அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, May 28, 2012

ஏன் இந்த தடுமாற்றம்?

நீடுர் - நெய்வாசல் ஜமாத் நிர்வாகத் தேர்தலுக்கு முதலில் ரகசிய வாக்கெடுப்பை வழியுறுத்துவோர் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். அதன் பின்பு ரகசிய தேர்தலுக்கு எதிர்ப்போர், பழைய நிர்வாகிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்போர் 26-05-2012 அன்று 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டிருந்தனர். அதன் பின் அப்பட்டியலில் உள்ள சிலர் போட்டியிட மறுத்து விலகி கொண்டனர். இதனிடையே இடைகால நிர்வாகி ஒருவர் தன் சகாக்களோடு ரைஸ்மில் தெரு சகோதரர் அக்பர் அலி அவர்களிடமும், ஜின்னா தெரு சகோதரர் நசுருல்லாஹ் அவர்களிடமும் சென்று தங்கள் அணியின் சார்பாக போட்டியிடுமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த சகோதரர்கள் சம்மதிக்கவில்லை, தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் கூறிவிட்டனர். இவர்கள் 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட பிறகு எதிர்தரப்பு வேட்பாளர்களை சந்தித்து தங்கள் அணியின் சார்பாக போட்டியிட அழைப்பதன் அவசியம் என்ன? தாங்கள் முன்னிறுத்திய வேட்பாளர்கள் மேல் நம்பிக்கை இல்லையா? இல்லை அவர்கள் அணிதான் ஜமாத் சார்பாக போட்டியிடுவதாகவும், எதிர்தரப்பினர் ஜமாத்திற்கு எதிராக போட்டியிடுவதாகவும் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த வேலையா? ஜமாத்தாருக்கு தெரியும், இந்த இரு அணியினரும் நம் ஜமாத்தை சார்ந்தவர்களே! ஆனால் நிலைப்பாட்டில் தான் இரு அணியினரும் வேறுபடுகின்றனர். எந்த நிலைப்பாடு நம் ஊருக்கு நல்லது எனவும் ஜமாத்தாருக்கு தெரியும். ஊழலையும், அநியாயத்தையும் எதிர்போர் ஒர் அணியாகவும், பழைய நிர்வாகிகளை காக்கவும், இப்பொழுது உள்ள குழப்பமான சூழ்நிலை தொடர விரும்புவோர் இன்னோரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். ஜமாத்தாரும் இந்த இரு வேறுபட்ட நிலைபாடுகளை கொண்ட இரு அணிகளில் யார் வந்தால் நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர் தரப்பினரை தம் அணிக்கு இலுக்க நினைக்கும் இவர்களின் போக்கு சரியா என்பதையும் ஜமாத்தார்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.அல்லாஹ்வும் நம் முயற்சிக்கு நல்லருள் தந்திடுவானாக! ஆமீன்.

ரகசிய வாக்கெடுப்புக்கு அதரவு தெரிவித்த இறுதி வாக்களர் பட்டியல்:


1.முஹம்மது ஆரிபின்
த.பெ:சுலைமான்
புதுமனைத்தெரு 


2.அப்துல் ரஹ்மான்
த.பெ:ஷேக்தாவூத்
சபியாத்தெரு 



3.அக்பர்அலி
த.பெ:சேக் தாவூத்
ரைஸ்மில்தெரு 

4.நசுருல்லாஹ்
த.பெ:அப்துல்ஹமீது
ஜின்னாத்தெரு 


5.அப்துல்மஜிது
த.பெ:சுலைமான்
மேலத்தெரு 


6.முஹம்மது அமீன்
த.பெ:முனீருல் ஹுதா
J.M.H.மெயின் ரோடு 

7.தாஜ்தீன்
த.பெ:அப்துல் ஷக்கூர்
ரயிலடித்தெரு 


8.முஹம்மது அலி
த.பெ:அப்துல் வஹாப்
ஜின்னாத்தெரு 


9.தாஜுதீன்
த.பெ:முஹம்மது யூசுப்
அஜிஸ்நகர்



10.நஜிமுதீன்
த.பெ:அப்துல்ஜலீல்
ஜின்னாத்தெரு



11.முஹம்மது அலி
த.பெ:முஹம்மது முஸா
மேலத்தெரு 

12.காதர்ஷரீப்
த.பெ:முஹம்மது சயீது
ஜின்னாத் தெரு 

மாறுதலுக்கு உள்ளான ரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின்
இறுதி வாக்களர் பட்டியல்:

1.அப்துல்ரவூப்

த.பெ: அப்துல் ஹமீது
ஜின்னாத்தெரு

2.தமிமுன்அன்சாரி

த.பெ: ஹியாத்துல்லாஹ்
சேக்தாவூத்தெரு

3.சதகத்துல்லாஹ்

த.பெ: காதர்பாட்சா
ரைஸ்மில்தெரு

4.முஹம்மது சபீர்

த.பெ: முஹம்மது சாலி
பள்ளிவாசல்தெரு

5.அப்துல் மாலிக்

த.பெ: அப்துல் கரிம்
மிட்லெண்ட் தெரு 


6.முஹம்மது நஜிம்

த.பெ: ஷேக்தாவூத்
ரயிலடித்தெரு 


7.முஹம்மது ரபீக்

த.பெ: கமாலுதீன்
பரகத்காலணி

8.அப்துல் ஹண்ணான்

த.பெ: பக்கீர்முஹம்மது
அஜிஸ்நகர்

9.நஜீர்அஹமது

த.பெ: ஷபியுதீன்
ஹாஜித்தெரு

10.ஜெஹபர்அலி

த.பெ: ஷரீப்
ஜின்னாத்தெரு

11.லியாகத்அலி

த.பெ: அய்யூப்
J.M.H.மெயின் ரோடு

12.பஜுல்ரஹ்மான்

த.பெ: ஒலிமுஹம்மது
சபியாத்தெரு 


13.சபீர்அஹமத்

த.பெ: சேக்தாவூத்
கீழத்தெரு

14.முஹம்மது மஜிது

த.பெ: அப்துல்சுக்கூர்
சலவாத்துபாவா காலணி 



வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
















Saturday, May 26, 2012

இரண்டாவது வாக்காளர் குழு பட்டியல் விபரம்


நீடுர் நெய்வாசல் நிர்வாக தேர்தலுக்கு முன்பு ஒரு தரப்பினர் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே, நேற்று இன்னொரு தரப்பினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். அதன் விபரம் கீழே:
  1. K.R. அப்துல் மாலிக், மிட்லாண்ட் தெரு
  2. S.A. அப்துல்ரவூப், ஜின்னாத்தெரு
  3. M.S.ஜெஹபர்அலி, ஜின்னாத்தெரு 
  4. P.அப்துல்மஜிது, ஹாஜித்தெரு
  5. P. அப்துல் ஹண்ணான், அஜிஸ்நகர்
  6. O. பஜில்ரஹ்மான், சபியாத்தெரு
  7. H.T. அன்சாரி, சேக்தாவூத்தெரு
  8. M.S.M. சபிர், பள்ளிவாசல்தெரு
  9. டாக்டர். A. சஃபி, ஹாஜித்தெரு
  10. A.M. அப்துல் மஜிது, சலவாத்துபாவா காலணி
  11. M. முஹம்மது சலீம், ரைஸ்மில்தெரு
  12. A.K. நஜிமுதீன், சபியாத்தெரு

Thursday, May 24, 2012

இறப்பு செய்தி (24-05-2012)


அஸ்ஸலாமு அலைக்கும்
ரைஸ்மில் தெரு உமர், சிராஜ் அவர்களின் மச்சான் ஹாஜா மைதீன் (ஊர்:தேரிழந்தூர்) அவர்கள் இன்று காலை துபாயில் இறந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயுன்

இறப்பு செய்தி (24-05-2012)


அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் ரயிலடி தெரு நூரி பேலஸ் வீடு நஜிமுதீன் அவர்களின் மாமனாரும், அரபாத் நிஸா அவர்களின் தந்தையுமான ரஷீத் அவர்கள் இன்று அதிகாலை காலமானர்கள் (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்). அவர்களின் நல்லடக்கம் இன்று(24-05-2012) அஸர் தொழுகைக்கு பின் நடைப்பெற்றது. 

Tuesday, May 22, 2012

அன்பார்ந்த ஜமாத்தார்களே ஓட்டு போடுவதற்கு முன் இதை படிப்பீர்


அன்பிற்கினிய நீடூர்-நெய்வாசல் முஸ்லிம் ஜமாஅத் வாக்காளர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
உங்கள் வாக்கை பதிவு செய்யுமுன் இக்கட்டுரையை ஒரு முறையேனும் படியுங்கள். அல்லாஹ்அனைவருக்கும் நல்வழிகாட்ட, உதவிபுரிய போதுமானவனாக இருக்கிறான்.
பின்வரும் இறை வசனத்தை ஓர் ஆட்சித்தலைவர் தன் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்.
''அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள்.' (சூரா அல் ஹஜ் 22:41)
இன்று 'மஹல்லா" 'முத்தவல்லி" அமைப்பில் இருந்து துவங்கி உலக அரங்கில் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் ஆட்சித்தலைமை வரை எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களுக்குத் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
'அவர்கள் பொறுமையுடன் இருந்து நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக்கொண்டபோது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழிகாட்டும் தலைவர்களை அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.' (சூரா அஸ் ஸஜ்தா 32:24)
மேற்கண்ட வசனங்கள், இஸ்லாமியத் தலைமைக்குரிய அடிப்படை இலக்கணமே மக்களுக்கு நேர்வழி காட்டுதல்தான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும் அது ஏதோ ஒரு வழிகாட்டுதல் அல்ல. 'நம்முடைய கட்டளையைக் கொண்டு" -

Monday, May 21, 2012

முன்பு வெளியான நோட்டிஸ் இன்றும் பொருந்துகிறது

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் S.நூர் முஹம்மது அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே ஊர் நிர்வாக தேர்தலில் கோரஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில் இரகசிய வாக்கெடுப்புதான் சிறந்த வழியென்றும், அதனை வழியுறுத்தியும் அன்றே அவர்கள் நோட்டீஸ் வெளீயீட்டார்கள். அது இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. அந்த நோட்டிஸ் உங்கள் பார்வைக்காக கிழே

Sunday, May 20, 2012

நீடூர் - நெய்வாசல் நிர்வாக தேர்தலின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளீயீடு


இந்த வேட்பாளர் பட்டியல் குறித்து ஜமாத்தார்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் கருத்துகளையும், நல்ல ஆலோசனைகளையும் கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம். ஊரின் நலன் கருதி இளைஞர்கள் பலர் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும். அவர்களுக்கு ஊர் பெரியவர்களும் வழிவிட்டு, வரவேற்று, ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டு கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிந்திடுவானாக!!!!

MAP Thajudeen - 00919585505205
Mohammed Ali - 00919940082119

Friday, May 18, 2012

இறுதியாக நீடூர் - நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு - அல்ஹம்துலில்லாஹ்


இன்று (18-05-2012) ஊர் நிர்வாக போர்டில் நீடூர் - நெய்வாசல் ஜமாத்தினரின் இறுதி வாக்காளர் பட்டியலை ஒட்டிவிட்டு, அதிரடியாக தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது வக்பு போர்டு. தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிபோட்டுகொண்டே போன வக்பு போர்டின் இந்த அறிவிப்பால் ஜமாத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் விபரம் கீழே
18-05-2012 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
28-05-2012 - வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
29-05-2012 - வேட்பு மனு பரிசீலனை, அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
04-06-2012 - வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
04-06-2012 - வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல்
16-06-2012 - காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ரகசிய வாக்கெடுப்பு
16-06-2012 - அன்றே வாக்கு எண்ணி முடிவு அறிவித்தல்
அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்கள் விருப்பபடியே ரகசிய வாக்கெடுப்புக்கு தேதி அறிவித்தாயிற்று. இன்ஷா அல்லாஹ் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்த நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்பட்டு ஊரின் நலனில் அக்கறை கொண்டு யாருக்காகவும் பின்வாங்காமல் இருக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

தேர்தல் விதிமுறைகள்:

