அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, July 1, 2012

சகோதரத்துவம் பேணுவோம் சகோதரர்களே!!!!


அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் உதவியால் நல்லபடியாக நமது நீடுர் நெய்வாசல் தேர்தல் இனிதே முடிவுற்றது. இந்த தேர்தலில் நாம் எழுதிய கட்டுரைகளுக்கு பல கருத்துகளை பலரும் வெளியிட்டனர். அதில் சிலர் கடுமையாக நம்மையும், நம்முடன் சேர்த்து பலரையும் விமர்சனம் செய்தனர். அதில் அவர்களின் குற்றச்சாட்டு நாம் காசு வாங்கிகொண்டு சிலருக்காக இத்தேர்தலில் வேலை செய்ததாக கூறுயிருந்தனர். அது மட்டுமில்லாது ஊரில் அனைவரும் ஒற்றுமையுடன் தான் உள்ளோம், வெளிநாட்டில் இருந்துகொண்டு உனக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் விமர்சித்திருந்தனர். சகோதரர்களே அல்லாஹ்வின் மீதாணையாக யாரிடமும் காசு வங்கி கொண்டு வேலை செய்யவில்லை. சிலர் நம்மை விமர்சிப்பதிலிருந்து ஒன்று நமக்கு தெரிந்தது, ஒரு அணியையே சப்போர்ட் செய்து எழுதிகிறீர்களே! இது நியாயம் தானா? ஏன் இந்த ஓரவஞ்சனை என கருத்து கூறிவிட்டு நிர்வாகத்தினரை மறைமுகமாக புகழ்பாடினர். அதுமட்டுமில்லாது நம்மை விமர்சனம் செய்தவர்கள் எதிர்தரப்பினர் இந்த தேர்தலில் செய்த பல அடாவடிகள் ஒன்றை கூட விமர்சனம் செய்யவில்லை. மேலும் சிலர் பச்சை பொய்யையும் பரப்பி வந்தனர், அதாவது ஊரில் மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்கள் அனைவரும் தவ்ஹீத் என்றனர் இது உண்மையா? இதை கூறியவர்களை இங்கே விமர்சனம் செய்தவர்கள் விமர்சித்தார்களா என்றால் இல்லை. இவர்கள் நோக்கமெல்லாம் மாற்றம் வேண்டி எழுதிய நாமாக இருந்தாலும் சரி, மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்களாயிருந்தாலும் சரி அனைவரையும் தவ்ஹீத்வாதிகள், ஊர் ஒற்றுமையை சீர் குழைப்பவர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி நம்மை ஓரம் கட்டி நிர்வாகத்தின் சார்பாக பிரச்சாரம் செய்தனர். மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்களை அவனை பற்றி உனக்கு என்ன தெரியும், எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறான் தெரியுமா? உனக்கு என்ன தெரியுமென்று விமர்சித்து, எதிர்தரப்பில் போட்டியிடும் நல்லவர்களை, வல்லவர்களை விமர்சனம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. ஊரில் ஒற்றுமையை விரும்புபவர்கள் என்ற தோற்றத்தை உண்டாக்கி சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்தார்கள். சகோதர்களே நாம் உங்களை விமர்சனம் செய்யவில்லை, நாம் ஏன் கருத்தால் அடித்து கொண்டிருக்க வேண்டும், நாம் விமர்சிப்பதெல்லாம் நிர்வாகத்தினரை தான். ஓர் நிர்வாகமென்றால் வெளிப்படையாக இருக்கவேண்டும். எல்லாருக்கும் கணக்குகளை காட்டவேண்டும் என அவசியமில்லை என்றும் கூறுகின்றனர். எல்லோருக்கும் காட்ட வேண்டாம் பொதுவாக மாதயிறுதியில் வரவு செலவு கணக்குகளை நிர்வாக போர்டில் வைக்க என்ன கஷ்டம். மருத்துவ கல்லூரிக்காக வாங்கிய நன்கொடை, பள்ளிக்காக செலவு செய்த விபரம் எதுவும் நிர்வாகத்தினரிடமில்லை, இருக்க போவதுமில்லை, அதை யாரும் தட்டியும் கேட்க போவதுமில்லை. வெள்ளிகிழமை ஜும்மா தொழுகையில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் கக்கூஸ் கழுவுவர்கள் என்று இந்த அம்பானி ஹஜ்ரத் சொன்னாரே அதற்கு இதெல்லாம் தப்பு என்று அவரிடம் வாதிட வேண்டாம் கனிவாகவாவது எடுத்து கூறீனார்களா இந்த விமர்சகர்கள்?

நமதூரில் சென்ற 15 வருட நிர்வாகத்தில் முரண்பட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. முன்பு ஊர் நிர்வாகிகள் தேர்வின் போது (அப்போது வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைபெறும்)தற்போதைய டிரஸ்டி எஸ்.டி.அன்சாரி அவர்களை ஜமாத்தினர் சிலர் முத்தவல்லியாக முன்னிறுத்தினர். ஆதிக்க சக்திகள் அப்போதும் தாங்கள் முன்னிறுத்தும் நபர் தான் வரவேண்டும் என்று ரயிலடித்தெரு ஜமீல் அவர்களை முன்னிறுத்தினர்.சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு தள்ளுமுல்லானதால் நிர்வாகிகள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.மறுதினம் இருத்தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டு தலா நான்கு பேரை முன்னிறுத்தினர். பிறகு தேர்வும் ஆனார்கள்.முத்தவல்லியாக அப்போது ரயிலடித்தெரு ஜமீல் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.அப்போது எஸ்.டி.அன்சாரி அவர்களை ஏற்காததிற்கு சொன்ன காரணம் அவர் மதரசாவில் செயலாளராக இருக்கின்றார், அந்த பொறுப்பை விடகூடாது, ஒருவர் ஒருபதவியில் தான் இருக்க வேண்டும் என்றனர்.ஆனால் தற்போதும் மதரசாவில் பொருளாளர் பொறுப்பில்தான் உள்ளார்கள்.தற்போதைய முத்தவல்லி கே.ஆர்.மாலிக் அவர்கள் மதரசாவில் உப தலைவராக உள்ளார்கள். முன்பு சொல்லிவந்த காரணத்திலிருந்து முரண்பட என்ன காரணம்?.இதுதான் நடுநிலையா? இதன் மூலம் தான் முன்னிறுத்தும் நபர் தான் நிர்வாகியாக வரவேண்டும்என்று தன் ஆதிக்கத்தை நிலை நாட்டி கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கின்றது.இது ஊருக்கும், ஊர் ஒற்றுமைக்கும் நல்லது என்று இந்த விமர்சகர்கள் நினைக்கிறார்களா? இல்லை அவர்கள் வாய் சவடால் எல்லாம் நம்மிடம் மட்டும் தானா? இங்கே கருத்தை பக்க பக்கமாக எழுதி தன்னை தூய்மைவாதிகளாக காட்டினார்களே, இந்த அக்கீரமத்தையெல்லாம் தூய்மை படுத்த வேண்டியது தானே? இவர்கள் செய்வார்களோ இல்லையோ அல்லாஹ் கண்டிப்பாக செய்வான், இடையில்நாம் கருத்தால் அடித்து கொண்டு நமக்குள் பகைமையை வளர்க்க வேண்டாம் சகோதரர்களே. சலாம்.

4 comments:

  1. நவ்ஷத் உங்கள் நோக்கம் என்ன ? தேர்தல் முடிந்த பின்பும் ஏன் இந்த குழப்பம் நீங்கள் ஆதரவு கொடுத்தவர்கள் அதுவும் ஊரில் இந்த 12 நபர்கள் தான் இந்த ஊரையே மாற்றம் செய்ய துடிக்கும் நல்லவர்கள் வல்லவர்கள் என்றெல்லாம் சொல்லி சொல்லி பொய்களையும் கேவலமான விமர்ச்சனகலையும் கிளப்பி எந்த வித பலனும் இல்லாமல் இப்போது முடிந்துவிட்ட நன்றாக பொய் கொண்டிருக்கும் ஊர் நிர்வாகத்தை விமர்சனம் என்ற பெயரில் கத்தி கொண்டிருக்கும் உங்களது குறிக்கோள் ஒரு நாளும் நிறைவேறாது.
    ஊரின் நலனுக்கு பாடுபாகிறோம் என்று சொல்லும் உங்களுக்கு நமதூரில் நடந்த ஜாமியாவின் நூற்றாண்டு கூட நினைவில்லை போல . உங்களுக்கு தான் ஊரை பிரிக்கவே நேரம் சரியா இருக்கு அதெல்லாம் எங்க நினைவிருக்க பொது அதன் பெருமைஏய் நீடூர் ஆன்லைன் நில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஊரின் பெருமை என்றால் அது இப்படிதான் இருக்க வேண்டும் உங்களை போல் இருக்ககுடாது .
    உங்களால் முடிந்தால் உங்களின் கருத்தை நேரில் வந்தோ அல்லது நிடுரில் இருந்து கொண்டு சொல்ல முடிமா?
    இந்த நிர்வாகத்தை பற்றி ஜின்னா தெரு அலி இடம் கேளுங்கள் நீங்கள் ஆதரவு கொடுத்த நண்பர் அவர் தான் . அவரிடமே கேட்டு அவர் சொல்லும் உண்மைகளை விடியோ காட்சிகளாக வெளி இட தயாரா?
    வெளி இட்டால் உங்களின் நிறம் வெளுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . தயவு செய்து நிடுர் ஆன்லைன் நிர்வாகிகளிடம் எப்படி ஊருக்காக ஆன்லைன் நடத்துவது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
    அக்பர் ஜின்னா தெரு . நிடுர்.

    ReplyDelete
  2. aamaa election taimla paarthomulla online lakchanatha!! 16 thethi varai offlinena thane irunthuchu? kolkai illathavanthan ippadi iruppan . onlinenukku vakkalathu vaankariye? nee anga kaasu vaangi eluthiriyaa?. oor muthal koottathula nirvaahi oruvar arivillaama pesinaare appa nee enga pone?. athu kidakkutum. nee sora online than "najath" endru poi solli jaichathaa eluthuchi. appa nee atha sari endruthaane solre? appa ithula enna thappa kande?.

    akbar.haji st. needoor

    ReplyDelete
  3. அன்புள்ள அக்பர் என்று புனை புயருடன் தாங்கள் கருத்தை நேரில் சொல்ல முடியமா
    என்று கேட்டு இருந்திர்கள் ஏன் முடியாது ஊரில் வந்து சொல்ல முடியும் நேரில்
    சொல்ல முடியும் அநியாயங்கள் ஊரில் நடந்தால் இணைய தளம் மூலம்
    தெரிய படுத்த தான் இனைய தளம் நடத்கின்றனர் நண்பர் அலி அவர்கள்
    மார்க்கம் பற்று உள்ளவர்கள் நியாயத்தை கூறுபவர் வீடியோ எடுக்க சந்தர்பம்
    கொடுத்தால் அதையும் வெளி இடுபார்கள் niduronlie போல இந்த இணைய தளம்
    யாருக்கும் பயந்து நடத்த வில்லை அதை நண்பர் அக்பர் புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும் எல்லா புகழும் இறைவனுக்கு நிச்சயமாக
    அல்லாவின் மீது சத்தியமாக பழைய நிர்வாகம் தவறு செய்யாது
    இருந்தால்? இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய நிர்வாகத்திடம் தனது
    அனைத்து கணக்கு வழக்குகள் அனைத்தையும் சரிவர ஒப்படைக்கும் .

    நமது ஊர் ஜமாஅதார்களும் நமது ஊர் மதரசா நூறாவது பட்டமளிப்பு
    விழாவில் பிஸியாக இருந்ததால் அதை பத்தி பேச இவர்களுக்கு நேரம்
    இல்லை .

    நமது ஊர் அனைத்து விசயங்களும் கழுகு கண்களோடு நோட்டம் இட்டு
    கொண்டுதான் இருக்கிறார்கள் பழைய படி இப்போ ஆட மாட்டார்கள்
    ஊர் நிர்வாகத்தை புரிந்து கொண்டார் முன்னால் ஆடினார் என்றால் அதற்க்கான
    காரணம் வேறு இப்பொழுது அதற்க்கான வாய்புகள் தரமாட்டார்கள் புதிய
    நிர்வாகஸ்தர்கள் ஆனால் ஒன்று ரெண்டு அதாவது சிலரின் ஜால்ராக்கள்
    tmmk நல்ல பெயரை கெடுப்பதற்காக அந்த இயக்கத்தில் இருந்து கொண்டு
    மக்களை ஏமாற்றுபவர்களை நிர்வாகம் தூக்கி எறியவேண்டும் tmmk வும்
    கட்சி நீக்கம் செய்யவேண்டும் .

    இனி வரும் காலங்களில் தவ்ஹீத் என்றோ சுன்னத்வல் என்றோ பிரிக்கும்
    குள்ளநரிகளை அடையாளம் கண்டு கலை எடுக்கவேண்டும் இம்மையில்
    உனக்காக நானும் எனக்காக நீயும் வாதிட்டு கொள்ளலாம் நாளை மறுமையில் எந்த ஒரு
    மனிதனுக்காகவும் வாதிடமுடியாது ஆதலால் தவ்ஹீத் என்றோ சுன்னத்வல் ஜமாஅத்
    என்றோ இனி நாம் சண்டை இட அவசியம் இல்லை .

    எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எல்லோரையும் முஹம்மதின் வழி செல்பவர்களாகவும்
    அல்லாவுக்கு மட்டும் கட்டுப்பட்டவர்களாக வாழ செய்வானாக ஆமீன் .

    இப்போது என் பொய் பெயரை இட்டு அல்லாவிடம் பாவத்தை சேர்த்து கொள்ள விரும்பவில்லை
    சமயம் வரும்போது என் பெயரை தெரிவிப்பேன் .இது யாருக்கும் பயந்தோ இல்லை தனி பட்டவருக்கு
    பயந்தோ இல்லை பயம் எனபது அல்லாவிடம் மட்டுமே சில தேவை இல்லாத விமர்ச்சனகளை தவிர்பதற்காக . ௦

    ReplyDelete