அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, February 16, 2012

ஏகத்துவ பள்ளி கட்டுமான பணி தொடங்கியது

அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கியது. நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பித்துள்ளனர். ஊரில் பல பள்ளி இருக்கையில் இப்பள்ளி தேவைதானா என்று சிலர் கேட்ககூடும், மற்ற பள்ளிகளில் நபிவழி பேண உரிமை மறுக்கபடுகிறது,மீறினால் ஊர் நீக்கம் தான். சுயமரியாதை இஸ்லாத்தில் எவ்வளவு வழியுறுத்தப்பட்டிருக்கிறதோ அதை காப்பாற்றி கொள்ளவும் நபிவழியை அப்படியே பின்பற்றவும் நம்மூருக்கு அவசியம் ஒரு பள்ளி தேவை. பள்ளியை பற்றிய மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லின்கில் காணலாம்
http://mynidur.blogspot.com/2011/10/blog-post_10.html

இப்பள்ளி கட்டுமான பணிக்காக 31லட்சம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் ஒவ்வொரு கட்டத்திலும் வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இங்கு கட்டாய வசூல் கிடையாது, உங்களால் முடிந்த உதவிகளை இந்த பள்ளிக்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி செய்வதினால் யார் யாரெல்ல்லாம் இதனால் பயன் பெறுவாரோ அவர்களுடைய நன்மையும் கொடுத்தவருக்கு கிடைக்கும் என்பதினால் நிரந்தர தர்மம் த்ரும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு:

INDIA: 
அய்யுப்: 9488215235
ரியாஸ்: 9443984171


UAE: 
நிஜார்: 0554271785
சிராஜ்: 0504780925
மின்னஞ்சல்: nowshath1a@yahoo.com / nowshath1a@gmail.com


கட்டுமான பணியின் போது எடுத்த புகைப்படத்தையும், கணக்கிடப்பட்ட விபரங்களையும் உங்கள் பார்வைக்காக கீழே













4 comments:

  1. நமது ஊரில் தவ்ஹீத் பள்ளி அமைவதைக்கண்டு உள்ளம் மசிழ்ச்சி அடைகிறது. அல்ஹம்துல்லாஹ்! இதற்காக பேர் உதவிசெய்யும் (உடலாலும், பொருளாலும்)அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்

    ReplyDelete
  2. A.H.NAJIR AHAMED (DUBAI)April 10, 2012 at 2:43 PM

    ஒவ்வொரு ஊரில் உள்ளவர்கள், வெளியூர்காரர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு தொழுகவரும்போது எவ்வித பாகுபாடு பார்க்காமல் இது அல்லாஹ்வுடைய பள்ளி என்று நினைத்துத்தான் தொழுக வருவார்கள். ஆனால் இது அவங்கபள்ளி, இவங்கபள்ளி என்றெல்லாம் மனதில் என்னி மாற்றுமத கோவில்களைப்போல பிரிவினைக்கண்டு பார்த்து தொழுவதில்லை. அப்படி வேறுபட்டு நடந்துகொண்டு தொழுதால் நாம் இன்னும் இஸ்லாத்தை புரிந்துகொள்ளவில்லை, நாம் மார்க்கத்திற்கும், உண்மைக்கும் புறம்பாக வாழ்கிறோம் என்பதே அடிப்படை உண்மை. இதுபோன்றவர்களை அல்லாஹ் மன்னித்து, பாதுகாத்து நேர்வளிப்படுத்துவானகவும். ஆமீன்..!

    ReplyDelete
  3. A.H.NAJIR AHAMED (DUBAI)April 10, 2012 at 2:45 PM

    ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே என்கிற கொள்கையோடும் முஹம்மது நபி ஸல் (அலை) அவர்கள் இறைத்தூதர் என்று நம்பியும், இவர்களின் வலிக்காட்டுதளின்படியும் நாம் பள்ளிவாசல்களில் தொழுதுவருகிறோம் என்பதை அனைவரும் அறிவோம். எந்த ஊர், நாடு, மாநிலம் சென்றாலும் நாம் பிரிவினைப் பார்க்காமல் அனைத்து ஊர் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள், நமது சகோதரர்கள் என்று என்னி அந்தந்த ஊர் பள்ளிகளில் நமது கடமை நிறைவேற்றித் தொழுது வருகிறோம். சிலசமயம் அந்த ஊர்களில் பள்ளியில்லைஎன்றால்கூட சுத்தமான இடத்தில் நின்று அந்த நேரக்கடமையை நிறைவேற்றுகிறோம் என்பது உண்மை. நமது நோக்கமென்ன? பள்ளியை பிரிவினையை பார்த்து தொழுகவா? இல்லை! நம் கட்டாயக் கடமை! நமது ஆத்மாவிற்கு சுகத்தை ஏற்படுத்தவேண்டும், நன்மையை பெறவேண்டும், மண்ணறை, மறுமை தண்டனையில் காப்பாற்றவேண்டும் என்று எண்ணியே தொழுகை என்கிற கடமைகளை செய்துவருகிறோம். இஸ்லாத்தின் முதற்கடமை தொழுகை! ஆனால் பள்ளிவாசலை பிரித்துவைத்து தொழுதுக்கொண்டு வருகிறோம் ஏன்? இதற்கு வித்திட்டவர்கள் யார்? சிந்தியுங்கள்!

    ReplyDelete
  4. A.H.NAJIR AHAMED(DUBAI)April 10, 2012 at 2:52 PM

    சகோதரரே நீங்கள் அந்த பள்ளிக்கு போகவேண்டாம்! அது சுன்னத்துல் ஜமாஅத் பள்ளி!
    இந்த பள்ளிக்கு போங்க! இது தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி!

    என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் வாழும் மக்கள் மனதில் குழப்பம் செய்யும் பசுந்தோல் போர்த்திய புலிகள் மக்களை பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி செய்தால் இவர்கள்தான் உண்மையானவர்களா? சிந்தியுங்கள்!

    ReplyDelete