அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, December 29, 2011

ராஜினாமாவா? அப்படின்னா? - நிர்வாகிகள்


சின்னத்திரையை மிஞ்சிய அற்புதமான நாடகம்தமிழக தொலைக்காட்சி கூட இப்படி ஒரு நாடகத்தை பார்த்திருக்காதுஅதுதான் நமதூரில் அரங்கேரிய அற்புதமான ராஜினாமா என்ற நாடகம்ராஜினாமா செய்தவிவகாரம் வக்பு வாரிய அதிகார்களுக்கே தெரிவிக்காமல் ஏன் மூடி மறைத்தார்கள்வக்பு வாரிய அதிகார்களும் அப்படி ஒரு  கடிதம் தங்களுக்கு வரவில்லை என்கிறார்களேஅப்படியென்றால் அந்த ராஜினாமா கடிதம் யாரிடம் சமர்பிக்கப்பட்டதுராஜினாமா செய்ததாக (?) அறிவிக்கப்பட்ட முன்னால் (?) நிர்வாகிகளை தற்காலிகமாக நியமித்ததாக சொல்லப்பட்ட வக்பு வாரிய அதிகாரிகளுக்கே தெரியபடுத்தாமல் தற்காலிக நிர்வாகி என்று ஒருவரை நியமிக்க யார் அதிகாரம் கொடுத்ததுதங்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மூலம் ஊரின் அனுதாபம் தேடுவதற்காக தகவல் பலகையில் நோட்டீஸ் வைக்கும் போதுஅதிமுக்கியமான தகவலான ராஜினாமா கடிதத்தை மட்டும் ஏன் தகவல் பலகையில் வைக்கவில்லையாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? பள்ளிவாசல் கணக்குகள் ஜமாத்தார்களிடம் சமர்பிக்காதபோதே யாரும் கண்டுக்கொள்ளவில்லைராஜினாமாவையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற அலட்சியத்தில் நாடகம் ஆடுகிறார்களோராஜினாமா செய்தது உண்மையென்றால் உடனடியாக அதனை வக்பு வாரியத்திற்கு அனுப்புங்கள்பள்ளிவாசல் தகவல் பலகையிலும் அதன் நகலை ஜமாத்தார்களின் பார்வைக்கு வையுங்கள்ஏன் அப்படி செய்ய தயங்குகிறார்கள்ராஜினாமா கிடைத்தபிறகு வக்பு வாரியம் முடிவு செய்யட்டும், எப்படி தேர்தல் நடத்துவது என்றுநிர்வாகமே இல்லாத போது எப்படி தேர்வு முறையையும், தேர்தல் நாளையும் முடிவு செய்வது? அப்படியென்றால் அதிகாரம் யாரிடம்  இருக்கிறது?


புரிந்துணர்வு கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் மதிப்பை இழந்த பழைய நிர்வாகிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தியிருக்கிறார்கள்என்ன ஒரு வேடிக்கைஇதுவள்ளவா பாரம்பர்யம்பாராட்டும் படி அப்படி என்ன சாதித்தார்கள் பழைய நிர்வாகிகள்? 

1.இஸ்லாத்திற்கு விரோதமாக நம் ஜமாத்தை சார்ந்தவர்களை ஊர் நீக்கம் என்ற கட்டப்பஞ்சாயத்து செய்தார்களே அது சாதனையா?

2.ஜமாத்தார்களின் மனதில் என்றும் நிலைத்திருந்தநிலைத்திருக்கும் அழகிய பள்ளிவாசலை இடித்தார்களே அது சாதனையா?

3.அதனை தட்டிக்கேட்ட சகோதரர்கள் மீது தாக்குதலையும்அடக்குமுறையையும்அவமானத்தையும் ஏவினார்களே அது சாதனையா?

4.பள்ளிவாசல் கட்டுகிறோம் என்ற போர்வையில் கோடிகள் வசூலித்து அதற்கு இன்று வரை கணக்கு சமர்பிக்காமல் இருக்கிறார்களே அது சாதனையா?

5.கட்டிமுடிக்கப்படாமலேயே பல லட்சங்கள் செலவு செய்து அரசியல்வாதிகளை அழைத்து விழா நடத்தினார்களே அது சாதனையா?

6.இஸ்லாத்தின் அனுமதிக்கப்பட்டும் அல்லாஹ்விற்கு பிடிக்காத செயலான தலாக்கினை கணக்கு வழக்கு இல்லாமல் செய்து முடித்தார்களே அது சாதனையா?

7.மாற்று கருத்து கூறுபவர்கள் மீதெல்லாம் ஆட்களை ஏவி காவல்துறையின் மூலம் நடவடிக்கை என்று மிரட்டினார்களே அது சாதனையா?

