நமது ஊரில் சென்ற மாதம் 23 – 09 – 2012 அன்று ஊர்
கூட்டம் என்று அறிவித்தார்கள் கூட்டமும் நடந்து முடிந்தது பெரும்பான்மையான
ஜமாத்தார்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை காரணம் இதற்கு முன் ஒரு முறை ஊர்
கூட்டம் என்று அழைத்தார்கள் அந்த கூட்டத்தில் இடைக்கால நிர்வாகிகளை நியமனம்
செய்தார்கள். அதன் பிறகு ஊர் கூட்டம் என்று அழைத்தார்கள், அந்த கூட்டத்தில் ரகசிய வாக்கு எடுப்பதற்கு எதிராக தீர்மானம் போட்டு கையெழுத்து வாங்கினார்கள். தற்போது ஊர் கூட்டம்
என்று அழைத்து நமது ஊருக்கு புதிய பைலா கொண்டு வர முயற்சி செய்து இருகிறார்கள்.
ஜமாத்தினர் ஊர் கூட்டத்திற்கு அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டுமானால் எந்த விசயத்திற்கு ஊர்
கூட்டம் நடைபெற உள்ளது என்பதை பற்றி தெரிவித்து அழைக்கவேண்டும் அப்பொழுதுதான்
கூட்டத்தின் நோக்கம் கருதி அவசியம் என்று வருவார்கள். 23 – 09 – 2012 அன்று நடந்த கூட்டத்தில் ஊருக்கு புதிதாக
பைலா அறிமுகம் செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு
முன்னால் நிர்வாகிகள் தயார் செய்தார்கள் என்றும் சில மாற்றத்தோடு கொண்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.2009 -ல் தயார் செய்து ஏன் அப்போது நடை முறை படுத்தவில்லை.
தற்போது பைலாவை கொண்டு வருவதன் நோக்கம் என்ன? ஜனநாயக முறை படி ஜமாத்தார்கள் ஒட்டு
போட்டு தேர்ந்து எடுக்கும் ரகசிய வாக்கெடுப்பு முறையை தடுப்பதற்காகவா?. இப்ப உள்ள
நிர்வாகிகளுக்கு பைலாவை பற்றி
தெரியவில்லை, நிர்வாகிகளுடன்
ஆலோசனை செய்தும் தயார் செய்யவில்லை. அப்படி இருக்கும் பொது யார் தயார்
செய்து கொடுத்தார்கள்? இந்த
கூட்டத்தில் இந்த பைலாவை படிக்கும் பொது தான் இப்ப உள்ள நிர்வாகிகளுக்கு
தெரிகிறது. அதன் பிறகு
கூட்டம் கலைகிறது. அப்படி இருக்கும் போது பைலா ஏற்படுத்தி
விட்டதாக கையெழுத்து வாங்கினால் என்ன அர்த்தம்?.
ஊருக்கு பைலா கொண்டு வருவதாக இருந்தால் அதற்கு ஒரு கமிட்டி ஏற்படுத்த
வேண்டும். ஊரின்
நடைமுறைகள் நன்கு தெரிந்த பெரியவர்கள், மார்க்க அறிஞர்கள் இருக்க வேண்டும். முன்னாள் நிர்வாகிகளும், இப்ப உள்ள நிர்வாகிகளும், மாற்று கருத்து உடையவர்களும் மற்றும் ஊரில் உள்ள பெரியவர்களும் கொண்ட ஒரு குழு பைலா உண்டாகி அதை
ஜமாத்தினர் பார்வைக்கு வைக்க வேண்டும். ஜமாத்தினர் திருத்தம் ஏதும் சொன்னால் அது நியாயமாக இருந்தால் திருத்தி
கொள்ள வேண்டும். அப்படி
ஜமாத்தினர் அனைவரும் ஏற்கும் படி
செய்தால் தான் பைலாவை வக்போர்ட் அங்கிகாரம் கிடைக்கும். அப்படி இல்லாமல் தற்போது கொண்டு வரும் பைலா
உள்நோக்கம் கொண்டதாக இருக்குமேயானால் அதனால் அதை நடை முறை படுத்த
முடியாது. நான்கு பேர்
பைலாவை எதிர்த்தால் அது
நடைமுறைக்கு வராது . இவர்கள்
கொண்டு வர துடிக்கும் பைலாவை ஊரில் பெரும்பான்மை நபர்கள் எதிர்க்கவே செய்கின்றனர். தற்போது அவசரப்பட்டு இந்த பைலாவை
கொண்டு வர காரணம் என்ன?ஊரில் அனைவரையும் அரவணைத்து அழைத்து
எல்லாருடைய ஆதரவையும் பெற்று பைலா கொண்டு வர வேண்டும். பொதுவாக ஊரின் நலன் கருதி யாரையும்
பாதிக்காத வண்ணம் பைலா கொண்டு வர வேண்டும். செய்வார்களா? பொருத்து இருந்து பார்போம். மாற்று
கருத்து உடைய ஜமாத்தினர்
ஊரில் கூட்டம் நடைபெறும்போது அந்த கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து
கொண்டு அவர்களின் ஆலோசனைகளை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
பைலா வாக நிச்சயமாக அது இருக்காது. ஃபைலாக(File)ஆக வேண்டுமானால் பள்ளியில் வைத்துக்கொள்ளலாம்.
ReplyDeleteமக்களை அறிவில்லாதவர்கள் என்று நினைத்து நினைத்ததை சாதித்துவிடலாம் என்று துடிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது அல்லாஹ் நடக்க விடமாட்டான்
"அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மேலானவன்."
தைரியம் இருந்தால் நடைமுறை படுத்தி காட்டட்டும்.
BYLAW? is it so? What are the old BYLAW? Please refer and explain us;Did those bylaw are amended in the past? please do not angry;Check and think.
ReplyDelete