அஸ்ஸலாமு அலைக்கும்
நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஸன் கூட்டம் 13-04-2012 அன்று துபையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் அஸோஸியேஸன் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் புதிய நிர்வாகிகள் எந்த அமைப்பையும், அரசியல் கட்சிகளையும் சாராதவர்களாக இருந்தால் நல்லது என கருத்து கூறப்பட்டது. இது வரவேற்க தகுந்த கருத்தாகும். இந்த சங்கம் அனைவருக்கும் பொதுவானது, அதில் எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் ஆதரவாக செயல்படாமல் இங்குள்ள நம் சகோதரர்களுக்கு உதவியாகவும், ஊரில் நம்மால் ஆன உதவி செய்வதும் தான் நோக்கமாக இருக்க வேண்டும். இதே நிலையைதான் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நம்மூர் நிர்வாகிகள் தேர்தலிலும் கடைபிடிக்க வேண்டும். அரசியல் பின்பலமுள்ளவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இங்குள்ள நம் சகோதரர்கள் நம் வீட்டாரிடம் இக்கருத்தை வலியுறுத்த வேண்டும்.
யாரேனும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தலில் நின்றால் மக்கள் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் கண்டிப்பாக ஊருக்கும், மக்களுக்கும் நல்லது செய்யக்கூடியவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.பொது சேவையில் ஆர்வமும், அல்லாஹ்வின் அச்சமும் இருந்தால் மக்கள் தேர்தலில் போட்டியிடவும் வேண்டும். நமதூரில் முன்பு அரசியலில் உள்ளவர்களை நிர்வாகத்தில் புகுத்தியதால் பல இன்னல்களை சந்தித்தோம்.அரசியலில் இருந்து கொண்டு ஊர் நிர்வாகிகளாக வருவதால் ஊருக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதுமில்லை, ஏற்பட போவதுமில்லை, மாறாக தங்களை வளர்த்துக்கொள்கின்றனர். நாம் சொன்னால் ஊரே கேட்கும் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு தன் கட்சியை சார்ந்தவர்களை அழைக்கின்றனர். இதன் மூலம் ஊரில் தமக்கு செல்வாக்கு இருப்பதை போன்று காண்பிக்கின்றனர். ஜமாத்தார்கிடையே பெரிய அரசியல் தலைவர்களை தெரியும் என்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் ஊருக்கும், ஜமாத்துக்கும் என்ன நன்மை! வருகின்ற அரசியல்வாதிகளும் நிர்வாகிகள் எந்த கட்சியை சார்ந்தவரோ அக்கட்சியில் இருப்பவர்களாவே இருக்கின்றனர். எனவே தாம் சார்ந்த கட்சிக்கு சாதகமாக ஊரே இருக்க வேண்டும் என நினைப்பில் இருக்கின்றனர்.
ஜீலை மாதம் மதரசா 100வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு கண்டிப்பாக அரசியல் தலைவர்களை அழைக்கத்தான் போகின்றனர். இதனால் யாருக்கு பயன்? ஊருக்கா? அழைத்து வருபவருக்கா? கட்சியில் தமக்கு முக்கிய இடம் கிடைக்க இதுபோல் நிகழ்வுகளை தமக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். இப்படி ஊரை தம் தேவைக்கு அடகு வைக்கும் இவர்கள் அந்த அரசியல் பிரமுகர்களை கொண்டு ஊருக்கு ஏதும் செய்தார்களா? இப்படி அரசியல் சாயம் நம் நிர்வாகிககளிடம் இருந்ததால் தான் தங்கள் கட்சி நடத்திய மது ஒழிப்பு கூட்டத்திற்கு நம்மூர் ஹஜ்ரத்தை அழைத்து சென்றுள்ளனர். அதுபோல் விழாவுக்கு வரும் அரசியல்வாதிகளும் என்ன பேசுவதென்று தெரியாமல் தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளை புகழ் பாடுகின்றனர். மதரசா பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்துவதோடு இவர்களை புகழ் பாடுவதுதான் அதிகம். எனவே இது மாதிரியான செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நிர்வாகிகள் தேர்தலில் இவர்களை புறக்கணித்து சேவை மனப்பான்மையும், மார்க்கம் அறிந்தவர்களையும் தேர்தடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மூருக்கு சிறப்பானதோர் நிர்வாகம் அமைய உதவி புரிவானாக. ஆமீன்.