அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, December 22, 2011

தவ்ஹீதா அல்லது சந்தகடையா?

அல்லாஹ் ஆதாம் நபியை படைக்கும் போது மலக்குகள் ரத்தம் சிந்தும் கூட்டத்தினரையா படைக்க போகிறாய் எனக் கேட்டனர், விதியை படைத்த அல்லாஹ்விற்கு தெரியாதா இந்த மனித கூட்டம் பின்னாளில் அடித்து கொண்டிருக்குமென்று. அதுபோல் தான் இந்த உலகம் படைக்கப்பட்டது முதல் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு அடித்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி காட்டு மிராண்டிகளாய் சிறிய அற்ப விஷயத்துகெல்லாம் கொலை செய்து கொண்டிருந்த காட்டு அரபிகள் வாழ்ந்த காலகட்டத்தில் தான் நமது உயிரின் மேலான முஹம்மதை அல்லாஹ் தன் இறைத்தூதராக அனுப்பினான். நபி(ஸல்) அவர்கள் அயராது உழைத்து கர்வம்,அந்தஸ்தால் பிரிந்து கிடந்த முஸ்லிம்களையும், அம்முஸ்லிம்களுக்கு கடுமையான எதிரியாக இருந்தவர்களை அல்லாஹ்வின் நாட்டத்தினால் முஸ்லிம்களாக்கி நபி(ஸல்) அவர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்தது தான் சகோதரத்துவம். அதன் பிறகு தன் சகோதரனுக்காக எதையும் விட்டுகொடுக்கும் தன்மையும், அந்த சகோதரனுக்கு ஆபத்து என்றால் முன்னால் கேடயமாக நின்று அந்த ஆபத்தை தான் ஏற்றுகொள்வதுமென ஈமானை அதிக வலுவாக அவர்கள் இதயத்தில் நபி(ஸல்) அவரகள் ஏற்றினார்கள். கிட்டத்தட்ட காட்டுவாசிகள் போல் இருந்தவர்களை சிந்தித்து முடிவெடுக்கும் திறனையும் வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையின் சிகரமாய் இருந்த சமுதாயத்தின் நிலை தற்போழுது எப்படி இருக்கின்றது? நபி(ஸல்) நமக்கு தந்த பலமான ஆயுதமான சகோதரத்துவம் இருக்கின்றதா? என்பதை சுருங்க காண்போம்.

இன்று வரை யூதர்களும். கிறுஸ்துவர்களும் முஸ்லிம்களை கண்டு அஞ்சுவது நம்மிடையே இருக்கும் சகோதரத்துவம்,ஏனெனில் முஸ்லிம்கள் ஒற்றுமையாய் இருந்தால் அல்லாஹ் பல மலக்குகளை இறக்கி முஸ்லிம்களை வலுவாக்குவான் என்பதுதான் அவ்ர்கள் பயப்பட காரணம். அமெரிக்காவும் கூட முஸ்லிம்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்திவிட்டுதான் அந்த நாட்டை தாக்கும், இதற்கு ஈராக்,லிபியா போர் ஓர் உதாரணம். இப்படி பிழவு பட்டவர்களை அடிப்பது அல்லது அழிப்பது எதிரிகளுக்கு ரொம்ப சுலபம் ஏனெனில் அங்கே அல்லாஹ்வின் உதவியும் இருக்காது, நபி(ஸல்) அழாமாய் ஊன்றுவித்த ஈமானும் இருக்காது. அதுபோல் தான் இப்பொழுது தமிழகத்திலும் நிலை இருக்கின்றது. ஒரு ஜமாத்தாக வாழத வட இந்தியாவில் முஸ்லிம்களை தக்கினர் அது போல் தென்னிந்தியாவை யாரும் தாக்க முடியாத நிலை ஏனெனின் இங்கு முஸ்லிம்களுக்கு போராடுவதற்காக பல ஜமாத்கள் போராடி கொண்டிருக்கின்றன. ஒவ்வொறு காலகட்டத்திலும் தென்னிந்தியாவில் உள்ள ஜமாத்களில் பிரிவினை என்பது தொடர்கதையாகிவிட்டது. முதன்முதலில் சுன்னத்வல்ஜமாத் தலைமையின் கீழ் அனைவரும் இருந்தோம், மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவர்கள் மக்களை தர்கா, மவ்லுது என ஷிர்கின் பக்கம் மக்களை சாய்த்தனர். அதன் பின் அதிலிருந்து விவரறிந்தவர்கள் வெளியேரி பல ஜமாத்கள் உருவாக்கினாலும் நபி(ஸல்) காட்டிய மார்க்கபடி அமைய பெற்ற வலுவான இயக்கம் ஜாக். அதிலும் நிலைத்தார்களா என்றால் இல்லை என்பதுதான் கவலையளிக்கும் பதில். ஏதோ காரணம் கூறி தமுமுக உருவானது. பிரியும்போது இரு தரப்பினர் கூறும் காரணத்தையும் கேட்டால் உண்மை யார் பக்கம் என்பது கண்டுபிடிப்பது இயலாத காரியம். தவ்ஹீத்வாதிகள் இருப்பதால் யாரும் தமுமுக பக்கம் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் என கூறி தமுமுகவிலும் பிரிவினை வந்தது. அதுமுதல் தான் முஸ்லிம் சமுதாயம் சிரிப்பாய் சிரிக்க தொடங்கியது. இதற்கு முன் முஸ்லிம்களுகிடையே தான் தாங்கள் தூயவர்கள் என்று கூறி பக்கம் பக்கமாய் கட்டுரை அவரவர்கள் பத்திரிக்கையில் எழுதுவார்கள். ஆனால் தமுமுக பிரிவினையுற்ற பொழுது, உன் பித்ரா கணக்கு எங்கே? கணக்குகள் சரியா? என அவர் அவர்களை பார்த்து கேட்காமல் வெளியுலக்கத்தில் போஸ்டர் அடித்து எல்லாரும் கூடும் இடமாக பார்த்து ஒட்டி அவரவர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். இதனால் முஸ்லிம் சமூகமே வெட்கி தலை குனிய வேண்டியதாயிற்று. ராமகோபாலன் கூட " இவர்களை நாம் அடிக்க வேண்டாம் இவர்களை இவர்களே அடித்து கொண்டு சாவர்" என கிண்டலடிக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளபட்டனர்.

