அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, May 2, 2012

ரகசிய வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம்!!

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் நம் நீடுர் நிர்வாக தேர்தலுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை பள்ளிவாசலில் ஒட்ட இருக்கின்றனர். அப்போழுதே விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்களை பெற்றுச் செல்வார்கள். நமதூர் நிர்வாகத்திற்கு 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோரின் அனைத்து பெயர்களும் ஒரே வாக்கு சீட்டில் அகர வரிசைப்படி இருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டியிடலாம், ஜமாத்தார்கள் வாக்கு சீட்டில் உள்ள நபர்களில் 12 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்க பட்ட 12 உறுப்பினர்கள் தங்களுக்குள் முத்தவல்லி , டிரஸ்டியை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நல்ல முறையில் இந்த ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும். ஊர் நன்மையை கருதி வெறுப்புகளை மறந்து அனைவரும் சுமூகமான முறையில் தேர்தல் நடந்திட ஒத்திழைப்பு நல்கிட வேண்டும். அதற்கு மாறாக தனது பலத்தை தவறாக பயன்படுத்தி தேர்தலை தடுத்து நிறுத்த நினைக்க வேண்டாம். ஏனெனில் இது ஒட்டு மொத்த ஜமாத்தார்களின் விருப்பமாகும், காரணம் கடந்த தேர்தலை சுமுகமாக நடக்கவில்லை என்ற காரணத்தினால் தான். அதுவும் இந்த முறை ரகசிய வாக்கடுப்பு நடத்தக்கோரி கோரிக்கைகள் அதிகமானாதால் தான் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வக்பு வாரியமும் முன் வந்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல காரணங்களை அடிக்கி கொண்டே போகலாம் ஆனால் வேண்டாம் என்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? கேட்டால் பழைய பல்லவி பார்ம்பரியம் என்று ஆரம்பித்து விடுவார்கள். இந்த பார்ம்பரியத்தை பயன்படுத்தி தான் வென்றவர் நிர்வாகத்திற்கு சாதகமில்லாதவர் என்பதால் தேர்தலை கலைத்தனர்.

தமுமுக சகோதரர்கள் தான் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என அடித்தளமிட்டு பெரு முயற்சி செய்தன்ர். ஆனால் அந்த முயற்சியிலிருந்து போக போக பின் வாங்க ஆரம்பித்தனர். எதனால்? ஊர் நிர்வாகிகள் தமுமுக முயற்சியை சீர்குலைக்க வைக்க வேண்டும் என்று அவர்களோடு நெருக்கம் காட்ட ஆரம்பித்தனர். அதன் விளைவாகத்தான் தமுமுக நடத்திய ஆம்புலன்ஸ் அற்பணிப்பு விழாவில் ஊர் நிர்வாத்தினரும் கலந்து கொண்டனர். ஊர் நிர்வாகதினர் தமுமுகவிடம் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சனை செய்ததை அவர்கள் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை. கண்டிப்பாக அல்லாவுஹ்க்காக இதையெல்லாம் மறந்து இயக்கம் ,கட்சி சார்பற்று தான் இத்தேர்தலில் அனைவரும் பங்கெடுக்க வேலை செய்ய் வேண்டும். ஊரின் விடியலுக்காக அனைவரும் ஓற்றுமையோடு உழைத்தால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு வெற்றீயை கொடுப்பான் என்பதில் எந்த ஐயமுமில்லை. அடிதடி வழக்குகளுகெல்லாம் பள்ளிவாசல் பணத்தை வீண்விரயம் செய்து அதற்கு நியாயம் கற்பித்தார்களே அவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து நல்ல நிர்வாகம் அமைய அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக. ஆமீன்.

3 comments:

  1. அல்லாஹ் நம் முயற்சியை வெற்றியாக்குவானாக. ஊர் நலனில் அக்கரை உள்ள நல்ல இதயம் படைத்தவர்களை நமக்கு நிர்வாகிகளாக தருவானாக. ஆமீன்

    ReplyDelete
  2. allah namakku vettriyai tharuvanaga

    ReplyDelete
  3. நமது ஊர் நன்மை வேண்டி பாடு படும் நாட்டாண்மை நமக்கு அவசியம்
    அகங்காரம் ஆணவம் கொண்ட நபர்களை ஒதுக்கி விட்டு உண்மை
    நேர்மை இமான் கொண்ட நல்ல உள்ளம் கொண்ட நபர்களை நாம்
    தேர்ந்து எடுக்க வேண்டும் . வர இருக்கின்ற நாட்டாண்மை தேர்தல்
    நல்ல விதமாக நடக்க நமது ஊர் ஜமாத்தார்கள் ஒத்துழைப்பு கொடுத்து
    துவா செய்யும் படி கேட்டு கொள்கிறோம் .

    ReplyDelete