அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, July 28, 2012

TNTJ நீடுர் கிளையின் நோன்பு கஞ்சி விபரம் 2012


நோன்பு
பெயர்
தெரு & ஊர்
1
சர்புதீன்
ஜஹவர் தெரு, நீடுர்
2
அப்துல் ஹமீது
நீடுர்
3
அப்துல் ரஹ்மான் & சன்ஸ்
சபியா தெரு, நீடுர்
4
தாஹீரா பீவீ

5
அலாவுத்தீன் & சன்ஸ்
கீழத் தெரு, நீடுர்
6
A.சிராஜூதீன்
பரகத் காலனி, நீடுர்
7
M.முனவர் அலி
ரயிலடி தெரு, நீடுர்
8
M.முஹம்மது அமீன் &சன்ஸ்
ஹாஜி தெரு, நீடுர்
9
M.பகுருத்தீன் (முஹம்மது இக்பால்)
எஹ்சான் தெரு, நீடுர்
10
குலாம் முஹம்மது
J.M.H ரோடு, நீடுர்
11
M.A.P.தாஜ்
ரயிலடி தெரு, நீடுர்
12
அலாவுத்தீன் மகள்
கீழத் தெரு, நீடுர்
13
தர்பார் அலி
அஜீஸ் நகர், நீடுர்
14
நிஜார் வஹிதா
கீழத் தெரு, நீடுர்
15
நஜீமுதீன் - வாப்பா வீடு
மருத்துவ தெரு, நீடுர்
16
பேகம்
பள்ளிவாசல் தெரு, நீடுர்
17
அன்சாரி அமீன்
மஷாயிக் தெரு, நீடுர்
18
பஜகுல்ஜமான்
நீடுர்
19
பஜில் மக்கா ஏஜன்சி
கீழத் தெரு, நீடுர்
20
இஸ்மத் அலி
ரயிலடி தெரு, நீடுர்
21
நவ்ஷாத் அலி
ரயிலடி தெரு, நீடுர்
22
முஹம்மது அமீன் தன்டேல்
ரஹ்மத் தெரு, நீடுர்
23
முஜிபுர் ரஹ்மான்
ரயிலடி தெரு, நீடுர்
24


25


26


27


28


29


30




மீதம் உள்ள நாட்களில் நோன்பு கஞ்சி வழங்க விரும்புவோர் நீடுர் கிளையை அணுகவும் அல்லது இந்த இணையதளத்தில் உங்கள் விபரத்தை தெரிவிக்கவும். ஒரு நாளைக்கு ரூபாய் 3000 என கணக்கிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு : 9443984171

Wednesday, July 25, 2012

நோன்பு கால சமையல்-5


ஜிகிர்தண்டா (இதயத்தை குளிர வைக்கும் பானம்)

















தேவையான பொருட்கள்:
  • பால் – ஒரு லிட்டர்
  • சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்
  • கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்
  • நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்
  • ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1
  • பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
ஒரு லிட்டர் பாலைசர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில்மெல்லிய தீயில் கொதிக்க விட்டுரோஸ் கலர் சேர்க்கவும்.
பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6மணி நேரங்கள் வைக்கவும்.
கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம்வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனாகிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டிபிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிரவைக்கவும்.
குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில்பாதியளவு ஊற்றவும்.
இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ்துண்டுகளைப் போடவும்.
பிறகு ரோஸ் ஸிரப்நன்னாரி ஸிரப் ஊற்றவும்.
தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல்பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.
வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்திமனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.

:நன்றி:senthilvayal.wordpress.com

நோன்பு கால சமையல்-4


இளநீர் கடற்பாசி

  




தேவையான பொருட்கள்:
  • ற் பாசி - ஒரு பிடி
  • தண்ணீர் அரை கப்
  • இளநீர் - ஒன்று 
  • ர்க்கரை - ஒன்றரை டே.ஸ்பூண்
  • முந்திரி ‍பருப்பு கொஞ்சம்


செய்முறை: 
அரை கப் ண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும்.
அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும்.
நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை தூவி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து தேவையான சைஸில் துண்டுகளாகவெட்டி பரிமாறவும். 
இளநீருடன், அதன் வழுக்கை எனும் இளந்தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் சேர்த்தால் சாப்பிடும் போது இன்னும் சுவையாக இருக்கும்
 

நன்றி : மெஹர் சுல்தான்


Monday, July 23, 2012

நோன்பு கால சமையல்-3

இறால் பக்கோடா:
















தேவையான பொருட்கள்:
  • இறால் - கால் கிலோ
  • கடலை மாவு – 2 கப்
  • அரிசிமாவு – 1 கப்
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு - 4 பல்
  • மிளகாத் தூள்- அரை டே.ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால்  டே.ஸ்பூன்
  •  சோம்பு - கால் டே.ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை:
  • இறாலை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்..
  • பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய இறால், பொடியாக நறுக்கிய ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு இவைகளை ஒன்றாக கலந்து, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் இவற்றை சேர்த்து, தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மாவு உதிரியாக வரும் அளவுக்கு பிசறி வைக்கவும்.
  • சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பக்கோடாவை உதிர்த்து போட்டு, பிரட்டி பொன்நிறமாக வந்ததும் எடுக்கவும்.
  • ருசியான இறால் பக்கோடா ரெடி.
  • நோன்பு திறக்கும் போது வடைக்கு மாற்றாக இதை சாப்பிடலாம்.

நன்றி : மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-2


இரால் வாடா or காயல் வாடா 



தேவையான பொருட்கள்:
  • இரால் - 20
  • அரிசி மாவு - 2 கப்
  • மாசித்தூள் – 3 மேசைக்கரண்டி
  • தேங்காய் பூ - 6 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 3 பெரியது
  • மிளகாத்தூள் - 3 தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் – 2
  • மஞ்சள்தூள் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - சிறிது
  • அரைக்க: 2 காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம்
  • எண்ணெய் - பொறிக்க 
செய்முறை:
  • இராலை கழுவி சிறிது மஞ்சள் தூள் 1-தேக்கரண்டி மிளகாத்தூள்-3தேக்கரண்டி,, உப்பு சிறிதுசேர்த்து மெல்லிய தீயில் வதக்கிக் கொள்ளவும்..
  • பின் ஒரு சட்டியில் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு,கருவேப்பிலை,மிளகாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஏற்கனவே வதக்கியஇராலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் அரைக்க வேண்டிய 2-காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம் இவற்றை அரைத்து இதனுடன் சேர்த்து, மாசித்தூளையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வெண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் பூ சேர்த்து வேகவிடவும்.பின் அரிசி மாவை போட்டு நன்கு கிளறி இறக்கி மிதமான சூட்டில் நன்கு பிசைந்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு கைப் பிடியளவு பழைய சோற்றினை அரைத்து சேர்த்தால் வாடா மெதுவாக இருக்கும்.
  • பின்பு  ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து,.பின் அதன் மேல் சிறு உருண்டை அளவு மாவை வைத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். பின் அதன் மேல் வதக்கி வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த மாவையும் தட்டி வெங்காய கலவைக்கு மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும் வாடா வெடித்து சிதறாமல் இருக்க நன்கு ஒட்டி மூட வேண்டும்.இப்போது இதன் தோற்றம் சிறிய மலைக் குன்று போல் இருக்கும்.  
  • இதே போல் வாடாவை செய்து வைத்துக் கொண்டு, எண்ணையை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுக்கவும்.
  • சுவையான வாடா ரெடி…
  • தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டிணத்தில் இந்த வாடா ரெம்பவும் பிரபலம். நோன்பு காலங்களில் மக்கள் வாடா கடைகளில் (குறிப்பாக வாடா சுடும் இடத்திலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் செல்வர்.
  • சென்னையில் தற்போது மண்ணடியில் மட்டும் வாடா கிடைக்கிறது. கறி கஞ்சியுடன் இதை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
நன்றி : மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-1



நோன்பு கறி கஞ்சி:


தேவையான பொருட்கள்:

அரிசி 1 - கப்
சிறு பருப்பு - அரை  கப்
மட்டன் or கோழி  - 250 கிராம்
கேரட்,உருளைக்கிழங்கு- 100 கிராம் each
பட்டாணி- கொஞ்சமாக
தக்காளி -2
மஞ்சள் தூள் –அரை ஸ்பூண் 
மசாலா தூள்- 2 ஸ்பூண்
பட்டை,கருவா,ஏலம்
இஞ்சி,பூண்டு விழுது
பொடியாக நறுக்கிய வெங்காயம்
மிளகாய்-2
நெய்
தே.பால்- அரை கப்
உப்பு தேவையான அளவு

செய்முறை:


உடைத்த அரிசி, வறுத்த சிறு பருப்பு இரண்டையும் நன்கு கழுவி வைக்கவும்.
ஒரு குக்கரில், கழுவிய கறி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய் தூள். தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் அளவுக்கு நன்கு வேக வைக்கவும். அதனுடன், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக் கிழங்கு பட்டாணி ,தக்காளி, இவைகளைச் சேர்த்து வேக விடவும்.
இந்த கலவையுடன் 1:3 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதனுடன், களைந்து வைத்திருக்கும் அரிசி,பருப்பு சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.
நன்கு அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் 2xசுற்று அரைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், அதில்,பட்டை கருவா,ஏலம் நறுக்கிய வெங்காயம்சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த கலவையை கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
சூப்பர் நோன்பு கறிக் கஞ்சி ரெடி.
இதற்கு சரியான காம்பினேஷன் மஞ்சள் அல்லது காயல் வாடா தான்.  வாடா செய்வதை பற்றி இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

நன்றி  : மெஹர் சுல்தான்

நோன்பின் சிறப்பு


நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

நோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

வ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு
எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.


இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.


1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.  


ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.


கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.


மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது. 


ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.


அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.


ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை 


ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.

Friday, July 13, 2012

நீடூர் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன



2011 - 2012 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான முறையில் வெற்றிப்பெற்ற நமதூரைச்சார்ந்த சகோதர / சகோதரிகளுக்கு நமது துபாய் சங்கத்தின் சார்பில் 11.07.2012 புதன்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஜின்னாத்தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் ஜமாத்தார்களின் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு.




பத்தாம் வகுப்பு:

முதல்  பரிசு:  



உம்மு உமாரா பேகம்

த/பெ. ஜபருல்லாஹ், அரபித்தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - ஆசாத் & 454



இரண்டாம்  பரிசு:


ஹாஜிரா பர்வீன்

த/பெ. ஹஜ்ஜி முஹம்மது, மேலத்தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 450



மூன்றாம்  பரிசு:


அஃப்ஷியா பானு

த/பெ. நவாஸ், JMH மெயின் ரோடு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 444




பனிரெண்டாம் வகுப்பு:


முதல்  பரிசு:


முர்ஷித் முனவர்

த/பெ.ஹஜ்ஜி முஹம்மது, ஹாஜித்தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 1067



இரண்டாம்  பரிசு:
  

ஷபூஹா பர்வீன்

த/பெ. நஜிமுதீன், ஷேக் தாவூத் தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 1039



மூன்றாம்  பரிசு:


ஹலிமத்து ஸகதியா
த/பெ. ஜெகபர் சாதிக், பள்ளிவாசல் தெரு 

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 1005 


வெற்றிப்பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் எமது சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி:  http://www.nidurneivasal.org/