இவ்வாண்டும் மாணவச் செல்வங்களுக்கு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி,
Subscribe to:
Posts (Atom)











