அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, May 7, 2012

துபாய் நீடுர்-நெய்வாசல் அஸோஸியேஸன் புதிய நிர்வாகிகள் தேர்தல்


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிகிழமை(11-05-2012) மஃரிப் தொழுகைக்கு பின் துபாய் நீடுர்-நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நிஜார் அவர்களின் ரூமில் நடைபெறுகிறது. இன்ஷா அல்லாஹ் அமிரகத்தில் இருக்கும் நம்மூர் சகோதரர்கள் கீழ் காணும் பொறுப்புகளுக்கு தங்களுக்கு விருப்பமானவர்களை முன் மொழிந்து தேர்வு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். அதிக வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாய் அறிவிக்கபடுவர்.
தேர்ந்தடுக்க போகும் பதவிகள்: தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர் மற்றும் பொருளாளர்.
மேலும் தொடர்புக்கு: சாதிக் - 0505683579

37 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் தற்போது தலம் மிகவும் அழகாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.!

    ReplyDelete
  2. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 8, 2012 at 9:14 AM

    அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே வரபோகும் நீடூர் நெய்வாசல் அஸோஸியேஸன்தேர்தலில் அனைத்து பதவிக்கும் நடுநிலை வாதி
    நிர்னைக்க வேண்டும் உறுபினர்களே !

    ஒரு அமைபினரோ ஒரு இயக்கத்தினரோ அல்லது ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகள் தனது கொள்கை உடையவர் அல்லது இவர் நம் சொந்தக்காரர் அவரை நிர்னைதால் இந்த அஸோஸியேஸன் நம் கையை விட்டு போகது என்று ஒரு நாளும் என்ன கூடாது!

    அப்படி எண்ணி கொண்டிருப்பவர்கள் எண்ணம் இன்ஷா அல்லாஹ் ஒரு நாளும் நிறை வேற கூடாது இதற்க்கு நாம் செய்ய வேண்டியது
    துபாயில் மூளை முடுக்கு எங்கு இருந்தாலும் தவறாது இந்த சங்க கூட்டத்தில் கலந்து ஊரோடு ஒத்து போகக்கூடிய இங்கு நாம் எடுக்கும்
    முடிவுகளை ஊர் நிர்வாகமும் ஏற்று நடக்க கூடிய ஒரு சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும்!

    அல்லாவின் உதவியால் அல்ஹம்ந்துலில்லாஹ் மன நிறைவாக வருமானத்தை ஈட்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் அதை போல் நம்
    ஊரில் இருக்கும் அனைவரும் செல்வ செழிப்பிலும் ஈமானின் உச்சியில்
    வாழ நிறைய நம் ஊர் மக்களுக்காக யோசிக்க வேண்டும் அதற்க்கான வழி வகை ஏர் படுத்தி கொடுக்க நம் பண உதவியும் நிறைய நிரவகதிர்க்கு
    தேவைப்படும் அதற்க்கு ஒரே வழி நாமெல்லாம் ஒன்று கூடி நிச்சயமாக
    ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் கூடுங்கள் என் சகோதரர்களே 11 /05 /2012 மக்ரிபுக்கு பிறகு இன்ஷா அல்லாஹ்
    நிஜார் அவர்களின் ரூமில் நடைபெறுகிறது அனைத்து துபாய்
    வாழ் மக்களும் கலந்து கொண்டு தங்களின் ஒட்டு ஒரு சிறந்த நிர்வாகம் அமைய்ய வலி வஹுக்கட்டும்.

    கொள்கை ரீதிதியாகவும் சமூகரீதியாகவும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்!

    உன் சமுதாயத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழவைக்க முடியும் என்று எண்ணினால் ஒன்று படு!



    ஒரே இறைவன்(அல்லாஹ்) ! ஒரே தலைவன்(முஹம்மத் நபி (ஸல்)) ! ஒரே சமுகம்(முஸ்லிம்) !

    ReplyDelete
  3. najeer avargale muthalil ehtha kolgaiyil irukkinreergal enbathai telivu paduthungal iyakkatirrkum idarkkum sammandamum illai ithu oorrin valarchikkum ealai eliyorgal mattrum kalvivalarchikkum thaan intha association ithil oorin ottrumai mattum paarungal entha oru muslim iyakkamavathu islatirrkum muslimgalukkum virodhamaga seyalpaduginrathu enbathai ungallal nirubikka mudiyuma allathu markkathilo hadeedugalilo itharkku aadaram illai endru ungalal aripvuppurmaga vilakka mudiyuma ithu ungal araivekkatuthanathaye kattugirrthu thanippatta thaalpunarchi kaaranamaga oru manithanayo oru samogattaiyo kuraikoora koodathu allah koorugindran ithilirundu (quran)nallunarvu peruvor evarenum undaa...... appadi ungalaukku unmaiyil oorinmelo allathu association meethu akkarai irunthal itthanai naal eean varavillai oorin nanmaikkaga padupaduvorai ootedupin moolam therdedukka paduvargal avargalukku teriyatha namakku thevai ottrumai thaan enbathai maranthu vidatheergal

    ReplyDelete
  4. A .R .சுலைமான் சேட்May 8, 2012 at 8:14 PM

    நாம் நன்றாக இல்லை ! காரணம் நாம் ஒன்றாக இல்லை !
    "ஈகோ" என்ற நம்மிடம் உள்ள கொடிய நோயை துரத்தி நம்மிடம் ஒற்றுமையை அல்லாஹ் தந்தருவானாக ஆமின்.

    "பரம ஏழையை பணம் படைத்தோரின் பக்கத்தில் நிறுத்தும் தொழுகை"

    சங்கம் தோன்றிய காலங்களில் இருந்து நற்சேவைகள் செய்துவருகிறது
    சில வருடங்களாக நம் சங்கத்திற்கு பெரும்பாலான சகோதர்கள் வருகை தராதற்கு காரணம் பல
    சிந்திப்போம் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக செயல்ப்பட்டு மெம்மேலும் ஏழை எளியோர்களுக்கு இறைவனில் அருளால் உதவிகள் செய்ய இந்த சங்கத்தை வழிநடத்துவோமாக

    ReplyDelete
  5. naam ondraga illai enbathu tavarana karutthu neengal solvathu poal sila varundangalaga perumbalana sagotharargal varavillai enbathu ungalin thanippatta karutthu pothuvaga koora vendaam appadiendral ippoluthu irukkindravargal ellam oorin mel akkarai illadavargala kadantha sila varudam ... vendam kadantha oru varuda kaalamaga sangattin sevaigalai ungalal telivu padutta mudiyuma sangattil illamal irundal kooda oorin nanmaikkum nallal pala seyalgalukkum udavi purivade ithan nokkam ithai neengal kurai koora vendam

    ReplyDelete
  6. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 8, 2012 at 11:22 PM

    சகோதரர் Jumail அவர்களுக்கு என்னுடைய்ய கொள்கையை அறிந்து உங்களுடைய இயக்கத்தில் இணைத்து kolla போகிறீர்களா ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய கொள்கைக்குள் புதைந்து போககூடியவன் இல்லை
    என்னுடைய்ய கொள்கை யார் பிரிவினை எற்படுதுகிரார்களோ யார் இந்த சமூகத்தை கூறு போட நினைகிரர்களோ அவர்களின் பரம எதிரி நான் அது எந்த சுன்னத் வல் ஜமாத்தாக இருத்தலும் சரி தவ்ஹீத் ஜமதக இருந்தாலும் சரி.

    நீங்கள் சொல்வது போல் இந்த நீடூர் நெய்வாசல் அசோசியசன் ஆரம்ப காலத்தில் இயக்கத்திற்கு சம்மந்தம் இல்லாமல் தான் இருந்தது ஆனால்
    இன்றைய நிலமை வேறு இயக்கத்தின் கொள்கையும் அமைப்பின் கொள்கை மட்டும் தான் தலை தூக்கி நிற்கிறது.

    ஊரின் ஒற்றுமையை பற்றி யோசித்தால் ஏன் இந்த அசோசியசன் சில காலமாக ஊரோடு ஒத்து போகவில்லை.நீ பெரியவனா உன்னுடைய்ய கொள்கை பெரியதா என்னுடைய்ய கொள்கை பெரியதா ஏன் நமக்குள்
    நாமே சண்டை இட்டு கொண்டிருக்கிறோம், நீங்கள் எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள் எல்லாதிற்கும் ஆதாரம் கேள் எதிரே உள்ளவன் வாய் அடைதுபோகிவிடுவான் என எல்லாதிற்கும் ஆதாரம் என்ற வார்த்தை இழுக்க வேண்டாம் .

    நன்றாக கேட்டுகொள்ளுங்கள் உங்களை நீங்களே ?
    இயக்கத்தினாலும் தனிமனித கொள்கையாலும் நமக்குள் நாம் பிரிவினை அடைந்து இருக்கிறோமா இல்லையா ஏன் ?