8.இதற்கு முன்பு எந்த நிர்வாகமும் சந்தித்திராத வகையில் பதவி விலக்கோரி ஆர்பாட்ட போஸ்டர்  ஒட்டும் அளவிற்கு தரம் தாழ்ந்தார்களே அது சாதனையா?

9.தாசில்தாரிடம் சென்று இரண்டு உடன்படிக்கை செய்யுமளவிற்கு நமதூரை இட்டுச்சென்றார்களே அது சாதனையா?

10.அந்த உடன்படிக்கைகளை காற்றில் பறக்கவிட்டார்களே அது சாதனையா?

11.தேர்ந்தெடுக்கபடாமலேயே சுமார் மூன்றாண்டுகளாக பதவியில் ஒட்டி கொண்டிருந்தார்களே அது சாதனையா?

12.கோர்டில் வழக்குகள் இருப்பதால் பதவி விலக முடியாது என்று மூன்றாண்டுகளாக மக்களை ஏமாற்றினார்களே அது சாதனையா?

13.நமதூர் வரலாற்றிலேயே எந்த நிர்வாகமும் சந்திக்காத வகையில் கோர்ட் மூலம் சிறைத்தண்டனை வாங்கினார்களே அது சாதனையா?

14.இந்த அளவிற்கு நமது ஜமாத்தார்களிடையே ஒற்றுமையை தன்னுடைய சுயலாபத்திற்காக சிதைத்தார்களே அது சாதனையா?

15.பள்ளிவாசலில் இருக்க வேண்டிய அதிகாரமையத்தை சுயநலவாதிகளிடம் அடகு வைத்தார்களே அது சாதனையா?

16.மாற்று கருத்து கூறுபவர்களை எல்லாம் ஊரின் விரோதிகள் என்று முத்திரை குத்தினார்களே அது சாதனையா?

எது தான் சாதனை

இப்படி நீண்டுக்கொண்டே போகலாம் இவர்களின் சாதனைகளுக்கு (??????). ஒட்டுமொத்தஜமாத்தார்களின் எதிர்ப்புகளையும்வெறுப்புகளையும் தாங்க முடியாமல் பதவி இறக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பிரிவு உபச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறதுகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்களே அது இதுதானோ! மக்களை ஏமாற்றுபவர்களும்ஜமாத்தினரின் உண்மையான உணர்வுகளையும் புரிந்துக்கொள்ள முடியாதமதிப்பளிக்காதவர்கள் வேண்டுமானால் அந்த சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா நடத்தலாம்ஆனால் அல்லாஹ்வின் கேள்விக் கணைகளிலிருந்து ஒருகாலும் தப்பிக்க இயலாது..

பாராட்டுவிழா நடத்தினார்களே அதற்கு முன்பு பழைய நிர்வாகிகளிடமிருந்து கணக்கு வழக்குகளை வாங்கினார்களா என்றால் அதுவும் இல்லைஓவ்வொரு ஜமாத்தார்களிடம் அதனை காண்பிக்க சொல்லவில்லைபள்ளிவாசலில் தகவல் பலகை என்று ஒன்று எதற்கு இருக்கிறது.? தங்களுக்கு அனுதாபம் தேடவும்மாற்றுகருத்துள்ளவர்களை மிரட்டவும் தானா?

ஜமாத்தார்களே இப்படியே தாங்கள் அமைதி காத்துகொண்டே இருந்தால் உங்களிடம் வருமான வரி வசூலித்தாலும் வசூலிப்பார்கள்வெளியூர் போனால் கூட எங்களிடம் கூறிவிட்டுத்தான் போக வேண்டும் என்றுகூட சட்டம் போடுவார்கள்முடிவு என்பது கூட்டம் போட்டு பலரிடமும் கருத்துகள் கேட்டு அந்த கருத்துகளின் அடிப்பைடையில்  இருக்க வேண்டும்ஆனால் நமதூரில் நடப்பதோ கடைகளிலும்வீடுகளிலும் முடிவுசெய்துவிட்டு அதற்கு பிறகு கூட்டம் போட்டு அதற்கு வழு சேர்ப்பது ஏனோ வாடிக்கையாகிவிட்டதுஎன்றும் அல்லாஹ் சத்தியத்தின் பக்கமே இருப்பான்இறுதி வெற்றியும் உண்மையாளர்களுக்கே.

2 comments:

  1. மவுனம் சம்மதம் என்பதாக ஜமாஅத்தார்களின் செயல்பாடுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மவுனம் எப்போது புரட்சியாக வெடிக்குமோ அன்றுதான் இவர்களின் எதேச்சதிகாரத்திற்கு நல்லதோர் முடிவும் ஊருக்குகந்ததோர் விடிவும் ஏற்படும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பதிவுகள் நன்றாக பயன்தரதக்கதாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete