அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Sunday, January 29, 2012

புற்றுநோய்க்கு இலவச மருந்து

'இமிடினெஃப் மெர்கிலெட்' என்பது புற்றுநோயை குணமாக்கும் மருந்தாகும். இது 'அடையார் கென்சர் இன்ஸ்டிடுயுட் இன் சென்னை' எனும் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இலவசமாக கிடைக்கிறது.அந்த மையத்தின் முகவரியும், தொலைபேசி எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.நாம் பெற்ற இத்தகவலை பெருவாரியாக மற்றவர்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.இது கிடைக்கபெறும் யாரோ ஒருவருக்கு மிக உதவியாய் இருக்கலாம். அதன் மூலம் அல்லாஹ் நமக்கும் நன்மையை வாரி வழங்குவான்.

முகவரி: 
East Canal Bank Road , 
Gandhi Nagar 
Adyar
Chennai -600020 
Landmark: Near Michael School 
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241


Wednesday, December 14, 2011

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசைனின் மருத்துவ உதவி


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசன் சங்கம் - துபாய் பல வருடங்களாக பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்து வருகின்றது. அதில் முக்கியமானது மருத்துவ உதவி. நமது நீடூர் மேலத் தெரு சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் மகனார் கல்லூரியில் படித்து வருகிறார், அந்த பையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பையனை பற்றிய விபரம் முன்பே நமது இணையதளத்தில் வெளியிட்டுருந்தோம். அதை காண இங்கே கிளிக் செய்யவும். துபாய் சங்கம் சார்பாக அந்த பையனுக்கு மாதா மாதம் உதவி செய்யபட்டு வருகிறது. சென்ற வாரம் துபாய் சங்க தலைவர் சாதிக் முன்னிலையில் அந்த பையனுக்கு இரண்டாம் மாத உதவி வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அந்த பையன் உடல் நலம் குணம் அடைய துவா செய்யும்படி கேட்டு கொள்கிறோம். மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் பின்வரும் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

O.M.SADIQ (தலைவர்) = 0097150 5683579
A.NAYAS (செயலாளர்) = 0097150 6985035
M.NASEER ALI (பொருளாளர்) = 0097150 5144765
A.MUZIPURAHMAN (இணை செயலாளர்) = 0097150 6950409


Wednesday, November 23, 2011

மருத்துவ உதவி மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 21.11.2011 அன்று அலி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1300 வழங்கப்பட்டது.


மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் என்னும் உள்ளரங்கு நிகழ்ச்சி 20.11.2011 அன்று  நடைப் பெற்றது. இதில் சகோ அப்துல் கஃபூர் மிஸ்ஃபாஹி கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Sunday, November 20, 2011

ஏழை மாணவிக்கு பண உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 14.11.2011 அன்று கீர்த்திகா என்ற பிறமத சகோதரிக்கு, கல்வி கற்க பணம் இல்லாமல் சிரமப்பட்டவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ரூபாய் 2000  பண உதவி வழங்கினார்கள்.