அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, April 26, 2013

மறைவான இணைவைப்பு


மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்அவர்கள் சொன்னார்கள். ‘நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித்தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டபோது, அவர்கள் ‘ரியா” என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்
அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கriத்துக் கொள்கிறார்.” என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி
அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
‘ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்.” ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.
‘இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்” நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்
மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்…
‘அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்.” நூல்: அபூதாவூத், இப்னு மாஜா
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான் ‘பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்” நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
இந்த வகையான ரியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, ‘மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?” என்று வினவினார்கள். அண்ணல் நபி அவர்கள் ‘ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்கரித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு” என்று நபி  விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா
அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் ‘மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) ‘அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?” என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்…
‘அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்” என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். நூல்: அஹ்மத்

Thursday, April 25, 2013

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!


இதை பலமுறை கேட்டதுதான், கேட்டவர்கள் எத்தனை பேர் திருந்தினர்? நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,
மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.
இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!
போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?
இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.
அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!
பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.
இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?
விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?
இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிரதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!
வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,
சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.என இன்று வீரசபதம் ஏற்போமாக!
‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)
source  http://albaqavi.com/

Wednesday, April 24, 2013

உங்கள் தேர்வு! (கோபம்)


(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)
பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.
ஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.
கோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம்தான். கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன், அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (உ.ம்) தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்து விடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.
கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று சிந்தித்துப் பார்த்தால்…. நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். சே… அவசரப்பட்டு விட்டோமே… அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இந்தக் கேள்வியைத் தாண்டி வராத மனிதர்களே யாரும் இருக்க முடியாது. கோபத்தோடு ஒருவன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால் … அவன் நஷ்டத்தோடுதான் உட்கார வேண்டியது ஏற்படும். கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள் வேண்டும்.
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள்.  அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காணபீர்கள். (41:34)
ஒருவனை மன்னிப்பதின் மூலம் அவனுடைய அன்பு, நன்றி உணர்வு போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெற முடியும். இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மன அமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல; எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் ஆளாகிறோம். கோபத்தில் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா? இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையா? என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் நெறிநூலாகிய அல்குர்ஆன் கூறுகிறது: நிலைகுலையாது நின்று மன்னிக்கும் மாண்புடையோர், நிச்சயமாக இது உறுதி படைத்த நெஞ்சினரின் பணியாகவன்றோ உள்ளது? (42:43)
எனவே, அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13)
நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால், அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே-செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும். (அபூதாவூத்)
அதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு அமைதி காப்பது? நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டால் தானே, மனது ஆறும்! என்று நீங்கள் கேட்கலாம்… உங்கள் மனதை ஆறுதலாக்க கூடிய இந்த நபி மொழியைக் கொஞ்சம் சிந்தியுங்கள்!
ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய் தாக்கி விடுவதில்லை. அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப் படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது. ஆனால் வானத்தின் கதவுகள் மூடப் பட்டிருக்கும். உடனே அது இந்த பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே பூமியின் கதவுகளும் மூடப்பட்டு விடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது. இதற்குப் பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத் தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்ச நேரம் நின்று யோசிக்கும். உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும். இல்லையயன்றால் …. சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன தெளிவான அந்த செய்தியானது அபூதாவூத் என்ற நபி மொழி நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
நம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள், நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? இத்தகைய மனோநிலை, நம் வீட்டில், சமூகத்தில், மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள் தோன்றுமா? குழப்பங்கள் உருவாகுமா? சிந்தியுங்கள்?
நமக்குத் துன்பம் தருபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் அல்ல! ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம்? அப்படிச் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியுமா? என்பதைச் சற்று சிந்தியுங்கள். அப்படியானால் எனக்குத் துன்பம் விளைவிப்பவனை, என்னை அவமானத்திற்கு உள்ளாக்குபவனை நான் என்ன தான் செய்வது? மன்னித்து விடுங்கள்!
பலவிதங்களிலும் நமக்கு உதவி செய்யக் கூடியது பல்; ஆனால் சில சமயங்களில் தவறி நமது நாக்கைக் கடித்து விடுவது உண்டு. அப்போது அதன் மீது ஆத்திரப்பட்டு தண்டனை கொடுத்துவிடவா செய்கிறோம்? ஏதோ தவறு நடந்து விட்டது என்று பொறுத்துக் கொள்கிறோம். அது போலத்தான் நமக்குத் துன்பம் விளைவிப்போரை பொறுத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு பிரச்சனை என்று வரும்போது நம்மிடம் தோன்றக் கூடிய முதல் விஷயம் டென்ஷன்!. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. இந்த டென்ஷனுடனும், கோபத்துடனும் ஒரு பிரச்சனையை அணுகும்போது அந்த காரியம் சிந்திய காரியமாகிவிடும். மேலும் பிரச்சனைகளைத் தவறாக அணுகிடும்போது மேலும் சிக்கலாக்கிக் கொள்வது தான் மனிதர்களின் வழக்கம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு சரியான தீர்வு இருக்கிறது. அதை எப்படிக் கண்டுபிடித்துச் செயல்படுத்துவது என்பதில் தான் திறமை அடங்கியிருக்கிறது. எந்த பிரச்சனை என்றாலும் முதலில் கோபம் அல்லது உணர்ச்சி வசப்படக் கூடாது. யார் அல்லது எதன் மேல் தப்பு/ தவறு என்று எடுத்த உடன் முடிவுக்கு வரக்கூடாது. இதுதான் இதற்குத் தீர்வு என்று உடனடியாகத் தீர்மானிக்கக் கூடாது. எல்லா பக்கங்களில் இருந்தும் யோசிக்க வேண்டும்.
பிரச்சனைகளை கிரியேட்டிவாக அணுகுவது சிறப்புக்குரியது. கிரியேட்டிவாக பிரச்சனையை அணுகுவது என்பது, பிரச்சனையின் எல்லா கோணங்களையும் தெளிவாக ஆராய்ந்து அதற்குரிய சரியான தீர்வைக் கண்டடைவது தான் அது; கிரியேட்டிவ் திங்கிங். இதற்கு இறைநம்பிக்கை, இறையச்சம், நியாயம், நிதானம், லேட்டரல் திங்கிங் எனப்படும் பலமுகப் பார்வை இதெல்லாமே தேவைப்படும். நாம் சில வேளை தவறுகள் புரிந்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுகிறோம். அதை இறைவன் மன்னித்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். என் இறைவன் என்னுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என விரும்பக்கூடிய நாம், நமது சக மனிதர்களின் குற்றங்களை மன்னிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது முரண் இல்லையா….. என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்.
இறுதியாக நம் மனப் பதிவுக்கான செய்திகளோடு இறுதி முடிவுக்கு வருவோம். இன்னல் தந்தவர்களுக்கும் நீங்கள் இன்பம் தர முயலுங்கள். இந்தக் கருத்தை இறைவனின் நெறிநூலாகிய அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நன்மையும் தீமையும் சமமாகி விடாது; நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்போது, யார் உங்களுக்கு கடும் விரோதியாக இருந்தாரோ அவர் உங்களின் உற்ற நண்பராக மாறி விடுவார். (41:34)
எனவே, கோபமும் முகச்சுளிப்பும் நம்மைத் தனித் தீவுகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? இல்லை பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மை தோப்புகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? பதில் உங்கள் விருப்பம்.
”உங்களில் வீரன் யார் தெரியுமா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். குத்துச் சண்டை யுத்தத்தில் எதிரியை வீழ்த்துபவன் வீரன் அல்ல; தனக்குக் கோபம் வரும்போது அதனை அடக்கி ஆள்பவனே உண்மையான வீரன் ஆவான்” என்று அதற்கு பதிலும் அளித்தார்கள்.

courtesy: readislam.net

Tuesday, April 23, 2013

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் உலக நிகழ்வுகள்


சமீபத்தில் யூத விஞ்ஞானி ஒருவர் இஸ்லாத்தை தழுவினார் ஏன்?

கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர் இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்கு செய்யப்பட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே- அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்யவேண்டும் என்று திருக்குர்ஆன் (2:228) கூறுகின்றது. இந்த வசனத்தை படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார் ஏன்? அப்படி என்ன அதில் அவர் கண்டுவிட்டார்? தொடர்ந்து படியுங்கள்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டிஎன்எ ரேகைப் பதிவு (DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டிஎன்எ ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்கு பின் அழிந்துவிடும் என அவரது ஆய்வு கூறியது. இது தொடர்பாக எகிப்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மத் சயீத் கூறுகிறார் - அறிவியல் சான்றுகளை அடிப்படையாக கொண்டே ராபர்ட் இஸ்லாத்தை தழுவினார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனக்குரிய ரேகையை பெண்ணிடத்தில் விட்டுச் செல்கிறான், அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுப்பிடித்தார். அதற்கேற்ப அமெரிக்காவில் ஆப்பிரிக்கா முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவான்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவ பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி தம்முடைய மூன்று பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே தமக்கு பிறந்தவர் என்ற உண்மையையும் அவரைத் தாக்கியது.

ஆக இதிலிருந்து மூன்று மாத “இத்தா” ஏன் என்பதற்க்கு காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டிஎன்எ ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டாள் டிஎன்எ பரிசோதனையில் குழப்பம் வராது. இல்லையேல் மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டிஎன்எ வும் முந்தைய கணவனின் டிஎன்எ வும் ஒத்துப்போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

சத்திய மார்க்கம் இஸ்லாம் உலக விஷயங்கள் அனைத்திற்க்கும் ஒரு நல்ல தீர்வு.

நன்றி: tamilislammedia.com


Monday, April 22, 2013

தாய் தந்தையர் பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள்

“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!

நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-

“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”

என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.

எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.

“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)

இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.

தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:

“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.

இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :

தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)

மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)

மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்
நன்றி :M. நிஃமத்துல்லாஹ்

Sunday, April 21, 2013

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?


கொ

டுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான்.
ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013மார்ச் 4-15இல் ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம்அல்லது சட்டத்தின் (Act)பெயராகும்.
பெயரைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். பொதுவாகவே ஐ.நா.வின் தலைப்புகள் கவர்ச்சியானவையாகவும் சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்துபவையாகவுமே இருக்கும். அப்படித்தான் இதுவும்.
தலைப்பைப் பார்த்துவிட்டுஉலக நாடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஐ.நா. சாவுமணி அடிக்கப்போகிறது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள். போர்களில் எதிரிகளின் இராணுவ வீரர்கள் (ஆண்கள்) அந்த நாட்டின் பெண்கள்மீது நடத்தும் பாலியல் பலாத்காரங்கள்பெண்களைக் கடத்தும் சம்பவங்கள்,விபசாரத்தில் ஈடுபடுத்தல்இயல்பான அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்தல் ஆகிய கொடுமைகளுக்கெதிரான தீர்மானம்தான் இது என்று எண்ணிவிடாதீர்கள்!
இன்று சிரியாவில் பெண்களுக்கெதிராக அந்நாட்டு காட்டுமிராண்டி இராணுவம் கட்டவிழ்த்திருக்கும் கொடுமைகள்பாலஸ்தீனம்இராக்ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அந்நாட்டுப் பெண்களுக்கெதிராக அந்தியப் படைகள் இழைத்துவரும் வன்கொடுமைகள்மாலிமியான்மர் போன்ற நாடுகளில் அப்பாவி முஸ்லிம் பெண்களுக்கெதிராக அந்நாடுகளின் தீவிரவாதிகளும் காவல்படையினரும் நடத்தும் அக்கிரமங்கள்வசதியான நாடுகளில் வீட்டு வேலைகள் பார்க்கும் ஏழைநாட்டுப் பெண்கள்மீது வீட்டு எசமானர்கள் செய்யும் கொடுமைகள் போன்ற எதையேனும் ஐ.நா. தீர்மானம் தடுக்கப்போகிறது என்று கனவிலும் நினைத்துவிடாதீர்கள்!
தீர்மானம் என்ன சொல்கிறது?
வேறு என்னதான் சொல்கிறது அச்சட்டம்நீங்களே படியுங்கள் அந்தப் புனித (?)சட்டத்தை:
1.     இளம்பெண்களுக்கு முழுப் பாலினச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்ஒரு பெண் பெண்ணையோஅல்லது ஒரு பெண் ஆணையோ வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும். 
2.     பருவ வயதை நெருங்கும் சிறுமிகளுக்குக் கர்ப்பத் தடை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுடன் கருக்கலைப்புக்கு அனுமதியும் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் பாலின மற்றும் மகப்பேறு உரிமை (விரும்பினால் பிள்ளை பெறலாம்இல்லையேல் கலைக்கலாம் எனும் உரிமை) வழங்கல் வேண்டும். 
3.     ஆசை நாயகியையும் மனைவிக்குச் சமமாக நடத்த வேண்டும்;விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளுக்குசட்டப்படி பிறந்த பிள்ளைகளுக்கு வழங்கும் எல்லா உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும். 
4.     விலைமாதுகளுக்கு எல்லாவிதமான உரிமைகள்பாதுகாப்புமரியாதை வழங்கப்பட வேண்டும். விபசார விடுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். 
5.     ஒரு பெண்தன்னை தன் கணவன் கற்பழித்ததாகவும் தன் விருப்பமின்றி பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டுவதற்கு உரிமை உண்டு. அப்போது,அந்நியப் பெண்மீது பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன தண்டனையோ அதே தண்டனை கணவனுக்கும் வழங்கப்பட வேண்டும். 
6.     ஆண்-பெண் இடையே பாகப்பிரிவினைச் சட்டத்தில் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும். 
7.     திருமணத்தைப் பொறுத்தவரைபலதார மணம், ‘இத்தா’ மேற்கொள்ளல், ‘வலீயை ஏற்படுத்தல், ‘மஹ்ர்’ அளித்தல்ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும். 
8.     மணவிலக்கு (தலாக்) அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்துநீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். தலாக்’ ஆனபின் எல்லா சொத்துகளையும் இருவரிடையே பங்கிட வேண்டும். 
9.     ஒரு பெண்கணவனின் அனுமதியின்றியே வெளியே செல்லலாம்பயணம் போகலாம்வேலைக்குச் செல்லலாம்கர்ப்பத் தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
இவைதான் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் ஐ.நா. சபையின் பெண்கள் ஆணையம் தீர்மானித்திருக்கும் சட்டங்கள்.
யாரைக் கேட்டு?
முதலில்இச்சட்டங்களையெல்லாம் அந்த ஆணையம் யாரைக் கேட்டு நிறைவேறியுள்ளதுஅல்லது பரிந்துரை செய்துள்ளதுஅமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்பும்அல்லது சுதந்திரம் என்றும் நாகரிகம் என்றும் கருதும் ஒன்றை உலகப் பெண்கள்மீது திணிக்க ஐ.நா. சபைக்கு யார் உரிமை வழங்கினார்கள்மேலை நாடுகளின் கைப்பொம்மையாகச் செயல்படும் ஐ.நா.வும் அதன் துணை அமைப்புகளும் நினைத்ததை எல்லாம் சட்டமாக்குவதற்கு இறைவனே அனுமதி வழங்கிவிட்டானாஅல்லது வான்மறை ஏதேனும் இந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறதா?
அவர்கள்தான்சமயக் கட்டுப்பாட்டிற்கோ சமூகப் பண்பாடுகளுக்கோ மனித நாகரிகத்திற்கோ கீழ்ப்படியாமல் காட்டுமிராண்டித்தனமான மிருக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால்புனித வான்மறையைபரிசுத்தமான மார்க்கத்தைப் பின்பற்றும் உலக முஸ்லிம்கள்மீது ஐ.நா.வின் பேரால் அநாகரிகத்தைத் திணிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
ஐ.நா. சபை இயங்குவது அமெரிக்காவில்ஐ.நா.வின் பட்ஜெட்டில் 60 விழுக்காடு நிதியை வழங்குவது அமெரிக்காவீட்டோ அதிகாரம் படைத்த ஐந்து நாடுகளில் மூன்று மேலைநாடுகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மேற்கத்திய நாடுகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்தான் நாட்டாண்மைத் தனம் செய்கின்றன என்றால்கலாசாரம்,பண்பாடுசமயக் கட்டுப்பாடுபெண் ஒழுக்கம் ஆகிய தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது மிகப்பெரும் ஆபத்தாகும். இவர்களின் அராஜகத்தை அடக்காவிட்டால் உலகம் பேரழிவையே சந்திக்கும்.
குடும்ப அமைப்பைச் சீரழிக்கவா?
இரண்டாவதாகஉலக அளவில் குடும்ப அமைப்புகளும் உறவுமுறைகளும் சீரழிவதற்கே ஐ.நா.வின் பெண்கள் அமைப்பு கூறும் தீர்மானங்கள் உதவும். குடும்ப அமைப்பு சிதைந்தால்உறவு முறைகள் அழிந்தால் மனித இனம்முன் எப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்?
திருமணம் என்பதுபுனிதமானதொரு வாழ்க்கை ஒப்பந்தம். அங்கே இரு உள்ளங்கள் மட்டும் இணைவதில்லைஇரு குடும்பங்களே இணைகின்றன. ஒருவரின் இன்ப துன்பங்களில் மற்றவரும் பங்கெடுத்துக்கொண்டுசுமைகளை -அவரவர் இயற்கைக்கேற்றவாறு- பகிர்ந்துகொண்டுநாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல தலைமுறைகளைப் பெற்றுக்கொடுக்கும் அற்புதமான வலைபின்னலே இல்லற வாழ்க்கை.
திருமணம் என்று ஒன்று இருப்பதால்தான் உலகில் மனித வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறதுமனித இனப் பெருக்கம் தடங்கலின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறதுமனித உள்ளங்களில் அன்புபாசம்மனிதநேயம் ஆகிய மலர்கள் பூத்துக்கொண்டிருக்கின்றனஅழுகையும் சிரிப்பும் மனித முகங்களில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன.
கல்விஆராய்ச்சிதொழில்நுட்பம்வேலைவாய்ப்புதொழில்நிர்வாகம்ஆட்சி... என எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் அவற்றுக்குப் பின்னால் குடும்ப வாழ்க்கை ஏதேனும் ஒருமுறையில் உந்துதல் சக்தியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையின் அடிவேர்களையே பிடுங்கி எறியும் வகையில்அதன் தளிர்களில் வெந்நீரை ஊற்றும் விதத்தில் ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி,விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால்நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.
இஸ்லாத்தின் மீது தாக்குதல்
மூன்றாவதாகஉலக முஸ்லிம்களையும் அவர்களின் வளமான பண்பாடுகளையும் இஸ்லாம் மார்க்கத்தின் தனித்தன்மைகளையும் அழித்தொழிப்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை கைகோத்திருந்தது போய்இப்போது ஐ.நா.வே அந்த வேலையைக் கையிலெடுத்திருக்கிறதே அது ஏன்ஐ.நா. சபையின் இலக்கும் இலட்சியமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைஅதன் பாரம்பரிய மாண்புகளை வெட்டி வீழ்த்துவதுதானா?
ஐ.நா. சபை மகளிர் ஆணையத் தீர்மானங்கள் அனைத்தும்குறிப்பாகக் கடைசி நான்கு (6,7,8.9) ஷரத்துகளும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குறிவைத்தே சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
முஸ்லிம் சமூகத்தின் கூட்டுவாழ்க்கை முறைமக்கட் தொகை அதிகரிப்புஎன்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாம்’ என்று வந்துவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கியமாகிவிடுவதுமேலை நாட்டினரிடையே இஸ்லாம் வேகமாகப் பரவிவருவது முதலான அம்சங்கள் மேற்கத்திய உலகை அச்சுறுத்திவருகின்றன.
இதனால் முஸ்லிம்களின் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்துவளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என மேற்குலகம் நம்புகிறது. சட்டப் புறம்பான பாலியல் உறவுகள் மேலை நாடுகளில் பரவலானதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துபோனதைப் போன்றேமுஸ்லிம் உலகிலும் குறைப்பதற்கு அவர்கள் செய்யும் சதியே இது.
1995 இலிருந்து ஐ.நா. சபை அமைப்புகளையும் மாநாடுகளையும் வழிநடத்துவதில் சியோனிஸ்ட் லாபி திட்டமிட்டு வேலை செய்துவருகிறது. ஐ.நா. மாநாடுகளின் திட்டங்கள்தீர்மானங்கள் ஆகியவற்றை வரையறுப்பதில் சியோனிஸ்டுகளின் கரம் வலுவாக உள்ளது.
ஆனால்வரலாற்று உண்மை ஒன்றை இந்தத் தீய சக்திகள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. உலக முஸ்லிம்கள் தம் உயிருக்கோ உடைமைக்கோ பங்கம் நேர்ந்தால்கூட பாராமுகமாக இருந்துவிடுவார்கள். ஆனால்எப்போதெல்லாம் இஸ்லாத்தின் மீதும் அதன் நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் மீதும் தாக்குதல் வருகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் கொதித்தெழுந்துவிடுவார்கள்உயிரைக் கொடுத்தும் தங்கள் மார்க்கத்தைப் பாதுகாத்துவிடுவார்கள்அதில் பின்வாங்கமாட்டார்கள்.
அதற்கு ஓர் எளிய அடையாளம்தான் இந்தக் கட்டுரை. குவைத்திலிருந்து வெளிவரும் அரபி வார இதழான அல்முஜ்தமாவின் (மார்ச் 23-29, 2013) தலையங்கமே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
இதைக் காணும் ஒவ்வொருவரும் 10 பேருக்கு அனுப்பினாலே மக்கள் உஷாராகிவிடுவார்கள். இப்படி ஒரு தாஈயும் அவரைச் சார்ந்தவர்களும் உலகமெங்கும் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த தஅவா’ பணிதான் எதிரிகளுக்குச் சாவுமணியாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பெண் ஆணையம் வெளியிட்டுள்ள இத்தீர்மானங்களை எகிப்து,ஈரான்கத்தர்நைஜீரியாசூடான்ஹோன்டுராஸ்வாடிகன் போன்ற நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன;  இந்த அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு இத்தீர்மானங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது. சமூகக் கட்டமைப்பைத் தகர்க்கக்கூடிய தீர்மானங்கள் என அறிவித்துள்ளது.
பெண்கள் செய்யும் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் இத்தீர்மானங்கள் சட்ட அனுமதி கொடுப்பதை ஏற்க முடியாது என இக்வான்கள் அறிவித்துள்ளனர்.
முஸ்லிம்களே! உஷார்! உஷார்! உஷார்!

(கட்டுரையை உருவாக்கி அனுப்பியவருக்கு நன்றி)