வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்
நமது நாட்டில்
பாராளுமன்றத்திற்கு 24.04.2014 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள்
வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வாக்களிக்க
மட்டுமே ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து சென்று வருகின்றனர். போஸ்டல் ஓட்டு
ஆன்லைன் ஓட்டு இப்போது சாத்தியம் இல்லை என்று ஆகிவிட்டது. ஆகையால் நம்மால் ஒட்டு
போட முடியாவிட்டாலும் நம் குடும்பத்தினரை அவசியம் ஓட்டு போடும்படி
வலியுறுத்தவேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுக்கும்படி போனில் சொல்லவேண்டும். நமதூரில்
தேர்தல் அன்று விழா கோலமாக இருக்கும். சுத்து வட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம்
அன்று வயல் வேலைக்கோ மற்ற தொழிலுக்கோ செல்லாமல் ஓட்டு போட நம் ஊருக்கு
வருகின்றனர் (வாக்கு சாவடி நம் ஊரில் அமைந்துள்ளதால்) ஓட்டின் மகிமை வலிமை
தெரிந்தவர்கள் வருகின்றார்கள். ஆனால் நமக்கு தெரிந்தும் ஏனோ அலட்சியம் காரணமாக பலர்
ஓட்டு போட செல்வதில்லை. வெளி நாடுகளில் வாழும் சகோதரர்கள் ஓட்டு போட முடியவில்லையே
என ஆதங்கபடுகின்றனர். ஆனால் வாய்ப்பு இருந்தும் பலர் அலட்சியபடுத்துகின்றனர்.
சிரமம் பாராமல் இந்த முறை அலட்சியபடுத்தாமல் வாக்காளர் லிஸ்டில் பெயர் உள்ள
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் சகோதரர்கள் வலியுறுத்தவேண்டும். வலியுறுத்துவார்கள் என
நம்புவோம்!
No comments:
Post a Comment