நமதூரில் சென்ற வாரம் 09/12/2011 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை முடிந்த பிறகு ஜின்னா தெருவை சேர்ந்த சகோதரரர் இஸ்மாயில் அவர்கள் எழுந்து ஜமாத்தார்களிடம் ஊர் நிர்வாக தேர்தல் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார், அவர் கேட்டது ஊர் நிர்வாகத்திடம், கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்காமல் வழக்கம் போல் எந்த பொறுப்பிலும் இல்லாத அவர்களின் கைத்தடிதான் காச்சோ முச்சோ என்று கத்தியுள்ளார். நிர்வாகிகளுக்கு பேச தெரியாதா? என்ன இந்த கைத்தடி அவர்களின் ஸ்பீக்கரா? ஒரு கேள்விக்கும் மக்கள் மத்தியில் பதில் சொல்லாமல் வழக்கம் போல் இஸ்மாயில் சகோதரருக்கும் கட்ட பஞ்சாயத்து செய்ய ஊர் நிர்வாகம் 11/12/2011 அன்று அழைத்துள்ளது. அதற்கு சகோதரர் அவர்கள் நேராக முத்தவல்லி வீட்டிற்கு சென்று எனக்கு இன்று வேலை உள்ளது, எதற்காக என்னை தனியாக பஞ்சாயத்துக்கு அழைக்கிறீர்கள், மக்கள் மத்தியில் கேட்டதற்கு மக்கள் மத்தியிலேயே பதில் கூறுங்கள் என சொல்லியுள்ளார்.
அதற்கு நமதூர் பலநாள் முத்தவல்லி அவர்கள் வழக்கம் போல் பிரசர் ஏறி கத்தியுள்ளார்(இவருக்கு கேள்வி கேட்டால் மட்டும் தான் பிரசர் ஏறும்). நான் கூப்பிட்டால் ஊரில் எவனாக இருந்தாலும் வந்துதான் ஆக வேண்டும் என கர்வமாக கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் பலமாக நடந்துள்ளது, இதுபோல் பேசி கொண்டிருந்தால் உன்மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று முத்தவல்லி கூறியுள்ளார். இப்படி பேச இவருக்கு யார் தைரியம் கொடுப்பது? இப்படி ஜமாத்தாரை மிரட்ட இந்த முத்தவல்லிக்கு யார் துணை நிற்பது? ஏற்கனவே இவர்கள் ஊர் பணத்தில் தான் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து அமைதி பேச்சு வார்த்தை என கண்துடைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த லஞ்ச பிரச்சனை பற்றி காண பின்வரும் இணையதளத்தை காணவும் - http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=253:2011-12-12-10-16-45&catid=53:2011-12-12-15-22-02&Itemid=147
சென்ற வாரத்தில் புதுமனை தெருவை சேர்ந்த சகோதரர் பாரூக் அவர்கள் முத்தவல்லியிடம் குடும்ப பாகபிரச்சனை சம்பந்தமாக ஒரு மனு கொடுத்துள்ளார். அத்ற்கு அவர் வாங்க மறுத்து வரப்போகின்ற புதிய நிர்வாகத்திடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் பெரும் வாக்குவாதமே நடந்துள்ளது. அப்படியிருக்கும் போது கொடுத்த மனுவை விசாரிக்க மறுக்கும் இவர், ஊர் நிர்வாக தேர்தல் பற்றி கேள்வி கேட்கும் சகோதர்களை தனியாக கட்ட பஞ்சாயத்து மட்டும் செய்கிறார். இவர்கள் இப்படி தனியாக கூப்பிட்டு மிரட்டி, வருத்தம் தெரிவித்து கடிதம் வாங்கி இவர்களை பணிய வைத்துவிடலாம் என்று எண்ணுகின்றனர். இவர்கள் அடிக்க அடிக்க மக்கள் வெகுண்டு எழுவார்களே தவிர முடங்கி போக மாட்டார்கள். இதற்கு முன் ஜும்மாவிற்கு பிறகு ஒரு சகோதரர் இறைச்சி கடை பற்றி புகார் அளித்தாரே அதற்கு அவருக்கு பஞ்சாயத்து வைத்தார்களா? அதற்கு இரண்டு வெள்ளிக்கிழமை கழித்து இறைச்சி கடைக்காரர்களை அழைத்து பஞ்சாயத்து நடந்தது. அந்த பஞ்சாயத்தால் ஒரு பலனும் இதுவரை ஜமாத்தார்களுக்கு கிடைத்திடவில்லை என்பது வேறு விஷயம். அப்படியிருக்கும் போது அதை விட அதிமுக்கிய பிரச்சனையை இஸ்மாயில் சகோதரர் எழுப்பிய போது மக்கள் மத்தியில் உரிய முறையில் பதில் தராமல் கேள்வி கேட்டவர்களை மிரட்டும் தோனியில் கட்ட பஞ்சாயத்துக்கு அழைப்பது மிகவும் கண்டிக்கதக்கது. நிர்வாகம் வரம்பு மீறி போய் கொண்டிருக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் இந்த நிர்வாகம் மீது கொந்தளிப்பில் உள்ளனர். அவர்களின் பொறுமையை சோதித்து அவர்கள் புரட்சியில் ஈடுபடுவதற்குள் நிர்வாகத்தினர் அவ்ர்களே முன் வந்து பதவியை ராஜினாமா செய்து ஜனநாயக முறைபடி தேர்தல் நடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு மக்களின் கடும் எதிர்ப்பை கண்டு பயந்த முத்தவல்லி அவர்கள் நிர்வாகிகளை அவசரமாக கூட்டி தனது பதவியை ராஜினாமா செய்து முத்தவல்லி பதவிக்கு தனக்கு உகந்த வேறொருவரை நியமிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கு என்ன மன்னாரட்சி நடந்து கொண்டிருக்கிறதா? அந்த மன்னராட்சியில் தான் ஒருவர் பதவியிறங்கும் போது அவர் தனக்கு பிடித்த நபரை மன்னராக்கிவிட்டு செல்வர். இவ்வாறு ராஜினாமா செய்யும் பட்சத்தில் ஒரு கமிட்டியை அமைத்து அதற்கு இரண்டு தரப்பிலுமிருந்து பொதுவான நபர்களை நியமிக்க வேண்டும் அல்லது உடனடியாக தேர்தலை நடத்த முன்வரவேண்டும். இல்லையெனில் இன்ஷா அல்லாஹ் நீடூர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவர்களை அப்புறப்படுத்தும் நிலைவரும். இதற்கு மேல் இவர்களை விட்டுவிட்டால் பதவிக்காக எதையும் செய்ய துணிவார்கள், அதற்கு நாம் தான் ஒன்றிணைந்து இவர்களை அப்புறப்படுத்த என்ன வழிகள் உள்ளதோ அத்தனையும் கையாள வேண்டும் அதற்கு அல்லாஹ் நமக்கு உதவி செய்து ஈமானை இழந்து நிற்கும் இந்த நிர்வாகத்திடமிருந்து நம்மை காப்பாற்றி மக்காளாட்சி நீடுரில் மலர்ந்திட உதவி புரிவானாக்!

mannaggatti mannumuttu aatchi
ReplyDeleteDAYAVU SEIDU IVARGALAI OPPITTU MANNARATCHIYAI KEVALAPADUTHA VENDAAM
ReplyDeleteபதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தவர்கள் அந்த செய்தியை பள்ளிவாசலின் நோட்டீஸ்போர்டில் ஒட்டியுள்ளார்களா? இல்லையெனில் இதுவும் ஒரு புதிய டிராமாதான்.
ReplyDelete