அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, March 16, 2013

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்


வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்


பொதுமக்களின் பயன்பாட்டிற்காகஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், 'வாக்காளர் பட்டியல்களை',இணையத்தில் பதிப்பித்திருக்கின்றன. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தேட முடியும்
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை தேடுவதற்கு உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
  • ஜனவரி 01, 2010 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால்தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - பயன்படுத்தவேண்டும்.
  • படிவம்- டன், 2 வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கவேண்டும்.
  • பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)
  • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குபுத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்
  • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல்மரணம்அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால்ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
  • இதற்காகபடிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்
  • உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில்வயதில் அல்லதுதகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
  • தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள்
  • அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்க்கானவிண்ணப்பம்
  • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால்அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
  • இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
  • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குபுத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள்
விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்
நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால்,உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க:
  • துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )
  • அஞ்சல் அலுவலகங்கள்
  • வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் இடுபெட்டிகள்.
  • பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
நகராட்சி எல்லைக்கு நீங்கள் வசிப்பவராக இருந்தால்,உங்களுடைய மாவட்டங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
  • துணை ஆட்சியரின் அலுவலகம்
  • வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
  • வட்டாட்சியர் அலுவலகம் ( துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

Monday, March 11, 2013

தொப்பை குறைய வழிகள்


பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும். மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.

பீன்ஸ் 
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.

அவகேடோ

உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய்

பொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சமையல் எண்ணெய்கள்

ஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.

காய்கறிகள்

காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.

ஓட்ஸ்

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.

பூண்டு

நறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.

முட்டை

ஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.

செலரி

கொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

இஞ்சி

இஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.

பட்டை

மசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.

பேரிக்காய்

பேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

குளிர்ந்த நீர்

தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.

தினை

தானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

சிவப்பு மிளகாய்

நிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.

Thursday, March 7, 2013

போப் ஆண்டவர் இஸ்லாத்தை ஏற்றாரா?


கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர் என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர். 

போப் ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெண்டிக்ட், தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார். 


முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து 28ஆம் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


போப் ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க 
கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பாகும். 
அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக் கொம்புதான். 


இதற்கு முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர் பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக தற்போதும் திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம் பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. 


கிறித்தவமக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் : 

இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் இவர்தான். ஓரினச்சேர்க்கை புரிவது, அவ்வாறு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டப்பூர்வமாக சாஸ்திர சம்பிராதயங்களுடன் தேவாலயங்களில் கிறித்தவ முறைப்படி திருமணம் முடித்து வைக்கும் கேவலங்களும் ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன. 


இந்தக் கேவலத்தை எதிர்த்த ஒரே போப் இவர் மட்டும்தான். ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் செயலானது சமூகத்தின் ஒழுங்கு நிலையை பாதிக்கும் எனவும், திருமணத்தின் சட்டரீதியான வரையறையை இத்தகைய அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைக்கின்றன என்றும் அதிரடியாக அறிவிப்புச் செய்தார். 


ஓரினச் சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில் வலியுறுத்துமாறு எல்லா ஆயர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார். 


இது கிறித்தவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவாலயங்கள் அதிகாரப்பூர்வமாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்தி ஒழுக்கத்தை நிலைநாட்டி(?) 
வரும்போது, இவர் அதைத் தடுப்பது சரியில்லை என்றும், இவருக்கு எதிராக ஸ்பெயினில் போராட்டம் நடைபெற்றது; 

ஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ள கிறித்தவர்கள் போப் வரவிருந்த சாலையில் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து 
ஒழுக்கத்தை நிலைநாட்டிய(?) செய்திகள் அனைவரும் அறிந்ததே! அப்போதே அவரை பதவி விலகச் சொல்லி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. 


அதுமட்டுமல்லாமல், கருத்தடை செய்வதற்கு எதிராகவும் தனது கண்டனத்தைத் துணிவோடு இவர் பதிவு செய்தார். 


பாதிரியார்கள் செய்யும் பாலியல் அட்டகாசங்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய ஒரே போப்பும் இவர்தான். 


இப்படி இவர் செய்த சாதனைகள் நிறைய உள்ளன. இவர் செய்த சாதனைகள் எல்லாம் கிறித்தவ மக்களுக்கு சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்ததால் இவரை மிரட்டி, லுக்கட்டாயமாக 
ராஜினாமா வாங்கியுள்ளனர் என்று தற்போது செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. 


போப் ஆண்டவரது ராஜினாமா இயற்கையானது அல்ல என்றும், அதற்கு பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும், இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகள் உண்மையைப் புட்டுப் புட்டு வைத்தன. எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய இத்தாலியிலுள்ள வாடிகன் நிர்வாகம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி கீழ்க்கண்ட அறிக்கையை கடந்த வாரம் 
வெளியிட்டுள்ளது : 


இதுகுறித்து, டிகன்அதிகாரிபெடரிக்கோலொபர்டியோகூறியதாவது: 


போப் பதவி விலகுவது, 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து, பத்திரிகைகள் அவதூக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த வதந்திகள், திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. வாடிகனில், சில பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தி யடைந்ததால்தான், போப் பதவி விலக தீர்மானித்ததாக, இத்தாலி நாட்டின், “லா ரிப்பப்ளிக்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக, சில பத்திரிகைகள் கூறியுள்ளன. 


வாடிகனில் உள்ள சில கார்டினல்கள் குறித்தும், தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன. “புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கூட, சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும்‘ என்றும், பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இவ்வாறு, பெடரிக்கோ லொபர்டியோ கூறியுள்ளார். 


மேற்கண்ட அறிக்கையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று வாடிகன் நிர்வாகம் நிரூபித்துள்ளது. எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், அதை போப் தனது வாயால் அறிவித்திருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் உலகளாவிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலும் அதை மறுப்பதும்கூட வாடிகன் நிர்வாகம்தான் எனும்போது, இதுகுறித்த சந்தேகம் இன்னும் வலுக்கின்றது. 


மேலும், போப் பதவி விலகிய கடைசி நாள் தனது ராஜினாமா குறித்து சொல்லப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பளித்து உரை நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் எதையும் அவர் தனது இறுதி 
உரையில் மறுக்கவில்லை. மாறாக அதை வலுப்படுத்தக்கூடிய விதத்தில்தான் வார்த்தைகளை கூறினார். அதாவது தன்னை ஓய்வு பெறச் சொல்லி கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக சூசகமாக 
தெரிவித்துள்ளார். 


போப்பையே மிரட்டக்கூடிய அளவிற்கு எனக்குமேல் உள்ள கடவுள் என்னிடம் ராஜினாமா செய்யச் சொன்னதன் விளைவாக நான் ராஜினாமா செய்கின்றேன் என்பதுதான் இதன் பொருள். அந்த 
அளவிற்கு இவர் மிரட்டப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.

• ஓரினச்சேர்க்கைக்குஎதிர்ப்பு 

• கருத்தடைக்குஎதிர்ப்பு 

• பாலியல்பாதிரியார்களுக்குஎதிர்ப்பு 

• பாதிரியார்களால்பாலியல்சேட்டைகளுக்குஆளாக்கப்பட்டவர்களிடம்மன்னிப்பு 


என்று துணிச்சலான முடிவுகளை அறிவித்து அதிரடியாக ஆக்ஸனில் இறங்கிய இவர்தான் தற்போது பலவீனமாக உள்ளதாக கதை அளக்கின்றது வாடிகன் நிர்வாகம். இதுவரை வந்த போப்களிலேயே 16ஆம் பெண்டிக்ட் அவர்களைப்போல துணிச்சல் மிக்க, பலமான போப் யாரும் இருந்ததில்லை என்று 
அனைவரும் சொல்லும் வேளையில், இவர் ரொம்ப பலவீனம் அடைந்துவிட்டதால் ராஜினாமா செய்கின்றார் என்று வாடிகன் நிர்வாகம் அனைவரது காதிலும் பூச்சுற்றும் வேலையைப் 
பார்த்துள்ளது. 


கிறித்தவ ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் ஆகியோருக்கு எதிரான மேற்கண்ட அதிரடி அறிவிப்புகள் மட்டும் போப் எதிர்ப்பாளர்களுக்கு கோபத்தை 
ஏற்படுத்தவில்லை. மாறாக இஸ்லாம் குறித்து போப் 16ஆம் பெண்டிக்ட் கூறிய பல செய்திகள் கிறித்தவ மக்களை சிந்திக்க வைத்துள்ளது. 


இஸ்லாம் குறித்து போப் கூறி யகருத்துக்கள்:

• இஸ்லாம்தான்இந்தஉலகில்அதிகமாகவளர்ந்துவரக்கூடியமார்க்கமாகஉள்ளது. 

• இஸ்லாமியர்கள்தான்பெரும்பான்மையானவர்களாகஇந்தஉலகில்தற்போதுமாறியுள்ளார்கள். 

• இஸ்லாம்அபரிதமானவளர்ச்சியைதற்போதுஅடைந்துவருகின்றது; 

• இந்தநூற்றாண்டின்இறுதியில்இதைவிடஇன்னும்பலமடங்குஅதுவளர்ச்சியடையும். 


என்று இஸ்லாம் குறித்து இவர் சொன்ன கருத்துக்கள் உண்மையிலேயே துணிச்சலான கருத்துக்கள்தான். 


அதோடுமட்டுமல்லாமல், இஸ்லாத்தின் வளர்ச்சியை சிலாகித்துச் சொன்ன போப் அவர்கள் கிறித்தவ மக்கள் மத்தியில் நிலவக்கூடிய தவறான நம்பிக்கைகளையும் போட்டு உடைத்தார். 

போப் 16ஆம் பெண்டிக்ட் எழுதி வெளியிட்ட நூல், “jesus of nazareth the infancy narratives” (ஜீஸஸ் ஆஃப் நாசரேத்) ஆகும். இந்த நூலில் இயேசு குறித்த பல உண்மைகளை துணிச்சலோடு இந்த உலகிற்கு அறிவித்தார். 

அந்தப் புத்தகத்தில் அவர் அளித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் பின்வருமாறு: 

• டிசம்பர் 25ஆம் தேதியை இயேசுவுடைய பிறந்தநாள் என்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அது தவறு. 

• இயேசுடிசம்பர் 25ஆம்தேதிதான்பிறந்தார்என்பதற்குஎவ்விதமானஆதாரமும்இல்லை. 

• இயேசுபிறந்ததுமாட்டுத்தொழுவத்தில்தான்என்பதுதவறு. அதற்கும்பைபிளில்ஆதாரம்இல்லை. 

• இயேசுபிறக்கும்போதுதேவதைகள்வந்தார்கள்என்றுசொல்லப்படுவதற்கும்ஆதாரம்இல்லை. 

•இயேசுபிறந்தவருடம்என்றுசொல்லப்படக்கூடியவருடத்தையும்தவறாகத்தான்சொல்லியுள்ளார்கள், அதுவும்தவறு. 


என பல விஷயங்களை துணிச்சலோடு சொல்லக்கூடிய அளவிற்கு துணிவும், தைரியமும் கொண்ட ஒரே போப்பாக இவர் திகழ்ந்துள்ளார். 


அதுமட்டுமல்லாமல், பர்னபாஸ் என்ற இயேசுவின் சீடர் எழுதிய செய்திகள் அடங்கிய ஒரு புராதன பைபிள் ஒன்று சென்ற 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்புகள் 
உள்ளன என்றும், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற செய்திகளும் உள்ளது என்றும் பல உண்மைகள் வெளிவந்தன. அப்போது அந்த பைபிளை, தான் பார்க்க விரும்புவதாக 
வெளிப்படையாக அறிவித்தார் போப் 16ஆம் பெண்டிக்ட். 


இப்படி இஸ்லாத்திற்கு ஆதாரவாகவும், கிறித்தவத்திற்கு எதிராகவும் உண்மையைச் சொன்னதும்கூட இவரை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றுள்ளது என்பதுதான் தற்போது நடுநிலையாளர்களின் ஒரே கவலை. 


எது எப்படியோ பாமர மக்களைக் காட்டிலும் படித்த பாதிரியார்களுக்குத்தான் எது 
சத்தியம் என்பது தெளிவாக தெரிந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கிறித்தவர்களின் மத நம்பிக்கையில் உள்ள குறைபாடுகளும், இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்ற சத்தியமும் இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களது மனசாட்சிக்கு தெரிந்திருக்கும். 


அவர் கூடிய விரைவில் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிமாக மரணிக்க அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். 

கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டியதருணம் : 


கத்தோலிக்க கிறித்தவர்கள் தங்களது ஆன்மீகத்தலைவராக போப் ஆண்டவரை நம்புகின்றனர். அவரது பிரார்த்தனை இருக்குமேயானால், நமக்கு அவரது ஆசி மூலம் அனைத்தும் 
கிடைத்துவிடும் என்றும் நம்புகின்றனர். 


மனிதனுக்கு மிஞ்சிய மாபெரும் ஆற்றலும், கடவுள் தன்மையும் அவருக்கு உள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி அவர் மீது மேலாடுவதாகவும் நம்புகின்றனர். அதனால்தான் தங்களது நோய் தீருவதற்கும், தங்கள் வாழ்வில் நல்லவைகள் 
நடப்பதற்கும் அவரிடத்தில் இவர்கள் கையேந்தும் நிலை உள்ளது. 


இப்படி இவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் நம்புவதற்கு ஏற்றாற்போல ஆற்றல்களுடன் போப் ஆண்டவர் உள்ளாரா என்பதை அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர். 


போப் ராஜினாமா செய்வதற்கு வெளியே சொல்லாத பல காரணங்கள் இருந்தபோதும், வாடிகன் நிர்வாகம் வெளிப்படையாக கூறியுள்ள காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். 


முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத்தான் அவர் பதவி விலகுகின்றார் என்பதே அவர்கள் கூறிய காரணம். அப்படியானால் அனைத்து ஆற்றலும் பெற்ற ஓர் ஆன்மீகத்தலைவர், பல அற்புதங்கள் செய்ய சக்தி பெற்றவராக அவர்களால் கருதப்பட்ட போப் ஆண்டவர், தனது சிறப்பு(?) பிரார்த்தனையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களது நோயை நீக்கி வைத்ததாக அவர்கள் கருதக்கூடிய போப் ஆண்டவர், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக போப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார் என்றால், இவர்களது இவ்வளவுகால நம்பிக்கை தரைமட்டமாக்கப்பட்டு தவிடுபொடியாக ஆக்கப்பட்டுள்ளதா, 
இல்லையா? 


தனக்குத்தானே தனது முதுமையை போக்கிக் கொள்ள இயலாத, தனது உடல் நலக்குறைவை சரி செய்து கொள்ள இயலாத போப்களா இத்தனை நாட்கள் அனைவரது நோயையும் தீர்த்து வைத்தார்கள் என்று கிறித்தவ சகோதரர்கள் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்? 


இரண்டு வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து போப் ஆண்டவரது கை உடைந்ததே! அவர் தன்னுடைய உடைந்த கையை சரி செய்வதற்கு எந்த ஜெபக்கூட்டத்திற்குமோ, எந்த அற்புத பெருவிழாவுக்கோ செல்லவில்லை. மாறாக அங்கிருந்த மருத்துவமனைக்குச் சென்றுதான் கட்டுப்போட்டுவிட்டு வந்தார். 


அனைவருக்கும் ஆசி வழங்கக்கூடிய தனது கை உடைந்தபோது, பிறருக்கு ஆசி வழங்கக்கூடிய அவரது கையால் அவரது கைக்கே ஆசி வழங்க இயலவில்லை எனும்போது, இவரது கையை வைத்து 
பிறருக்கு எப்படி இவர் ஆசி வழங்குவார் என்று கிறித்தவ சகோதரர்கள் நம்ப மறுப்பது ஏன்? 


போப் அவர்கள் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் அனைத்து நிலைகளிலும் மனிதனாகத்தான் இருந்துள்ளார். அவர் மனிதன் என்பதை நிரூபித்தும் வருகின்றார் என்று 
தெள்ளத்தெளிவாக யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ, போப் பதவியிலிருந்த 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தே இருக்கும். அதனால்தான் அவர் பல 
உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். போப்புக்கு தெரிந்த உண்மையை கிறித்தவ சகோதரர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆவல். 


குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் அடுத்த ஆதாரம்: 


கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போப் ஆண்டவரின் கடிதங்களை திருடி ஒரு பத்திரிகையாளரிடம் கொடுத்த வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை 
விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் அண்மையில் ரோமன் கத்தோலிக்க தேவாலய தலைமையகத்தில் நிலவும் உட்பூசல் மற்றும் ஊழல் பற்றி புத்தகம் எழுதியிருந்தார். 
இந்தப் புத்தகத்துக்காக போப் ஆண்டவரின் கடிதங்களை போப் மாளிகை சமையல்காரரான பாலோ கேப்ரியல் திருடிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ 
கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும் 
கெடுதல்கள் மற்றும் திருச்சபைகளில் நடக்கும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன். இந்தப் புத்தகம் மூலம் அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். 


இவ்வழக்கில் பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார். 


மேற்கண்ட சம்பவத்தில் பாதிரியார்கள் செய்யும் திருகுதாளங்கள் மற்றும் ஊழல்கள் சம்பந்தமாக போப் வைத்திருந்த ஆவணங்களை வாடிகனில் உள்ள சமையல்காரர் திருடியுள்ளார். அதில் பாதிரியார்களின் பலான செய்திகள் மற்றும் ஊழல்கள் குறித்த செய்திகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளன. அதை வைத்துத்தான் சிறப்பு புத்தகத்தை கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ளார். இது போப் பதவி விலக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. இத்தாலி பத்திரிக்கைகளே பல மாதங்களுக்கு முன்னர் சொல்லிவிட்டன. அவ்வாறு இத்தாலி பத்திரிக்கைகள் சொன்ன செய்திகளை ஏற்கனவே வாடிகன் நிர்வாகம் மறுத்தது. இப்போது அது உண்மையாகியுள்ளது. 


இதோ அது குறித்து முன்னர் வந்த செய்தி : 


போப்பாண்டவர்ராஜினாமாசெய்வதாகவந்தசெய்திக்குவாடிகன்கண்டனம்! 


கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை, வாடிகன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். 
இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த 
பரபரப்பான செய்தியை எழுதி இருந்தார். 


அதில், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றச் சாட்டுகளால், போப் மனமுடைந்து காணப்படுகிறார். அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 85 வயது 
நிறைவடைந்த உடன், போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


மற்ற இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்தச் செய்தி வெளியாகி இருந்தது. டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் 
பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால், அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் செய்திகளை வாடிகன் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். 


இதுகுறித்து வாடிகன் நகர செய்தித்தொடர்பாளர் பாதிரியார் பிடரிக்கோலோம்பார்டி கூறியதாவது: 

போப்பின் உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும் எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை. ஜெர்மனிக்கு சென்றபோதும் அவருக்கு 
எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது. ராஜினாமா குறித்த தகவல்களை எழுதியவர்களிடமே 
கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார், என்றார். 


இதுகுறித்துசெய்திவெளியிட்டநிருபர்ஆண்டோனியோகூறியதாவது: 


இந்த வதந்தியை கிளப்பி விட்டதே, வாடிகன் நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான். ராஜினாமா செய்வது குறித்த தகவலை, போப் இதுவரை மறுக்கவே இல்லை, என்றார். 


அதாவது பாலியல் சேட்டைகள் செய்யும் பாதிரிகளையும், ஊழல் பெருச்சாலிகளையும் ஒழிக்க இயலவில்லை. இவர்களுக்கு தலைமைதாங்கி இனிவேலையில்லை என்று பாதிரியார்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக 85 வயது முடிந்தவுடன் போப் ராஜினாமா செய்யப்போவதாக இதற்கு முன்பே இத்தாலி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுவிட்டன. 


இப்போது எப்படி வாடிகன் நிர்வாகம் நாம் சொல்லக்கூடிய காரணங்களை மறுத்து அறிக்கை வெளியிட்டார்களோ அதுபோல அப்போதும் வாடிகன் நிர்வாகம் அதை மறுத்து போப் நல்ல 
உடல்நிலையில் உள்ளார்; அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று செய்தி வெளியிட்டது. 


ஆனால் இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏற்கனவே போப் ராஜினாமா தொடர்பாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை வாடிகன் மறுத்தது. ஆனால் வாடிகன் நிர்வாகம் மறுத்த விஷயம் இப்போது நடந்துவிட்டது. போப் ராஜினாமா செய்துள்ளார். இப்போது வாடிகன் நிர்வாகம் ஏற்கனவே மறுத்த செய்தி உண்மையாகிவிட்டது. இதன் மூலம் வாடிகன் 
நிர்வாகத்தின் அறிவிப்பு பொய் என்பதும் நிரூபணமாகியுள்ளது. 


அதுபோல தற்போது வாடிகன் நிர்வாகம் மறுத்துள்ள போப் குறித்த செய்திகளும் உண்மை என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும். இன்ஷா அல்லாஹ்...


source: onlinepj.com

நட்பு பற்றிய ஒர் இஸ்லாமிய கண்ணோட்டம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் :
“நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.” அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ رَضِيَ اللَّهُ عَنْهُ  ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது.  நபி صلى الله عليه وسلمஅவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.
சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர்
எனவே தான் நபி صلى الله عليه وسلم  அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.”
பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றிய நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.
நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.
நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரமும் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை – உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.
எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.
இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்பதியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ – பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.
நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.
மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது.பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபிصلى الله عليه وسلمஅவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.
“ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.” (ஆதாரம் : அபூதாவூது).
எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறுஅமைகிறது.
“அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி அய்யோ பாவம் செய்யும்படி தூண்டிய இன்ன மனிதனை என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தன் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஐஷத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்).”  (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)
அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன.
புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.
“இறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம்.” (அபூதாவுது, திர்மிதி)
நட்பு அல்லாஹ்வுக்கு அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்.
“மறுமை நாளில் அல்லாஹ{த்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான்.” (முஸ்லிம்)
வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.
“முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர்.” ( சூரா அத்தவ்பா : 71)
நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறுஉலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.
எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.

இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக