நமதூரில் நிர்வாகிகளை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வக்பு போர்ட் முடிவு செய்து ஆரம்ப கட்ட பணிகளை முடிக்கிவிட்ட நிலையில், இத்தேர்தலை விரும்பாதவர்கள் 30-03-2012 அன்று பள்ளியில் பழைய நிர்வாகியை ஒருவர் விமர்சித்ததால் தாக்கப்பட்டார். இனியும் மக்களை மிரட்டி பார்க்கலாம் என்று எண்ணாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவதற்கு ஒத்துழைப்பதுதான் இவர்களுக்கு நல்லது. இனியும் இன்ஷா அல்லாஹ் இவர்களின் மிரட்டலுக்கு பயப்படும் நிலையில் மக்கள் இல்லை. முன்பு நீடூரில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் கண்ணியமிக்கவர்களாகவும் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்போழுது உள்ள நிர்வாகிகள் அப்படியா? அவர்களின் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மூன்று அடிதடி சம்பந்தபட்டவை. எனவேதான் இவர்கள் கோரும் பாரம்பரிய(!) கோரஸ் முறைக்கு எதிர்ப்பலை உள்ளது, அதை நடத்தினால் அடிதடிக்கு பெயர் போனவர்களை நிர்வாகிகளாக கொண்டு வந்துவிடுவார்கள்.
இந்த அதிமேதாவி நிர்வாகிகள் சொல்லும் அடுத்த சப்பை காரணம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் கண்டவர்களும் பதவிக்கு வந்து விடுவார்களாம்!.என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? மக்கள் அனைவரும் முட்டாள்கள், கண்டவர்களுக்கும் ஓட்டு போட்டு பதவிக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என்கிறார்களா? பதவிக்கு நிற்பவர்கள் என்ன வேறு ஊரிலிருந்து வந்து இங்கு நிற்க போகிறார்களா? நமது ஜமாத்திலிருந்து தானே போட்டியிட போகிறார்கள்? மக்களுக்கு எவன் நல்லவன் என்று தெரியாத கூமுட்டை என்று நினைத்து கொண்டிருக்கிறிர்களா?
நான்கு நஜாத்துக்காரர்கள் தான் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்கின்றனர். என்னப்பா இது? ஜமாத் தேர்தலில் கண்டிப்பாக நஜாத்காரர்கள் எக்காரணம் கொண்டும் போட்டியிட போவதில்லை இப்படியிருக்க அவர்களை கண்டு பயமேன்? ஏதோ நான்கு பேர் செய்யும் வேலை என்றால் இவ்வளவு ஆதரவு இருக்காது, பெருபான்மை மக்கள் ரகசிய வாக்கெடுப்பை கோருகிறார்கள். வாக்பு போர்டும் அதற்காக தயாரகிவிட்ட நிலையில் குட்டையை குழப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.
ஒரு ஊர் இமாமை உங்கள் போக்குக்கு வலைப்பது கொடுமையிலும் கொடுமை. இஸ்மாயில் ஹஜ்ரத்திற்கு உள்ள நல்ல பெயரை உங்கள் மூலம் கலங்கபடுத்தாதீர்கள். ரகசிய வாக்கெடுப்புக்கான வேலை மும்முரமாக நடைபெறும் வேலையில் ஜும்மா உரையில் அதை எதிர்த்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியே!
நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெயித்தவர்களிடம் பதவியை கொடுக்காமலும், அதை கேட்டால் மிரட்டுவதுமாக இருந்தால் இந்த கொடுமையை யாரிடம் போய் முறையிடுவது? இப்பொழுது அதற்கான தீர்வாக அமையவிருக்கும் ரகசிய வாக்கெடுப்பு வேலையை சீர்குலைக்க முயற்சிக்கும் விஷமிகளுக்கு மக்கள் அடிபணிந்து விடாமல் நல்லதோர் நிர்வாகம் அமைய ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு நடக்கும் வேலைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்திட வேண்டும். நல்லதோர் இந்த முயற்சிக்கு அல்லாஹ் உதவி புரிந்திடுவானாக்! ஆமீன்.

assalamu allaikum...var
ReplyDeleteyou publish reall matter
thanks for you pubilsh