அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, September 18, 2011

நீடூர் மருத்துவ கல்லூரியின் இப்பொழுது நிலை என்ன?

சுமார் ஒரு வருடம் முன்பு திமுக ஆட்சியில் இருந்த வக்பு வாரியம் மூலம் நீடூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை அரசு மருத்துவக் கல்லூரி என கூறாமல், வக்பு வாரிய நிதியிலிருந்து பாதியும், மக்களிடமிருந்து பாதியும் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர். அதற்கு ஒரு குழுவும் அமைக்கபட்டு, கொஞ்சம் நிதியும் வசூலித்திருந்தது. "நீடூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்" என அறிவிப்பிற்கு பின் கொஞ்ச காலம் சுறுசுறுப்பாய் சுழன்ற அந்த குழு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இப்பொழுது மக்களின் ஐயம் என்னவெனில், ஒருசமயம் இந்த கல்லூரி அமைய பெறாவிட்டால், வசூலித்த தொகை திரும்ப கிடைக்குமா என்பதுதான்?. ஏனெனில் நீடூர் ஜமாத் எந்த தொகை வசூல் செய்தாலும் அதை பெரிய பள்ளி கட்டும் பணிக்காக உபயோகித்து கொள்வதுதான். இந்த ஐயமெல்லாம் கலைய மருத்துவக் கல்லூரியின் இன்றைய நிலையை மக்களுக்கு விளக்க இந்த குழு கடமைபட்டுள்ளது. அமானிதமாக அவர்கள் வைத்திருக்கும் பணத்தை வேறு எந்த பணிக்கும் செலவிடப்படாது என உறுதி கூற வேண்டும். இது போல் வெளிப்படையாக மக்களிடம் இந்த குழு செயல்பட முன் வரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நீடூர் ஜமாத் மீதிருக்கும் களங்கத்தை சிறிதளவெனும் கலையலாம். அதை கலைய முயற்சி செய்வார்களா அல்லது மேலும் கரை படிய வைப்பார்களா? என்பதை இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment