நமதூரில் பழையபடி மாற்றுகருத்துடையோரை , விரோதிகளாக பார்க்கும் நிலை தொடர்கின்றது. ஜமாத்து நிர்வாக தேர்தலில் போட்டியிட்டவர்களை ஊருக்கு வேண்டாதவர்களாக பார்க்கின்றனர். அவர்களது வீட்டு திருமணங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது இல்லை.சிலரிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் தான் திருமணம் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்வோம் என்று சொல்வதாக தெரிகின்றது.
அதேபோல் நிர்வாகத்தில் நடைபெறும் தவறை சுட்டி காட்டினாலும் அவர்களது தேவைகளையும் புறக்கணிக்கின்றனர். அவர்களது உரிமைகளும் நிர்வாகத்திலிருந்து மறுக்கபடுகின்றது. ஏன் இப்படி செய்கின்றார்கள்? அவர்களும் நம் ஜமாத்தினர்கள் தான்! நம் சொந்தங்கள் தான்! இதுபோல் நடவடிக்கைகளால் மேலும் மேலும் அதிருப்தி தான் கூடிக்கொண்டே இருக்கும்.முன்பு இப்படி தான் தவ்ஹித் கொள்கையை பின்பற்றுகின்றார்கள், கிளை தொடங்கினார்கள், கூட்டம் போட்டார்கள் என்று ஊரை விட்டு நீக்கினார்கள். அதனால் அவர்கள் ஊரை விட்டா போய்விட்டார்கள்? இல்லையே! தனி ஜமாஅத் ஏற்படுத்த தள்ளபட்டார்கள்! தற்போது மாற்று கருத்துடையவர்களை நிர்வாகத்தினருடன் ஒத்துபோகாதவர்களை புறக்கணிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது!! இவர்களிடம் சரணாகதி அடையவேண்டும், இல்லையேல் மிரட்டபடுவார்கள்! ஊரில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்,இல்லையேல் புறக்கணிக்கும் வேலை நடக்கின்றது. ஜமாத்தார்களை அடக்கி ஆழ நினைக்காதீர்கள்!! ஆதிக்கம் செலுத்த நினைக்காதீர்கள்!! அடிபனியவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்!! அவர்களை புரக்கனிப்பதன்மூலம் அவர்களை ஜமாத்திலிருந்து மறைமுகமாக ஒதுக்க நினைக்காதீர்கள்!!இப்படி மிரட்டுவதன் மூலம் ஜமாத்தார்கள் நிர்வாகத்தை எதிர்க்க மாட்டார்கள் என்று இப்படி செய்கின்றார்களா? மிரட்டப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர்.பலர் வெளியில் சொல்லாமல் அவர்களிடம் மிரட்டலுக்கு பயந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்கின்றனர். இப்படி அடிபனியவைப்பது முறையா? இப்படியே போனால் இதற்கு என்னதான் தீர்வு? நிர்வாகத்தினர் விளக்கவேண்டும்! ஊரில் ஜமாத்தார்கள் அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும்.இல்லையேல் இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் தீர்வுக்கான மாற்று வழியை ஜமாத்தார்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆகையால் நிர்வாகிகளின் அனுகுமுறை மாற வேண்டும்! அல்லாஹ்விடம் துஆ செய்வோம். மாற்றத்தை அல்லாஹ் தருவான். ஆமீன்.