அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, September 29, 2011

இறப்பு செய்திகள் 29/09/2011

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீடூர் நெய்வசால் ரயிலடித் தெரு நூரி வீடு நஜிமுதீன், நூருல் அமீன், அஸ்ரப் அலி அவர்களின் தாயார் முஹமுதா பீவி அவர்கள் 29/09/2011 அன்று மாலை காலமானார்கள்

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

Tuesday, September 27, 2011

சிபாரிசுக்கு கூலி பெறுதல் ஹராமாகும்!!!


மனிதனுக்கு கிடைத்துள்ள பட்டமும் பதவியும் அல்லாஹ் அவனுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளில் ஒன்றாகும். எனவே அவைகளுக்காக அல்லாஹ்விக்கு நன்றி செலுத்த வேண்டும். தனது பதவியின் மூலம் முஸ்லிம்களுக்கு பயனளிப்பது இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முறைகளில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் தமது சகோதரருக்கு பயனளிக்க சக்தி பெற்றவர் அவ்வாறு செய்யட்டும்.(அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

ஹலாலான காரியங்களில், பிறருடைய உடமைகளுக்கு தீங்கிழைக்காமல் தூய்மையான எண்ணத்துடன் தனது சகோதரருக்கு உதவி செய்து, அவருடைய கஷ்டத்தை போக்குபவர் அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்ப்டுவார்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிந்துரை செய்யுங்கள்! அதற்காக அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள் (அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி) நூல்: புகாரி)


ஆனால் பரிந்துரைக்கவோ,

Sunday, September 25, 2011

மயிலாடுதுறையில் இஸ்லாத்தை ஏற்ற சிங்காரவேல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 23.09.2011 அன்று மயிலாடுதுறை ரயில்வே காலனியை சேர்ந்த மாற்று மத சகோதரர் சிங்காரவேல் இஸ்லாம் மார்க்கத்தை உளபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் ,சொர்க்கம் நரகம்,கொள்கை விளக்கம் ,தொழுகை சட்டங்கள், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் 

Wednesday, September 21, 2011

இறப்பு செய்திகள் - 20/09/2011


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீடூர்-நெய்வாசல் ஹாஜி தெரு மன்சூர், நிசார், ரபிக், அஸ்ரப் அவர்களின் தகப்பனார் TAS முஹம்மது இஸ்மாயில் அவர்கள் 20/09/2011 அன்று காலை இறந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Sunday, September 18, 2011

நீடூர் மருத்துவ கல்லூரியின் இப்பொழுது நிலை என்ன?

சுமார் ஒரு வருடம் முன்பு திமுக ஆட்சியில் இருந்த வக்பு வாரியம் மூலம் நீடூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை அரசு மருத்துவக் கல்லூரி என கூறாமல், வக்பு வாரிய நிதியிலிருந்து பாதியும், மக்களிடமிருந்து பாதியும் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர். அதற்கு ஒரு குழுவும் அமைக்கபட்டு, கொஞ்சம் நிதியும் வசூலித்திருந்தது. "நீடூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்" என அறிவிப்பிற்கு பின் கொஞ்ச காலம் சுறுசுறுப்பாய் சுழன்ற அந்த குழு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இப்பொழுது மக்களின் ஐயம் என்னவெனில், ஒருசமயம் இந்த கல்லூரி அமைய பெறாவிட்டால், வசூலித்த தொகை திரும்ப கிடைக்குமா என்பதுதான்?. ஏனெனில் நீடூர் ஜமாத் எந்த தொகை வசூல் செய்தாலும் அதை பெரிய பள்ளி கட்டும் பணிக்காக உபயோகித்து கொள்வதுதான். இந்த ஐயமெல்லாம் கலைய மருத்துவக் கல்லூரியின் இன்றைய நிலையை மக்களுக்கு விளக்க இந்த குழு கடமைபட்டுள்ளது. அமானிதமாக அவர்கள் வைத்திருக்கும் பணத்தை வேறு எந்த பணிக்கும் செலவிடப்படாது என உறுதி கூற வேண்டும். இது போல் வெளிப்படையாக மக்களிடம் இந்த குழு செயல்பட முன் வரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நீடூர் ஜமாத் மீதிருக்கும் களங்கத்தை சிறிதளவெனும் கலையலாம். அதை கலைய முயற்சி செய்வார்களா அல்லது மேலும் கரை படிய வைப்பார்களா? என்பதை இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, September 17, 2011

நெய்வாசல் நிர்வாகிகள் தேர்தல் எப்பொழுது?


நீடூர் நெய்வாசல் ஜாமியாமஸ்ஜித் நிர்வாகிகள் தேர்தல் 2007ம் வருடம் நடைப்பெற்றது. இதில் முத்தவல்லியாக 107 ஓட்டு வித்தியாசத்தில் ஜின்னாத்தெரு A.முஹம்மதுஅலி அவர்கள் வெற்றிபெற்றார்.தோல்வியை தழுவிய ரயிலடித்தெரு ஹாலித் அவர்களையே துணை முத்தவல்லியாக இருக்குமாறு சிலர் சொல்ல, அதை மறுத்தனர் ஊர்மக்கள்.

Thursday, September 15, 2011

இரண்டாம் ஆண்டு அறிவு போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 09/09/2011 வெள்ளிகிழமை அன்று அஸர் தொழுகைக்கு பின் மதரசா பள்ளிவாசலில் நீடுர்-நெய்வாசல் அசோசியேசன் சார்பாக நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.

இரண்டாம் ஆண்டு அறிவுப்போட்டியின் வெற்றியாளர்கள் விவரம்


முதல் பரிசு



இரண்டாம் பரிசு


Tuesday, September 13, 2011

ஏமாறாதீர்கள்!!

நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா எனும் மதரசா சார்பில் தானமாக வழங்கிய 25 ஏக்கர் இடத்தில் வக்ஃபு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றது.
இது குறித்து தகவல் அறிய மூன்று நபர்களின் தொலைபேசி எண்கள் நீடூர் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னோர்களைப் பின்பற்றுதல்



மனிதனை நேர்வழியிலிருந்து அப்புறப்படுத்துவதிலும், மிகப் பெரிய அறிவாளியைக் கூட அறிவீனனாக ஆக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது, முன்னோர்கள் மீது கொள்ளும் குருட்டு பக்தியாகும்.

நமது வாழ்க்கையில் மிகப் பெரிய விஞ்ஞானிகளை, சட்ட மேதைகளை, நீதிபதிகளை, ஆராய்ச்சியாளர்களைக் காண்கிறோம். அவர்களது திறமையையும், ஆராயும் திறனையும் கண்டு மலைக்கிறோம். மற்றவர்களை பிரமிக்கச் செய்யும் அளவுக்கு அறிவுடைய இந்த மேதைகள் தாங்களே உருவாக்கிய ஒரு கல்லுக்கு முன்னால் கைகட்டி நிற்பதையும், தங்களைப் போன்ற அல்லது தங்களை விடவும் அறிவு குறைந்த மத குருமார்களின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுவதையும் காண்கிறோம்.

இறப்பு செய்திகள் - 10/09/2011


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 நீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு கோட்டகுப்பதார் வீடு மர்ஹும்  முஹம்மது பஷீர் அவர்களின் மனைவி ஜுனைதா பேகம் 10/09/2011 அன்று காலமானார்கள்.
இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்                                                 

         தகவல்: எம்.நசீர் அலிதுபாய்

இறப்பு செய்திகள் - 08/09/2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நீடுர்-நெய்வாசல் பள்ளிவாசல் தெரு  ஷோன்ச்பார் வீடு  மர்ஹும் அன்சாரி  அவர்களின்  மனைவி  ஹுமுல்பஜிரியா  08/09/2011 அன்று மாலை காலமானார்கள்.
இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிஹுன்
                                
தகவல்: எம்.நசீர் அலிதுபாய்
 

பித்ரா வினியோகம்


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

புனித மிக்க ரமலானில் நீடுர்௦- நெய்வாசல் அசோசியேசன் - துபாய் சங்கம் சார்பாக கடந்த பல வருடங்களாக பித்ரா வழங்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில்   இந்த வருடமும் துபாய் சங்கம் சார்பாக நோன்பு 29  நமது ஊரில் கீழத் தெருவில் சங்க நிர்வாகிகள் சார்பில் ரூபாய் நாற்பதாயிரத்திற்கு அரிசி வாங்கி நல்ல முறையில் வழங்கப்பட்டன. விடுமுறையில் ஊருக்கு போன நமது சங்க உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது. 

சேவைகள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...


எல்லாம் வல்ல அல்லாஹ்வின்அருளால் நமது நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஷன்ஸ் சார்பாக கடந்த ஒன்பது வருடங்களாக ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அதுபோல, இவ்வாண்டும் மாணவச் செல்வங்களுக்கு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


அதுமட்டுமின்றி,

Sunday, September 11, 2011

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்


“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால்,

Saturday, September 10, 2011

செல்வம் ஒரு சோதனையே



உலகில் வாழும் எந்த மனிதனிடமும் பணத்தாசை இல்லாமல் இருக்காது. இதனால் தான் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆசையை ஒரு சோதனையாக அல்லாஹ் அமைத்துள்ளான்.


பெண்கள், ஆண் மக்கள், திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை