மேலே நாம் வட்டமிட்ட பகுதியை படியுங்கள், இது சமவுரிமை ஜனவரி பிரதியில் வெளியிடப்பட்டது. கீழே அவர்கள் சொன்ன மருத்துவ கல்லூரியின் இடத்தை பாருங்கள், இந்த புகைப்படம்
பிப்ரவரியில் எடுத்தது. இங்கே அஸ்திவாரத்தை காணோம், கட்டுமான பொருட்கள் சிறிதளவெனும் உள்ளதா என்றால் அதுவும் இல்லை, அப்படியிருக்க மருத்துவமனை கட்டிக் கொண்டுள்ளனர் என்று கூறுவது எதற்காக? அப்படி கூறினால் தான் வசூல் கிடைக்கும் என்பதாலா? 3 கோடிக்கு பெரிய பள்ளி கட்ட போகின்றோம் என்று கூறி வசூல் செய்த விவரங்கள் இதுவரை நீடூர் ஜமாத்திடமிருந்து கிடைக்கவில்லை. பள்ளி கட்டுமான பணியும் முடிந்தபாடில்லை. இப்பொழுது 60 கோடி வசூல் செய்ய போகின்றோம் என்று சொல்கிறார்களே? மருத்துவனை கட்டுவதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அது யார் பொறுப்பில் அல்லது தலைமையில் கட்டுவது என்பதுதான். நம் ஜமாத்தை குறை கூறி எந்த புரியோஜனமும் இல்லை, இந்த நிர்வாகம் இருக்கும் வரை இப்படி நடந்து கொண்டுதான் இருக்கும், நாம் தான் அவர்களிடமிருந்து உஷாராக இருக்க வேண்டும்.
-நன்றி: நீடூர் நண்பன்
No comments:
Post a Comment