அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 18, 2012

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்ககள்


நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் இரண்டு தினங்களை விஷேட தினங்களாக கொண்டாடி வந்ததுடன் அத்தினங்களை கேளிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் கழிப்பதை கண்டு விசாரித்த போது, `மௌட்டீக காலத்திலிருந்தே இத்தினங்களை இவ்விதமே கழிக்கின்றனர்என அறிந்து கொண்டார்கள். பின் ரஸூல் (ஸல்) அவர்கள் அம்மக்களிடம் `அல்லாஹுத் தஆலா உங்களுக்கு இத்தினங்களுக்குப் பதிலாக இவற்றை விட மிகவும் சிறந்த வேறு இரு தினங்களை அருளியுள்ளான். அவை ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினமும் நோன்புப் பெருநாளுடைய தினமும் ஆகும்எனும் நற்செய்தியைக் கூறினார்கள். (அபூதாவுத்)
இந்த நோன்புப் பெருநாளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய எட்டு விடயங்கள் உள்ளன.
1 குளித்து சுத்தமாகிக் கொள்ளல்.
2
அழகிய புத்தாடை அல்லது சுத்தமான ஆடை அணிதல்.
3
தக்பீர் சொல்லல்.
4
பெருநாள் இரவில் சுன்னத்தான தொழுகைகளை தொழல், குர்ஆன் ஓதுதல், துஆ கேட்டல், திக்ர் செய்தல், ஸலவாத் ஓதல்.
5
பெருநாள் தொழுகையிலும் குத்பாவிலும் கலந்துகொள்ளல்.
6
ஆண்கள் மணம் பூசிக் கொள்ளல், வெளியில் செல்லாத பெண்களும் மணம் பூசிக் கொள்ளலாம்.
7
இயன்றவரை அதிகமாக தானதர்மம் செய்தல்.
8
ஈதுல் பித்ருக்கே உரிய(பித்ரா) ஸகாதுல் பித்ர் எனும் தான தர்மம் செய்தல்.
உலக முஸ்லிம்கள் யாவரும் கொண்டாடும் இத்திருநாளை நாம்  சாந்தியும், சமாதானமும் வேரூன்றி, தளைத்து, வளர பிரார்த்தித்தவர்களாக கொண்டாடுவோம்.

-ஈத் முபாரக்-

No comments:

Post a Comment