நமது நீடூரில் மஜீத் காலனியில் அல் கயிப் என்ற பெயரில் மாற்று திறனாளிகள் பள்ளி கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பேச முடியாத குழந்தைகள், நடக்க முடியாத குழந்தைகள், பெற்றோர்களை பார்த்து உணர்ந்துகொள்ள முடியாத குழந்தைகள், தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து சிறப்பான பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளி இயங்குவது நமது ஊரில் பலருக்கு தெரியவில்லை. வெளியூரிலிருந்து இப்பள்ளியை கேள்விபட்டு வருகிறவர்கள் நீடூரில் வந்து விலாசம் விசாரிக்கும் போது நம்மக்களுக்கு தெரியவில்லை அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா என்று கேட்கின்றனர். இதுபோல் நல்ல காரியத்திற்காக இயங்கும் பள்ளியை நம் தெரிந்தவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து மாற்று திறமை கொண்ட குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். அங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் பெற்றோரிடம் விசாரித்த போது நல்ல முறையில் மாற்றம் தெரிவதாக கூறினர். இப்பள்ளியை பற்றி மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Al Khaib School
Al Khaib School