அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்அருளால் நமது நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஷன்ஸ் சார்பாக கடந்த ஒன்பது வருடங்களாக ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அதுபோல, இவ்வாண்டும் மாணவச் செல்வங்களுக்கு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி,
2010 - 2011 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் வெற்றிப்பெற்று நமதூரிலேயே முதலாம் இடம் பிடிக்கும் மாணவர் / மாணவிகளுக்கு ரொக்க பரிசாக சுமார் ரூபாய் மூன்றாயிரமும் (Rs.3000/-), இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர் / மாணவிக்கு ரொக்கப்பரிசாக சுமார் ரூபாய் இரண்டாயிரமும் (Rs.2000/-) வழங்க இருப்பதாகவும், அரசு பாடத்திட்டதில் (State Board) படித்தவர்களுக்கும் மற்றும் மெட்ரிக்குலேஷன் (Matriculation) பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தோம். அதன்படி நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்ட விழாவில் பரிசுகளும் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்காக உதவிகள் செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
மேலும் நமது சேவைகள் தொடர்வதற்கு தங்களின் பிரார்த்தனைகளையும், உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment