அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, March 11, 2013

தொப்பை குறைய வழிகள்


பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும். மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.

பீன்ஸ் 
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.

அவகேடோ

உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய்

பொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சமையல் எண்ணெய்கள்

ஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.

காய்கறிகள்

காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.

ஓட்ஸ்

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.

பூண்டு

நறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.

முட்டை

ஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.

செலரி

கொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

இஞ்சி

இஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.

பட்டை

மசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.

பேரிக்காய்

பேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

குளிர்ந்த நீர்

தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.

தினை

தானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

சிவப்பு மிளகாய்

நிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.

No comments:

Post a Comment