அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, November 12, 2011

நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் மாதாந்திர கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


கடந்த 11.11.2011 வெள்ளிகிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்பு துபாய் கோட்டை பள்ளிவாசலில் நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் உறுப்பினர்கள் மாதாந்திர அலோசனை கூட்டம் நடைபெற்றது.

நமதூரை சேர்ந்த சகோதரரின் மருத்துவ செலவுக்காக மாதம் 2000 விதம் 10 மாதத்திற்கு ரூபாய் 20,000 வழங்கப்பட்டது, இன்ஷா அல்லாஹ் அந்த சகோதரருக்கு மேலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சகோதரரின் மகளின் திருமண உதவி தொகையாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.

இவர்கள் வழங்கும் உதவி தொகையானது உறுப்பினர்களின் சந்தா ம்ற்றும் அவர்களால் முடிந்த உதிரி தொகையின் மூலமே வழங்கப்படுகிறது. இவர்கள் தரும் ஒவ்வொரு திரஹமுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரிய கூலி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் இவர்களின் சேவை மென்மேலும் பெருகிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக.











No comments:

Post a Comment