அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, September 25, 2012

வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே!


வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே!
உங்களிடம் சில கேள்விகள்:

* வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே சேர்ந்து வாழ, உங்கள் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பத்தடை சாதனங்களை கையில் மறவாமல் கொடுத்து வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கும் மான‌ங்கெட்ட வாழ்க்கைக் கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்க/ஐரோப்பிய சமுதாயமே! ஒழுக்கம் சார்ந்த உயரிய திருமண வாழ்வினை வாழ்ந்துக் காட்டிய‌ முஹம்மத் நபியை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கும் தகுதி உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

* ஒழுக்கமின்மை தலைவிரித்தாடும் கட்டுக்கோப்பில்லாத உங்கள் சமூகத்தின் ஆண்களுக்கு வீட்டில் ஒரு மனைவியும், வெளி உல்லாசத்திற்கு பல பெண்களையும் அனுபவிக்கும் ஒழுக்கக்கேடு உங்களுக்கு அருவருப்பாக‌ தோன்றவில்லையா?

* பெண்ணுரிமை இயக்கங்களைச் சார்ந்த பெண்கள் எனக் கூறிக்கொண்டு, இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வீதியில் போராட்டம் பண்ணும் விபச்சாரிகளை காரித் துப்பாமல், கண் கொட்டாமல் பார்த்து அதை செய்திகளாகவும் வெளியிட உங்களுக்கு வெட்க உணர்வே கொஞ்சமும் இல்லையா?

* ஓரினச் சேர்க்கைக்காக திருமணம் செய்வ‌தை வீடியோக்களாக 
உலகமே பார்க்கும் வண்ணம் பெருமிதத்தோடு வெளியிடும் உங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தினை முற்போக்குத்தனம் என்பீர்களா? 

* ஜெபம் பண்ண வந்த பெண்களையும், சிறுமிகளையும் உங்கள் பாதிரியார்கள் நாசம் பண்ணியதை மத போதகம் என மார்தட்டிக் கொள்வீர்களா?

* நைட் க்ளப்களில்தான் உங்கள் காமவெறியினைத் தணித்துக் கொள்கிறீர்கள் என்றால், சில பொது நிகழ்ச்சிகளிலும் அந்நிய ஆண்களும் பெண்களுமாக கைக் கோர்த்து, ஒட்டி உரசி, உதடோடு உதடுகள் முத்தமிட்டு... (ச்சீ... த்தூ...) உங்களின் நாறிப்போன அந்த கலாச்சாரத்தை நாகரிகம் என்பீர்களா?

* ச‌ன்பாத் எடுக்கிறோம் என்று உங்கள் பெண்கள் டூ பீஸிலும், முழு நிர்வாணமாகவும் கடற்கரை மணல்களில் புரண்டு சூரிய குளியல் எடுப்பதையும், த‌ங்கள் கண்முன்னால் அதை அடுத்தவன் படம் எடுப்பதையும் அனுமதிக்கும் கலாச்சாரத்தினை சூடு, சொரணை இல்லாத சுதந்திரம் என்பீர்களா? 

அந்த அயோக்கியர்கள் அதே கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான் இவ்வளவு சுலபமாக அண்ணல் நபி கண்மணி நாயகத்தின் பெயரில் நிர்வாணக் கார்ட்டூனை கைக்கூசாமல் வரையவும், உண்மைக்கு புறம்பான‌ ஆபாசப் ப‌டமெடுக்கவும் முடிகிறது!

மதுவில் சுகம் காணலாம் என அதை வெறுக்க மனமின்றி வாழும் மக்கள் மத்தியில் மதுவை விஷமாகப் பார்க்கும் ஒரு சமுதாயம்.. வட்டிக்கும், மோசடியான வியாபாரங்களுக்கும் எதிராக போராடும் ஒரு சமுதாயம்..  அந்நிய ஆண் ‍- பெண் சகவாசத்தை அடியோடு வெறுக்கும் ஒரு சமுதாயம்.. காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அந்த 'முஹம்மத்' என்ற இறைத்தூதர் வழியிலும், அவர் மூலம் கிடைக்கப்பெற்ற திருக்குர்ஆனின் வழியிலும் வாழத்துடிக்கும் ஒரு சமுதாயம்..இத்தகைய நேர்வழிக்கு வழிவகுத்துச் சென்ற‌ கண்ணியமிகு ஒரு உத்தமரை இழிவுபடுத்துவதை எவ்வாறு தாங்கிக் கொள்ளும்? ஆனாலும் அதற்காக சில நாடுகளில் குற்றத்தில் சம்ப‌ந்தமில்லாத அப்பாவிகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தக்கூடிய‌ வன்முறையையும் கலவரங்களையும் இஸ்லாமியர்கள் யாரும் ஆதரிக்க முடியாது. உண்மை இஸ்லாத்தினை சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துக் கொள்ளாத ஒருசில முஸ்லிம்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். தவறுக்கேற்ற தண்டனையை தகுந்தவர்களுக்கு கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், அப்பாவிகளின்மீது நடத்தும் வன்முறையை அனுமதிக்கவே இல்லை.  
ஏனெனில் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்! ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாத நிர்பந்தமாக நடந்த போர்களையும், போர் தர்மத்தையும் அழகிய கட்டுப்பாடுகளோடு வரையறுத்து, அதை வலுயுறுத்திய‌ முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவர் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை! இதுபோலவே மனித வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மனிதன் சகமனிதனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள், ஆற்ற‌வேண்டிய கடமைகளைக் கட்டளையாகப் பிறப்பித்து, மனித உரிமை மீறல்களிலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியது இஸ்லாம்!
அப்படிப்பட்ட இஸ்லாத்தினைக் கொண்டுவந்து மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த தன்னையே அர்ப்பணித்த‌ மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தத் துடிக்கும் அயோக்கியர்களே! நீங்கள் உண்மையிலேயே அறிவுடைய மக்களாக இருந்தால்..., 

'முஹம்மத்' என்ற அந்த‌ இறைத் தூதரை இஸ்லாமிய மக்க‌ள் எதற்காக‌ தன் உயிரைவிட மேலாக மதித்து நேசம் கொள்கிறார்கள் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்! முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 'புகழுக்குரியவர்' என்ற தன் பெயருக்கேற்ப வாழ்ந்துக் காட்டிய உண்மை சரித்திரங்களை புரட்டிப் பாருங்கள்! திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினைம் வாக்கினையும் நடுநிலையோடு உற்று கவனியுங்கள்!

கால சூழ்நிலைக்கேற்றவாறு எத்தனையோ தலைவர்களை இவ்வுலகம் கொண்டாடும், புகழ்பாடும்! ஆனால் எந்த தலைவர்களையாவது தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவிலும், மூச்சிலும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சமுதாயமே தன் முழு வாழ்வின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதுண்டா? எங்கோ ஒரு மூலையில், யாரையாவது கைக் காட்டலாம்.. இதோ இவர், இன்ன‌வருடைய வழியைப் பின்பற்றுகிறவர் என! ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அப்படியே அடிக்கு அடி பின்பற்றுபவர்களும்,  அவர்களின் உத்தம வாழ்க்கையை நடுநிலையோடு ஆராய்ந்து, வியந்து, பாராட்டி, தானும் அதுபோன்றதொரு அழகிய கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட (முன்னாள்) மாற்றுமத சகோதர, சகோதரிகளும் இன்றைய வரலாற்றில் ஏராளம்! இதற்கு எந்த‌ நாட்டவர்களும், எந்த மொழியினரும் விதிவிலக்கில்லையே? ஏனென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 

மேலும் உங்கள் நலம் விரும்பி சில‌ எச்சரிக்கைகள்!

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம்  மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்குர்ஆன் 3:54) 
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட மிகப்பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

(அல்குர்ஆன் 61 : 7,8,9)
(குறிப்பு: உண்மைக்கு புறம்பாக ஆபாச‌ படம் எடுத்தவனையும், அதனை பரப்பிக் கொண்டிருப்பவனையும், தன் மதவெறியைத் தணித்துக் கொள்ள‌ நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தவனையும், அதையெல்லாம் ஆதரிக்கும் சிலரையும் கண்டிக்கவே இந்த கட்டுரையே தவிர, நடுநிலையான எண்ணம் கொண்ட மற்றவர்களை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.)

No comments:

Post a Comment