நமதூரின் நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு எப்போதுமே அவர்களுக்கு ஒரு சட்டம், ஜமாத்தார்களுக்கு ஒரு சட்டம் தான். முன்பு இதே ஜமாத்தார்கள் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை தான் ஊரில் குழப்பம் விலைவிக்க பார்க்கிறார்கள், தேர்தலுக்கு முன் இது போல் கூட்டம் கூட்ட அனுமதிக்க கூடாது, கூட்டத்தை ரத்து செய்து அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வட்டாச்சியரிடம் போய் நின்ற அதே முன்னாள் நிர்வாகிகள் இப்பொழுது அவர்கள் கையில் நிர்வாகம் இல்லாத நிலையில் புரிந்துண்ர்வு கூட்டம்(!!!) என்ற பெயரில் இன்று 24/12/11 காலை 10 மணிக்கு ஜமாத்தார்களை அழைத்துள்ளார்களே இதை யாரிடம் நாம் போய் கூறுவது?. அது போகட்டும், ஊர் கூட்டம் கூட்ட நினைப்பவர்கள் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை கூட்ட வேண்டும், வணிகம் செய்யும் பெரும்பாலான் மக்கள் அன்று தான் கலந்து கோள்ள முடியும் இல்லையெனில் அவ்ர்களை சார்ந்த மக்களே இதில் கலந்து கொண்டு அவ்ர்கள் நினைப்பது போல் கூட்டத்தை வழி நடத்துவர். இத்ற்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. திரும்பவும் அவர்கள் குட்டையை குழப்ப பார்க்கின்றனர், விழிப்புடைய மக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தவறாமல் ரகசிய வாக்கெடுப்புக்கு வழியிறுத்த வேண்டும். கண்டிப்பாக ரகசிய வாக்கெடுப்புதான் வேண்டும் இல்லாவிடில், தேர்தல் எப்படி நடத்துவது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தல் அதில் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் ஜனநாயக முறைப்படித்தான் நடத்த வேண்டும் என தீர்ப்பு வரும். அதுபோக இவர்கள் வட்டாச்சியரிடம் எழுதி கையோப்பமிட்ட தீர்மானத்தில் இதுபோல் தேர்தல் முன் கூட்டம் கூட்டினால் கூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றுள்ளது, அதையும் இக்கூட்டத்தில் மக்கள் கேள்வியாக எழுப்ப வேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த நிர்வகத்தினர் பின்னும் எந்த சதிவலைக்கும் நாம் அனுமதிக்க கூடாது.
No comments:
Post a Comment