அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
Showing posts with label பொதுச் செய்தி. Show all posts
Showing posts with label பொதுச் செய்தி. Show all posts

Friday, June 27, 2014

அல் கயிபு மாற்றுதிறனாளிகள் பயிற்சிப்பள்ளி, நீடூர்

நமது நீடூரில் மஜீத் காலனியில் அல் கயிப் என்ற பெயரில் மாற்று திறனாளிகள் பள்ளி கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பேச முடியாத குழந்தைகள், நடக்க முடியாத குழந்தைகள், பெற்றோர்களை பார்த்து உணர்ந்துகொள்ள முடியாத குழந்தைகள், தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து சிறப்பான பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளி இயங்குவது நமது ஊரில் பலருக்கு தெரியவில்லை. வெளியூரிலிருந்து இப்பள்ளியை கேள்விபட்டு வருகிறவர்கள் நீடூரில் வந்து விலாசம் விசாரிக்கும் போது நம்மக்களுக்கு தெரியவில்லை அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா என்று கேட்கின்றனர். இதுபோல் நல்ல காரியத்திற்காக இயங்கும் பள்ளியை நம் தெரிந்தவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து மாற்று திறமை கொண்ட குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். அங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் பெற்றோரிடம் விசாரித்த போது நல்ல முறையில் மாற்றம் தெரிவதாக கூறினர். இப்பள்ளியை பற்றி மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Al Khaib School

Tuesday, April 15, 2014

தவறாமல் வாக்களிப்போம்! ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்!!


வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்
நமது நாட்டில் பாராளுமன்றத்திற்கு 24.04.2014 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வாக்களிக்க மட்டுமே ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து சென்று வருகின்றனர். போஸ்டல் ஓட்டு ஆன்லைன் ஓட்டு இப்போது சாத்தியம் இல்லை என்று ஆகிவிட்டது. ஆகையால் நம்மால் ஒட்டு போட முடியாவிட்டாலும் நம் குடும்பத்தினரை அவசியம் ஓட்டு போடும்படி வலியுறுத்தவேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுக்கும்படி போனில் சொல்லவேண்டும். நமதூரில் தேர்தல் அன்று விழா கோலமாக இருக்கும். சுத்து வட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் அன்று வயல் வேலைக்கோ மற்ற தொழிலுக்கோ செல்லாமல் ஓட்டு போட நம் ஊருக்கு வருகின்றனர் (வாக்கு சாவடி நம் ஊரில் அமைந்துள்ளதால்) ஓட்டின் மகிமை வலிமை தெரிந்தவர்கள் வருகின்றார்கள். ஆனால் நமக்கு தெரிந்தும் ஏனோ அலட்சியம் காரணமாக பலர் ஓட்டு போட செல்வதில்லை. வெளி நாடுகளில் வாழும் சகோதரர்கள் ஓட்டு போட முடியவில்லையே என ஆதங்கபடுகின்றனர். ஆனால் வாய்ப்பு இருந்தும் பலர் அலட்சியபடுத்துகின்றனர். சிரமம் பாராமல் இந்த முறை அலட்சியபடுத்தாமல் வாக்காளர் லிஸ்டில் பெயர் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் சகோதரர்கள்  வலியுறுத்தவேண்டும். வலியுறுத்துவார்கள் என நம்புவோம்!

Saturday, March 16, 2013

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்


வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்


பொதுமக்களின் பயன்பாட்டிற்காகஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், 'வாக்காளர் பட்டியல்களை',இணையத்தில் பதிப்பித்திருக்கின்றன. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தேட முடியும்
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை தேடுவதற்கு உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
  • ஜனவரி 01, 2010 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால்தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - பயன்படுத்தவேண்டும்.
  • படிவம்- டன், 2 வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கவேண்டும்.
  • பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)
  • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குபுத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்
  • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல்மரணம்அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால்ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
  • இதற்காகபடிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்
  • உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில்வயதில் அல்லதுதகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
  • தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள்
  • அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்க்கானவிண்ணப்பம்
  • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால்அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
  • இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
  • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குபுத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள்
விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்
நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால்,உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க:
  • துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )
  • அஞ்சல் அலுவலகங்கள்
  • வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் இடுபெட்டிகள்.
  • பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
நகராட்சி எல்லைக்கு நீங்கள் வசிப்பவராக இருந்தால்,உங்களுடைய மாவட்டங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
  • துணை ஆட்சியரின் அலுவலகம்
  • வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
  • வட்டாட்சியர் அலுவலகம் ( துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

Monday, March 11, 2013

தொப்பை குறைய வழிகள்


பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும். மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.

பீன்ஸ் 
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.

அவகேடோ

உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய்

பொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சமையல் எண்ணெய்கள்

ஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.

காய்கறிகள்

காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.

ஓட்ஸ்

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.

பூண்டு

நறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.

முட்டை

ஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.

செலரி

கொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

இஞ்சி

இஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.

பட்டை

மசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.

பேரிக்காய்

பேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

குளிர்ந்த நீர்

தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.

தினை

தானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

சிவப்பு மிளகாய்

நிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.

Monday, March 4, 2013

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்!


முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்!


குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மத்திய அரசா? அதிர்ச்சிகள்!
1. ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா?
2. போனமாசம் செத்தவன் எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்?
3. முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா?
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியது தான் ஹைதராபாத் இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம் சாட்டியுள்ளது.
தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான் ரிஹாய் மஞ்ச்.
தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.
ரிஹாய் மஞ்சின் பொதுச் செயலாளரும் முன்னாள் போலீஸ் ஐ.ஜியுமான எஸ்.ஆர்.தரபுரி கூறியதாவது: "முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து ஹிந்துத்துவா சக்திகளின் ஆதரவைபெறுவதற்கான அரசியல் நாடகத்தை அரசு நடத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புதிய 'சர்' ஆவார்.
அஜ்மல் கஸாபையும், அப்ஸல் குருவையும் தூக்கிலிட்டதற்கு பழிவாங்கவே தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று ஷிண்டே கூறியது, பா.ஜ.கவை விட பெரிய ஹிந்துத்துவாவாதியாக மாறுவதற்கான முயற்சியாகும்.
கூடவே அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளை சமாளிக்கலாம்.
ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஜெய்ப்பூரில் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்றதும், பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பை நிகழ்த்தியதும், ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஷிண்டேவின் கீழ் இயங்கும் உளவுத்துறை ஏஜன்சிகள்தாம் நிகழ்த்தியுள்ளன என்பதற்கான தெளிவான ஆதாரமாகும்.
இதன் மூலம் பல்வேறு குண்டுவெடிப்புகளில் சிக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பாதுகாக்க முடியும்.
இதற்காகவே தீவிரவாதத்திற்கு எதிராக ஹிந்துத்துவா சக்திகள் ஹைதராபாத்தில் முழு அடைப்பை நடத்தினர்." இவ்வாறு தரபுரி கூறினார்.
ரிஹாய் மஞ்சின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறியது: இந்தியன் முஜாஹிதீன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உருவாக்கமாகும்.
அரசுகள் அரசியல் நெருக்கடியை சந்திக்கும்போது இந்தியன் முஜாஹிதீனை உபயோகித்து தப்பிக்க முயலுகின்றன.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே நான்கு இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று கூறப்படுவோரின் வாக்குமூலங்கள் ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?
இது விசாரணையை திசை திருப்புவதற்கான முயற்சியா?
ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ள சூழலில் ஏன் அவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படவில்லை?
இது சங்பரிவார் கொடுத்த அழுத்தமா?
அல்லது தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள் என்ற சங்பரிவாரின் கருத்தை தான் உள்துறை அமைச்சரும் பரப்புரைச் செய்கின்றாரா?
குண்டுவெடிப்பை நிகழ்த்தியபாணி இந்தியன் முஜாஹிதீனுடையது என்று கூறும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும் இதே பாணியில் நடத்திய குண்டுவெடிப்புகளை ஏன் காணாதது போல் நடிக்கவேண்டும்?
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த முஸ்லிம் இளைஞர்களை மீண்டும் வேட்டையாடுவது ஏன்?
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இயங்கவில்லை என்று கூறும்பொழுது தாடி வைத்த நபர்தாம் குண்டுவைத்தார் என்று எவ்வாறு கூறமுடிகிறது? உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
REF:http://www.thoothuonline.com/%e0%ae%b9%e0%af%88%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae-3/#sthash.HkBIL8z2.dpuf

போனமாசம் செத்தவன் எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்?!
இதோ... இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பில் கூட...
முதன் முறையாக 'ஸ்லீப்பர் செல்கள்' வந்து விட்டனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத ஊடகங்கள் 'துப்பாக்கி' படத்தின் கதையை ஹைதராபாத் குண்டு வெடிப்பு செய்திகளில் ரீல் ஓட்டிக்காண்பிக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த 'ஊடக துப்பாக்கியின்' முதல் ரீலே....... பிக் ஃப்ளாப்...! பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இங்கே ஹைதராபாத் வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து குண்டு வைத்த ஓர் 'இந்தியன் முஜாஹிதீன் ஸ்லீப்பர் செல்' என்று ஒருவரின் புகைப்படத்தை முஸ்லிம் என்று சொல்லி போட்டார்கள். பல ஊடகங்களில் இந்த ஃபோட்டோ வர...
அய்யகோ... அந்தோ பரிதாபம்..!
அந்த நபர் பாகிஸ்தானின் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர்..! ஆனால், இவர் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பால் கராச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டு, பப்ளிக்காக அடக்கம் செய்யப்பட்டு விட்டவர்..!!!
"போனமாசம் எங்க நாட்டில் செத்து அடக்கப்பட்டவன், எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்..? மயான குழியிலிருந்து எழுந்து வந்தா..?"
என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..?
New Delhi: An Indian News Channel on Monday night apologized over their blunder of referring Pakistani politician Manzar Imam to a terrorist, who was blamed for masterminding the attacks in Indian city of Hyderabad that claimed lives of almost 16 people and injured more than 100.
India TV used photo of Muttahida Qaumi Movement's slain leader Manzar Imam instead of an alleged suspect behind the recent Hyderabad blasts.
The news channel was referring to a member of the Indian Mujahideen (IM), but mistakenly used Imam's image.
Imam was killed by the Tehreek-e-Taliban Pakistan last month in Pakistan's largest city Karachi.
Pakistan's Interior Minister Rehman Malik on Monday demanded a formal apology from India to Pakistan for implicating a deceased member of the Sindh Assembly from Muttahida Qaumi Movement Manzar Imam in the recent bomb blasts in Hyderabad.
Ref:http://www.thenewstribe.com/2013/02/26/india-tv-apologises-over-implicating-slain-pakistani-politician-in-hyderabad-blasts/
Ref:http://pinnoottavaathi.blogspot.com/2013/02/blog-post_28.html
Ref:http://www.thenewstribe.com/2013/02/26/india-tv-apologises-over-implicating-slain-pakistani-politician-in-hyderabad-blasts/

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்!
கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும், காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.
இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.
இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.
இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.
உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.
Ref SOURCE:http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/
முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.

Sunday, October 28, 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


 தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார்  4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும்2014 இல்இது 6200 மெகாவாட்டாகவும்2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில்தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்திசெய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்)வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள்பழுதடைவதும்பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும்வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமேமுழுமையாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பலமாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காகமின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின்உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.
வடசென்னை திட்டத்தைப் போலவேமேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெறவேண்டும்.
இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்துஇயக்க குறைந்த காலமேபோதுமானது.
சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசுஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம்ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில்2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும்2011 மார்ச்சில் இரண்டாவது அலகும்,2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
இன்றைய தேதியில்மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும்வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும்வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும்முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்னகாரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாகநாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
ஆகதமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரமாதலால்தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும்தமிழக அரசுஇந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும்தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில்துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும்இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால்இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை(காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழகஅரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.
ஆகதமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாகஇன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூடஇதற்கான நடவடிக்கைகளைஎடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டுதமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல்கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும்மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்துகூடங்குளம் அணு மின்நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.
தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.
கூடங்குளத்தில் உள்ள வி.வி..ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையேஅதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணுஉலையின் இயக்கத்திற்கும்அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவேஅணு உலையில் இருந்துகிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போககடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெறமுடியும்.
இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும்என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில்அதாவது 2015ஆம் ஆண்டுவரைஅதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படிதமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால்ஒவ்வொரு அணு உலையில் இருந்தும்சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில்கம்பி இழப்பான 22% கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூடதமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது[2].
எனவேஉற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
***
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பதுமின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும்(equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.
மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குவழங்கியுள்ளது.
மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாதுமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றிஅந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.
2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள்தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
அதுபோன்றே2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல்படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில்அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்துஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.
அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமானமின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால்அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
1.   சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும்பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
2.        மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
3.        31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.
4.        பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும்அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றேகுளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.
5.        உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும்மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10%க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாதுஎன்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால்மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரைதமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
6.        திரைப்பட அரங்குகள்ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
7.        புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக்கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போனபோக்கில் அரை மணி நேரத்திற்கும்ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும்விவசாயத்தாலும் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலைஅடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.
அரசும்ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.
இப்பிரச்சினையைத் தீர்க்கபாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
1.        பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும்உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்தவித சாக்குப் போக்கும் கூறாமல்உற்பத்தி தொடங்க தமிழக அரசையும்மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
2.        இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்றவலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
அன்புடன்
கோவை. சா.காந்தி,
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111