அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, September 25, 2012

வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே!


வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே!
உங்களிடம் சில கேள்விகள்:

* வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே சேர்ந்து வாழ, உங்கள் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பத்தடை சாதனங்களை கையில் மறவாமல் கொடுத்து வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கும் மான‌ங்கெட்ட வாழ்க்கைக் கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்க/ஐரோப்பிய சமுதாயமே! ஒழுக்கம் சார்ந்த உயரிய திருமண வாழ்வினை வாழ்ந்துக் காட்டிய‌ முஹம்மத் நபியை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கும் தகுதி உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

* ஒழுக்கமின்மை தலைவிரித்தாடும் கட்டுக்கோப்பில்லாத உங்கள் சமூகத்தின் ஆண்களுக்கு வீட்டில் ஒரு மனைவியும், வெளி உல்லாசத்திற்கு பல பெண்களையும் அனுபவிக்கும் ஒழுக்கக்கேடு உங்களுக்கு அருவருப்பாக‌ தோன்றவில்லையா?

* பெண்ணுரிமை இயக்கங்களைச் சார்ந்த பெண்கள் எனக் கூறிக்கொண்டு, இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வீதியில் போராட்டம் பண்ணும் விபச்சாரிகளை காரித் துப்பாமல், கண் கொட்டாமல் பார்த்து அதை செய்திகளாகவும் வெளியிட உங்களுக்கு வெட்க உணர்வே கொஞ்சமும் இல்லையா?

* ஓரினச் சேர்க்கைக்காக திருமணம் செய்வ‌தை வீடியோக்களாக 
உலகமே பார்க்கும் வண்ணம் பெருமிதத்தோடு வெளியிடும் உங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தினை முற்போக்குத்தனம் என்பீர்களா? 

* ஜெபம் பண்ண வந்த பெண்களையும், சிறுமிகளையும் உங்கள் பாதிரியார்கள் நாசம் பண்ணியதை மத போதகம் என மார்தட்டிக் கொள்வீர்களா?

* நைட் க்ளப்களில்தான் உங்கள் காமவெறியினைத் தணித்துக் கொள்கிறீர்கள் என்றால், சில பொது நிகழ்ச்சிகளிலும் அந்நிய ஆண்களும் பெண்களுமாக கைக் கோர்த்து, ஒட்டி உரசி, உதடோடு உதடுகள் முத்தமிட்டு... (ச்சீ... த்தூ...) உங்களின் நாறிப்போன அந்த கலாச்சாரத்தை நாகரிகம் என்பீர்களா?

* ச‌ன்பாத் எடுக்கிறோம் என்று உங்கள் பெண்கள் டூ பீஸிலும், முழு நிர்வாணமாகவும் கடற்கரை மணல்களில் புரண்டு சூரிய குளியல் எடுப்பதையும், த‌ங்கள் கண்முன்னால் அதை அடுத்தவன் படம் எடுப்பதையும் அனுமதிக்கும் கலாச்சாரத்தினை சூடு, சொரணை இல்லாத சுதந்திரம் என்பீர்களா? 

அந்த அயோக்கியர்கள் அதே கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான் இவ்வளவு சுலபமாக அண்ணல் நபி கண்மணி நாயகத்தின் பெயரில் நிர்வாணக் கார்ட்டூனை கைக்கூசாமல் வரையவும், உண்மைக்கு புறம்பான‌ ஆபாசப் ப‌டமெடுக்கவும் முடிகிறது!

மதுவில் சுகம் காணலாம் என அதை வெறுக்க மனமின்றி வாழும் மக்கள் மத்தியில் மதுவை விஷமாகப் பார்க்கும் ஒரு சமுதாயம்.. வட்டிக்கும், மோசடியான வியாபாரங்களுக்கும் எதிராக போராடும் ஒரு சமுதாயம்..  அந்நிய ஆண் ‍- பெண் சகவாசத்தை அடியோடு வெறுக்கும் ஒரு சமுதாயம்.. காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அந்த 'முஹம்மத்' என்ற இறைத்தூதர் வழியிலும், அவர் மூலம் கிடைக்கப்பெற்ற திருக்குர்ஆனின் வழியிலும் வாழத்துடிக்கும் ஒரு சமுதாயம்..இத்தகைய நேர்வழிக்கு வழிவகுத்துச் சென்ற‌ கண்ணியமிகு ஒரு உத்தமரை இழிவுபடுத்துவதை எவ்வாறு தாங்கிக் கொள்ளும்? ஆனாலும் அதற்காக சில நாடுகளில் குற்றத்தில் சம்ப‌ந்தமில்லாத அப்பாவிகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தக்கூடிய‌ வன்முறையையும் கலவரங்களையும் இஸ்லாமியர்கள் யாரும் ஆதரிக்க முடியாது. உண்மை இஸ்லாத்தினை சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துக் கொள்ளாத ஒருசில முஸ்லிம்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். தவறுக்கேற்ற தண்டனையை தகுந்தவர்களுக்கு கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், அப்பாவிகளின்மீது நடத்தும் வன்முறையை அனுமதிக்கவே இல்லை.  
ஏனெனில் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்! ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாத நிர்பந்தமாக நடந்த போர்களையும், போர் தர்மத்தையும் அழகிய கட்டுப்பாடுகளோடு வரையறுத்து, அதை வலுயுறுத்திய‌ முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவர் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை! இதுபோலவே மனித வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மனிதன் சகமனிதனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள், ஆற்ற‌வேண்டிய கடமைகளைக் கட்டளையாகப் பிறப்பித்து, மனித உரிமை மீறல்களிலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியது இஸ்லாம்!
அப்படிப்பட்ட இஸ்லாத்தினைக் கொண்டுவந்து மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த தன்னையே அர்ப்பணித்த‌ மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தத் துடிக்கும் அயோக்கியர்களே! நீங்கள் உண்மையிலேயே அறிவுடைய மக்களாக இருந்தால்..., 

'முஹம்மத்' என்ற அந்த‌ இறைத் தூதரை இஸ்லாமிய மக்க‌ள் எதற்காக‌ தன் உயிரைவிட மேலாக மதித்து நேசம் கொள்கிறார்கள் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்! முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 'புகழுக்குரியவர்' என்ற தன் பெயருக்கேற்ப வாழ்ந்துக் காட்டிய உண்மை சரித்திரங்களை புரட்டிப் பாருங்கள்! திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினைம் வாக்கினையும் நடுநிலையோடு உற்று கவனியுங்கள்!

கால சூழ்நிலைக்கேற்றவாறு எத்தனையோ தலைவர்களை இவ்வுலகம் கொண்டாடும், புகழ்பாடும்! ஆனால் எந்த தலைவர்களையாவது தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவிலும், மூச்சிலும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சமுதாயமே தன் முழு வாழ்வின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதுண்டா? எங்கோ ஒரு மூலையில், யாரையாவது கைக் காட்டலாம்.. இதோ இவர், இன்ன‌வருடைய வழியைப் பின்பற்றுகிறவர் என! ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அப்படியே அடிக்கு அடி பின்பற்றுபவர்களும்,  அவர்களின் உத்தம வாழ்க்கையை நடுநிலையோடு ஆராய்ந்து, வியந்து, பாராட்டி, தானும் அதுபோன்றதொரு அழகிய கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட (முன்னாள்) மாற்றுமத சகோதர, சகோதரிகளும் இன்றைய வரலாற்றில் ஏராளம்! இதற்கு எந்த‌ நாட்டவர்களும், எந்த மொழியினரும் விதிவிலக்கில்லையே? ஏனென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 

மேலும் உங்கள் நலம் விரும்பி சில‌ எச்சரிக்கைகள்!

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம்  மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்குர்ஆன் 3:54) 
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட மிகப்பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

(அல்குர்ஆன் 61 : 7,8,9)
(குறிப்பு: உண்மைக்கு புறம்பாக ஆபாச‌ படம் எடுத்தவனையும், அதனை பரப்பிக் கொண்டிருப்பவனையும், தன் மதவெறியைத் தணித்துக் கொள்ள‌ நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தவனையும், அதையெல்லாம் ஆதரிக்கும் சிலரையும் கண்டிக்கவே இந்த கட்டுரையே தவிர, நடுநிலையான எண்ணம் கொண்ட மற்றவர்களை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.)

Sunday, September 16, 2012

யூத கிருத்துவ காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!


அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!

பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!

இதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!

அன்னார் பற்றி ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!

மேலே நபி (ஸல்) சொன்னவற்றுக்கு முற்றிலும் எதிராக.... அதாவது எதை 'செய்யக்கூடாது' என்று நபி ஸல் அவர்கள் தடுத்தார்களோ... அதற்கு முற்றிலும் எதிரான வகையில்... அந்த படத்தில் முஹம்மத் என்ற ஏழாம் நூற்றாண்டு அரேபிய கதாபாத்திரம்... ஏற்றவன்... மார்க்க பிரச்சாரமாக மக்களிடம் அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் போன்றோரை தமது ஆதரவாளர்களிடத்தில் கொல்ல சொல்கிறான்..!

தூய நெறிபிறழாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய மூமின்களின் தாயார் ஹதீஜா என்ற பெண் கதாபாத்திரத்துடன்... திருமணத்துக்கு முன்னரே அருவறுக்கத்தக்க வகையில்... விபச்சாரம் 'செய்வதையும்'...........

'இவர் போன்றவர் நமது இந்தியாவுக்கு ஆட்சியாளராக வேண்டும்' என்று காந்தியடிகள் பாராட்டிய சிறந்த கலீபாவான உமர் (ரலி) போன்ற நபித்தோழர் வேடம் ஏற்ற உமர் என்ற ஆண் கதாபாத்திரத்துடனும்... அந்த முஹம்மத் கதாபாத்திரம்... ஏற்றவன்... ஓரினச்சேர்க்கை  'செய்வதையும்'........ விஷுவலாக காட்டிகொண்டு........

"க்ஹா..... ச்சீ...... த்தூ......" என......

இந்த விபச்சாரர்கள் மூஞ்சியில் காரித்துப்பிவிட்டு... அந்த யு டியூப் விடியோவை பாதியில் நிறுத்தி விட்டேன்..! நல்லொழுக்கம் உள்ள நல்லவர்கள் எவரும் இந்த படத்தை முழுதாக பார்க்க மாட்டார்கள்..! இது அந்த படத்தின் பதினான்கு நிமிஷ ட்ரைலராம்...! அதில்... முஹம்மத் கேரக்டர் ஏற்றவனை 'பாஸ்ட்.....ட்' என்று பிறர் அழைக்கிறார்கள்..! இந்த கேரக்டர் ஏற்று இவன் செய்யும் இந்த விபச்சார & ஓரினச்சேர்க்கை பாவத்துக்கு... அவனின் அப்பாவி தாயை வேறு அவமதிக்கிறார்கள் இந்த சண்டாளர்கள்..!


இப்படி ஒரு சினிமாவை எடுத்தவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது..! மிருகங்களாகவே இருக்க முடியும்..! இதை எல்லாம் தடுக்கவோ... சென்சார் செய்யவோ... மனம் இன்றி மறைமுக ஊக்கம் கொடுக்கும் கேடுகெட்ட அமெரிக்க நாகரிக அரசும் இந்த மிருகங்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்றே புரிகிறேன்..!

அந்த 'Non-Innocent ஹாலிவுட் அமெரிக்க காட்டுமிராண்டிகள்' இந்த கருமத்தை ஜூலையிலேயே ட்ரைலர் படமாக எடுத்து யு-டியூபில் அப்லோடு பண்ணியும் எந்த முஸ்லிமும் கண்டுகொள்ளவே இல்லை என்றதும் கடுப்பாகிப்போனார்கள்..! அவர்கள் வாயில் மண்..!

பின்னர்... ரொம்ப யோசித்து... அந்த சினிமா ட்ரெயிலர் சாக்கடை கழிவை அரபியில் டப்பிங் பண்ணி, இந்த செப்டம்பரில் அதே யு-டியூபில் அந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் அப்லோடு பண்ணவும்தான்.... அவர்கள் எதிர்பார்த்தபடி ஹிட்சும் டவுன்லோடும்...கிடைத்து விஷமம் சூடு பிடித்தது...!

எப்போதும் போலவே... இப்போதும்... உணர்ச்சிவசப்பட்ட இந்த அரேபிய முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை எகிப்திலும் லிபியாவிலும் ஆர்ப்பாட்டம்-கோஷம் என்று முற்றுகை இட்டுள்ளார்கள்..! அமெரிக்க கொடியை கொளுத்தி தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்..! எந்த ஒரு கூட்டத்திலும்  ஒழுக்கமற்ற (அந்த படம் எடுத்தவர்கள் போல) சில காட்டுமிராண்டிகள் இருப்பார்கள் அல்லவா..?  அவர்கள்.... தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை மறந்தவர்களாக... பின்பற்றாதவர்களாக... அந்த அமெரிக்க காட்டுமிராண்டிகள் எதை எப்படி எவ்வாறு தங்களிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ... அதை அப்படி அவ்வாறே ஏதோ ஒரு பக்கா செட்டப்பு போல... மிகச்சரியாக (மிகத்தவறாக)  தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை செப்டம்பர் - 11 இல் லிபியாவில் அரங்கேற்றிக்காட்டி இருக்கிறார்கள்..! விளைவு... மூன்று அப்பாவி அமெரிக்கர்களின் உயிர் கொல்லப்பட்டு விட்டது..!

அமெரிக்க யூத கிருத்துவ காட்டுமிராண்டிகளா Vs. லிபிய முஸ்லிம் காட்டுமிராண்டிகளா... என்று நடந்த போட்டியில்....

மீண்டும் வழக்கம்போல வெற்றி அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கே...!

காரணம்... சில யூத காட்டுமிராண்டிகளின் அற்புத டைரக்ஷன் எப்போதுமே அழிப்புப்பாதையில் சதி செய்து நாசவேலைக்கு வித்திடுவதில்... மிகத்துல்லியமாக செயல்பட்டு வந்ததை - வருவதை இந்த நூற்றாண்டில் நாம் நன்கு அறிவோம்..! இப்போதும் அப்படியே..!

இனி என்ன..? அந்த சாக்கடை கருமத்துக்கு செமை இலவச விளம்பரம் வ(த)ந்தாயிற்று..! யு டியூபில் தங்க கோப்பை அவார்ட் கிடைக்கும்..! லோ பட்ஜெட் படம். டாலர் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அந்த காட்டுமிராண்டி கூத்தாடிக்கூட்டத்துக்கு..! ஆனால், இங்கே அறிவில்லாத மக்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்..! பிறகு, "பார்த்தீர்களா... முஸ்லிம்களின் அறிவீனத்தைத்தான்... "Innocence of  Muslims" என்று சினிமாவாக சொன்னோமே... இப்போதாவது நம்புகிறீர்களா.." என்று வெற்றிக்களிப்புடன் சொல்லிக் காட்டத்தானே இவ்வளவு மெனக்கெடல்..! காட்டுமிராண்டிகள் எதிரபார்த்ததை காட்டுமிராண்டிகள் நடத்திக்காட்டிவிட்டனர்..!

சில மாதங்களுக்கு முன்னர் "குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ய போகிறேன்" என்று கூத்தாட்டம் நடத்திய ஓர் அமெரிக்க கிருத்துவ பாதிரியாரை துணைக்கு சேர்த்துக்கொண்டு... அந்த சினிமாகார யூதன், தான் நினைத்ததை விட அதிகமாகவே இப்போது இந்த படம் மூலம் சாதித்து விட்டான்..!

இறைநாடினால்... இந்த உண்மையை எல்லாம் நிதானமாக சில காலம் கழித்தாவது உண்மையை உணரும்..! இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு இணைவதை அந்த காட்டுமிராண்டிகள் உட்பட எவரும் இதுபோன்ற ஆபாச சினிமாக்களால் தடுத்து விட இயலாது...! இதற்குத்தானே இவ்வளவு மில்லியனை ஒவ்வொரு யூதனிடமாக பிச்சை எடுத்து... அதை இப்படி ஒரு நாசவேலைக்கு செலவு செய்தார்கள்..? இவர்களின் சூழ்ச்சியை முறியடித்து வைக்க அல்லாஹ் போதுமானவன்..!

இவ்வளவு  கீழ்த்தரமான படங்களை இவர்கள் எடுக்க... இவர்களே மூக்கின் மீது விரல்வைத்து பாராட்டி அவார்டு தரும்படியான உயர்தரமான எதார்த்த சமூக படங்களை ஈரான் எடுக்கின்றதாம்..! எத்தனை எத்தனை தமிழ் (& இந்திய மொழிகள்) படங்களில் முஸ்லிம்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு கதைகளை பார்த்து இருப்பீர்கள்...? ஆனால்... முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவு படுத்தியோ... பிற சமூகம் மீது பொய் உரைத்தோ... பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே வீண்பழி சுமத்தி அவதூறு கட்டியோ... ஒரு படம் எடுத்ததாக... எப்போதாவது கேள்விபட்டதுண்டா...? காரணம்..? "கவிதைக்கும் பொய் அசிங்கம்" என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு..! எனில், விஷுவல் மீடியா..? இதைவிட அதிக உண்மையாக இருக்க வேண்டுமல்லவா..? சினிமா எடுப்பதிலாவது... முஸ்லிம்களை பார்த்து கத்துக்குங்க..!

ஆகவே.... இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில்....

சில லிபிய இஸ்லாமின் அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்..! அதில் இறந்த அப்பாவிகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் & இரங்கல்கள்..!

அதைவிட அதற்கு காரணமான சில ஹாலிவுட் சினிமாக்கூத்தாடிகளின் யூத கிருத்துவ மதவெறி காட்டுமிராண்டித்தனத்துக்கு எனது பல மடங்கு கடும் கண்டனங்கள்..!

