அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, June 27, 2014

அல் கயிபு மாற்றுதிறனாளிகள் பயிற்சிப்பள்ளி, நீடூர்

நமது நீடூரில் மஜீத் காலனியில் அல் கயிப் என்ற பெயரில் மாற்று திறனாளிகள் பள்ளி கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பேச முடியாத குழந்தைகள், நடக்க முடியாத குழந்தைகள், பெற்றோர்களை பார்த்து உணர்ந்துகொள்ள முடியாத குழந்தைகள், தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து சிறப்பான பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளி இயங்குவது நமது ஊரில் பலருக்கு தெரியவில்லை. வெளியூரிலிருந்து இப்பள்ளியை கேள்விபட்டு வருகிறவர்கள் நீடூரில் வந்து விலாசம் விசாரிக்கும் போது நம்மக்களுக்கு தெரியவில்லை அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா என்று கேட்கின்றனர். இதுபோல் நல்ல காரியத்திற்காக இயங்கும் பள்ளியை நம் தெரிந்தவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து மாற்று திறமை கொண்ட குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். அங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் பெற்றோரிடம் விசாரித்த போது நல்ல முறையில் மாற்றம் தெரிவதாக கூறினர். இப்பள்ளியை பற்றி மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Al Khaib School

Friday, June 13, 2014

நீடுர் நெய்வாசல் அசோசியேசன் சார்பில் பரிசளிப்பு விழா

நஸ்ருல் முஸ்லிமீன் மேல்நிலை பள்ளியில் நடந்த துபாய் நீடுர் நெய்வாசல் அசோசியேசன் சார்பில் 10th மற்றும் 12th இறுதி தேர்வில் நீடுரை சார்ந்த முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழாவின் புகைப்பட தொகுப்பு













Saturday, June 7, 2014

பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவச்செல்வங்களுக்கு சிறப்புப்பரிசு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 

நமதூரின் முன்னேற்றத்திற்காகவும், நமதூர்வாசிகளின் அவசர பொருளாதார தேவைகளை இயன்றவரை நிறைவேற்றவும், நமது இஸ்லாமிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் நமது துபாய் சங்கமானது பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளையும், சேவைகளையும் செய்துவருவதை அனைவரும் நன்கு அறிவோம். கல்வி தொடர்பாகவும் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் செய்துவருவதின் தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் நமதூரைச்சார்ந்த இஸ்லாமிய மாணவச்செல்வங்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக கடந்து முடிந்த கல்வி ஆண்டிலும் (2013 - 2014) இறுதித்தேர்வில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


முதல் பரிசு
ரூபாய் 2,500 / -
இரண்டாம் பரிசு
ரூபாய் 2,000 / -
மூன்றாம் பரிசு
ரூபாய் 1,500 / -


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜுன் 11 புதன்கிழமை நீடுர் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் பள்ளியில் மேற்கூறிய பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பரிசு வாங்கும் மாணவ மாணவியரின் விபரம் கீழே


10th Std
1.Mohamed Mubeen.N      I   Place         482/500       Govt  Boys high School-Nidur
(S/O Tajideen)

2.Ramees Fathima.K          II  Place         476/500       Raj Matriculation HSS-MYD
(D/o.Kanimathulla)

3.Paril Nisha.B                     II Place          476/500       Govt Girls HR.Sec.School-Nidur

4.Naseema Banu.N             III Place        475/500     Nasrul Muslimeen MHSS-  Nidur
(D/O.Najimudeen)



12th Std
1.Mohammed Abuphahir.T      I Place 1184/1200  Rotary Club School
(S/o.A.Thamimul)

2.S.Kathija Fathima.     II Place        1108/1200     Nasrul Muslimeen MHSS-Nidur
(D/O N.Sirajudeen)

3.M.Affisiya Banu           III Place        1090/1200  Nasrul Muslimeen MHSS-Nidur         
(D/O R.Mohamed Navas)

Tuesday, April 15, 2014

தவறாமல் வாக்களிப்போம்! ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்!!


வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்
நமது நாட்டில் பாராளுமன்றத்திற்கு 24.04.2014 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வாக்களிக்க மட்டுமே ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து சென்று வருகின்றனர். போஸ்டல் ஓட்டு ஆன்லைன் ஓட்டு இப்போது சாத்தியம் இல்லை என்று ஆகிவிட்டது. ஆகையால் நம்மால் ஒட்டு போட முடியாவிட்டாலும் நம் குடும்பத்தினரை அவசியம் ஓட்டு போடும்படி வலியுறுத்தவேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுக்கும்படி போனில் சொல்லவேண்டும். நமதூரில் தேர்தல் அன்று விழா கோலமாக இருக்கும். சுத்து வட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் அன்று வயல் வேலைக்கோ மற்ற தொழிலுக்கோ செல்லாமல் ஓட்டு போட நம் ஊருக்கு வருகின்றனர் (வாக்கு சாவடி நம் ஊரில் அமைந்துள்ளதால்) ஓட்டின் மகிமை வலிமை தெரிந்தவர்கள் வருகின்றார்கள். ஆனால் நமக்கு தெரிந்தும் ஏனோ அலட்சியம் காரணமாக பலர் ஓட்டு போட செல்வதில்லை. வெளி நாடுகளில் வாழும் சகோதரர்கள் ஓட்டு போட முடியவில்லையே என ஆதங்கபடுகின்றனர். ஆனால் வாய்ப்பு இருந்தும் பலர் அலட்சியபடுத்துகின்றனர். சிரமம் பாராமல் இந்த முறை அலட்சியபடுத்தாமல் வாக்காளர் லிஸ்டில் பெயர் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் சகோதரர்கள்  வலியுறுத்தவேண்டும். வலியுறுத்துவார்கள் என நம்புவோம்!

Saturday, March 1, 2014

நிர்வாகத்தினர்களின் அணுகுமுறை மாற வேண்டும்!!

நமதூரில் பழையபடி மாற்றுகருத்துடையோரை , விரோதிகளாக பார்க்கும் நிலை தொடர்கின்றது. ஜமாத்து நிர்வாக தேர்தலில் போட்டியிட்டவர்களை ஊருக்கு வேண்டாதவர்களாக பார்க்கின்றனர். அவர்களது வீட்டு திருமணங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது இல்லை.சிலரிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் தான் திருமணம் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்வோம் என்று சொல்வதாக தெரிகின்றது.
அதேபோல் நிர்வாகத்தில் நடைபெறும் தவறை சுட்டி காட்டினாலும் அவர்களது தேவைகளையும் புறக்கணிக்கின்றனர். அவர்களது உரிமைகளும் நிர்வாகத்திலிருந்து மறுக்கபடுகின்றது. ஏன் இப்படி செய்கின்றார்கள்? அவர்களும் நம் ஜமாத்தினர்கள் தான்! நம் சொந்தங்கள் தான்! இதுபோல் நடவடிக்கைகளால் மேலும் மேலும் அதிருப்தி தான் கூடிக்கொண்டே இருக்கும்.முன்பு இப்படி தான் தவ்ஹித் கொள்கையை பின்பற்றுகின்றார்கள், கிளை தொடங்கினார்கள், கூட்டம் போட்டார்கள் என்று ஊரை விட்டு நீக்கினார்கள். அதனால் அவர்கள் ஊரை விட்டா போய்விட்டார்கள்? இல்லையே! தனி ஜமாஅத் ஏற்படுத்த தள்ளபட்டார்கள்! தற்போது மாற்று கருத்துடையவர்களை நிர்வாகத்தினருடன் ஒத்துபோகாதவர்களை புறக்கணிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது!! இவர்களிடம் சரணாகதி  அடையவேண்டும், இல்லையேல் மிரட்டபடுவார்கள்! ஊரில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்,இல்லையேல் புறக்கணிக்கும் வேலை நடக்கின்றது. ஜமாத்தார்களை அடக்கி ஆழ நினைக்காதீர்கள்!! ஆதிக்கம் செலுத்த நினைக்காதீர்கள்!! அடிபனியவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்!! அவர்களை புரக்கனிப்பதன்மூலம் அவர்களை ஜமாத்திலிருந்து மறைமுகமாக ஒதுக்க நினைக்காதீர்கள்!!இப்படி மிரட்டுவதன் மூலம் ஜமாத்தார்கள் நிர்வாகத்தை எதிர்க்க மாட்டார்கள் என்று இப்படி செய்கின்றார்களா? மிரட்டப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர்.பலர் வெளியில் சொல்லாமல் அவர்களிடம் மிரட்டலுக்கு பயந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்கின்றனர். இப்படி அடிபனியவைப்பது முறையா? இப்படியே போனால் இதற்கு என்னதான் தீர்வு? நிர்வாகத்தினர் விளக்கவேண்டும்! ஊரில் ஜமாத்தார்கள் அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும்.இல்லையேல் இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் தீர்வுக்கான  மாற்று வழியை ஜமாத்தார்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆகையால் நிர்வாகிகளின் அனுகுமுறை மாற வேண்டும்! அல்லாஹ்விடம் துஆ செய்வோம். மாற்றத்தை அல்லாஹ் தருவான். ஆமீன்.

Saturday, February 15, 2014

உரிமை மறுக்கப்படுகின்றது!

உரிமை மறுக்கப்படுகின்றது!
நமதூரில் இனைய தளம் நடத்தும் ஒரு சகோதரர் ,தமது குடும்பத்திற்காக திருமண சான்றிதல் ஊர் நிர்வாகத்திடம் கேட்டிருக்கின்றார். அதற்க்கு  முத்தவல்லி நிர்வாகத்தில் சிலர் கொடுக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார். காரணம் ஆறு மாதத்திற்கு முன்பு துணை இமாம் அபுபக்கரை தேடி போலீசார் நம் பள்ளிவாசலுக்கு வந்த செய்தியை இணையதளத்தில் வெளியிட்டடதாலும் தொடர்ந்து அபுபக்கரை விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியதால்  அவர்  கேட்ட சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள்  .சம்பவம் நடந்து ஆறு மாதம் ஆகின்றது.அப்போதே அந்த சம்பவம் பற்றி பேசாமல் தற்போது சான்றிதழ் தர மறுப்பது ,என்ன நியாயம்? அவருக்கு சான்றிதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக அணுக இருப்பதாக தெரிகின்றது. நமதூர் ஜமாத்தினரிடம் நியாயம் கேட்டு பாதிக்கப்பட்டவர் வந்த போது,அபுபக்கர் எங்கள் ஜமாத்தில் இல்லை அதனால் நிர்வாகம் அவரை விசாரிக்காது என்றவர்கள் அவரை பற்றி செய்தியை நியாயம் கிடைப்பதற்காக உள்ளதை உள்ளபடி வெளியிட்டதற்காக , ஜமாத்தில் இல்லாதவருக்காக பரிந்து கொண்டு ஜமாத்தில் உள்ளவருக்கான உரிமையை தர மறுப்பது நியாயமா?இதற்க்கு என்ன தான் தீர்வு? அவதூறு எழுதுவது தான் தவறு. உள்ளதை உள்ளபடி நியாயத்திற்காக செய்தியை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கின்றது? நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் ஜமாத்தினர் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். மதிப்பார்கள் என நம்புவோம்!!