    இந்த பிரிவினை தவ்ஹீத் என்ற கொள்கையை உடையவர்கள் சுன்னத்வல் ஜமாஅதார்களை வசை படுவதும் ,சுன்னத் வல் ஜமாஅத் காரர்கள் தவ்ஹீத் வாதிகளை வசைபாடுவது வாடிக்கை ஆகிவிட்டது .
    நான் அரைவேக்காடாக இருந்து விட்டு போகிறேன் நீங்கள் நன்றாக முழுவதுமாக வெந்து முழு வேக்காடக இருந்து கொள்ளுங்கள் ,நான் ஏன் வரவில்லை என கேட்கிறீர்கள் 2004 இல் தொடர்ந்து சில மாதங்கள் வந்தேன் சொந்த காரர் குள்ளேயும் தன்னுடைய்ய கொள்க ஒத்துபோகின்ற
    வர்களோடும் நலம் பகிர்ந்து கொள்கிறார்கள் இதுதான் அன்றையில்
    இருந்துவருகிறது இப்படி ஒரு கொள்கை வாதிகளோடு நடு நிலை வாதிகளுக்கு அங்கு இடம் இல்லை என்று தெரிந்துகொண்டேன் பிறகு ஏன் நான் வரவில்லை மற்ற உருபினர்களும் ஏன் வர வில்லை என்பது வருத்தம் இல்லை அன்றைய நிர்வாகத்திற்கு .

    இன்றுதானே இவர்களுக்கு நினைவு வந்து இருக்கிறது கருது வேறுபாடுகளை களைந்து ஒன்று படுங்கள் என்று

    அதனால் தான் வந்தேன் நிச்சமாக இன்ஷா அல்லாஹ் நாமெல்லாம் ஓர் தாய் வைற்று பிள்ளையாக ஒரே சமூதாயமாக

    வாழவேண்டும் நமக்குள் ஆயிரத்தி எட்டு பிரிவுகள் இருக்கலாம் சமூதாய பணியென்று வரும்போது இஸ்லாம் என்ற

    ஒரே கையிற்றை பற்றி பிடித்து வலு சேர்க்க வேண்டும் .

    ReplyDelete
  7. அன்புள்ள சுலைமான்,நஜீர், அவர்கள் நீடூர் -நெய்வாசல் - துபாய் சங்கம் தேர்தல் பற்றின
    கருத்தக்கள் எழுதி இருந்திர்கள் . தாங்கள் எத்தனை வருடங்களாக சங்கம் கூட்டத்திற்கு
    வந்து கொண்டு இருகிறிர்கள் . இந்த சங்கம் ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகின்றன
    எந்த கூட்டத்திலாவது எதாவது ஒரு இயக்கத்தை பற்றி பேசவோ அல்லது நன்கொடை
    செய்ய பட்டுள்ளதா. ஒரு இயக்கத்தில் இருப்பது தனி பட்ட மனிதனின் கொள்கை ஆனால்
    அந்த கொள்கை இந்த சங்கத்தில் புகுர்த்த பட்டுள்ளதா அதான் கேள்வி. சுலைமான் அவர்கள்
    எழுதிய கருத்தில் சங்க கூட்டத்திற்கு பல நண்பர்கள் வராமல் இருக்க பல காரணம் என்று
    தெரிவித்தார் அது என்ன காரணம் என்று சங்க கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாமா
    இந்த சங்கத்தில் என்ன வேற்றுமை கண்டீர்கள் இந்த சங்கத்தின் கொள்கை சரியான
    முறைகள் அறிந்து கொள்ள வில்லை . சங்க கூட்டத்தில் என்ன தான் பேச வேண்டும்
    என்று சொல்ல விரும்பிகிறிர்கள். நஜீர் அவர்கள் தொடர்ந்து பல கூட்டத்திற்கு வந்ததாக
    கூட்டத்தில் சொந்த காரர்களுடனும் கொள்கை ஒதுபோவர்களுடனும் நலம் பகிர்ந்து
    கொள்வதாக தெரிவித்து இருகிறிர்கள். தாங்கள் துபாய் சங்கத்தில் சந்தா கொடுபவராக
    இருந்தால் ஏன் கேள்வி கேட்க வில்லை . அன்றைய காலமே நீங்கள் கேட்டு இருக்கலாமே
    சங்க கூட்டம் நடக்கும் போது கருத்துகள் இருந்தால் தெரிவிக்கும் படி கேட்டல் ஏன் வாய்
    மூடி மௌனமாக இருகிறிர்கள் சொல்ல வேண்டியது உங்கள் கடமை ஏன் சொல்ல வில்லை
    ஊருடன் ஒத்து போக வில்லை என்று கேட்கிறிர்கள். இந்த சங்கம் செய்யும் அணைத்து நல்ல காரியமும்
    ஊரின் நன்மைக்கு வேண்டி தான் செயல் படுகின்றன . அதை புரிந்து கொள்ள வேண்டும்
    நானும் கருத்துகள் எழுதுகிறேன் என்ற நோக்கில் எழுத கூடாது . நீடூர் சங்கம் எல்லார் கொள்கைக்கும்
    அப்பார் பட்டது . தனி பட்ட கொள்கை இங்கு இல்லை சங்கத்தில் உறுப்பினர்கள் எந்த கொள்கை
    வேண்டுமானாலும் இருக்கலாம் அது அவர்கள் தனி பட்ட கருது . கொள்கையை நீடூர் சங்கத்தில்
    புகுடுகிறர்களா அதை தான் பார்க்க வேண்டும் . துபாய் சங்கம் கொள்கை வாதிகளை கொண்டது
    அல்ல நடு நிலை வாதிகளை கொண்டது . சங்கத்தின் அடிப்படை கொள்கை புரிந்து கொண்டு
    கருத்துகள் சொல்லுங்கள் .
    இப்படிக்கு
    எம் . நசீர் அலி
    பொருளாளர்
    துபாய் சங்கம்

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 9, 2012 at 11:33 AM

      அன்புடன் சகோதரர் எம் . நசீர் அலி (பொருளாளர்-துபாய் சங்கம்) அவர்களுக்கு நீங்கள் சங்கத்தின் பொருளாளராக
      இருக்கிறீர்கள் என்று இப்போது தான் தெரியும் இந்த துபாய்க்கு வந்த பிறகுதான் சுலைமான் சொன்ன பிறகுதான்
      எனக்கு தெரியும் உங்களை இந்த வெளி உலகத்திற்கு அறிமுக படுத்தி வைத்த துபாய் சங்கத்திற்கும் உலகத்தில் உள்ள நீடூர் மக்கள் எல்லாம் இன்று தெரிந்து கொண்டார்கள் நீங்கள் துபாய் சங்கம் பொருளாளர் பதவியில் இருக்கிறீர்கள் என்று அல்ஹம்ந்துளில்லாஹ் .

      எத்தனை வருடங்களாக நீங்கள் பிரிவினை இல்லாமல் அனைவரும் நம் சகோதரர் எல்லோருக்கும் சரியான அழைப்பு
      கொடுத்து வரவைத்து கூட்டம் நடத்தினீர்கள் கேட்டு கேட்டு கொள்ளுங்கள் உங்களை சமூதாயத்தின் மேல் உங்கள் நாலு பேருக்கு மட்டும் அக்கறை இருந்தால் போதுமா வெறும் நாலு +எட்டு இவர்களை வைத்து கூட்டம் நடத்தினால் கேட்டு
      கொள்ளுங்கள் உங்கள் மனசாட்சியை ஏன் சரியாக அனைத்து உருபினர்களையும் ஏற்ற தாழ்வு பார்க்காமல் அழைக்க வில்லை?

      ஏன் நிஜார் அவர்களின் ரூமுக்கு கூட்டத்தை மாற்றி அமைத்தீர்கள் கோட்டை பள்ளியில் வைத்தால் DHS 100 செலவு ஆகும் என்றுதானே அல்ஹம்ந்துளில்லாஹ் நம் சங்கத்தில் நீடூர் துபாய் வாழ் மக்கள் அனைவரும் கூடி சங்கத்தை நடத்தி இருந்தால் நாம் ஒரு நிரந்தர இடத்தில நடத்தி இருக்கலாமே யோசிங்கள் சகோதரரே ?

      குறை கூறுவது மட்டும் என் நோக்கம் இல்லை அல்ஹம்ந்துளில்லில்லாஹ் இந்த நிலைமையிலும் நீடூர் நெய்வாசல் சங்கம் நாங்களும் நடத்துகிறோம் என்று பல மக்களுக்கு உதவியும் செய்தீர்கள் அதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

      உங்கள் அமைப்பின் கொள்கை ஊரிலும் சங்கத்திலும் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது எப்படி என்று விவரிக்க வேண்டுமா ஊரில் நீங்கள் உதவி செய்தீர்களே ஊரோடு ஒற்றுமை விரும்புவராக இருந்தால் நம் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் யாரையாவது அழைத்து நோட்டு புத்தகமோ அல்லது பண உதவியோ செய்தீர்களா கேளுங்கள் உங்கள் மனசாட்சியை .

      இந்த சங்கத்தின் கொள்கை சரியான முறையில் அறிந்து கொள்ளவில்லை என சொல்கிறீர்கள் நீங்கள் அறிந்து
      கொள்ளாமல் வழிநடத்தி விடீர்கள் இந்த சங்கத்தின் கொள்கை இதுவாக தான் இருக்க முடியும் சம்சுல் ஹஜ்ரத்
      அவர்களால் ஆரம்பிக்க பட்ட சங்கம் ஊரோடு ஒதுபோகவேண்டியும் ஏழை எளிய மக்களுக்கு உதவவும் தான்
      அதை நீங்கள் நடை முறை படுதிநீர்களா இல்லையே .

      இப்போது சந்தாவுக்கு வருவோம் நம் ஊரில் உள்ள மக்கள் மொத்தம் எத்தனை பேர் இந்த துபாய் நகரில் உள்ளார்கள் அதற்கான பெயர் லிஸ்ட் உங்களிடம் உள்ளதா சங்கத்திற்கு வரும் நாலு +எட்டு இவர்களின் பெயர் லிஸ்ட் வைத்து இருப்பீர்கள் இவர்களிடம் சந்தா வசூலித்து மிக குறைந்த அளவில் உதவி செய்தீர்கள்

      அவ்வளவு தானே ,என்ன்டுடையா கருது கணிப்பு நம் ஊர்காரர்கள் குறைந்தது 300 உறுப்பினர்கள் இருப்பார்கள்
      அவர்களுக்கு எல்லாம் தெரியுமா இப்படி ஒரு சங்கம் நடை பெறுகிறது என்று யோசிங்கள் சகோதரரே ?

      அவர்சங்கதிர்க்கு வருகிறார் வர வில்லை அது முக்கியம் இல்லை அவர்களுக்கு சரியான அழைப்பு கொடுத்து
      வரவழைக்க முயற்சி எடுத்தோம அப்படி ஒன்றும் நீங்கள் செய்ய முயற்சி எடுக்க வில்லை சங்கத்திற்கு எதனை
      வருடமாக வந்தீர்கள் சந்தா கொடுத்தீர்களா என்று கேள்வி கேட்கிறீர்களே அதற்க்கு நீங்கள் முயற்சி செய்தீர்களா.

      முதலில் வசூல் செய்ய என்ன முயற்சி கடை பிடித்தீர்கள் வசூல் செய்பவர் என நான்கு நபர்களை நிர்நைத்து இருந்தால்
      அவர்கள் அந்த பணியை தொடர்ந்து செய்து இருப்பார்களே .

      ஊருடன் ஒத்து போகவில்லை என்றால் கோபம் வருகிறதே நீங்கள் செய்யும் நல்ல காரியம் ஊரோடு ஊர் நிர்வாகத்தோடு
      ஒத்து செய்தீர்களா ?

      நானும் கருது எழுதுகிறேன் எழுத வில்லை சகோதரரே நீங்களும் சங்கத்தை நடத்துவது போல் நடதிநீர்களே ஒரு
      தனிப்பட்ட கொள்கையோடு அதன் வெளிப்பாடு என் தனிப்பட்ட எண்ணம் இல்லை நடுநிலை வாதிகளின் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு நன் சொல்வது புரிந்து இருக்கும் .

      எந்த கொள்கயிளவது நீங்கள் இருந்து கொள்ளுங்கள் அதை பொதுமக்களின் நலனுக்காக இருக்கும் நீடூர் நெய்வாசல் சங்கத்தில் ஏன் புகுத்துகிறீர்கள்.

      நிச்சயமாக இந்த சங்கம் நடுநிலை வாதிகளை கொண்டது என்றால் ஊரில் உள்ள அனைத்து மூத்த உறுபினர்களின்
      கருத்துகளை கொண்டு ஆராயிந்து அந்த மூத்த உறுபினர்களை கூடிய பின்பு தேர்தலை நடத்துங்கள் .

      அப்படி சங்கம் மீண்டும் புதுபிக்க பட்டாள் வளமான எந்த வித குறையும் ஏற்படாமல் நிலைத்து நிற்கும் இல்லை அவன் என்ன சொல்வது நாங்கள் நினைப்பதை நடத்தி தீர்வோம் என்றால் அல்லாஹ் நேர்வழி படுத்த துவா செய்தவனாக யா அல்லாஹ் என் சகோதரர்கள் எல்லாம் ஒற்றுமை என்ற வலயத்தை விட்டு வெளியே

      செல்லாமல் பாதுகாப்பாயாக ஆமீன் .

      Delete
    2. நீங்கள் முதலில் nnassociation.blogspot.comதளத்திற்கு சென்று பார்த்திவிட்டு குறையை சொல்லுங்கள். யார் இந்த செய்தியை முதலில் வெளியிட்டது என்று உங்களுக்கு புரியும். இந்த தளத்தில் வெளியிட்டது நம் தள வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியே!! எண்ணம் சுத்தமாக் இருந்தால் சிந்தனையும் அப்படியே இருக்கும். மனதில் யாரையோ வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். எதுவாயினும் இது இப்படி என தெளிவு படுத்துங்கள் அதை விட்டு விட்டு பக்கம் பக்கமாக கருத்து என எழுதாதீர்கள்.

      Delete
    3. சகோதரர் பெயர் சொல்லமுடியதவருக்கு!
      இந்த தளம் அவர்களுடையது இவர்களுடையது என்று பாகுபாடு பார்க்காமல் விசயங்களை அறிந்து
      கொள்கிறேன் அந்த தளத்திற்கு சென்று பார்த்து விட்டு குறையை சொல்லுங்கள் என தயவு செய்து சொல்ல
      வேண்டாம் குறை இல்லை நீடூர் நெய்வாசல் துபாய் வாழ் மக்களின் ஆவல் எல்லோருக்கும் அழைப்பு
      இல்லைய்யே ஒரு தனிப்பட்ட அமைப்பில் இருப்பவருக்கு மட்டும் தான் அழைப்பு தருகிறர்களே என்று ஏன்
      இந்த நிலைமை .

      முதலில் நீங்க வெளியிட்டீர்கள் எப்போது ஒரு மாதத்திற்கு
      முன்னால் சகோதரரே நாளைய செய்தியை
      இன்று நாபக படுத்தினால் நம் சகோதரர் மறந்து விடுவார்கள்
      இப்படி இருக்கு நிலைமையில் அவர்கள் நீங்கள் சொல்லாமலா அவர்கள் வெளி இட்டார்கள் .

      என் எண்ணம் சுத்தமாக இருகிறதா அல்லது உங்கள் எண்ணம் சுத்தமாக இருகிறதா என்பதை அல்லாஹ்
      அறிவான்,எந்த தனி பட்ட மனிதனை தாக்க வேண்டும் எனபது என் நோக்கம் இல்லை பிரிந்து செல்லும்
      சமூதாயம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதே .

      சகோதரரே நான் பக்கம் பக்கமாய் எழுதுவது உங்களுக்கு ஏன் கவலையாக இருக்கிறது எவன் ஒருவன் இந்த
      சமூதாய மக்களையும் என் சகொதராகிய உங்களையும் என்னையும் பிரிக்க நினைகிரர்களோ அவர்களை
      கண்டித்து பக்கம் பக்கமாக இல்லை புக்காக அச்சடித்தும் வெளியிடுவேன் இது என் பொது நோக்கம்.

      இன்ஷா அல்லாஹ் அதில் வெற்றி காண ஒற்றுமை நீங்கள் விருபிநீர்கள் என்றால் என்னை ஊக்க
      படுத்துங்கள் இல்லையேல் அதை நிறுத்தி கொள்ளுங்கள் என எனக்கு தடை போட நீங்கள் யார்
      தவறாக கேட்டுவிட்டேன் நீங்கள் யார் என்று உங்களுக்கு பெயர் இல்லைல்ல .


      "நெருக்கடிகளையும் தடைகளையும் கண்டு தனது கொள்கைகளை மாற்றிக் கொள்பவன் எதனையும் அடைவதில்லை"


      தொடரும் .............................
      அ.ஹ.நஜீர் அகமது-கேம்ப் :துபாய்

      Delete
  8. A .R .சுலைமான் சேட்May 9, 2012 at 9:24 AM

    குழப்பவாதி என்றால் சிலர் கோபித்து கொள்கிறார்கள்

    நான் சங்கத்தை குறை கூறுவது போல் நீங்கள் தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டாம் சில வருடங்களாக பெரும்பாலான சோதரர்கள் வருவது இல்லை அது உண்மை நான் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை,
    இப்பொழுது உள்ளவர்கள் ஊரின் அக்கறை காட்டாதவர்கள் என்று நான் சொன்னேன் என்று நீங்களே ஒரு புதிய குழப்பத்தை பதிவு செய்வது குழப்பவாதி என்றுதான் சொல்லவேண்டும்.
    கடந்த ஒரு வருட காலமாக செய்த சேவைகளை தெளிவு படுதமுடயுமா என்று உங்களின் ?
    சங்கம் சேவைகள் செய்யவில்லை என்று யாராவது சொன்னார்களா உங்களால் நிரூபிக்கமுடியுமா,
    சகோதர்கள் வருகை தராதற்கு காரணம் பல என்று நான் குறிபிட்டது "ஒற்றுமை"
    ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
    ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
    முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
    இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
    வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
    ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !

    இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
    ஓர் குடையின் கீழ் நின்று !
    இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !

    இந்த இயக்கங்கள் தான் ஒற்றுமைக்கு முற்றுபுள்ளி

    இஸ்லாமியராகியா நாம் செய்யும் உதவிகள்
    ஊரின் நன்மைக்கும் நல்ல பல செயல்களுக்கும் உதவி புரிவதன் இதன் நோக்கம் இதில் என்ன குறைகள் கண்டீர்
    என்னை குழப்பவேண்டாம் என்று தனிப்பட்ட உங்களின் கருத்தை தவிர்க்கவும்

    ReplyDelete
  9. nanbare naan yaraiyum kulappavillai, nadaimurayil ulla sanga visayangalai sariyaga terindukollamal kuraikoora vendam endruthan sonnaen (allah nammai porundikkolvanaga)ennudaya thanippatta karuttu endral neengal ninaittal ungal sandegangalai oor koottatil telivu padutti kollalam (yavatraiyum allah nangu arindavan)alquran

    ReplyDelete
  10. nidur neivasal association dubai endra peyaril website irukkum pothu athil intha sanga therdal koottam patri veliyidamal intha thanipatta websitil veliyidum pothe theriyavillaya neengal oru amaippai saarnthu thaan intha sangathai nadathukirirhal enbatharkku veru enna aatharam vendum. ellavatrirkkum aatharam irukka endru kelvi eluppuvarkal itharkku enna pathil solla pokirarhal.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 9, 2012 at 5:44 PM

      மிக சரியாக சொன்னீர்கள் இவர்களால் ஒரு காலமும் பதில் சொல்ல முடியாதுதன்னுடைய கருத்தை கொண்டு வாதிடுகிறார்கள் முழு பூசணிகாயை சோத்தில் போட்டு மறைக்க நினைகிறார்கள் .

      என் அருமை இஸ்லாமிய சமூதாயமே நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் இனி ஒரு நாளும் தனி பட்ட இயக்கத்தின் கொள்கை நுழைய விடாமல் ஊர் ஒற்றுமை எண்ணி அனைவரும் இன்ஷா அல்லாஹ் ஒரு மித கருத்தோடு ஒன்று இணைவோம் சங்கத்தின் மூலம் நீடூர் நெய்வாசல் மக்களின் நலனை பற்றி யோசிப்போம் .

      அதற்க்கு நம் இறைவனின் அருள் கிடைக்க துவா செய்வோம்.............

      Delete
    2. முஹம்மதுMay 9, 2012 at 5:59 PM

      இது ஒரு சின்ன உதாரணம் இவர்கள் ஒரு அமைப்பை சார்ந்து தான் இந்த சங்கத்தை நடத்துகிறார்கள் என்பதற்கு பல பல உதரணங்களை சொல்ல முடியும் அதை ஏன் இவர்கள் மறுத்து வாதிடுகிறார்கள் என்பது தான் புரியவில்லை

      Delete
    3. நீங்கள் முதலில் nnassociation.blogspot.comதளத்திற்கு சென்று பார்த்திவிட்டு குறையை சொல்லுங்கள். யார் இந்த செய்தியை முதலில் வெளியிட்டது என்று உங்களுக்கு புரியும். இந்த தளத்தில் வெளியிட்டது நம் தள வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியே!! எண்ணம் சுத்தமாக் இருந்தால் சிந்தனையும் அப்படியே இருக்கும். மனதில் யாரையோ வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். எதுவாயினும் இது இப்படி என தெளிவு படுத்துங்கள் அதை விட்டு விட்டு பக்கம் பக்கமாக கருத்து என எழுதாதீர்கள்.

      Delete
  11. குறைக்கூற வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை பரப்புவது மிகவும் பாவமான செயல். துபாய் சங்கத்தின் இணையத்தில் 14.04.2012 அன்றே இதுப்பற்றி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சகோதர் நஜீர் அவர்களும் 15.04.2012 அன்று சுமார் மூன்று comments கொடுத்திருக்கிறார். முழுப்பூசணிக்காயை யார் சோற்றில் மரைப்பது! இதற்கும் ஏதாவது குறை வைத்திருப்பீர்கள். சகோதரர்களே தயவு கூர்ந்து இனிமேலும் ஒருவரை ஒருவர் வசைப்பாட வேண்டாம். ஒவ்வொருவரும் அளிக்கும் தவறான தகவல் சங்கத்தின் செயல்பாட்டினையே தடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 10, 2012 at 10:03 AM

      குறை கூற வில்லை அப்படி குறை கூறி இருந்தால் அது பாவமாகும் என்று எனக்கு தெரியும்

      மக்களை ஏமாற்றும் செயல் பொது சங்கத்தில் தனிப்பட்ட கொள்கை நுழைத்து உறுபினர்களை

      ஏமாற்றுவது அதை விட பெரிய பாவம் மூன்று கருத்தை நான் கூறி இருக்கேன் சகோதரரே

      மறுக்க வில்லை நான் தொடர்ந்து உங்கள் http://www.nidurneivasal blog-post பார்த்துவருகிறேன்

      நம்மை போன்று எல்லோரும் எல்லா நேரத்திலும் பார்த்து கொண்டிருக்க மாட்டர்களே இதை

      வசை பாடுவதாக என்ன வேண்டாம் ஆதமுடைய்ய மகன் பகல் எல்லாம் பாவங்களும் தவற்றையும்

      செய்து இரவில் மன்னிப்பு தேடுவான் ஆனால் நான் தவற்றை சுட்டி காட்டும் போது தவறான தகவல்

      என்று பொதுநலவாதிகளை ஏமாற்றும் வேலையில் இறங்கி விடீர்கள் அனைத்தையும் அல்லாஹ்பாதுகாப்பான் ....................

      இன்ஷா அல்லாஹ் .......

      நீடூர் நெய்வாசல் துபாய் வாழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் பொதுநலமான சங்கம்

      உருவாக்க நடுநிலை வாதிகளை தலைவராக அமைத்து போது தொண்டு என்றும் தொடர ....

      Delete
  12. சகோ. நஜீர் பாய் அவர்கள் எழுதும் எழுத்துக்கும் அவர்கள் கருத்துக்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லை. ஒற்றுமை, ஒரே சமுதாயம் என்கிறார்கள். உல்லத்தில் அது நிறைந்த குறைகள் இது எப்படி சாத்தியம்? ஒற்றுமையை வளியுத்தி சொல்பவர் முதலில் குறைபேசகூடாது. எதுவும் தவறு கண்டால் அதை பின்னால் விமர்சிக்காமல் கூட்டத்தில் வந்து சபையில் சொல்லி அங்கு ஒற்றுமை பற்றி பேசி இந்த உபதேசத்தை அங்கு செய்யவேண்டும். அதுதான் ஒற்றுமை படுத்த நடைமுறை சாத்தியம். அதைவிட்டு பக்கம் பக்கமாக பின்னால் எழுதினால் அது சரியல்ல. மேலும் அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒற்றுமைக்காக இஸ்லாத்தை விட்டுவிட சொல்லவில்லை. தாய், தந்தையாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் அவா்களுக்கு கட்டுப்பட கூடாது என்கிறபோது மற்றவர்கள் எம்மாத்திரம்?. நாம் நம்முடைய அறிவைக்கொண்டு சிந்தித்து சொல்வோம் ஒற்றுமையாக இருந்தால் சாதித்துவிடலாம என்று ஆனால் இஸ்லாம், அல்லாஹ், நபி(ஸல்)அவர்கள், நன்மை, தீமை, ஷிர்க், பித்அத் என்றால் என்ன என்றே தெரியதவர்களை வைத்துக்கொண்டு என்ன சாதி்க்கமுடியும், வெற்றி பெறுவது என்னிக்கையை கொண்டு அல்ல. ஈமானை கொண்டுதான் அதைநாம் உணரவேண்டும். அப்படியானால் பத்ருபோரில் நம்மைபோல பல மடங்கு காஃபிர்கள் அதிகம் ஆனால் வெற்றியாருக்கு? சிந்திப்போம் செயல்படுவோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 10, 2012 at 10:44 AM

      நான் எழுதும் எழுத்தும் என்னுடையா கருதும் மிக பொருத்தமானது உங்கள் அமைபுகாக ஒத்துபோகிரர்கள்
      என்று நினைக்கிறன் அதான் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று மண்டை ஆட்டி ஆட்டுமந்தையாக இருக்கும் கூட்டத்தில் இருந்து வந்தவன் அல்ல நான் எல்லோருக்கும் எல்லாம் தெரியும் அவர்கள் பயன் படுத்தும் முறை மாறுபடும் அதனால் எங்களுக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்று எண்ணி கொள்ள வேண்டும் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான் .

      இதை யாருக்கும் பின்னல் நான் பேசவில்லை சகோதரரே கடைசியாக நான் சென்ற கூடத்தில் முதல் குரல்
      கொடுத்தவன் நான் தான் முதலில் கடைசியாக கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள் ,ஒரு குறிப்பிட்ட கொள்கை வாதிகள் சங்கத்தில் தலை தூக்க வேண்டாம் பொது நலமாக செல்லுங்கள்
      என்று சொல்வது இஸ்லாத்தை விட்டுவிடுவதாக அர்த்தம் இல்லை.

      அன்பிற்கினிய சகோதரரே ஒற்றுமையாக இருந்து பல உரை நிகழ்த்தி அவர்களை நேரான வழியில்
      இழுத்து செல்ல வேண்டும் அவன் அப்படி செய்கிறான் இப்படிசெயகிறான் பைத்திய காரணங்க என்று
      சொன்னால் எல்லா மனிதருக்கும் கோபமும் சண்டையும் கொலையும் தான் ஏற்படும் ...........................

      இந்த நிலைமைக்கு தள்ளுவதர்ககவா நாம் இஸ்லாத்தில் இருக்கிறோம் நமக்கும் இத்தனை சண்டை இருந்தால்

      மாற்று மத சகோதரன் எப்படி இஸ்லாத்தை தழுவுவான் உனக்கும் எனக்கும் மட்டுமா சொந்தம் அல்லாவால் படைக்க பட்ட அணைத்து மனித இனத்திற்கும் இஸ்லாம் எனபது உண்மை மார்க்கம் மற்றது பொய் என எப்படி விளங்க வைப்பது ஒருகணம் யோசிங்கள் சகோதரர்களே வேண்டாம் இனி நமக்குள் சண்டை நாளை அல்லாஹ் நிர்நைத்து கொள்வான் யார் வெற்றி யாளன் என்று நீங்கள் தான் வெற்றியாளன்

      நான் தான் வெற்றியாளன் என்று மாற்றுமத சகோதர்களை குழப்ப வேண்டாம் .



      அன்பிற்கின்ய சகோதரர்களே நான் படிக்கும் தருவாயில் மாற்றுமத காரர்களிடம் இஸ்லாம் இதுதான்

      என எடுத்து வைக்கும்போது அவன் என்னை கேட்ட கேள்வி முள் தைத்தது போல் ஆகிவிட்டது

      அப்படி என்ன கேள்வி கேட்டான் என நீங்கள் கேட்கலாம் அவன என்னிடம் கூறிய பதில்கள்

      ok இஸ்லாம் உணமையான மார்க்கம் எளிமையான மார்க்கம் சத்திய மார்க்கம் எந்த ஜமாத்தில்

      சேரவேண்டும் சுன்னத்வல் ஜமாத ,தவ்ஹீத் ஜமாத என என்னை கேட்டவுடன் பிறகு நான் அவனிடம்

      விளக்கி விட்டேன் குரான் ரசூல் (ஸல்) வழி என இப்படி பட்ட கேள்வி நமக்கு தேவையா சிந்தியுங்கள்

      சகோதரர்களே ..................................

      வெற்றி எனபது எண்ணிக்கை கொண்டு இல்லை ஈமானை கொண்டு குழப்பங்கள் இருந்தால் எப்படி

      ஈமான் இருக்கும் சகோதரர்களே பேசுவதை மட்டும் வைத்து நாம் ஈமான்தாரி என்று ஆகிவிடுவோமா

      நானும் உங்களிடம் சொல்வது இதை தான் சிந்திப்போம் செயல்படுவோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

      Delete
  13. A .R .சுலைமான் சேட்May 9, 2012 at 8:28 PM

    நாம் நன்றாக இல்லை !
    காரணம் நாம் ஒன்றாக இல்லை !

    ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
    ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
    ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !

    மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
    தெரியவில்லை – நமக்கு !
    மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !

    முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
    துவேச கற்களை வீசினோம் !
    ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் !
    காலமெல்லாம் நாம் கதறினோம்!

    கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
    உணவின்றி மடியும் சோமாலியா !
    பற்றி எரியும் பாலஸ்தீன் !
    உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !

    பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
    இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !

    இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
    வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
    ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !

    இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
    ஓர் குடையின் கீழ் நின்று !
    இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !

    சிந்திப்போம் ! வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமமக்காகப் பிரார்த்திப்பொம்!
    -

    சமுதாய ஒற்றுமை புத்தகத்திலிருந்து….

    ReplyDelete
  14. http://www.nidurneivasal.org/2012/04/blog-post_15.html#comment-form

    மேலே உள்ள இந்த லிங்கில் பார்க்கவும் "மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்! அடுத்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு!
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

    மீண்டும் தங்களின் கவனத்திற்கு! தவறாமல் கலந்து கொள்வோம்!" என்று உள்ளது. நஜீர்பாய் அல்லாஹ்வுக்கு அஞ்சிககொள்ளுங்கள். நீங்கள் அதில் கருத்து எழுதியிருக்கிறீர்கள். ஒற்றுமையை முதலில் செயல்படுத்துங்கள். எழுத்தோடு நிருத்திவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 10, 2012 at 11:09 AM

      என்னை அல்லாஹ்வுக்கு அஞ்சிககொள்ளுங்கள் என்று சொல்கிறீர்கள் அஞ்சி கொண்டு தான் உங்களுக்கு

      பத்தி தெருவிகிறேன் தாங்களும் சற்று சிந்தியுங்கள் பொதுநலத்திற்காக ஏற்படுத்திய சங்கத்தில் ஒருதனிபட்ட

      கொள்கை புகுத்துவது எந்த விதத்தில் நியாயம் ஒற்றுமை செயல் படுத்தும் நோக்கில்தான் என் கருத்தை

      தெரிவித்திருக்கிறேன் தயவு செய்து சகோதரர் நூருல் அவர்களே என் சகோதரர்களை எங்களை விட்டு பிரித்து

      விடாதீர்கள் இன்று நான் உங்களுக்கும் தெரிவிக்கும் கருத்தை கொண்டு என் சகோதரனுக்கு நான் ஒரு எதிரி

      போல் சித்தரிக்க பட்டிருக்கேன் அப்படி இருந்தால் அல்லாவிடம் முறையிடுவேன் யா அல்லாஹ் என்

      சகோதரர்கள் என் உண்மையான நோக்கத்தை புரிந்து எல்லோரும் அண்ணனாக தம்பியாக ஒரே தொப்புள் கொடி

      உறவாக செழித்து எந்த விதத்திலும் ஈமானில் இருந்தும் ஒற்றுமையில் இருந்தும் விளகிடாமல் இருக்க அல்லாஹ்

      நமக்கு உதவி செய்வானாக ஆமீன் ...........

      உயிர் நிற்கும் வரை யார் என் சகோதரனை பிரிக்க நினைகிரர்களோ அவர்களை வன்மையாக கண்டிப்பேன்

      எழுத்தோடு நிற்கும் போராட்டம் இல்லை இன்ஷா அல்லாஹ் நேருக்கு நேர் நின்று அவர்களிடம் வாதிடுவேன்

      இன்ஷா அல்லாஹ் ..................

      Delete
  15. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 10, 2012 at 12:11 PM

    அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே என்னுடையா கொள்கை தெரிந்து
    கொள்வதில் நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் முதலில் உங்கள் கொள்கை
    தெளிவு படுத்துங்கள் என்கிறார்கள் கீழே என்ன்டுடைய்யகொள்கை மிக தெளிவாக
    தெளிவு படுத்தி இருக்கேன் படித்து இன்ஷா அல்லாஹ்நாமும் தெரிந்து கொண்டு
    மற்றவருக்கும் தெரிவித்து இன்ஷா அல்லாஹ் நாம்எல்லாம் ஒற்றுமையாக இருக்க
    அல்லாஹ் வலி வகை செய்வானாக ஆமீன் .

    தவறு செய்பவன் மனிதன் என்னுடைய கண்ணோட்டத்தில் எந்த தவறான கருத்தை
    தெரிவிக்க வில்லை அப்படி தவறு செய்து இருந்தால் அல்லாவிடம் மன்னிப்பு தேடி
    கொள்கிறேன் எந்த ஒரு தனி மனிதனையும் குறை கூறி நமக்குள் நாமே பிரிந்து செல்வது
    என்னுடையா நோக்கம் இல்லை யார் பிரிக்க நினைகிரர்களோ அல்லது நம்மை
    தனிமை படுத்த நினைகிரர்களோ அவர்களை வாயப்பு கிடைத்தால் வன்மையாக
    கண்டிப்பேன் இன்ஷா அல்லாஹ் கருத்தோடு மட்டும் நின்று விடாமல் தொடர்ந்து
    அதற்க்கான முயற்சி எடுப்பேன் .
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின்  திருநாமம்  கொண்டு  ஆரம்பம் செய்கிறேன் !

    எனது  ஆதங்கம்  சமுதாயத்தின்   பிளவு   இதை   பொறுக்க  முடியாமல் வாழ்கையின் 
    ஒரே லட்சியம்! அல்லாஹ்   ரசூலை மறந்து   ஆயிரம் பிளவுகளஹா பிரிந்து  கிடக்கும்
    இந்த சமுதாயத்தை ஒன்று இணைபதுவே நமது முதன்மையான நோக்கம், நீங்கள்
    நினைக்கலாம் யாரடா இவன் இவனுகென்ன அக்கறை இவனும் தலைவன் ஆக
    ஆசைபடுகிரான என்று நீங்கள் என்ன கூடும் இந்த எண்ணம் தோன்றுவது இயல்பே
    ஏன் என்றால் இப்படி சொல்லி ஆரம்பித்து  தனக்  கென்று ஒரு கொள்கை வஹுது
    கொள்ளும் கூட்டம் அல்ல.
     
    நாம் அல்லாஹ் நபி (ஸல்) கட்டுப்பட்ட கூட்டம் நாம்  சஜிதா  செய்வதின்  நோக்கம் 
    யாருக்கும் தலை வணங்காமல் அல்லாஹ்  ஒருவனுக்கு மட்டும்தலை வணங்க  கூடிய 
    கூட்டம்  என்று  பறை  சாற்றி  நபி (ஸல்)   வஹுதுகொடுத்த  வாழ்வு  நெறிமுறைப்படி
    வாழ  வேண்டும்  அதற்கு  குர்ஆன் ஆதர  பூர்வ அதீஸ்  ஏராளம் அதை படித்து தெரிந்து 
    கொள்ள அல்லாஹ் நமக்கு  அறிவையும்  ஆற்றலையும்  தந்து இருக்கான்  ,  இவர்கள் 
    சொல்வது சரி அவர்கள் சொல்வது சரி மற்றது எல்லாம் பொய் என்று உரை ஆற்றுவதற்கு 
    யாருக்கும் அதிகாரம் கொடுக்க வில்லை.
     
    மா மனிதர் நபி(ஸல்) மட்டும் தான் !

    மா மனிதர் நபி(ஸல்) மட்டும் தான் அந்த அருள் பேற்றை கொடுத்தான் அப்படி இருக்க
    ஏன் இவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும் எது 
    உண்மை என்று  ஆராய   வேண்டும் எந்த ஹதீஸ் ஆதர பூர்வ   அதை  நடைமுறை படுத்தி  வாழவேண்டும்   இவ்வளவு இனிமையான  உண்மை மார்க்கத்தில்  பிறந்த  நாம் 
    செய்வது.
     
    என்ன  நீ  தொழுகும்  முறை தவறு என்று எடுத்து கூறினால் அவனிடம் சண்டை இப்படி பட்ட வாழ்கை வாழ்வதர்காகவா.வேண்டாம் இந்த கேடுகெட்ட வாழ்கைமுறை.
     
    நம்முடைய  வாழ்க்கை முறை   குர்ஆன் முறைப்படியும்  நபி (ஸல்)  வழிமுறைபடி 
    மட்டும்தான் வாழவேண்டும் !  
     
    நமது நோக்கம்  மார்க்கத்தை ஆராயகூடிய அறிவை அல்லா நமகு தந்து இருக்கான் அதை கொண்டு  மார்க்கத்தை  அறிந்து கொள்ள கூடிய ஆற்றல்  இன்ஷா  அல்லாஹ் மனிதன்  
    தனக்கு தானே ஏற்படுத்தி  கொள்ள வேண்டும்.
     
    ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

    மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது.
     
    எனது அருமை இஸ்லாமிய பெருங்குடி மக்களே !  
    நாம் ஏன்  ஒற்றுமையாக  வாழ வேண்டும் ! 
     
    நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்!
    நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்!
    என்ற அல்குர்ஆன் (21:92)

    வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

    இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது  ஒற்றுமையே ! 
     
    ஏகத்துவம் என்பது முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடும் கத்தியல்ல. அந்தப் பெயர் இஸ்லாத்தின் உட்பிரிவினர் எவரின் தனிப்பட்ட சொத்துமல்ல. முஸ்லிம்
    சமுதாயத்தின் மற்றொரு பெயர்தான் ஏகத்துவ சமுதாயம்!
       
    இஸ்லாம் மட்டுமே உலகிற்கான அழகிய வழிகாட்டி ! 
     
    நிச்சயமாக  நாம்  எந்த  இயக்கத்தையும்  சேர்தவர்கள்  அல்ல  நாம்  நமக்குள்ளே உட் 
    பிரிவுகளை கண்டு  நமக்குள் ஏற்பட்ட  ஒற்றுமை என்ற  எண்ணம்  மேலோங்கி நிற்க 
    வேண்டும்  என்பதர்க்காக நம்மால்முடிந்த வரை இதை நாமும் புரிந்து ஒரு மாபெரும் 
    முஸ்லிம் சமுதாயத்தை ஒன்று  இணைத்து.  

    இதற்கான   கூழியை  மறுமையில்  அல்லாஹ் விடத்தில் பெரபோகிறோம் என்ற 
    சந்தோஷத்தில் உங்களிடத்தில் இதை பகிர்த்து கொள்கிறேன்   

    இப்பயணத்தில் தோள் கொடுக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!

    ReplyDelete
  16. நஜீர்அவர்களே ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்காக யாரையும், எதையும் நேசிக்க வேண்டும். அல்லாஹ்விற்காக யாரையும், எதையும் வெறுக்க வேண்டும். வேறு காரணங்களுக்காக இவை இருக்க கூடாது. எவர் எந்த இயக்கமாக இருந்தாலும் அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்படுகிறாரா என்றுதான் நாம் பார்க்கவேண்டும். நீங்கள் ஏன் ஒருவருடைய இயக்த்தை பார்க்கிறீர்கள். யாரும் எந்த இயக்கத்திலும் இருக்கட்டும் அது அவரவர் விருப்பம். உங்கள் கட்டுரை முழுவதும் அல்லாஹ் ரசூல் என்று உள்ளது. அந்த அல்லாஹ்வும் ரசூலும் கொள்கை இல்லாவிட்டாலும ஒற்றுமையாக இருக்க சொன்னார்களா? இஸ்லாத்தில் ஒற்றுமை என்னிக்கையை கொண்டு தீர்மாணிக்கப்படுவதில்லை நஜீர்பாய். கொள்கையை கொண்டுதான் இஸ்லாத்தில் ஒற்றுமை தீர்மாணிக்கப்படுகிறது. அல்லாஹ், ரசூல் என்றால் என்ன என்றே தெரியாத முஸ்லிம் என்ற லேபில்களை வைத்துக்கொண்டு என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஒன்று முடியாது. கொள்கையுள்ள குறைவான மக்களாக இருந்தாலும் அதுபோதும். அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான். (உதாரணம் பத்ருபோர்.) தாய், தந்தையாக இருந்தாலும அல்லாஹ் ரசூலுக்கு மாற்றமாக கட்டளையிட்டால் அதை ஏற்க கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இஸ்லாம் சொன்ன ஒற்றுமை இதுதான் இது தப்பு என்றால் ஆதாரத்துடன் தாங்கள் விளக்கவும். தன்டேல்அமீன்

    ReplyDelete
    Replies
    1. neengal solkirathu ellam unmai thaan athil entha vitha maatru karuthum illai. kolhai ulla makkal enkirirkale neengal solla varuvathu entha kolhai. appadi neengal solkira kolhayil ullavarkal ettanai per unmayaha kolhai padi irukkirarkal. muthalil kolhayai parappuvarkal muthalil thannai suthapaduthikondu piraku matravarukku parappa vendum.

      Delete
    2. நான் சொல்வது அல்லாஹ்வும் ரசூம் காட்டிய கொள்கை. ஏன் அல்லாஹ் உங்களுக்கு அறிவை தரவில்லையா? நீங்கள் சிந்தியுங்கள் குர்ஆன் ஹதீஸ் என்ன சொல்கிறது. நம்ம ஊர் ஹஜ்ரத் என்ன சொல்கிறார், செய்கிறார். என்றும் மற்றும் த.மு.முக. என்ன சொல்கிறது. தவ்ஹீத் ஜமாத் என்ன சொல்கிறது, தப்லீக் ஜமாத என்ன சொல்கிறது என்று பாருங்கள் ஏன் அது உங்கள் கடமையும் கூட. இவர்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸ்வுடன் ஒத்து போகிறதா என்று பாருங்கள். உதாரணம் நமது ஊரில் திக்ருமாஹால் உள்ளது. இதற்கும இஸ்லாத்துக்கும் என்ன சம்பந்தம். இஸ்லாம் இப்படி ஆடிக்கொண்டு கத்திக்கொண்டு திக்ரு செய்ய சொன்னதா? நபி(ஸல்)அவர்கள் செய்த ஆதாரம் உண்டா என்று பார்க்கவும். திருமணத்தில் அல்லாஹீம்ம அல்லிப்து பைன ஹீமா என்று நீட்டாக துஆ படிக்கிறார் இமாம் நாமும் ஆமீன் என்கிறோம் இதற்கு நபிவழி உண்டா? என்று பார்க்கவும், மவ்லீது படிக்கிறார்கள் இது நபிவழியா, நபிஅவர்கள் பிறந்தபோது அபூஜஹ்ல்தான் விருந்து (சோறு) கொடுத்தான். இன்று நாம் சீரனி சோறு போடுகிறோம். இது நபிவழியா? எது சரியோ அதை பின்பற்றுங்கள்.

      Delete
  17. உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 22:67)

    உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! (அல்குர்ஆன் 28:87)

    ReplyDelete
  18. Sagotharar najeer ahamed bhai udaiya karuthukkalai entha thalathil parthalum, entha vithamaana katturaiyuaga irunthalum, seithiyaanalum avar thowheedaiyum thaowheed jamaathaiyum vimarsanam seyyaamal illai, avar thowheedai ethirkkiraar,thowheed jamaathai ethirkkiraar pj vai ethirkkiraar athanaal quraan hadeesai pinpatrugirargalo avargalai ellam ethirkkiraar endra mudivukku thaan varamudiyum, aanaal otrumai enum kaamalai viyaathi moolam ivar nadunilaiyalar endru thannai kaattikkolla muyalgirar, unmaiyil yaar nadunilaiyalar allahvin vethathaiyum nabigalarin bothanaigalaiyum pinpatri nadappathum oruvelai ithanai pinpatrathavargalukku ethavathu bathippu endral avar nammai sarnthavarillai endru othungikkollamal avargalukku uthavuvathum avargalukkaana neethi seluthuvathum thaan, ippothu palar saththiyathai sollum thowheed jamaathai quraan hadees kondu thavaru seigiraargal endru niroobikka mudiyaathathaal avargalin kaalppunarchiyai velippadutha eduthirukkum aayutham thaan intha intha otrumai kosaham nanbargale Ushaar.. Ushaar
    Anbaana Sagothargale Allahvudaiya vethathaiyum nabigalaarin narbothanaigalaiyum patripidippom valithavara maattom, thail thaan irukkirathu unmaiyana otrumai

    ReplyDelete
  19. Assalamu Alaikkum

    ReplyDelete
  20. A.H.NAJIR AHAMED (DUBAI)May 12, 2012 at 5:33 PM

    ன்பிற் கினிய இறை அடியான் அவர்களே வாதத்திற்கு வரும்போது தங்கள் பெயரை வெளியிடுவதற்கு பயப்படுகிறீர்கள் இதன் மூலம் நீங்கள அல்லாவுக்கு பயப்படுகிறீர்களா அல்லது இவுலகத்தில் வாழும் என் போன்ற மனிதர்களுக்கு பயப்படுகிறீர்களா

    உங்கள் பெயர் தெரிவிப்பதில் என்ன பயம் .............சகோதரரே என்னுடையா கட்டுரையை நீங்கள் நன்றாக ஆராயிந்து பார்த்ததாக

    சொல்கிறீர் ஆனால் நீங்கள் சொல்வது போல் ஆராயிந்து இருந்தால் நான் தவ்ஹீத் வாதிக்கு மட்டும் எதிரி இல்லை சுன்னத்வல் ஜமாதுக்கும் எதிரியகதான் இருந்திருப்பேன் ,சியாவுக்கும்,நான் எதிரியகதான் இருந்திருப்பேன் ,ஜாக் அமைபினருக்கும் நான் எதிரியாக இருந்திருப்பேன் யாரெல்லாம் பிரிவினை விரும்புஹிரர்களோ அவர்களின் நிரந்தர எதிரி நானே .........

    தொட்டதிற்கெல்லாம் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதற்காக ஆதாரம் என்ற பெயரில் நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் ஆதாரத்தை அள்ளி வீசுகிறாரே அவருக்கும் நான் எதரி தான் தகவல் தெரிவியுங்கள் pj விடம் நாம் இந்த சமூதாயத்தை பிரிக்க நினைத்தோம் நாமெல்லாம் மீண்டும் ஒன்று இணைந்து விடுவோம் அண்ணன் தம்பியாக சகோதரத்துவம் மட்டுமே இஸ்லாம் என உணமையான குறிக்கோளோடு ஒருவன் புறப்பட்டு விட்டான் என்று .

    ReplyDelete
  21. A.H.NAJIR AHAMED (DUBAI)May 12, 2012 at 5:35 PM

    ஏன் முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:
    முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் யாராலும் இதை மறுக்க முடியுமா முடியவே முடியாது சகோதரர்களே நம்முடைய்ய பிரிவினை நிச்சயமாக நாம் வருத்த பட்டே ஆக வேண்டும் இஸ்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன

    'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

    மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அருள் மறை குர்ஆன்
    என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது .என்பதை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

    இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
    'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.'
    என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்துபல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

    இதில் இருந்து நாம் PJ விடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

    ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபிஈ' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தன்னை நாங்கள் தான் தவ்ஹீத் வாதி என சொல்லியும் மக்களை பிரிவினை பக்கம் இழுத்து செல்கின்றனர் .

    ReplyDelete
  22. A.H.NAJIR AHAMED (DUBAI)May 12, 2012 at 5:38 PM

    என் அருமை இஸ்லாமிய சமூதாயமே நமக்குள் நாமே பிரிந்து சின்பின்னமாகி போக வேண்டுமா போகி கொள்ளுங்கள் மத்ஹபின் பக்கமும் தவ்ஹீத் பக்கமும் ஒற்றுமை வேண்டும் நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்று கோசம் இட்டால் ஒற்றுமையின் பக்கம் ஒருபோதும் சென்று விடாதீர்கள் என்று பிரிவினை வாதிகள் உஷார் படுத்து கின்றனர் மக்களே சிந்தியுங்கள் இந்த பிரிவினை வேண்டாம் எனபது தவறான ஒன்று இணையுங்கள் சகோதர்களே ஒழித்து காட்டுங்கள் சகோதரர்களே பிரிவினை வாதிகளை ..

    என் அன்பிற்கினிய சகோதரர்களே பிரிவினை படுத்தும் pj வை நான் எதிர்த்தால் அவர் தௌஹீதை எதிர்க்கிறார் ,தௌஹீத் ஜமாத்தை எதிர்க்கிறார் ஹதீஸை பின்பற்றுகிரர்களோ அவர்களை எல்லாம் எதிர்க்கிறார் என என் மீது ஒரு அவதூர் வார்த்தையை தூவும் சகோதரரே முதலில் நீங்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டும் தன்னுடைய குடும்பத்தை எல்லாம் விட அல்லாவையும் ரசூலையும் நேசிப்பவர் கள் வெற்றியாளர்கள் உண்மையா ஆனால் நீங்கள் அதிகமாய் நேசிப்பது pj வை போல் தெரிகிறது உங்கள் கொள்கையை மாற்றிகொள்ளுங்கள் இல்லயேல் நீங்கள் அல்லாவுக்கு இணை வைகின்றீர்.

    உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
    எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் மத்ஹப் வாதி என்றோ அல்லது தவ்ஹீத வாதி என்றோ சொல்லக் கூடாது.

    அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.
    'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்?)

    யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்:
    ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ' எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்' (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.
    மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.

    சற்று சிந்தித்து செயற்பட வேண்டும் சகோதரர்களே அல்லாஹு சிந்திக்கும் ஆற்றலை நமக்கு தந்து இருக்கான் என்று நம்பும் போது அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் என சொல்ல இவர்கள் யார் .

    எனது அருமை சமூதாயமே தவ்ஹீத வாதி என்று சொல்லிக்கொண்டு என்ன தவறும் செய்தால் PJ அனுப்பிவைத்த தவ்ஹீத வாதி என்று சொன்னால்

    நேராக சொர்கத்திற்கு விட்டுவிடுவானா அல்லாஹ் யோசியுங்கள் சகோதரர்களே ............................
    இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை - கற்றறிந்து - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.

    ஒற்றுமையின் பயணம் மறுமையில் சொர்க்கத்தின் பக்கம் .............இம்மையிலும் மறுமையிலும் வெற்றிதட யா அல்லாஹ் ஆமீன் .

    ReplyDelete
  23. Anbirkkiniya sagotharar najeer ahamed bhai avargale, thangal moondru pathivugalai thanthulleergal athil thangal katttum irai vasanam matrum thangal atharkku tharum vilakkam ner muranaanathaaga irukkirathu, allahvin kayitrai patrippidithukkollungal neengal pirinthum vidaatheergal enbatharkku artham allahvudaiya kayiru vedham than enbathai alagaga sonna neengal aduthu ulla vasanathil muranpadugireergal otrumaiyagavum irukka vendum endru thaangal vasanathai thanithaniyaga vilakkam alithu thavarana vaathathai munvaikkireer, athan artham allahvin vethathai patripiduthukollungal athai vittu pirinthu vidaatheergal enbathu thaan, thaangal engalai paarthu pirivinaivaathigal endru solgireergal unmaiyil naangal thaan otrumaiyin paal alaikkirom merkkanda vasanathin adippadaiyil, melum nabigalar avargal hajjathul vidavil koorinaargale naan irandai ungalidam vittu selgiren ondru allahvin vetham matrondru enathu valimurai ivai irandaiyum neengal patrippidithirukkum kaalamellam valithavaravemaatteergal ( hadeesin surukkam) endru antha hadeesai ungaluku bathilaga tharugiren nadunilaiyaga yosikkavum. melum naangal thowheed vaathi endru sollikkondu pivinai yerpaduthuvathaga solgireer, sunnath val jamaathil hanafi, shafi, hambali, maliki ena pala pirivugalai vaithiruppathum oruvarukku halalanathu matrovarukkum haram endrum makrooh endrum madhab satta noolgal moolam thavarana theerppu valangi makkalai kooru pottirukkiraargale, halal haram nirnayikkum athigaram allahukku mattum thaan ithanai seitha yaaraga irunthalum kadumaiyaga kandikka pada vendiyavargal nam matharasavil intha satta noolgal ullathu athanai pillaigalukku othi tharappadugirathu athanai ethirthu thaangal kalam irangiyathunda? kuraintha patcham athu thavaru endru sollum thairyamavathu ungalukku unda? melum nangal PJ vai pinpatruvathaga avathooru kooriyulllegal oru etharthathai puriyathavaraga thaangal ulleergala allathu avathooru solla vendum enbatharkkaga nadikkireergala enbathu puriyavillai, oru karuthil naan irukkiren endru vaithukolvom athe karuthil neengalum irukkireergal endrum vaithukolvam appadiyaanal neengal ennai pipatruvathaga arthaama? melum nalla vishayangalai athaarthodu yaar sonnalum athai yetrukkolla vendum engira yethathathai purinthukollungal athai neengal sonnalum sari naan sonnalum sari athu quraan hadeesa enbathu than namathu aaivaaaga irukkavendume thavira ithai yaar solvathu enbathu alla.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது (துபாய் )May 13, 2012 at 9:28 AM

      அன்பிற்கினிய சகோதரர் இறை அடியான் அவர்களே முரணாக இருக்கிறது என்று வாதம் செய்கிறீர்கள் இவ்வளவு தெளிவாக
      இருக்கும் நீங்களே சரியாக புரிந்து கொள்ளாமல் மீண்டும் பிரிவினை வாதத்தை ஆதரிபதற்காக குர்ஆனின்
      வசனத்தை நான் முரணாக சொல்கிறேன் என்று
      சொல்லிவிடீர் மீண்டும் ஒரு முறை பார்போம்......

      'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள்
      அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது .என்பதை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

      பற்றி பிடிப்பது என்பதின் அர்த்தம் குர்ஆனை வலுவாக பிடிப்பது மூலம் நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறது சரியா .

      நீங்கள் ஒற்றுமையின் பக்கம் அழைபதாக வைத்து கொள்வோம் ரசூல் (ஸல்) அழைத்த முறை இஸ்லாமிய சமூதாயம் தவறான ஈமானுக்கு முரண் பட்ட கருத்தை செய்யும் போது அதை முதலில் எடுத்து கூறினார்கள் பிறகு விளக்கம் கொடுத்தார்கள் இது வெல்லாம் மார்கத்திற்கு முரனானது இதை வளி படுவது மூலம் அல்லாவை விட்டு தூரம் செல்வோம் அதன் மூலம் அல்லாவின் கோபத்திற்கு ஆலகுவோம் என அல்லாவை அஞ்சி கொள்ளுங்கள் என
      எச்சரிக்கை செய்தார்கள் .

      ஆனால் நாம் செய்வது என்ன அல்லாவின் பள்ளியில் தொழும் இவர்களை மத்கப் வைத்து இவர்கள் என்ன செய்தார்கள் என்று கால காலமாய் நாம் தொழும் பள்ளியை கேவல படுத்து கிறோமா ஏன் ?

      யோசியுங்கள் சகோதரர்களே pj எடுத்து வைக்கும்
      குர்ஆனோடு ஹதீஸை ஒத்து எடுத்து வைக்கும் முறை கண்டு வியப்பேன் இவ்வளவு தெளிவாக சொல்கிறார் என அதற்காக அவர் விரும்பும் பிரிவினை வாதத்தை ஒரு காலும் ஆதரிக்க முடியாது thavarukal யார் பக்கம் இருத்தலும் நிதானமாக எதார்த்தமாக எடுத்து வைத்தால் புரிந்து கொள்வார்கள் மனிதர்கள் ஆனால் அப்படி செய்கிறானே அவன் எல்லாம்
      பைத்தியக்காரன் அதை அறிவித்தவன் முட்டாள் என தன்னை மட்டும் அறிவாளியாகவும் தான் மட்டும் மார்க்கத்தின் உலவி என சில இளைனர்களை பிரிவினை பக்கம் அழைத்து செல்வது ஒருகாலமும் அனுமதிக்க கூடாது .

      இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
      மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்படஇஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள்அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ -வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது.

      ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.தவ்ஹீத வாதி மத்ஹப் வாதி என முஸ்லிம் குள்ளேய ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு இருந்தால் நிச்சயமாக நாம் வெற்றியாளனாக ஆக முடியாது சிந்திப்போம் நாமெல்லாம் அண்ணனாக தம்பியாக

      எல்லோரும் ஆதம் அவ்வாவின் பிள்ளையாக வாழுவோம் மத்ஹப்பையும் PJ வின் பேச்சை கேட்டு பிரிந்தது போதும் இனி நமக்குள் குரானையும் ஹதீசையும் ஆராயிந்து உண்மை முஸ்லிமாக ஒன்றாக வாழ்வோம் .

      Delete
  24. verumane muslim endru sollikkondal mattum pothaathu allahvin kattaligal nabigalarin valimuraigalai pinpatra muyarchikkavendum atharkku valla allah yavarukkum uthava vendum

    ReplyDelete
  25. A .R .சுலைமான் சேட்May 13, 2012 at 11:57 AM

    உண்மை முஸ்லிம்களாவது எப்போது?
    முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்!

    ஸஹாபாக்கள், தாபியீன்கள், மரியாதைக்குரிய நான்கு இமாம்களாகிய அபூ ஹனீபா (ரஹ்), மாலிக் (ரஹ்), ஷாஃபீஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) ஆகியோர்களும் மற்றும் ஹதீஸ் கலையில் பிரசித்தம் பெற்ற இமாம்களாகிய புகாரி (ரஹ்), முஸ்லிம் (ரஹ்), அபூதாவுத் (ரஹ்), திர்மிதீ (ரஹ்), நஸாயி (ரஹ்) மற்றும் இப்னு மாஜா (ரஹ்) ஆகியோர்களும் இக்கொள்கையைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள்.

    இஸ்லாம், இறுதி வேதம்-அல்குர்ஆன், இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் மூலம் நிறைவடைந்து விட்டது. இறுதி இறை வேதம் அல்குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் அடிப்படையில் வாழ்வோர் மட்டுமே இறைவனிடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர் ஆவர்.

    நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவான் - அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றைப் பார்க்கிறவன். (குர்ஆன் 49:18)

    நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே. எனவே உங்களுடைய இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள். (அல் ஹூஜ்ராத் 49:10)

    ReplyDelete