அதைவிட எல்லாம் பற்பல மடங்கு.... இதை எல்லாம் இன்னும் 'பேச்சுரிமை', 'கருத்து சுதந்திரம்' என்று சும்மா சிரித்தபடி... வேடிக்கை பார்த்துக்கொண்டு... எதிர்ப்புக்குரல் கொடுப்போரை கலகக்காரர்கள்... தீவிரவாதிகள்... என்று புளுகி சித்தரிக்கும்... இந்த செவிட்டு ஊமை ஊடக உலகத்துக்கு எனது மிகக்கடும் கண்டனங்கள்..!

கிறிஸ்துவம், யூதம் பற்றி எல்லாம் உயர்வாக கருத்து சொல்லப்படும் அப்படத்தில்... இறைத்தூதர் மீதும் இஸ்லாம் மீதும் இப்படி அப்பட்டமாக அபாண்டமாக பொய் சொல்லித்தான் தனது மதத்தை உயர்வாக காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கேவலமான கீழ்த்தரமான நிலை கிருத்துவத்துக்கும் யூதத்துக்கும் இருப்பதாகவா இந்த அவதூறு சாக்கடை கருமத்தை படமாக எடுத்த மிருகங்கள் நினைக்கிறார்கள்...? மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்..? இவர்களின் இந்த இட்டுக்கட்டும் ஈனச்செயலை அந்த சமயங்களை சார்ந்த நல்லோர் எவருமே பெரிய அளவில் கண்டிக்காதது ஏன்..?

மாறாக...
"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்;............."(குர்ஆன்- 6:108)" 

பிற மத கடவுள்களை நாவினால் ஏசுவதைக்கூட தடை செய்திருக்கின்ற ஒரு மார்க்கம் அல்லவா இஸ்லாம்..!  நாராசப்படம் எடுத்த பாவிகளே...! உங்களுக்கு உடனடி அவசர சிகிச்சை பிரிவு இஸ்லாத்தில் தான் உள்ளது..! இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்..! இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..!

இஸ்லாமோஃபோபியாவில்.... இந்த அத்தியாயமும் கடந்து போகும்..!

சரி..சரி... வழக்கம் போல... சரியான இஸ்லாத்தை அறிந்தோர்... இவர்களை மனத்தால் வெறுத்து, இவர்களின் மீதான தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிட்டு... ' யூதர்களிலும் கிருத்துவர்களிலும் உள்ள நல்லோர்களுக்காக வேண்டி அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க பிரார்த்தித்து விட்டு... இனி அப்படியே இதனை மறந்து விட்டு... அடுத்த வேலையை அதே விதமான ஒற்றுமையுடன் பார்ப்போம் வாருங்கள் சகோஸ்..!


Friday, September 14, 2012

இதுதான் நியாயமா?


நமது ஊரில் ஊரில் புதிதாக தேர்ந்தெடு
க்கபட்ட நிர்வாகத்தினரிடம் ஜமாத்தில் சேர விருப்ப மனுக்கள் சில பேர் கொடுத்து உள்ளதாக இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டோம். சேர்க்க வேண்டியது நல்லது தான், ஆனால் இதற்கு எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று ஜமாத்தினருக்கு வெளிப்படியாக தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால் முன்னாள் நிர்வாகத்தில் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களை பெரும் தொகை பள்ளி கட்டுமான பணிக்கு வேண்டி நன்கொடை தர வேண்டும் என்று சொல்லி பணம் பெற்று கொண்டு சேர்த்தனர். நன்கொடை கொடுப்பவர்கள் தான் ஊரில் சேர தகுதியானவர்களா? நமது ஊரில் இருபது வருடங்களுக்கு மேலாக வெளியூரிலிருந்து குடி ஏறியவர்கள் பல பேர் இருக்கிறார்கள், அவர்கள் நன்கொடை கொடுக்க முடியாததால் இன்னும் ஊரில் சேர முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் ஊரில் புதிதாக சேர ஒரு வரைமுறை இருக்க வேண்டும். அது பணமாக இருக்க கூடாது, ஜமாத்தில் சேர பணம் ஒரு தடையாக இருக்க கூடாது. நன்கொடை இல்லாமல் ஊரில் என்ன சட்ட திட்டங்கள் பின்படுத்தபடுகிறது என்பதனை ஜமாத்தினருக்கு ஊர் நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். அதே போல் ஜாமத்தில் இருந்த சிலரை முன்னாள் நிர்வாகத்தினர் ஊர் நீக்கம் செய்தனர், தாமுமுக கிளை தொடங்கினார்கள் என்ற காரணம் சொல்லி முன்று பேர், வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடத்தியதற்கு ஒரு நபரையும் ஊர் நீக்கம் செய்தார்கள். இது ஏற்று கொள்ளும்படி உள்ளதா? ஊர் நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக சொன்னால் என்ன என்ன காரணத்திற்கு வேண்டி ஊர்
நீக்கம் செய்வீர்கள்? அதற்கு வரையறை உண்டா? முதன் முதலில் கிளை தொடங்கியவர்களுக்கும், முதன் முதலில் கூட்டம் நடத்தியவர்களுக்கும்    மட்டும் தான் பொருந்துமா? ஏன் என்றால் அதன் பிறகு பல கூட்டம்   நடை பெற்று உள்ளது. ஊர் நிர்வாகதினர்கள் சிலர் தாமுமுக கூட்டத்தில் பங்கு கொண்டு உள்ளார்கள். அதே போல் தற்போது தாமுமுக விற்கு கிளையும் உள்ளது. இன்னும் சொல்ல போனால் தற்காலிக நிர்வாகத்தில் தாமுமுகவினர் இருந்தனர். தற்போது புதியதாக தேர்வு செய்ய பட்டு உள்ள நிர்வாகத்திலும் தாமுமுகவினர் இருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் முன்பு தாமுமுக ஒன்றாக இருந்த போது நீக்கம் செய்தனர் தற்போது தௌஹீத் ஜமாஅத் தாமுமுக என்று இரண்டாக உள்ளது நஜாத் காரர்களை நீக்கினோம் என்றால் நமது ஊரில் இந்த ஐந்து நபர்கள் மட்டும் தானா தௌஹீத் வாதிகள், நமது ஊரில் தௌஹீத் கொள்கையை பின்பற்ற கூடியவர்கள்  நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வரை முறை பின்பற்றபட்டது? இவர்கள் பார்வையில் ஒரு இயக்கத்தில் இருப்பது தவறு என்றால் நிர்வாகத்தில் இருப்பவர்கள் தமுமுக இயக்கத்திலும் ஊர் நிர்வாகதிலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை? நடு நிலை வாதிகள் சிந்தனை செய்ய வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட மாதம் அல்லது வருடம் நிர்ணயம் செய்வார்கள் ஆனால் நமது ஊர் முன்னாள் நிர்வாகிகள் பார்வை படி கிளை தொடங்கியதும் மாநாடு நடத்தியது தவறு என்றால் அவர்களுக்கு வாழ்நாள் தண்டனையா? அல்லது வாழையடி வாழையாக தொடருமா? இதற்கு தீர்வு என்ன? புதிய நிர்வாகிகள் சிந்தனை செய்ய வேண்டும். ஊரில் பல பிரச்சனைகளுக்கு இது போல் முட்டாள் தனமான அணுகு முறை தான் காரணமாக இருந்து வருகிறது. ஊர் நீக்கம் செய்வது என்பது சட்டப்படி தவறான செயல். ஊர் நீக்கம் செய்ய பட்டவர்களை புதிய நிவாகத்தின் நிலை படு என்ன என்று தெளிவு படுத்த வேண்டும். நாங்கள் செய்ய வில்லை ஆகையால் நாங்கள் விளக்கம் அளிக்க முடியாது என்று சொல்ல முடியாது. காரணம் முன்பு இருந்த நிர்வாகம் .தவறான அணுகு முறையை கடை பிடித்தார்கள் இப்ப உள்ள நிர்வாகம் ஜமாத்தினரால் தேர்வு செய்ய பட்ட நிர்வாகம் ஆகையால் பழைய நிர்வாகத்தின் நிலைபாட்டை இந்த விசயத்தில் கடை பிடிக்க கூடாது புதிய நிர்வாகத்தின் அணுகு முறை எல்லரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் ஜமாத்தினரின் விருப்பம்
.
(பூமியில் ஆணவத்தையும் குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்கு அந்த மறுமை வாழ்வை எற்படுத்தியுள்ளோம் நல்ல முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே 

