அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, October 17, 2011

இனியும் எத்தனை ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்?



இந்த கேள்வியைக் கேட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன்.  இன்னும் பதிலும் இல்லைநமதூரில் நிர்வாகமும் இல்லைஇப்படி ஒரு ஊர் ஜமாத் இருப்பது அநேகமாக தமிழகத்திலேயே நமதூராக மட்டுமே இருக்கும்ஏமாறுபவர்க்ள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது இதுதானோ?.  நமதூர் அதிகார்வபூர்வ(!?) இணையதளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த செய்தியை கீழே உங்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம். அதில் எப்பொழுது தேர்தல் நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம் என்று இரண்டரை ஆண்டுகள் முன்பு வெளியிட்ட செய்திக்கு இன்னமும் பதிலை தான் காணோம். இனியும் எத்தனை ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்?

Apr
author iconPosted by: நிர்வாகி 
categories icon Filled in: நீடூர் நிகழ்வுகள் 
Date:19/04/2009
ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் நீடூர்-நெய்வாசல் நிர்வாக சபையின் தேர்தல் கடந்த 12-04-2009 ஞாயிறன்றுநீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் வக்ப் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றதுடிரஸ்டியாக ஹாஜி வீதிஅல்ஹாஜ் அப்துல் ரஷீது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்ரயிலடித்தெரு அப்துல் ஹாலித் அவர்களும்,ஜின்னாத்தெரு முஹம்மது அலி அவர்களும் முத்தவல்லி பதவிக்கு முன்மொழியப் பட்டார்கள்வழமையானSelection முறை மாற்றப்பட்டு Election முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
பதிவான மொத்த வாக்குகள் 215
முஹம்மது அலி 108அப்துல் ஹாலித் 107
வாக்கு வித்தியாசத்தில் முஹம்மது அலி வெற்றிப் பெற்றதாக வக்ப் ஆய்வாளர் அறிவித்தார்.
சிறிய சலசலப்பைத் தொடர்ந்து ஏகமனதாக டிரஸ்டியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாஜி வீதி அப்துல் ரஷீது ராஜினாமாசெய்தார்.இதன் பின்னர் முறைப்படி பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய வக்ப் ஆய்வாளர் புறப்பட்டு சென்று விட்டார்புதியமுத்தவல்லியாக யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
நமதூர் மக்கள் பலரும் தொலைபேசியில் அழைத்து நம்மைக் கேட்டுக் கொண்டிருப்பதால் நாம் விசாரித்த வகையில்கிடைத்த தகவல்களைத் தந்திருக்கின்றோம்.அல்லாஹ்வே அனைத்தையும் நன்கறிந்தவன்.
மீண்டும் வக்ப் ஆய்வாளர் முன் தேர்தல் புதிதாக நடக்குமாஅல்லது நடைபெற்ற தேர்தலையே வக்ப் வாரியம் ஏற்றுமுறையாக அறிவிக்குமாஎன்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

4 comments:

  1. Mohamed from BangkokOctober 17, 2011 at 4:53 PM

    இதில் என்ன சந்தேகம்! யாரும் பள்ளிவாசல் வசூல் கணக்கை கேட்காத வரை அல்லது பள்ளிவாசல் வசூல் தொடர்பானவைகளை ஊர் மக்கள் மறக்கும் வரை புதிய நிர்வாகத்திற்கு காத்திருந்துதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  2. they have to answer but they will not

    ReplyDelete
  3. Aniyayakkararhalin akkiramam oru nal oliyum.'Allah' vai oru nimidam ninaithu parkkaum. oru nimidam kan moodi 'mahsarai' ninathu parkkaum

    ReplyDelete
  4. Varrum Anna Varrathu

    ReplyDelete