அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 18, 2012

வாரி வழங்குவோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர்.ஜிப்ரீல்(அலைரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில்நபி(ஸல்அதிகமதிகம் வாரிவாரி வழங்குவார்கள்ஜிப்ரீல்(அலை)ரமலானின்ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்அவர்களைச் சந்திப்பார்.நபி(ஸல்அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள்ஜிப்ரீல்(அலை)தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்அவர்கள் வாரிவழங்குவார்கள்என்று இப்னு அப்பாஸ்(ரலிஅறிவித்தார்கள்நூல் புகாரி. 1902

ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாகவாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலிஅவர்கள் கூறிஇருக்கின்றார்கள்.
புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்அவர்களின் அழகிய வழி முறையைநாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடையோருக்கு வாரி வழங்க முன்வரவேண்டும்.
அவ்வாறு தேவையுடையோருக்கு வாரி வழங்குவதால் நம்முடையப் பொருளாதாரம்குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும்திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

2:261.தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள்கிடைக்கிறது,

·  தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்துஅபிவிருத்தி ஏற்படுகின்றது.
·    தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்;படுகின்றன.
மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்கவேண்டுமென்றால்கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்அவர்கள் தர்மம் செய்யும்விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும்தடுத்தவைகளை தடுத்துக் கொள்ளவேண்டும்.  

ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தஅண்ணல் நபி(ஸல்அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவதுஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

·  உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்றளவு உதவிகளை செய்துஅனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால்உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில்சென்று இவர்களுக்கு உங்களால் இயன்றளவு உதவி செய்யுங்கள் என்றுபரிந்துரை செய்வார்கள்.
·  ஒரு குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களைஅழைத்து தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன்வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்த்தி மக்;களின்உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.
சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டிஅவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.    

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையைமுறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்குஉதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படிபரிந்துரை(யாவதுசெய்யுங்கள்(இவ்விதம் பரிந்துரைத்ததற்காகநீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள்அல்லாஹ்,தான் (அவருக்குக் கொடுக்கநாடியதைதன் தூதருடைய (என்னுடைய)நாவினால்நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலிஅறிவித்தார்.

இன்று நம்மில் பலரிடம் இருந்தால் கொடுக்கின்றோம்இல்லை என்றால் இல்லைஎன்றுக் கூறி ஒதுங்கி விடுகின்றோம்,

நம்மிடம் இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடையநண்பர்களிடம்உறவினர்களிடம்உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம்அழைத்துச் சென்றுப் பரிந்துரை செய்ய வேண்டும்அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;யவேண்டும்இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும்இதுவே நபிவழி.

இவ்வளவு தான் என்ற வறையரை.
இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பதுஅல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும்அபிவிருத்திக்கு இடும் முட்டுக்கட்டையாகும்

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்முடிந்து வைத்துக் கொள்ளாதே!அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடைஉனக்கு (வழங்கப்படாமல்முடிந்துவைத்துக் கொள்ளப்படும்எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ(இவ்வளவுதான் என்றுவரையறுத்து (தர்மம்செய்யாதேஅல்லாஹ் (உன் மீதுபொழியும் அருளைவரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி)அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.

தடுத்துக் கொண்டால் ?
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவதுமார்பிலிருந்து கழுத்துவரைஇரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும்தர்மம்செய்பவர்தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்துவிரல்களைமறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும்கஞ்சன்செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொருவளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும்அவன் அதை விரிக்க முயன்றாலும்அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்.

படிப்பினைகள்
அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தான தர்மம்மற்றும் தஃவாப் பணிகளுக்குவாரி வழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப்பெருகச் செய்வான்.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில்வழங்கினாலும்அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான்.

கொடுக்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.
நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காகநோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரிவழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன்எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றிநாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்துகொள்வதற்கு முயற்சி செய்வோம்.

No comments:

Post a Comment