அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, January 10, 2015

ஹதீஸ்கள்


Posted: 05 Jan 2015 11:05 AM PST
புகாரி 2101. 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! 
கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! 
நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! 
கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; 
அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!"
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
 
alt
Posted: 05 Jan 2015 10:47 AM PST
 
alt
Posted: 05 Jan 2015 03:01 AM PST
நீங்கள் கூறுகிறீர்கள்:
“நான் தவறான வழியில் சிக்கி உள்ளேன்.”

இறைவன் கூறுகிறான்:
“நிச்சயமாக இறைவனடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. 
இறைவன் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; 
இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; 
மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.”. 
குர்ஆன் 5:15-16.

Wednesday, January 7, 2015

ஹதீஸ்கள்


Posted: 21 Dec 2014 07:19 AM PST
தினம் ஒரு ஹதீஸ் (10) : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி



alt
Posted: 21 Dec 2014 07:11 AM PST
alt
Posted: 21 Dec 2014 07:00 AM PST
இன்றைய கேள்வி:
"விறகை நெருப்புத் தின்பதைப்போல் உங்கள் நற்செயலை எது அழித்து விடும்!" என்று இறை தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்தார்கள்?

பதில்: "விறகை நெருப்புத் தின்பதைப்போல் உங்கள் நற்செயலை பொறாமை அழித்து விடும்!" - நபிமொழி (நூல்:அபூதாவூது)
alt
Posted: 21 Dec 2014 06:37 AM PST
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 
நூல்: முஸ்லிம்
alt
Posted: 21 Dec 2014 06:36 AM PST
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி
alt
Posted: 21 Dec 2014 06:35 AM PST
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்
alt
Posted: 21 Dec 2014 12:09 AM PST
0007. ஹதீஸ்:7 ஸஹிஹ் புகாரி - தமிழாக்கம்.Sahih Bukhari.



alt
Posted: 20 Dec 2014 11:56 PM PST

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
குர்ஆன் 75:3-4

alt
Posted: 20 Dec 2014 11:55 PM PST
கோபம் கொள்ளாதீர்கள்.
alt
Posted: 20 Dec 2014 11:31 PM PST
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
குர்ஆன் 17:36

ஹதீஸ்கள்


Posted: 20 Dec 2014 04:35 AM PST
054. ஹதீஸ்: 51 : ரியாளுஸ்ஸாலிஹீன் - Riyalus Saliheen. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை அன்சாரிகளிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்" என்று கூறினார்கள். அன்சாரிகள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.



alt
Posted: 20 Dec 2014 04:01 AM PST
alt
Posted: 20 Dec 2014 04:00 AM PST
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
குர்ஆன் 76:1
alt
Posted: 19 Dec 2014 08:44 PM PST


'நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி

நன்றி: இஸ்லாமிய அலை