அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, October 18, 2011

நன்கொடை நிதிகள் எங்கே?

நமது நீடூர் சகோதரர் நடத்தும் ஒரு இணையதளத்தில் மருத்துவ கல்லூரி சம்பந்தமாக நன்கொடை விபரம் பங்குதாரர்கள் தான் கேட்க வேண்டும் என எழுதியுள்ளார். மருத்துவ கல்லூரி முழுவதுமாக பங்குதாரர்களை கொண்டே நடக்கும் பட்சத்தில் அதில் பங்களிப்பில்லாதவர்கள் கேள்வி கேட்பது தவறுதான். ஆனால் JMH-க்கு சொந்தமான நிலத்தை கல்லூரிக்காக பயன்படுத்தும் போது ஊர் மக்கள் யாரும் கேள்வி கேட்கலாம், ஆனால் இங்கு நிலைமை அப்படியில்லை,
இங்கு இந்த நிர்வாகத்தில் யாருமே கேள்வி கேட்க முடியாது, கேட்டால் பதிலும் தரமாட்டார்கள். உண்மையை சொன்னால் அவர்களிடம் பதிலும் கிடையாது. பங்குதாரர்களை கொண்டு நடத்த இருந்த மருத்துவக் கல்லூரிக்கு சமுதாயத்தவர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. JMH மருத்துவ கல்லூரியின் தேர்வு கமிட்டியில் உறுப்பினராக இருந்த சகோதரர் அமீனுல்லா அவர்களே நான் ரூபாய் ஆயிரம் நன்கொடை கொடுத்துள்ளேன், இது போல் பலரிடமிருந்து நன்கொடை பெறப்பட்டது, அதன் விபரம் என்ன?, எவ்வளவு நிதி நன்கொடையாக திரட்டப்பட்டது?, அந்த நிதி எந்த கணக்கில் இருக்கின்றது? என்று JMH நிர்வாகிகள் கூட்டத்தில் கேட்டுள்ளார். அதற்கு வழக்கம் போல் எந்த பதிலும் இல்லை. கேள்வி கேட்டால் தான் நமது ஜமாத்திற்கு கோபம் வருமே, அதுபோல் அங்கும் பிரச்சனை ஆனது. அதன் பிறகு அந்த சகோதரர் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அந்த சகோதரருக்கு கொடுத்த ரசீதை இத்துடன் வெளியிட்டுள்ளோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திலும் மக்கள் பார்வைக்காக மருத்துவ கல்லூரியின் வரவு, செலவு கணக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டு பத்து நாட்கள் கலிந்த பின்னும் இதுவரை எதையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. Mohamed from BangkokOctober 18, 2011 at 10:41 AM

    எவ்வளவு பெரிய மோசடி. மதரஸாவிற்கும் மருத்துவகல்லூரிக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிட்டு மதரஸாவின் பெயரில் வசூல் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு தலையிட்டு இது தொடர்பாக முழு விசாரனை நடத்த ஊர் மக்கள் ஆவணம் செய்ய வேண்டும். நிர்வாகிகள் பதில் சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் பதவி இருந்து அவர்களை நீக்க வேண்டும். ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு வக்காலத்து வாங்கும் அந்த இணையத்தினர் எப்படி பதில் சொல்வார்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    நீடூர் நெய்வாஸல்
    நீடூர் நெய்வாஸல் யாரும் அரியாதவர்கள் இருக்க முடியாது குறிப்பாக நம் சமுதாயத்தவர்கலுக்கு எல்லாம் பெருமை செர்த்த ஊர். எத்தனையோ பெரியவர்கலும், நல்லவர்கலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற ஊர். பெருநாள் பிறை பார்த்து, பெருநாளை முடிவு பண்ணுவது, இன்னும் ஸமுதாய ஸம்பந்தபட்ட விவரங்கள் மற்றும் ஊர் ஸம்பந்த்பட்ட விஷயங்கள் அனைத்தயும் தெளிவுப்படுத்திகொள்ள நீடூரைத்தான் (மதரஸா) அனுகுவார்கள்.கண்ணியமிக்க எண்ணற்ற ஆலிம்கலையும், உலமாக்களையும், மார்க்க அறிகர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய, அறிமுகப்படுத்திகொண்டிருக்கிற நம் பாரம்பரியமிக்க, பெருமைக்குரிய ஊர் நம் நீடூர் நெய்வாசல். இன்னும் எத்த்னையோ பெருமைகளுக்கு சொந்தமான ஊர் என்றால் அது மிகையகாது.நமது நீடூர் ஜாமியா மிஸ்பாஹுதாவில் பயின்றவர்கள் இன்று உலகெந்கிலும் ஆலிம்கலாக, பேராசியர்களாக, மார்க்க போதகர்களாக உலகெந்கிலும் போதித்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது நாம் பெருமை படாமல் இறுக்க முடியாது. ஆனால் இன்று நம் ஊரின் நிலை எப்படி இருக்கிறது. யாவரும் அறிந்ததுதான். எத்தனை பிரச்னைகள், ஊர் நிர்வாகம் தெர்ந்தெடுத்தல், பள்ளிவாசல் கட்டுமானம், மறுத்துவக்கல்லுரி, இன்னும் எத்த்னையொ பிரச்னைகலுக்கு ஜமாத்தார்கலுக்கு தெளிவான விளக்கம் கிடைக்காமல் இருக்கிறார்கள்.
    ஊரை நிர்வாகம் செய்வது லேசான விஷயம் அல்ல. ஆனால் நிர்வாகத்தை எந்த கேள்வியும் கேட்க கூடாது, தாங்கள் சொல்வதுதான் முடிவு என்பது யாரும் ஒப்பு கொள்ள ஏற்று கொள்ள முடியாத ஒன்று.அது அவர்கள் கடமை. இன்ஷாஅல்லாஹ் வரலாற்று சிறப்புமிக்க நமது ஊருக்கு பெருமைக்கு சொந்தமான ஜாமியா மிஸ்பாஹுதாவின் நூறாவது ஆண்டு விழாவை பெருமையுடன் நெருங்கி கொண்டிருக்கிறோம். அதற்கு முன் எல்லாவற்றுக்கும் தெளிவான விளக்கமலித்து தெளிவாக்கி கொண்டால் நம் ஊரின் பெருமை காக்கப்படும்.

    ReplyDelete