சரி அதுபோதாது என இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலோ பிரிவினை. பிரிவினைக்கு காரணத்தை கேட்டால் காரி துப்பதான் தோன்றும். பாக்கர் மீது செக்ஸ் புகார் கூறி வெளியேற்றியது. எவரின் தவறையும் பகிரங்க படுத்த வேண்டாம் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. ஆனால் பல காரணங்களுக்காகத்தான் வெளியிட நேரிட்டது என ததஜா கூறியது. ஆனாம் இது முற்றிலும் போய் என பாக்கர் கூறி விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என ஆரம்பப் செய்து இப்பொழுது இரு அமைப்புக்கும் இடையே கடுமையான் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. பாக்கரின் செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என பேர்வழி www.poyyantj.blogspot.com என்ற இணையதளத்தை உருவாக்கி பாக்கரை கடுமையாக சாடி எழுதி வருகின்றனர். போட்டியாக பாக்கர் தரப்பு www.poyyanpj.blogspot.com என்ற இணையதளத்தை உருவாக்கி பீஜேயை கடுமையாக தாக்கி எழுதி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் மாற்று மதத்தினருக்கு என்ன தோன்றும்?, மார்க்கத்தை கரைத்து குடித்தவர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் சந்தகடை சண்டையை விட மோசமாக சண்டையிடுவது எதை காட்டுகிறது. நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் இவர்களை என்ன செய்வது? எப்படா முஸ்லிம்களை அழிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் பாஸிஸவாதிகளுக்கு இப்படி சண்டை போடுவது எவ்வளவு மகிழவை ஏற்படுத்தும்? அல்லாஹ் கண்டிப்பாக இதில் யார் கெட்டவர்கள் என்று மறுமையில் காண்பிப்பான் ஆனால் மக்கள் இவ்வுலகில் நல்லவர்கள் யார் என்றூ எப்படி கண்டுபிடிப்பது. இவர்களை பின்ப்ற்றினால் நேர்வழி பெறமுடியுமா? இப்படி பல எண்ணங்கள் தவ்ஹீதை பின்பற்றும் மக்களிடையே ஓடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் சண்டையெல்லாமே இந்த உலக பிரச்சனைக்குதான்,இதை எப்படி தீர்ப்பது? நமக்கு பட்ட ஒரே தீர்வு நமது சுய சிந்தனைதான். அல்லாஹ் நமக்கு சிந்திக்கும் திறனை தந்துள்ளான் அதற்கு மேலாக நமக்கு வழிகாட்ட தமிழாக்கம் செய்த குரானும், ஹதீஸ் நூல்களும் உள்ளன. அதை ஆராய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. மார்க்க அறிஞர்கள் மைக்கை பிடித்து கூறுவார்கள் அதை அப்படியே பின்பற்றலாம் என நினைத்து கொண்டிருக்கிறோம் அவர்கள் சொல்வதை எப்பொழுதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா? நம் செயலுக்கு நாம் தான் பொறுப்பு அதற்கு ஒருபோதும் மற்றவர்கள் பகரமாகமாட்டர்கள். எனவே இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலத்தில் இந்த ஜமாத்தில் மேலும் மேலும் பிரிவினைதான் வரும் ஆதலால் இவர்களை பின்பற்றுவதை நிறுத்திவிட்டு நம்மை நாமே சுய பரிசோதனை அடிக்கடி செய்து மார்க்கம் சொன்னபடி வாழ்கிறோமா என்பதை ஆராய்ந்து வாழ வேண்டும் அப்படி வாழ முற்பட்டால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவான். அப்படி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! ஆமீன்.

2 comments:

  1. இந்த நிலையில் அனைவரும் எப்போதும் இருந்தால் ஒற்றுமை என்பது தானாக வரும். ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டி வருவதால் பிளவுகள் தான் ஏற்படுமே தவிர ஒற்றுமை ஏற்ப்பட வாய்ப்பே இல்லை. இந்த நிலை நமது ஊருக்கு மிக மிக அவசியம். ஊரின் நன்மைக்காக சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் ஒற்றுமைக்காக முயற்சி செய்வோமாக ஆமின்!!!

    ReplyDelete
  2. INSHA ALLAH UNMAIYAIYUM MARKKATTAIYUM PURINDU NADAUKKUM MAKKALUKKU NALLA VALIYAI ALLAH EARPADUTHITHARUVAN

    ReplyDelete