1. 12 பனிரெண்டு நபர் கொண்ட நிர்வாகத்திற்கான தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைப்பெறும்
2. இறுதி வாக்களர் பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர் மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
3. 3000/-ரூபாய் (மூவாயிரம் மட்டும்) வேட்பு மனு கட்டணமாக ரொக்கமாக தேர்தல் அதிகாரியிடம் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்.இடம்.மற்றும் நேரத்தில் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
4. வேட்புமனுவை குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்குள் திரும்ப பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வேட்புமனு கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு வேட்பு மனுகட்டணம் எக்காரணத்தை கொண்டும் திரும்ப கொடுக்கப்படமாட்டாது.
5. வேட்பு மனு படிவம் தேர்தல் அலுவலரிடம் அவரது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
6. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் மேற்ப்படி வக்பிற்கு சொந்தமான சொத்துகளில் வக்பு வாரிய சிறப்புத் தீர்மானம் எண் 9/2008 நாள்:23-7-2010ன் படி தான்.தனது தாய்.தந்தை.மனைவி. மனைவிகளின்.மகன்.மகள். மற்றும் வாடகை தாரராகவோ குத்தகை தாரராகவோ இருந்தல் கூடாது.மேலும் வேட்பாளர் குற்றவியல் சட்டப்படி தண்டனை பெற்றவராகவோ அல்லது இன்சால்வன் சி பெற்றவராகவோ இருத்தல்கூடாது.
7. ஒவ்வொரு வக்காளரும் ஒரு வாக்கு சீட்டில் பனிரெண்டு (12) நபர்களுக்கு வாக்களிக்கவேண்டும். அதற்குமேல் வாக்களித்தால் அந்த வாக்கு சீட்டு செல்லாது. வேட்பாளராக போட்டியிடுபவர். மாற்றொரு வேட்பாளருக்கு முன் மொழியவோ அல்லது வழி மொழியவோ கூடாது.
8. பிறர் ஒரு வேட்பாளருக்கு முன் மொழிந்தால் அவரே வேறு ஒரு வேட்பாளருக்கு வழி மொழியாலாம்.ஆனால் ஒருவரே இருமுறை முன் மொழியவோ வழி மொழியவோ கூடாது. அப்படி இருந்தால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.
9. வேட்பாளர்களுக்கு வக்பு வாரிய(ஆணைப்படிஎண்கள்) சின்னமாக ஒதுக்கப்படும்.
10. வேட்புமனு தாக்கல் வேட்புமனு பரிசிலனை வேட்புமனு திரும்ப பெறுதல் மற்றும் எண்கள் ஒதுக்குதல். ஆகியவைகளுக்கு வேட்பாளர்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள.நாள்.இடம். மற்றும் நேரத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும்.
11. தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான எழும் அனைத்து பிரசனைகளுக்கும் வக்பு கண்காணிப்பாளர்/தேர்தல் அதிகாரி அவர்களின் முடிவே இறுதியானது.
12. தேர்தல் வாக்குபதிவின் போதும் வாக்குகள் எண்ணிக்கையில் போதும் வேட்பாளர்களின்அத்தாட்சி பெற்ற முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
13. தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்கு அளிக்க வரும் போது. தேர்தல் ஆணையம் கூறிய 14 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் (Original)கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்.
14. தேர்தல் வாக்கு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கண்டிப்பாக செல்போன் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை
தேர்தல் அதிகாரி/வக்ப் கண்காணிப்பாளர்
ஜாமியமஸ்ஜித் நீடூர் நெய்வாசல்.

குறிப்பு அடையாள ஆவணமில்லாமல் வாக்களிக்க அனுமதி இல்லை.

வரலாற்றிலேயே முதன் முறையாக ஊர் கூட்டத்தை வீடியோ பதிவு செய்த நீடூர் நிர்வாகம்.

சென்ற வாரம் ஊரில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எந்த ஊரிலும் இல்லாத வகையில் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இதை பற்றி ஜமாத்தார்கள் கேட்டதற்கு நிர்வாகத்தை பற்றி தவறான செய்திகள் பரப்படுகின்றது, எனவே வீடியோவில் பதிவு செய்வதாக கூறியுள்ளனர். இது வரவேற்க வேண்டிய செயல்தான், ஆனால் இதை இவர்கள் எல்லா கூட்டத்திலும் நடைமுறைப்படுத்துவார்களா? கடந்த காலத்தில் நடந்த அடிதடிகளையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியாவது கிடைத்திருக்கும்!!. இப்பொழுது பதிவு செய்ததை உள்ளூர் இணையதளத்தில் வெளியிடுவார்களா? இதுபோல் இனிவரும் கூட்டங்களிலும், இன்ஷா அல்லாஹ் நடக்கப்போகின்ற ரகசிய வாக்கெடுப்பிலும் இதுபோல் வீடியோ பதிவு செய்யப்படுமா? அப்படி செய்து இணையதளத்தில் வெளியிட்டால் தான் மக்களுக்கும் ஊரில் என்ன நடக்கின்றது என்பது தெரியும், நிர்வாகம் தப்பாக நடக்கின்றதா? அல்லது இணையதளங்களில் தான் தப்பாக பரப்பப்படுகின்றதா? என்று மக்களுக்கு புரிந்துவிடும்.

வீடியோ பதிவு செய்த அந்த கூட்டத்தில் இரண்டு பெரியவர்களை அழைத்து சமாதான முயற்சியில் அவர்களை ஈடுபடுமாறு தீர்மானம் போட்டுள்ளீர்கள். இதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலின் போதும் அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும் செய்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும். அப்படி செய்யாமல் ரகசிய வாக்கெடுப்பை எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்து,  முடியாத பட்சத்தில் இந்த பெரியவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்ய கோரியுள்ளீர்கள்.இன்ஷா அல்லாஹ் எந்த வகையில் இவர்கள் முயற்சி செய்தாலும் கண்டிப்பாக ஜமாத்தார்கள் ரகசிய வாக்கெடுப்புப்பை வலியுறுத்துவதை நிறுத்தக்கூடாது. அப்படி செய்தால் கண்டிப்பாக இறைவன் நமக்கு துணைபுரிவான்.

Sunday, May 13, 2012

நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


கடந்த வெள்ளிகிழமை (11-05-2012) அன்று நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் விபரம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்.


தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில 

Wednesday, May 9, 2012

நமக்கு ஏன் ஊர் வம்பு??????????

நமதூரில் நடக்கும் பல பிரச்சனைக்களுக்கும் நம் சகோதரர்கள் பலர் அமைதி காப்பதால் அவர்கள் மனஓட்டம் என்னவென்று அறிந்திட முடியவில்லை. உதாரணத்திற்கு இப்பொழுது இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கும் ரகசிய வாக்கெடுப்பை ஆதரிக்கின்றார்களா? அல்லது எதிர்க்கின்றார்களா? என்றுகூட தெரியவில்லை. ஊரில் நிர்வாகத்தினால் யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால், அல்லது மிரட்டப்பட்டால் இவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காத காரணத்தினால் தான் அவர்கள் என்ன நினக்கின்றார்கள் என்று அறிந்திட முடியவில்லை. யாரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காத போது தான் அநீதி செய்பவர்களுக்கு பயமில்லாமல் போகின்றது. நம் வீட்டில் கூட எல்லாரையும் போல நீங்களும் அமைதியாக இருங்கள், நமக்கே ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இதில் இந்த ஊர் பிரச்சனை வேறயா? என்று நம் வீட்டு  பெண்கள் அறிவுறுத்துவதுண்டு. எல்லோருமே இப்படி ஒதுங்கி கொண்டால் யார் தான் இவர்களை கேட்பது? இதில் சிலர் கேள்வி கேட்கும் சிலரையும் விமர்சிக்கின்றனர். இவர்களையெல்லாம் எதில் சேர்ப்பது? .வெளிநாட்டில் உள்ளவர்களும் கூட ஊருக்கு வரும் சில நாட்களுக்கு ஊர் பிரச்சனை எதற்கு என எண்ணி எதிலும் பட்டும் படாமலும் இருந்துவிட்டு சென்று விடுகின்றனர். தன் வீட்டில் பிரச்சனை என்றால் பெரியவர்களை கூட்டி தீர்க்க முயல்கிறோம், முடியாதபட்சத்தில் ஜமாத்து நிர்வாகத்திடம் நியாயம் கிடைக்கும் என செல்கிறோம் ஆனால் இங்கே அந்த நிர்வாகிகளே சட்டத்தை மதிக்காதவர்களாக இருக்கும் போது யாரிடம் போய் நியாயம் கேட்பது? எனவே தான் நல்ல நிர்வாகம் அமைய