அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, April 25, 2012

வேண்டாம் ஊர் நிர்வாகத்தில் அரசியல்


அஸ்ஸலாமு அலைக்கும்
நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஸன் கூட்டம் 13-04-2012 அன்று துபையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் அஸோஸியேஸன் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் புதிய நிர்வாகிகள் எந்த அமைப்பையும், அரசியல் கட்சிகளையும் சாராதவர்களாக இருந்தால் நல்லது என கருத்து கூறப்பட்டது. இது வரவேற்க தகுந்த கருத்தாகும். இந்த சங்கம் அனைவருக்கும் பொதுவானது, அதில் எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் ஆதரவாக செயல்படாமல் இங்குள்ள நம் சகோதரர்களுக்கு உதவியாகவும், ஊரில் நம்மால் ஆன உதவி செய்வதும் தான் நோக்கமாக இருக்க வேண்டும். இதே நிலையைதான் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நம்மூர் நிர்வாகிகள் தேர்தலிலும் கடைபிடிக்க வேண்டும். அரசியல் பின்பலமுள்ளவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இங்குள்ள நம் சகோதரர்கள் நம் வீட்டாரிடம் இக்கருத்தை வலியுறுத்த வேண்டும்.

யாரேனும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தலில் நின்றால் மக்கள் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் கண்டிப்பாக ஊருக்கும், மக்களுக்கும் நல்லது செய்யக்கூடியவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.பொது சேவையில் ஆர்வமும், அல்லாஹ்வின் அச்சமும் இருந்தால் மக்கள் தேர்தலில் போட்டியிடவும் வேண்டும். நமதூரில் முன்பு அரசியலில் உள்ளவர்களை நிர்வாகத்தில் புகுத்தியதால் பல இன்னல்களை சந்தித்தோம்.அரசியலில் இருந்து கொண்டு ஊர் நிர்வாகிகளாக வருவதால் ஊருக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதுமில்லை, ஏற்பட போவதுமில்லை, மாறாக தங்களை வளர்த்துக்கொள்கின்றனர். நாம் சொன்னால் ஊரே கேட்கும் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு தன் கட்சியை சார்ந்தவர்களை அழைக்கின்றனர். இதன் மூலம் ஊரில் தமக்கு செல்வாக்கு இருப்பதை போன்று காண்பிக்கின்றனர். ஜமாத்தார்கிடையே பெரிய அரசியல் தலைவர்களை தெரியும் என்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் ஊருக்கும், ஜமாத்துக்கும் என்ன நன்மை! வருகின்ற அரசியல்வாதிகளும் நிர்வாகிகள் எந்த கட்சியை சார்ந்தவரோ அக்கட்சியில் இருப்பவர்களாவே இருக்கின்றனர். எனவே தாம் சார்ந்த கட்சிக்கு சாதகமாக ஊரே இருக்க வேண்டும் என நினைப்பில் இருக்கின்றனர்.

ஜீலை மாதம் மதரசா 100வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு கண்டிப்பாக அரசியல் தலைவர்களை அழைக்கத்தான் போகின்றனர். இதனால் யாருக்கு பயன்? ஊருக்கா? அழைத்து வருபவருக்கா? கட்சியில் தமக்கு முக்கிய இடம் கிடைக்க இதுபோல் நிகழ்வுகளை தமக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். இப்படி ஊரை தம் தேவைக்கு அடகு வைக்கும் இவர்கள் அந்த அரசியல் பிரமுகர்களை கொண்டு ஊருக்கு ஏதும் செய்தார்களா? இப்படி அரசியல் சாயம் நம் நிர்வாகிககளிடம் இருந்ததால் தான் தங்கள் கட்சி நடத்திய மது ஒழிப்பு கூட்டத்திற்கு நம்மூர் ஹஜ்ரத்தை அழைத்து சென்றுள்ளனர். அதுபோல் விழாவுக்கு வரும் அரசியல்வாதிகளும் என்ன பேசுவதென்று தெரியாமல் தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளை புகழ் பாடுகின்றனர். மதரசா பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்துவதோடு இவர்களை புகழ் பாடுவதுதான் அதிகம். எனவே இது மாதிரியான செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நிர்வாகிகள் தேர்தலில் இவர்களை புறக்கணித்து சேவை மனப்பான்மையும், மார்க்கம் அறிந்தவர்களையும் தேர்தடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மூருக்கு சிறப்பானதோர் நிர்வாகம் அமைய உதவி புரிவானாக. ஆமீன்.

5 comments:

  1. A . R .சுலைமான் சேட்April 26, 2012 at 11:42 AM

    மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.
    இஸ்லாமிய உம்மத் ஒரு அணியாக இருந்து செயற்படுவது என்பது இஸ்லாமிய ஷரீஆ-வின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதைப் பெறுவதற்குப் பெரும் தடையாக கருத்து வேறுபாடுகள் அமைந்துள்ளன.அகீதாவில் ஒன்று பட்டவர்கள்கூட சாதாரண கருத்து வேறுபாடுகளால் ஒரு அணியாக இருந்து செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.

