நீடுர் என்றாலே இப்போழுது பிரச்சனைக்குரிய ஊர் என்றாகிவிட்டது. அதற்கு முழு முதற் காரணம் அந்த ஊரின் நிர்வாகமே. தவ்ஹீதை எதிர்க்கிறோம் பேர்வழி என்று ஊரில் மறைந்த அல்லது மக்கள் மறந்த பல அனாச்சாரங்களுக்கு புத்துயிர் கொடுத்து நிர்வகித்து வருகிறது இந்த நிர்வாகம். அது போல் பல ஊரிலிருந்து விரட்டபட்டு இப்பொழுது நீடுரில் ஒட்டி கொண்டிருக்கும் துணை இமாம் அபூபக்கரை எவ்வளவோ புகார் வந்தும், ஏந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரை பேணி பாதுகாத்து வருவது ஆச்சரியத்தையும், பலமான சந்தேகங்களையும் உண்டாக்குகிறது. அதனடிப்படையில் மற்றொரு புகார் சமீபத்தில் அவர் மீது சுமத்தப்பட்டது. அது நம்மூர் பல இணையதளங்களில் வந்துள்ளது, அதை அப்படியே உங்கள் பார்வைக்கு...
-----
இங்கு கை உயர்த்தி பேசுபவர் தப்லீக் ஜமாத் கஸ்துக்கு வரவில்லை தன் மகளின் வாழ்வை பாழாக்கிய அபூபக்கர்பைஜி என்ற நமது ஊர் நெய்வாசல் துணை இமாமை தேடி போலீசுடன் வந்திருக்கிறார்.
நீடூர் நெய்வாசல் துணை இமாம் அபூபக்கர் .ஃபைஜி இரண்டாம் தாரமாக (இப்போது இருப்பது எத்தனையாவது தாரமோ தெரியாது) திருமணம் செய்த தாஹிரா பானு என்ற பெண்ணுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாம் பெண்குழந்தை பிறந்தது என்றோ அல்லது என்ன காரணமோ பிள்ளையை பெற்ற பிறகு பெண்ணுக்கு பைத்தியம் என்று கூறி அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுத்து வருகிறார்.
பதினொன்னரை பவுன் மற்றும் ஒரு லட்சம் வரதட்சனையாக பெற்ற இந்த ஆலிம்!! ஒன்றறை பவுன் தான் கொண்டு வந்தாள் என்று பொய் கூறி வருகிறாராம். வாங்கிய பணமும், நகையும், சீதனமும் திருப்பி தர மறுத்து வருகிறார்.
இவரின் ஒன்றுவிட்ட சகோதரியே காவல் நிலையத்தில் அபூபக்கர் மனைவி தாஹிராபானு மா9 பவுன் போட்டுவந்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் எழுத்து மூலமாக தந்திருக்கிறார்.
மேலும் பத்து ஆலிம்களை அழைத்து வந்து நீடூர் மதரஸாவில் அபூபக்கருடன் பஞ்சாயத்து செய்திருக்கிறார். ஆனால் எந்த சமரசத்துக்கும் அவர் கட்டுப்படுவதாக இல்லை என உலமாக்கள் கூறிவிட்டார்கள். நெய்வாசல் ஊர் நிர்வாகம் அவர் வெளியூர் காரர் அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது!! என்று கை விரித்து விட்டதாம். உங்கள் நிர்வாகத்தில் தானே வேலை செய்கிறார் தயவு செய்து கேட்டு வாங்கித்தாருங்கள் எனறு கூறியும் கராராக மறுத்துவிட்டதாம் நெய்வாசல் நிர்வாகம்.
பெரம்பலுர் ஜமாத்துக்கோ, ஆலிம் பஞ்சாயத்துக்கோ அடங்காத இவரை பற்றி பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வருவதாக எழுதி கொடுத்திருக்கும் இந்த ஆலிம்சா வரவும் இல்லையாம் கால் செய்தாலும் எடுப்பதில்லையாம்.
பெண்ணுக்கு எதுவும் பிரச்சனை உள்ளதா என்று நாம் கேட்டோம் எந்த பிரச்சணையும் இல்லை அவர் சொல்வதுபோல் மன நோய் எதுவும் இல்லை என்கிறார் வந்திருந்த காவல்துறை அதிகாரி.
வாழ விரும்பம் இல்லை என்றால் அழகாக பேசி தீர்த்துவிடலாமே ஏன் ஒரு பள்ளிவாசலின் மதகுரு்வாக இருந்துகொண்டு இப்படி செய்கிறார் என்று வந்திருந்த காவல்துறை அதிகாரி கேட்கிறார்.
நேற்று நீண்ட நேரம் காத்திருந்தும் அபூபக்கரை போலீசாரால் சந்திக்க முடியவில்லை ஃபோனையும் அவர் எடுக்கவில்லை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நம்மை அழைத்து வேதனையுடன் முறையிட்டார். பல ஆயிரம் செலவுசெய்து கார் எடுத்து வந்திருக்கிறார் இது தொடர்பாக இரண்டு முறை நீடூருக்கு செலவு செய்து வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார். அவரின் முறையீட்டையும் காவல்துறை முறையீட்டையும் நாம் வீடியோ பதிவு செய்து வைத்திருக்கிறோம் தேவை படுமானால் வெளியிடுவோம்.
ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த ஆலிம்சா சொந்த வாழ்கையை சரிசெய்யாமல் இருப்பது அழகல்ல. கபுரு வணக்கத்தை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இவர் ஜும்ஆ பயானை கூட முறையாக பயன்படுத்தாமல் பிறரை விமர்சனம் செய்வதிலேயும் ஊர் மக்களுக்கு மத்தியில் பிரிவினை பேசி தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருக்கிறார். இதனாலேயே பலர் பெரிய பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு போவதில்லை. இப்படிப்பட்டவர் இமாமாக நமது ஊரில் இருக்கத்தான் வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.
நன்றி: niduri.com