ரகசிய வாக்கெடுப்பு முறை வேண்டும் என்று நீதிமன்றமத்தை அணுகி அதற்கான உத்தரவையும் பெற்றுள்ளனர். இது நம் ஊர் நன்மைக்காக மட்டுமே. இதற்காக பாடுபடுபவர்களுக்கு இந்த உலகில் என்ன பயன் இருக்கிறது? ஊர் நன்மை வேண்டியே இவர்கள் பாடுபடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு மறுமையில் பரிசளிப்பான். நிர்வாகத்தில் உள்ள சிலரும் அவர்களுக்கு சப்பை கட்டுகட்டுபவர்களும், ஊருக்காக பாடுபடுபவர்களை குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவர்கள், இவர்கள் எப்போதும் ஊருக்கு எதிராகவே செயல்படுபவர்கள் என்ற பொய்யையும் உலவ விட்டுள்ளனர். எல்லோருக்கும் தெரியும் ஊருக்காக இப்போழுது நீதிமன்றம் அணுகி ரகசிய வாக்கெடுப்புக்கான உத்தரவை பெற்றவர்கள் எந்தவொரு இயக்கத்தையும் சாரதவர்களே!. ஊர் மக்களுக்கும் இது தெரியும். எனவே இன்ஷா அல்லாஹ் ரகசிய வாக்கெடுப்பை பல வழிகளில் கெடுக்க நினைக்கும் இந்த நிர்வாகத்தை மக்கள் புரிந்து கொண்டு மற்றவர்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக ஊரில் நடக்கும் அநியாயங்களை யாரும் தட்டிகேட்பதில்லை, இதில் சிலரோ அதை தட்டி கேட்பவர்களை விமர்சிப்பதையே வேலையாகவும் கொண்டுள்ளனர். என்ன நடந்தது என தெரியாமலே சிலர் மற்றவர்களை புறம் பேசுகின்றனர். இதுபோல் நமக்கு ஏன் ஊர் வம்பு என ஒதுங்கி கொண்டு விமர்சனம் செய்பவர்கள் தனக்கு இத்தகைய சூழல் ஏற்படாது என எண்ணி கொண்டிருக்கிறார்களா? இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எனவே இந்த தேர்தலுக்கு பாடுபடுபவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை!, விமர்சனம் என்ற பெயரில் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதுமானது. இன்ஷா அல்லாஹ் இதுபோல் விமர்சிப்பவர்களை நாம் உதாசினம் செய்துவிட்டு என்றும் ஒற்றுமையுடன் ஊர் நன்மைக்காக ரகசிய வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோமாக! எதுக்கு ஊர் வம்பு என ஒதுங்கி கொள்ளாமல் நியாயத்தின் பக்கம் நின்று இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவுவானாக! ஆமீன்.

Monday, May 7, 2012

துபாய் நீடுர்-நெய்வாசல் அஸோஸியேஸன் புதிய நிர்வாகிகள் தேர்தல்


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிகிழமை(11-05-2012) மஃரிப் தொழுகைக்கு பின் துபாய் நீடுர்-நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நிஜார் அவர்களின் ரூமில் நடைபெறுகிறது. இன்ஷா அல்லாஹ் அமிரகத்தில் இருக்கும் நம்மூர் சகோதரர்கள் கீழ் காணும் பொறுப்புகளுக்கு தங்களுக்கு விருப்பமானவர்களை முன் மொழிந்து தேர்வு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். அதிக வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாய் அறிவிக்கபடுவர்.
தேர்ந்தடுக்க போகும் பதவிகள்: தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர் மற்றும் பொருளாளர்.
மேலும் தொடர்புக்கு: சாதிக் - 0505683579

Sunday, May 6, 2012

ஊர் கூட்டமா? உஷார்!!!

கடந்த வெள்ளிகிழமை(04-05-2012) ஜும்மாவின் போது ஒரு அறிவிப்பு  செய்துள்ளார்கள். அது என்னவென்றால் M.A.P. தாஜுதீன் அவர்கள் ஊர் நிர்வாக தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் நடத்த வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார். இது சம்பந்தமாக ஊர் கூட்டமுள்ளது, தேதி பிறகு அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர். ஜமாத்தார்களே நாம் இப்பொழுது தான் உஷாராக இருக்க வேண்டும். ஏற்கனவே வக்பு போர்டு ரகசிய வாக்கெடுப்புக்கான வேலைகளுக்கு ஆயத்தமான நிலையில் இந்த தீர்ப்பால் என்ன ஆலோசனை தேவைப்படுகிறது? இவர்கள் ஆலோசனைக்கு வாருங்கள் என்று முன்னாள் கூட்டிய கூட்டத்தில் என்ன நடந்தது? ஆர்வமாய் போன ஜமாத்தார்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஜமாத்தார்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி தற்காலிக நிர்வாகிகள் என அவர்களே சிலரை முன்மொழிந்து அவர்களையே தேர்ந்தெடுத்து நியமனம் செய்தார்களே! இதுவரை இதற்கு முறையாக அறிவிப்பை வக்பு போர்டிடம் இவர்கள் கொடுக்கவுமில்லை. அதுபோல் செய்யதான் இந்த கூட்டமுமா?

முன்பு நடந்த தேர்தலில் ஜெயித்த சகோதரர் அலியிடம் பதவியை வழங்காமல், அடாவடியாய் பதவிகாலம் முடிந்தும் தற்காலிக நிர்வாகிகளாய் தொடர்ந்து பதவியிலேயே நான்கு வருடங்கள் ஒட்டி கொண்டு, சமீப காலமாய் பலத்த எதிர்ப்பு கிளம்பவே முறையாக தேர்தலை நடத்தாமல் எந்த முன் அறிவிப்புமின்றி ஆலோசனைக்கு வாரீர் என அழைத்து புதியதோர் தற்காலிக நிர்வாகம் என்று மறுபடியும் அமைத்தீர்களே! அது போல் இந்த கூட்டத்தில் என்னன்ன பிளான் வைத்துள்ளார்களோ? ஒரு வேலை தாஜுதீன் அவர்கள் இத்தேர்தலில் தனிமை படுத்தும் விதமாக அவருக்கு எதிராக ஜமாத்தாரை திரட்டதான் இந்த கூட்டமா? ஜமாத்தார் ஒரு செய்தியை நன்கு விளங்க வேண்டும், தாஜீதீன் அவர்கள் தனி ஆளாக நீதிமன்றம் அணுகி இந்த தீர்ப்பை பெறவில்லை, அவர் ஊருக்கு எதிரானவருமில்லை. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என பல நிலைகளில் நிர்வாகத்திடம் போராடியும் எந்த பயனும் கிடைக்காததினால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என ஒரு கமிட்டி உருவானது. அக்கமிட்டியின் முடிவின் படியே உயர் நீதிமன்றம் அணுக வேண்டுமென முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதை ஏற்றுகொள்ள முடியாத நிர்வாகிகள் இதற்கு எதிராக எதாவது செய்தாக வேண்டும் என நினைத்து இந்த கூட்டத்தை கூட்டுகின்றனர். முன்பு  நடந்த கூட்டத்தில் வெத்து பேப்பரில் வாங்கிய கையெழுத்தை வைத்து ஒரு புகார் மனுவாக வக்பு போர்டிற்கு அனுப்பியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அந்த மனுவில் ஊரில் 15பேர் சேர்ந்து கொண்டு தவ்ஹீத் பள்ளி கட்டுகின்றனர் அதற்கு தகுந்த நடவடிக்கை வேண்டுமென கோரியுள்ளனராம். இப்படி முறையற்ற வகையில் வாங்கிய கையெழுத்தை அவர்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர்.

எனவே இம்முறை நடக்கபோகும் கூட்டத்தில் ஜமாத்தார்கள் கொஞ்சம் உஷாராய் இருந்து ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக எதாவது தீர்மானம் கொண்டு வந்தால் கண்டிப்பாக ஊரின் நலனை கருத்தில் கொண்டு அதனை கடுமையாக எதிர்க்க அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.இந்த முறை கண்டிப்பாக தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாடுபடுபவர்களை புறந்தள்ளிவிட்டு ஊருக்காக மட்டும் பாடுபடுபவர்களுக்கு ஓட்டளித்து மற்ற ஊர்களுக்கு நம் நிர்வாகம் ஓர் எடுத்துகாட்டாய் விளங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக!!!


Saturday, May 5, 2012

இறப்பு செய்தி (05/05/2011)

அஸ்ஸலாமு அலைக்கும்




நமதூர் மேலத்தெருவை சேர்ந்த ரபீக் அவர்களின் மகனார் முஹம்மது காஸிம் இன்று மதியம் இறந்து விட்டார்கள். இவர் இரத்தம் சம்பந்தமான் நோயால் பாதிக்கபட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார். இன்று இரத்த போக்கு அதிகமாகி இறந்துள்ளார். அல்லாஹ்விடம் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் துஆ செய்வோமாக.

Wednesday, May 2, 2012

ரகசிய வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம்!!

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் நம் நீடுர் நிர்வாக தேர்தலுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை பள்ளிவாசலில் ஒட்ட இருக்கின்றனர். அப்போழுதே விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்களை பெற்றுச் செல்வார்கள். நமதூர் நிர்வாகத்திற்கு 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோரின் அனைத்து பெயர்களும் ஒரே வாக்கு சீட்டில் அகர வரிசைப்படி இருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டியிடலாம், ஜமாத்தார்கள் வாக்கு சீட்டில் உள்ள நபர்களில் 12 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்க பட்ட 12 உறுப்பினர்கள் தங்களுக்குள் முத்தவல்லி , டிரஸ்டியை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நல்ல முறையில் இந்த ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும். ஊர் நன்மையை கருதி வெறுப்புகளை மறந்து அனைவரும் சுமூகமான முறையில் தேர்தல் நடந்திட ஒத்திழைப்பு நல்கிட வேண்டும். அதற்கு மாறாக தனது பலத்தை தவறாக பயன்படுத்தி தேர்தலை தடுத்து நிறுத்த நினைக்க வேண்டாம். ஏனெனில் இது ஒட்டு மொத்த ஜமாத்தார்களின் விருப்பமாகும், காரணம் கடந்த தேர்தலை சுமுகமாக நடக்கவில்லை என்ற காரணத்தினால் தான். அதுவும் இந்த முறை ரகசிய வாக்கடுப்பு நடத்தக்கோரி கோரிக்கைகள் அதிகமானாதால் தான் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வக்பு வாரியமும் முன் வந்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல காரணங்களை அடிக்கி கொண்டே போகலாம் ஆனால் வேண்டாம் என்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? கேட்டால் பழைய பல்லவி பார்ம்பரியம் என்று ஆரம்பித்து விடுவார்கள். இந்த பார்ம்பரியத்தை பயன்படுத்தி தான் வென்றவர் நிர்வாகத்திற்கு சாதகமில்லாதவர் என்பதால் தேர்தலை கலைத்தனர்.

தமுமுக சகோதரர்கள் தான் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என அடித்தளமிட்டு பெரு முயற்சி செய்தன்ர். ஆனால் அந்த முயற்சியிலிருந்து போக போக பின் வாங்க ஆரம்பித்தனர். எதனால்? ஊர் நிர்வாகிகள் தமுமுக முயற்சியை சீர்குலைக்க வைக்க வேண்டும் என்று அவர்களோடு நெருக்கம் காட்ட ஆரம்பித்தனர். அதன் விளைவாகத்தான் தமுமுக நடத்திய ஆம்புலன்ஸ் அற்பணிப்பு விழாவில் ஊர் நிர்வாத்தினரும் கலந்து கொண்டனர். ஊர் நிர்வாகதினர் தமுமுகவிடம் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சனை செய்ததை அவர்கள் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை. கண்டிப்பாக அல்லாவுஹ்க்காக இதையெல்லாம் மறந்து இயக்கம் ,கட்சி சார்பற்று தான் இத்தேர்தலில் அனைவரும் பங்கெடுக்க வேலை செய்ய் வேண்டும். ஊரின் விடியலுக்காக அனைவரும் ஓற்றுமையோடு உழைத்தால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு வெற்றீயை கொடுப்பான் என்பதில் எந்த ஐயமுமில்லை. அடிதடி வழக்குகளுகெல்லாம் பள்ளிவாசல் பணத்தை வீண்விரயம் செய்து அதற்கு நியாயம் கற்பித்தார்களே அவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து நல்ல நிர்வாகம் அமைய அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக. ஆமீன்.