    கருத்து வேறுபாட்டைத் தவிர்த்தல் வேண்டும்:-
    முடிந்தவரை கருத்து வேறுபாட்டைத் தவிர்க்க முனைய வேண்டும். சிலர் இல்லாத கருத்து வேறுபாடுகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தம்மை முன்னிலைப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கின்றனர். சில அழைப்பாளர்களிடம் காணப்படும் இந்த “முதன்மை ஊக்கம்” என்ற உளவியல் பலவீனம் அல்லது பிரபலம் தேடும் உளவியல் குறைபாடு களத்தில் குழப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்றது.
    இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரைமீதிருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்கு கிறான்”. (3:103)

    ReplyDelete
  2. again politic in our jamaat...Allah same mistake. without politic why can not run jamaat of nidur?

    ReplyDelete
  3. அ.ஹ.நஜீர் அகமது(துபாய்)April 29, 2012 at 10:06 AM

    சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மீது விளட்டுமாக ஆமீன்!

    நிச்சயமாக இந்த சமூதாயம் ஒரே சமூதாயம் நமக்குள் ஆயிரம் கருது
    வேறுபாடுகள் இருந்தாலும் நம் சகோதரருக்கு ஒரு பிரச்னை என்றால்
    அதை எந்த வித பாகுபாடின்றி ஒன்று இனைந்து குரல் கொடுக்க வேண்டும் போராடவேண்டும்!

    இயக்கமும் அமைப்புகளும் நம்மை பிரிக்கும் ஷைத்தான் அல்லாவும்
    ரசூலும் நம்மை ஒன்று இணைக்கும் மாபெரும்இறைவனின் அருள் என்பதை ஒருகாலும் மறக்க கூடாது !

    நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் தேர்தலாக இருந்தாலும் துபை சங்க தேர்தலாக இருந்தாலும் அரசியல் இருக்க கூடாது வரவேற்க கூடிய
    விஷயம் ஆனால் இன்றையா கால கட்டங்களில் எல்லோரும் ஒரு அமைப்புகளில் இருந்து கொண்டு அந்த அமைப்புகளோ இயக்கங்கள் என்ன சொல்லுகிறதோ அதற்க்கு ஜால்ரா அடிக்க கூடாது எந்த கொம்பனாக இருந்தாலும் அவன் எவ்வளவு பெரிய சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்தாலும் நமது இஸ்லாத்திற்கு முரண்பாடக இருந்தால் அந்த அமைப்புகளையும் இயக்கங்களையும் அல்லது நிர்வாகியையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

    கேட்க்க ஆள் இல்லை நாம் செய்வது சரியென நினைத்து நம் இஷ்ட்டம் போல் ஆடுபவர்களையும் ஆட நினைபவர்களையும்
    ஒருகாலும் நிர்வாகத்துக்குள் நுழைய விட கூடாது.

    நிர்வாகம் தேர்தெடுத்த பின்பு சங்கமாக இருந்தாலும் ஊரக இருந்தாலும் நம் சமூகத்தில் ஏழை எளிய வறுமை கோட்டுக்கு கீழ்
    உள்ளவர்களை கைதூக்கி அவர்களின் குறை
    களைய படவேண்டும் .

    என் அருமை இஸ்லாமிய சமூகமே உயர்ந்த பள்ளிகள் திக்கெங்கும் கட்டி அதில் தொழுகை நடத்தி தொழுது கொண்டால் ஏகத்துவத்தை
    நிலை நாட்டியதாக ஆகி விடாது நம் சமூகத்தில் நம் மக்கள் படும் கஷ்டதை ஆராய வேண்டும் பள்ளிகளுக்கு சொத்து சேர்த்துவைக்க அல்லாஹ்சொல்லவில்லை நிர்வாகத்தில் உள்ளவர்கள் உண்ணவும்
    அல்லாஹ் சொல்லவில்லை ரசூல்(ஸல்)அவர்களும் அப்படி நமக்கும்
    கற்றுத்தரவில்லை நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஏழை எளிய வர்க்கு
    உதவலாம் கல்யாணம் நடக்காமல் வறுமையின் காரணமாக முதிர்கன்னியாகி கரை சேர்க்காமல் என்று நாம் கரை ஏறுவோம்
    என்று காத்து கொண்டிருகிராலே அவளை கரை எத்த வலி வகை செய்ய வேண்டும் எந்த குடும்பத்தில் பணத்தின் காரணமாக
    படிக்க வசதி இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் இளைனர்களின்
    படிப்புக்கு நாம் உதவ வேண்டும் .

