சில பல மாதங்களாக நம் நீடூரில் மருத்துவக்கல்லூரி வரப்போகின்றது என்று ஒரே ஆரவாரமாக இருந்தது. அதுவும் நமதூரின் மதராஸாவும், வக்பு வாரியமும் இணைந்து ஆரம்பிக்கிறார்கள் என்றவுடன் நமதூரில் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நம்
மகிழ்ச்சி மாதக்கணக்கில் கூட நீடிக்கவில்லை. இந்த மருத்துவக்கல்லூரிக்கும் மதரஸா மற்றும் வக்பு வாரியத்திற்கும் தொடர்ப்பில்லை, வசதிபடைத்த முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது, பணம் வைத்திருக்கும் யார் யார் வேண்டுமானாலும் இதில் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு நமது மகிழ்ச்சியில் மண்ணை வாரி தூவியது. அதோடு மட்டும் நிற்காமல் பத்து லட்சம் கொடுக்கும் நபருக்கு ஆயுளில் ஒரு சீட்டும், 5 கோடி கொடுக்கும் நபருக்கு வருடா வருடம் ஒரு சீட்டும், சில தனி நபர்களுக்கும் வருடா வருடம் ஒரு சீட்டும், கோடிக்கணக்கான மதிப்புடைய ஏக்கர் நிலம் வழங்கும் மதரஸாவிற்கு
ஒரே ஒரு சீட்டும் இலவசமாக தரப்படும். அதனை அவர்கள் தமது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கோ அல்லது மற்ற எவருக்குமோ லட்சகணக்கான ரூபாய்க்கு விற்றுக்கொள்ளலாம் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்தது. இது மதராஸாவை ஏமாற்றும் வேலை, இதனால் நமது சமுதாயத்திற்கு எந்தவித பயனும் இல்லை, வக்பு வாரியத்தின் பெயரும், மதரஸாவின் பெயரும் தேவை இல்லாமல் இழுக்கப்படுகிறது என்று தமிழக பத்திரிக்கைகளும் கேள்வி எழுப்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த திட்டம் பற்றி மதராஸாவின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கும், நமதூரின் ஜமாத்தார்களுக்கும் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கூட கருத்து கேட்டதாக நமக்கு தெரியவில்லை.
ஒரே ஒரு சீட்டும் இலவசமாக தரப்படும். அதனை அவர்கள் தமது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கோ அல்லது மற்ற எவருக்குமோ லட்சகணக்கான ரூபாய்க்கு விற்றுக்கொள்ளலாம் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்தது. இது மதராஸாவை ஏமாற்றும் வேலை, இதனால் நமது சமுதாயத்திற்கு எந்தவித பயனும் இல்லை, வக்பு வாரியத்தின் பெயரும், மதரஸாவின் பெயரும் தேவை இல்லாமல் இழுக்கப்படுகிறது என்று தமிழக பத்திரிக்கைகளும் கேள்வி எழுப்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த திட்டம் பற்றி மதராஸாவின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கும், நமதூரின் ஜமாத்தார்களுக்கும் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கூட கருத்து கேட்டதாக நமக்கு தெரியவில்லை.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போதைய நிலைப்பற்றி பல
பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியது, குற்றம் சுமத்தியது, அதற்கு எந்த பதிலும் இல்லை. ஊரில்
சிலர் கேலி செய்யும் விதம் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள், அதற்கும் பதில் இல்லை. இதற்கெல்லாம் அமைதி காத்தவர்கள் நம்முடைய சில சகோதரர்கள் கேள்வி எழுப்பியதும் உடனே கோபத்துடன் பதில் அளித்து "ஒவ்வாமை என்றும், விருப்பமில்லை என்றும், ஈகோ பிடித்தவர்கள் என்றும், உங்களுக்கென்ன அக்கறை என்றும், கேள்விக்கேட்க கூடாது என்றும் எழுதி இருப்பது அநாவசியமான ஒன்று. அது மட்டுமில்லாமல் 'ஆடு நனைகின்றது, ஓநாய் அழுகின்றதோ' என்ற பழமொழி வேறு?. சமுதாயம் முன்னேற வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படலாமாம். ஆனால் சமுதாயத்தின் பொருளாதாரம் தவறானவர்களின் கையில் சிக்கி வீணாகக்கூடாது என்று மற்றவர்கள் அக்கறைக்கொள்ளக்கூடாதாம். ஊடகங்கள் கேள்விக்கேட்டதோ மதரஸாவின் நிர்வாகத்திடமும், கல்லூரியின் திட்டத்தில் ஈடுபட்டவர்களிடமுமே. ஆனால் தாமாக மூக்கை நுழைத்து பதில் என்கிற போர்வையில் பொருத்தமே
இல்லாமல் வசைபாடி இருப்பது தேவை இல்லாத ஒன்று. இதற்குத்தான் ‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பார்களோ? மருத்துவக்கல்லூரியை ஊரில் உள்ளவர்களே தடுத்தார்கள் என்ற தோனியில் கூறுவது சமுதாயத்தை ஏமாற்றும் செயல். இதே நமதூரில் ஒருவர் பொறியியல் கல்லூர் துவங்க முயற்சிசெய்து தற்போது கலைக்கல்லூரி துவங்கி இருக்கிறார். இதனை அனைவரும் பாராட்டினோம், மனதார பாராட்டினோம். எந்தவிதமான இடையூறுகளோ, விமர்சனங்களோ ஊரில் யாருமே வைக்கவில்லை. ஆக தற்போது விமர்சனம் செய்வதின் நோக்கம் இது தமிழக அரசின் வக்பு வாரியத்திற்கும், மதரஸாவிற்கும், மற்ற இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு இருப்பதால்தான் விமர்சனமே எழுகிறது. இவ்வளவு கோபமாக பதிலளிக்கும் இவர்கள் கல்கி இதழும், உணர்வு இதழும், ஊரில் போஸ்டரும் வந்த போது எங்கே போனார்கள். ஏன் அவர்களுக்கு பதிலளிக்க பயமா? கோடிக்கணக்கில் கொள்ளை என்று கொட்டை எழுத்தில் போடும் போது வராத கோபம் இப்போது மட்டும் வருகிறதே!