இப்படிக்கு ,
நமது ஊர் நலனை நாடும்
துபாய் வாழ் நீடூர்-நெய்வாசல் ஜமாத்தார்கள் 

Monday, September 3, 2012

விஞ்ஞான முறையில் விஷமாகும் பழங்கள்

உணவு வகைகளிலேயே பழங்கள்தான் மிகமிக எளிமையாக ஜீரணமாகக் கூடியவை. பழங்களை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு பழமும் இது ஒத்துக்கொள்ளுமா? ஒத்துக்கொள்ளாதா? என்ற பேச்சுக்கே இடமில்லை. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாத, மேலும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யக்கூடியவை பழங்களாகும்.
படுத்தப் படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்குக் கூட பழங்களைக் கொடுத்தால் நல்ல சக்தியும் புத்துணர்வும் கிடைக்கும். நோய் தீர்க்கும் அருமருந்து. இறைவனால் நமக்கு இயற்கையாக வழங்கப்பட்ட அருட்கொடையாகும்.
பழங்களால் கிடைக்கக்கூடிய நோய் நிவாரண சக்தி எப்படிப்பட்டதென்றால் நம் வயிற்றையும் நுரையீரைலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுறுப்புக்கள் செல் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவிப் பாய்ந்து அவற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் நீக்கி நம் உறுப்புக்களைப் புதுமைப்படுத்தி சிறு சிறு பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் சக்திகொண்டவை.
முக்கியமாக நம் 3 வேளை உணவில் இரவில் பழவகைகளைக் கொண்ட உணவாக நாம் மாற்றி கொண்டால் மேற்சொன்ன உறுப்புக்களான வயிறு நுரையீரல் கல்லீரல் ரத்தஓட்டமும் இன்னும் பிற உறுப்புக்களும் நம் உடலில் ஒவ்வொரு செல் அணுவும் மறுநாள் காலையில் புத்தம்புது பொலிவுடன் துலங்கும்.

பழங்களை அது பழுத்தப் பிறகு ஒருநாள் அதிகபட்சமாக விட்டுவைத்தாலும் மேலும் கனிந்து உருகி தானே கசிந்து சொட்ட ஆரம்பித்து விடுகிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் பழங்களுக்கு என்று விசேஷமான ஜீரண சக்தி என்பது எதுவுமின்றி தானே ஜீரணமாக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால் எவ்வளவு பழங்கள் உட்கொண்டாலும் அவற்றை ஜீரணிப்பதற்காக நோயாளியின் வயிற்றிலிருந்து ஒரு அணுஅளவு சக்தியையும் பழங்கள் கிரகிப்பது கிடையாது. பழங்கள் நம் மண்ணீரலுக்கு பாரமில்லாதது ஆகும். கடினமான உணவுகளும் நச்சுக் கலந்த உணவுகளும் மண்ணீரலின் சக்தியை வீணடித்து விரயமாக்கும்.

1. ஜீரணிப்பதற்கு கடினமான உணவுப் பொருட்கள் எதுவெனில் அதிக சுவை மிகுந்த உணவுகளாகும். பலவிதமான செயற்கை சுவையூட்டிகள் வண்ணங்கள் கலக்க கலக்க உணவின் கடினத்தன்மை கூடுகிறது. சகோதரிகளே, முடிந்தவரை உணவின் ருசியைக் கூட்டுவதையும் மிதமிஞ்சிய ருசியை அதிகரிப்பதையும் சமையலில் நம் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் கருதி குறைத்துக் கொள்ளுங்கள்.
2. நச்சுக் கலந்த உணவுப் பொருட்கள் எதுவென்றால், ரசாயன மருந்துகளையும் பூச்சிக் கொல்லிகளையும் தெளித்து விஞ்ஞான முறை என்ற பெயரில் விளைவிக்கும் உணவுப் பொருட்கள் ஆகும். ஆனாலும் கசப்பான உண்மை என்னவென்றால் இவ்வகையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காய்கறிகள்தான். இப்பொழுது நமக்கு பெருமளவில் கிடைக்கிறது. தற்போது இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் காய்கறிகள் விற்கும¢ கடைகள் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டன. கூடுமான வரையில் அந்த உணவுப் பொருட்களை வாங்கி சமையலுக்கு பயன்படுத்துவதே நல்லது. இந்தமாதிரி பொருட்களை உண்ணுவதில் இருந்து நாம் எச்சரிக்கையாக இருப்பதே மண்ணீரலை காப்பாற்றக்கூடிய ஒரே வழியாகும்.
இப்படி ரசாயனம் தெளிக்கப்பட்ட உணவை உண்பதால் நம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய சந்ததிகள் குழந்தைகள் நம்மைவிட அதிக துன்பத்திற்கு ஆளாகப்போவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சரி பழங்களாவது சாப்பிடலாம் என்றால் அதற்கும் ஆபத்து வந்து விட்டது.
நாம் பெரும்பாலும் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சென்று அங்குதான் நல்ல சுத்தமான பழங்கள் கிடைக்கும் என்று வாங்குகிறோம். நல்ல பழங்கள் என்று நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம். அதன் தோல்களில் எந்தவித வடுவும் இல்லாமல் பளீர் என்று பளபளப்பாக இருந்தால் நல்ல பழங்கள் என்று நினைக்கிறோம். பழங்களிலேயே தரங்கெட்டது இந்த வகை பளபளக்கும் பழங்கள்தான்.


பழங்களின் இயற்கைத் தன்மை எப்படிப்பட்டதென்றால், முதலில் காயாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் பழுத்து பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அழுகிவிடும். இந்த விதியின் அடிப்படையில் உள்ள பழங்கள் நல்லது. மரத்தில் பழுத்தாலும் நல்லது அல்லது காயாகவே பறித்து இயற்கை சூழ்நிலையில் பழுக்க வைப்பதும் நல்லது. ஆனால் நாம் பெரிய கடைகளில் வாங்கும் பளபளப்பான பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட, அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள் எதுவும் இயற்கை காலகட்டத்தின்படி பழுக்காது. பழங்கள் சாப்பிட்டதும். தொண்டைப் பொருமல் கரகரப்பு தோன்றுமானால் அது ஒழுங்காக பழுக்காத பழங்கள் ஆகும். இயற்கைச் சூழலில் பழுத்த பழங்கள் எப்படி இருக்குமென்றால் 1. தோலில் பளபளப்பு இருக்காது. 2. சற்றே மங்கலாக இலேசாக தூசு படிந்தாற்போல் இருக்கும். அவற்றில் தோலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பழுப்பு நிற புள்ளிகள் அல்லது வடுக்கள் இருக்கும்.

நாம் பெரிய ஸ்டோர்களில் வாங்கும் பழங்களில் தோலில் பளபளப்பு இருக்கிறது. வடுக்கள் இல்லை. காரணமென்ன? பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடக்கூடாது என்று பலவிதமாக ரசாயன கலவைகளில் குளிப்பாட்டி ஊற வைத்து எடுப்பதுதான். மேலும் நுண்ணுயிர் கிருமிகளையும் பூச்சிக் கொல்லிகளையும் கொல்வதற்காக பழங்களை ஒரு அறையில் கொட்டி அறையை புகையால் நிரப்புகிறார்கள். பின்பு பழங்களை அட்டைப் டப்பாக்களில் அடைக்கிறார்கள் இந்தப் புகையைத்தான் நீங்கள் பழங்களை உண்ணும்போது சாப்பிடுகிறீர்கள். கருப்பு திராட்சைப் பழங்களின் தோலின் மேல் இந்த வெண்புகைப் படிவம் தெளிவாகத் தெரியும். இது அல்லாமல் வேக்ஸிங் என்ற மெழுகுப் பூச்சு வேறு பழங்களின் தோல்களில் பீச்சப்படுகிறது. இதனால் பழங்களை எவ்வளவு கழுவினாலும் மெழுகுகள் அகலாது. இதனால் சாதாரணமாக ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் கனிந்துவிடும். பழங்கள் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கூட பழுக்காமல் உயிரற்றுக் கிடக்கும். பின்னரும் எந்த ஒரு பழமும் முழுமையாக பழுக்காது.
இவற்றையெல்லாம் மீறி வெம்பிப் போய் அரைகுறையாக பழுத்து அழுகும் பழங்கள் ஜாம் ஜுஸ் என்று உருத்தெரியாமல் மாற்றப்பட்டு அழகான பாட்டில்களிலும் அட்டைகளிலும் பியூர் 100% ஜுஸ் என்று விற்பனைக்கு வருகிறது.


சகோதரிகளே!

உங்கள் உடல் நலம் பாதுகாக்க பளபளப்பான தோல்களுடன் மின்னும் பழங்களை கைகளால் தொட்டுக்கூடப் பார்க்காதீர்கள். சாலையோரம் விற்கும் தூசுப்படிந்த மங்கலான பழங்கள் கரும்புள்ளிகளும் பழுப்பு நிற வடுக்களும் பழங்களின் தோல்களில் காணப்படுமானால் அதுதான் நல்ல பழங்கள். ஏன் பழங்கள் மேல் தூசுபடிந்தாற்போல் உள்ளது என்றால் அது பழங்களின் மேல் படரும் காளான்கள் ஆகும். இதனால் விட்டமின் சி போன்ற எண்ணற்ற உயிர்ச்சத்துக்கள் பழங்களில் உருவாகின்றன. பழங்களின் தோல்களை காளான்களும் நுண்ணுயிர் கிருமிகளும் மிருதுவாக்கும் போது பழங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சக்திப் பரிமாற்றங்கள் வேகமாக நிகழும் பொழுது தோல்களில் கரும்புள்ளிக்கும் பழுப்பு நிற வடுக்களும் தோன்றுகின்றது. இவையே உண்ணுவதற்கு ஏற்ற உயிர்ச்சத்துள்ள பழங்கள். உடல் நலனுக்கு உகந்தவை.