    இப்படியாக நம் சமூகத்தில் உள்ள அணைத்து பிரச்னை தீர்க்க வலி வகை செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ் அதற்க்கான எண்ணம்
    ஏற்பட அல்லாஹ் வலி வகை செய்வானாக ஆமீன் !

    ReplyDelete
    Replies
    1. iyakkam enbathu avanavanudaya thanippatta kolgai islam allatha mattra jathikkatchigalil irukkum ethanai sagotharargalai ungalaukku teriyum oor pathaviyil irukkum ivargalai itthanai naalaga ungalauuku teriyatha..... allathu terinthu kondu kandukollamal irukkireergal samudaya iyakkatthil iruppavargal ellorum avargalin thanipatta viruppam samudaya iyyakkngal iruppthinal thaan oralavirku kalvi mattrum velaivaipugalil arasin velaivaipugalai pinthangiya mavattangalil tharpothu vaipugal varuginrathu nammudaya munnorgal uruvakkiya muslim leek dessiyaleek ellam oru iyakkamthan ithum thavara ithuvarai avargal samudayatirkaga ethumseiyavillai enbathu veru visayam namkku muthalil thevai ottrumai piraguthan iyakkam namakkuthevai oorin ottrumai athil naam oraniyaga iruppom allah nammai nalla visayangalil ondru serpanaga

      Delete
    2. அ.ஹ.நஜீர் அகமது(துபாய்)May 1, 2012 at 9:49 AM

      இயக்கதில் இருப்பதை குறை சொல்லவில்லை இயக்கத்தில் இருந்து கொண்டு ஒன்றுக்கும் உபயோகம்
      இல்லாமல் இருப்பவர்களை எண்ணி மனம் வருந்துகிறேன்,எந்த இயக்கத்தில் வேண்டாலும் இருக்கட்டும் ஏன் பிஜேபி ல கூட இருக்கட்டும் நம் எதிரி அமைப்பில் இருந்து கொண்டு நம் மக்களுக்காக அவர்களிடம் போராட வேண்டும் நான் உங்களுக்கு எதிரி இல்லை நாளை நீயும் அல்லாஹ் என் இறைவன் ரசூல் (ஸல்) நம் தூதர் என்று ஏற்று கொண்டால் நீ என் சகோதரன் என்று சொல்ல எந்த மனிதனுக்கு தெய்ரியம் இருக்கு.

      முஸ்லிம் லீகை நாம் குறை சொல்லவும் முடியாது இன்று 1008 அமைப்புகளை பிரிந்து சின்னா பின்னமாகி
      நாம் உரிமை முழுவதுமாக கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கிறோம் கரணம் யாரு நாம் தானே ஒரே கட்சியில் ஒன்று இணைந்து போராட முயன்றோமா இல்லைய்யே ஏன் எல்லோரும் தலைவனாக வேண்டும் அந்த போதையை எல்லோரும் ருசிக்கவேண்டும் பயன் தலைவர்களுக்கு நஷ்ட்டம் நாம் இனத்திற்கு .

      இய்யக்கங்களை குறை சொல்ல வில்லை பிரிந்த நிலையில் ஓரளவுக்கு வெற்றி கண்டுலோமே ஒன்று பட்டு ஓங்கி ஒலித்தால் இன்ஷா அல்லாஹ் முழு வெற்றி அடைவோம மாட்டோமா சிந்திக்க வேண்டும் அதை செயற் படுத்த நாம் என்ன முயற்சி எடுத்தோம் .

      இஸ்லாத்தின் இளைனர்களே, சகோதரர்களே எங்கெல்லாம் நாம் அமைப்புகள் கூட்டம் நடத்துகிறதோ அங்கெல்லாம் ஏன் சகோதரர்களே நாம் எல்லாம் ஓரணியில் திரண்டால் என்னவென்று கூட்டத்தின் தலைவரை கேள்வி கேட்க்க வேண்டும் இவன் என்ன சொல்வது நாம் ஏன் நாம் அமைப்புகளை பகைத்து கொள்ளவேண்டும் என்று எண்ணினால் ஒற்றுமை என்ற எண்ணத்தை கூட ஏற்படுத்த முடியாது .

      ஓர் இறை கொள்கை உடைய சமூதாயமே நாளைய இந்தியா நாம் கையில் வேண்டும் ஒருகாலும் இனி நாம் பிரிந்து செல்லகூடாது ஓரணியில் முஸ்லிம் என்று சொல்லி ஓர் அணியில் விரைவில் திரள்வோம் மிரட்டி வாங்குவோம் நாம் உரிமையை தமிழகத்திலும் இந்தியாவிலும் ....................இன்ஷா அல்லாஹ்.

      நாளைய வரலாறு சொல்லட்டும் ! மீண்டும் இஸ்லாமியர்கள் எழுச்சி !

      ஆட்சியில் பங்கு !அதிகாரத்தில் பங்கு !

      இஸ்லாமியன் இந்தியாவை வல்லரசாக !

      ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கினான் என்று!

      Delete