அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, December 9, 2012

நச்சுன்னு ஜமாத்துல் உலமாவுக்கு கொட்டு வைத்த அல்தாஃபி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் பேருதவியால் நேற்று வரதட்சணை ஒழிப்பு மாநாடு நல்ல முறையில் நீடுரிலே நடைபெற்றது. விவாதத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என பொய் பிரச்சாரம் செய்ய December 1 அன்று கூட்டிய கூட்டதிற்கு தக்க பதிலடியாய் நேற்றைய கூட்டம் இருந்தது. நமக்குள் நாமே அடித்துக்கொள்வது நல்லதா என்று சிலர் கேட்கின்றனர்? அவர்களை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி - பொய் பிரச்சாரம் செய்வது சரியா? என்றுதான். தூத்துக்குடி விவாதத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கியதோடு மட்டுமில்லாமல், யூதர்களின் கைக்கூலி என்று சொன்ன ஜமாத்துல் உலாமா சரித்திரத்தையும் எடுத்து வைத்தார் அல்தாஃபி. ஜமாத்துல் உலாமா 1985-ல் நடத்திய கூட்டத்தில் பங்கு பெற்ற மூன்று தலைவர்களை தவிர மற்ற அனைத்து தலைவர்களும் ஏகத்துவம் பற்றிதான் பேசினார்கள், பின்னர் கப்ரு வணக்கத்தை ஆதரித்து பேசிய அந்த மூன்று தலைவர்களையும் இவர்கள் மக்களை வழிக்கெடுப்பவர்கள் என்று கூறி  ஜமாத்துல் உலாமவிலிருந்து நீக்கம் செய்துள்ளனர், அத்தகைய ஜமாத்துல் உலாமாவோடு கைக்கோர்த்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தபட்ட விதாண்டாவாத கூட்டம் தான் December 1 அன்று நடந்தது என்று ஆணித்தரமாக விவரித்தார் அல்தாஃபி. 

அடுத்து தற்போதைய நீடூர் நாட்டாமை துணை இமாம் அபூபக்கர் பேசிய பொறுப்பற்ற பேச்சை சுட்டி காட்டவும் தவறவில்லை, அதில் ஒரு கடையில் சர்பத் பத்து ரூபாய்க்கு விற்கின்றனர், அடுத்த கடையில் விஷத்தை இலவசமாக விற்கின்றனர், இலவசமாக கிடைகின்றது என்பதற்காக விஷத்தைதான் குடிக்க முடியுமா? அல்லது பத்து ரூபாய் என்பதற்காக சர்பத்தை குடிக்காமல் தான் இருக்க முடியுமா? அது போல் தான் இந்த தவ்ஹீத்காரர்கள், இவர்கள் விஷம் போன்றவர்கள் என்று தன்னுடைய அதிமேதாவிதனத்தை வெளிகாட்டியுள்ளார் இந்த அபூபக்கர். இதன் மூலம் ஒரு இமாம் பகிரங்கமாக வரதட்சணை ஆதரித்து பேசியது எவ்வளவு கீழ்தரமான செயல். வரதட்சணையால் நம்மூர் நீடுரிலையே எத்தனை குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது இவருக்கு தெரியாமல் போயிற்றா? அடுத்து குர்ஆனில் எழுத்து பிழை என்று தவ்ஹீத் ஜமாத் மட்டும்தான் கூறுகின்றதா? என்று கேட்டுவிட்டு ஆயிஷா (ரலி) சொன்ன ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கமாக விவரித்தார் அல்தாஃபி. இங்கே நாம் குறியது ஒரு மேலோட்டம் தான், மாநாட்டை பார்க்காதவர்கள் கண்டிப்பாக சிடீ வாங்கி பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பார்த்தால் தான் எது உண்மை என்பது உங்களுக்கு தானாகவே தெரியவரும்.


5 comments:

  1. வரதட்சணை ஒழிப்பு மாநாடு???

    ReplyDelete
    Replies
    1. enimelavathu thirunthatum mr.aboobakker

      Delete
    2. வரதட்சணை(க்கு வக்காலத்து வாங்குபவர்களை) ஒழிக்கும் மாநாடு என்றுதான் வைத்துக்கொள்ள கூடாதா?

      Delete
  2. நடுநிலையன இணையதளம் என்று சிலர் நமதூர் தளம் ஒன்றில் எழுதியிருந்தார்கள். ஆனால் அந்த இணையதளம் நடுநிலையானதாக இருந்தால் ஏன்? மற்ற செய்திகளை போடுவதில்லை. வெற்றிவிழாவுக்க நிருபரை அனுப்பியவர்கள் அன்று காலை நடந்த முத்தவல்லிகள் கூட்டத்துக்கு அனுப்பி ஏன் செய்தி போடவில்லை. மேலும் தவ்ஹீது ஜமாத்து ஒரு கூட்டம நடத்துச்சே அதை பற்றி நடுநிலை தளம் ஒன்றும் வாய்திறக்க வில்லையே இதுதான் நடுநிலையா? நிர்வாகிகளுக்கு பயப்படாதீங்கோ அல்லாஹ்வுக்கு பயப்படுங்கோ.

    ReplyDelete