நீடூரில் இனி கல்லூரிக்கான திட்டம் கிடையாது, மூன்று மாதமாக திருச்சிக்கு அருகில் இடம் பார்ப்பதாக கூறுகிறார்களே, இதுபற்றி நம் மதரஸாவிடமோ, பொதுமக்களிடமோ அறிவிப்பு செய்தார்களா? இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள்? பணம் போட்டவர்கள் மட்டும் தான் கேள்விக்கேட்க வேண்டும் என்று எந்த தைரியத்தில் கூறுகிறார்கள். அப்படியென்றால் எந்த அதிகாரத்தில் மதராஸாவின் இடத்தைக் கேட்டார்கள். நிர்வாகிகளும் அதனை தாரைவார்க்க எப்படி ஒப்புக்கொண்டார்கள்?
மதரஸாவின் இடம் வேண்டுமாம், ஆனால் பொதுமக்கள் கேள்விக்கேட்கக் கூடாதாம்!. என்ன அநியாயம் இது?. யார் நம்மை கேட்பது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்களா? யார் ஈடுபடுகிறார்கள் என்று பார்க்கக்கூடாது, எந்த விஷயத்தில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும் கூறுவது கேளிக்கூத்தாக இருக்கிறது. நமதூரின் அவளமான சூழ்நிலை கண்கூடாக பார்த்தபின்புமா இப்படி கூறுகிறார்கள். தமிழகத்திலேயே பெரிய பள்ளிவாசலை கட்டப்போகிறோம் என்று கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து இதுவரை அதற்கு தெளிவான கணக்கு ஒப்படைக்கவில்லை. பள்ளிவாசலும் கட்டி முடிக்கப்படவில்லை. ஊரின் நிலை இப்படி இருக்க அதே நபர்கள் இணைந்து கல்லூரிக்காக சுமார் 120 கோடி வசூல் செய்ய திட்டமிடுகிறார்கள் என்றால் எப்படி கேள்விகள் எழுப்பாமல் இருக்க முடியும், சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியும். நீடூர் மக்கள் அனைவரும் இதில் கேள்வி கேட்க முடியும்.
நீடூரின் பெயரை இன்னொரு முறை கலங்கப்படுத்த விடமாட்டோம். நீங்க எது வேணும்னாலும்
செய்து கொள்ளலாம், அதை நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டுமா? அது இருக்கட்டும், இன்னும் வங்கிக்கணக்கே துவங்கவில்லை, அது பணம் கொடுத்தவர்களுக்கும் தெரியும் என்கிறார்களே அப்படியென்றால் கணக்கே துவங்காத போது பணத்தை எப்படி கொடுத்தார்கள்? யாருடைய பெயரில் கொடுத்தார்கள்? அதற்கு என்ன ரசீது இருக்கிறது? இதற்கு யார் பதில் சொல்வது. சரி, இது போல் சொன்னால் முட்டாளுக்கும் இது ஏமாற்று வேலை என்று
புரிந்து கேள்வி கேட்பானே!!. கல்லூரி நீடூரை விட்டுச்சென்றதாய் கூறும் இவர்கள் ஏன் இதனை மூன்று மாதமாக மறைத்தார்கள்?.
ஏன் நீடூரை விட்டுச்சென்றது என்பதை மதரஸா நிர்வாகத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் இவர்கள் தெரிவிக்க தவறியது ஏனோ?.
என்ன செய்கிறார்கள் என்றுதான் பார்க்கவேன்டும்.
யார் செய்கிறார்கள் என்று பார்க்கக்கூடாது என்று எப்படி கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் கூறுகிறார்கள்?. நமதூர் ஏற்கனவே கேள்வி கேட்பாரின்றி மூன்று கோடிக்கும் மேல் இழந்தது போதாதா? யார் என்று எப்படி சிந்திக்காமல் இருக்க முடியும். சமுதாய ஆர்வளர்களுக்கு அந்த உரிமைக்கூட இருக்க கூடாது என்கிறார்களா?
இப்படி பதில் கூறுபவர்கள் தம்முடைய உழைப்பால் உருவான லட்சக்கணக்கான பணத்தை போட்டிருந்தாலும் இதே மாதிரி பதில் வந்திருக்குமா? எது எப்படியோ, பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் எங்கே போனார்கள்?. இங்கே பதில் கூற
மறுத்தால் மறுமையிலே அமானிதமாய் ஒப்படைத்த பணத்தை என்ன செய்தாய் என்று அல்லாஹ்
கேட்பானே?, வெளிப்படையாய் செயல்பட இவர்களுக்கு ஏன் இப்படி கசக்கின்றது? என்று தான் நமதூராரின்
கேள்வி.
the famous website for nidur thousands of viewers are there, they do not unnessasary involue. theyshould not spoil their website name unnessasary.
ReplyDeletenidur famous website thousands of viewers there. they do not unnessasary involue. they should not spoil their website name.
ReplyDeletewrite the truth or write what's going on there
ReplyDelete