அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, December 14, 2011

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசைனின் மருத்துவ உதவி


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசன் சங்கம் - துபாய் பல வருடங்களாக பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்து வருகின்றது. அதில் முக்கியமானது மருத்துவ உதவி. நமது நீடூர் மேலத் தெரு சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் மகனார் கல்லூரியில் படித்து வருகிறார், அந்த பையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பையனை பற்றிய விபரம் முன்பே நமது இணையதளத்தில் வெளியிட்டுருந்தோம். அதை காண இங்கே கிளிக் செய்யவும். துபாய் சங்கம் சார்பாக அந்த பையனுக்கு மாதா மாதம் உதவி செய்யபட்டு வருகிறது. சென்ற வாரம் துபாய் சங்க தலைவர் சாதிக் முன்னிலையில் அந்த பையனுக்கு இரண்டாம் மாத உதவி வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அந்த பையன் உடல் நலம் குணம் அடைய துவா செய்யும்படி கேட்டு கொள்கிறோம். மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் பின்வரும் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

O.M.SADIQ (தலைவர்) = 0097150 5683579
A.NAYAS (செயலாளர்) = 0097150 6985035
M.NASEER ALI (பொருளாளர்) = 0097150 5144765
A.MUZIPURAHMAN (இணை செயலாளர்) = 0097150 6950409


No comments:

Post a Comment