அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, August 17, 2012

பித்ரா விநியோகம் செய்ய பள்ளி தராத நிர்வாகம்.

அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)

நீடுர் - நெய்வாசல் அசோசியேசன் - துபாய் சார்பாக நீடுர் ஜின்னா தெரு பள்ளியில் ஒரு லட்சத்துக்கு மேல் பொருமான  பித்ரா விநியோகம் செய்வதாக இருந்தது. அதனை கொடுக்கவிடாமல் ஜின்னா பள்ளியையே பூட்டிவிட சொல்லிவிட்டனர் நம் ஊர் ஜமாத் நிர்வாகிகள். நம் ஊரில் நடக்கும் அட்டூழியங்களை தட்டி கேட்டால் எதாவது விமர்சனம் செய்து ஊருக்கு 'சிங்க் சாங்க், அடிக்கும் விமர்சகர்களே இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? இந்த அசோசியேசன் என்ன தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்ததா? நல்ல காரியத்தை செய்ய விடாமல் தடுக்கும் நம் ஜமாத் நிர்வாகிகளை என்ன செய்வது? அல்லாஹ் அக்பர். பள்ளியை பூட்டியவுடன் சகோதரர் நசீர் அலி அவர்களின் வீடு முன் வைத்து பித்ரா அல்லாஹ்வின் உதவியோடு விநியோகிக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

புகைப்பட தொகுப்பை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://niduri.com/?p=1573



1 comment:

  1. ஒன்றை உணர்ந்துக்கொள்வோம், இதுபோன்ற நியாயமற்ற செயல்களினால் ஏற்படும் சிரமங்களும் அலைகழிப்புகளும் ஏழை எளிய மக்களுக்கும், நோன்பாளிகளுக்கும், வயது முதிர்ந்த சகோதர சகோதரிகளுக்குமே இருந்திருக்கும்.

    இதுபோன்ற நியாயமற்ற செய்லகளினால் பாதிக்கப்படபோவது சங்கத்தின் செயல்பாடுகள் அல்ல மாறாக நோன்பாளிகள் என்று உணராமல் போனது ஏனோ என்று தெரியவில்லை.

    மேலும் இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் இதைவிட வீரியத்துடண் சங்கத்தின செயல்பாடுகள் அமையும் என்பதை இந்த அறிவீனர்களுக்கு உணர்த்துகிறோம். மக்கள் மன்றத்திலும இறைவனிடமும் நாங்கள் இவர்களின் தரம் கெட்ட செயலை முறையிடுவோம் அல்லாஹ் நீதி வழங்குவதின் வல்லவன்.

    ReplyDelete